வெள்ளி, 26 ஜனவரி, 2018

பேராறிவாளன் திடீர் விடுதலை: அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

வெப்துனியா :அதள பாதாளத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் மக்கள் செல்வாக்கை உயர்த்தவும், பாஜக கைப்பாவையாக இருக்கிறார் என்ற இமேஜையும் ஒரே நாளில் உடைக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து திடீரென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது.>இது தொடர்பாக துணை முதல்வரிடம் பேசிய அவர், சில அதிகாரிகளை அழைத்தும் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்தால் மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும். இந்த முடிவை எடுக்க ஜெயலலிதா, கருணாநிதிக்கு இருந்த தயக்கம், நெருக்கடி எடப்பாடியிடம் இல்லை என கூறப்படுகிறது.
எதிர்ப்புகள் இதற்கு வந்தாலும், அதற்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். வரலாற்றில் இடம் பிடிக்க கூடிய சம்பவமாக அது அமையும். தமிழ் அமைப்புகளும், தமிழ் தேசியவாதிகளும் எடப்பாடி பழனிச்சாமியை கொண்டாடுவார்கள்
இதானல் தனது செல்வாக்கை உயர்த்தி வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் எடப்பாடி. மேலும் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும் எடப்பாடி பேரறிவாளனையாவது விடுதலை செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறாராம். இதன் மூலம் தான் பாஜக கைப்பாவை என்ற இமேஜை ஒரே நாளில் உடைக்க திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். எனவே உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை என்ற அறிவிப்பு திடீரென வெளியாகலாம் என பேசப்படுகிறது.
இந்த விவகாரம் அரசியல் சாசன சர்ச்சையாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் இது தொடர்பாக முடிவெடுத்து தனது செல்வாக்கை உயர்த்த எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக