தினகரன் :கோவை: ேசலம் எடப்பாடி அருகேயுள்ள காட்டுவலவு பகுதியை
சேர்ந்ந்தவர் பாலமுருகன் (32). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரிடம் திருமண
தகவல் இணையதளம் மூலம் அறிமுகமாகிய கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி
நகரை சேர்ந்த நடிகை ஸ்ருதி (21), திருமண ஆசைகாட்டி 41 லட்சம் மோசடி
செய்துள்ளார். இதுதொடர்பாக பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார்
அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் ஸ்ருதி, அவரது தாய்
சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது
செய்தனர். பின்னர் கடந்த ஒரு வாரமாக இவர்களை போலீஸ் காவலில் எடுத்து
விசாரித்தனர்.விசாரணையில், மோசடி செய்த பணத்தை என்ன செய்தார் என்பதை ஸ்ருதி
போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் கூறியிருப்பதாவது:
ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டில் வேலை செய்யும்
திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்துள்ளனர்.
திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஸ்ருதி மோசடியாக பெற்ற பணத்தில் 15.50 லட்சத்திற்கு 62 பவுன் நகை, டைமண்ட் ரூபி பதித்த தங்க நகைகள் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் 5.50 லட்சம் முதலீடு, 1.32 லட்சம் விமான செலவு, ஓட்டல் செலவு போன்றவற்றுக்கு செலவழித்துள்ளார். அதோடு, 18.79 லட்சத்தை தன் பெயரில் உள்ள வெளிநாட்டு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ருதியின் உண்மையான தந்தை பெயர் ஹரிக்குமார். கல்விச்சான்றிதழில் உண்மையான தந்தையின் பெயரை போடாமல், வளர்ப்பு தந்தையின் பெயரை போலியாக மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் ஒரு வருட பவுண்டேசன் சான்றிதழ் படிப்பிற்காக கடந்த ஆண்டில் 10 லட்சம் செலுத்தியுள்ளார். அதேபல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பிற்காக 35 லட்சம் செலுத்தியுள்ளார். ஸ்ருதி பலரிடமும் இதேபோல், மோசடி செய்துள்ளதும், பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வதாக மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக