சனி, 25 டிசம்பர், 2021

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில்ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை- அமலாக்கப் பிரிவு. AgustaWestland ‘SG’ stands for Sushen Gupta, not Sonia Gandhi

There is no quid pro quid : Sonia Gandhi denies Rahul's involvement in  AgustaWestland scam | Indiablooms - First Portal on Digital News Management

Mathivanan Maran -   Oneindia Tamil  : டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை என அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
அப்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
ரூ3,600 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்துக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
நாட்டின் விமானப் படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட பலரது தலைகள் இந்த விவகாரத்தில் உருண்டன.
பின்னர் 2014-ல் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது!
link click not Sonia Gandhi
 2016-ம் ஆண்டில் விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. ஆனால் சோனியா காந்தி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவும் தாம் தயார் எனவும் சோனியா கூறியிருந்தார்.



சுஷேன் மோகன் குப்தா கைது இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக சுஷேன் மோகன் குப்தா என்பவர் 2019-ம் ஆண்டு அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரது ஆவணங்களில் பல இடங்களில் SG என குறிக்கப்பட்டிருந்தது. இந்த SG குறித்தும் பூதாகரமான சர்ச்சைகள் வெடித்தது.

அதாவது SG என்பது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியைத்தான் குறிக்கிறது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் கட்சியின் பி.வி.சீனிவாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அ
தாவது அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ராஜீவ் சக்சேனா கொடுத்த பென் டிரைவில் இருந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன.

மின்னஞ்சல்கள் உள்ளிட்ட ஆவணங்களில் SG என குறிப்பிடப்பட்டிருந்தது. SG - சோனியா அல்ல SG - சோனியா அல்ல இந்த SG என்பது சுஷேன் மோகன் குப்தாவையே குறிக்கிறது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை குறிக்கவில்லை என அமலாக்கப் பிரிவு கூறியிருக்கிறது என்றார்.
இதன் மூலம் ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக