புதன், 22 டிசம்பர், 2021

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை நேரில் சந்தித்த தூதரக அதிகாரிகள் - விரைவில் விடுவிக்க நடவடிக்கை

தந்தி டிவி : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளதாகவும்,
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மீனவரை தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்த‌தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்கள் சார்பாக இலங்கை நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மீனவர்கள் மற்றும் படகுகளை முன்கூட்டியே விடுவிக்க இலங்கை அரசுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக