மின்னம்பலம் :பா.நரேஷ் :
மிகவும்
சாதரணமான கேள்விதான். இந்துத்துவத்தின் வரலாறு பற்றியோ, கொள்கைகள் பற்றியோ
நாம் பேசத் தேவையில்லை. ஒரு சமூகத்தைக் குறித்த மதிப்பு என்பது அந்தச்
சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான மனிதர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்
என்பதை வைத்தே அளவிடப்படும். அந்தச் சமூகம் எப்படிப்பட்ட வரலாற்றையும்
பண்பாட்டையும் கொண்டிருக்கிறது என்பதை அதன் நடத்தையை வைத்தே அறிய முடியும்.
இந்த அடிப்படையில், இந்துத்துவத்தைப் பற்றி யோசிக்கும்போது சில கேள்விகள் எழுகின்றன. ஒரு திரைப்படத்தால் அவமதிக்கப்படும் அளவுக்கு இந்துத்துவம் அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா? ஒரு திரைப்படம் தங்கள் பண்பாட்டைச் சீரழித்துவிடும் என்று நம்பும் அளவுக்கு இந்துத்துவவாதிகள் மூடர்களாக இருக்கிறார்களா?