வெள்ளி, 26 ஜனவரி, 2018

ரகுராம் ராஜன் : பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பே காரணம்! இந்திய பொருளாதாரம் படு மோசமான ...

நக்கீரன் :இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை குறித்து தனது கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன். சுவிட்சர்லாந்தின் டேவோஸ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ‘அமைப்புசாரா தொழில்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களில் பல தற்போது மூடப்பட்டு விட்டன. மேலும், அந்த சமயத்தில் அவற்றை நடத்தியவர்களால் தப்பிப் பிழைத்து மீண்டும் தொழில் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது’ என அவர் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தணை அதிகரித்தாலும், அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு எனக் கூறிய அவர், ஜி.எஸ்.டி.யில் இருக்கும் குறைகளை, பிரச்சனைகளைச் சரிசெய்தால் அது நீண்ட நாட்களுக்கு பலனளிக்கும் என்று கூறினார். மேலும், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது அவரது செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, ‘நான் கருத்து மட்டுமே கூறமுடியும். அமைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக