வியாழன், 25 ஜனவரி, 2018

கொள்ளையன் நாதுரமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அனுமதி

கொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க ராஜஸ்தான் கோர்ட் அனுமதி
மாலைமலர் :கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வதுக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க ராஜஸ்தான் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கநகை கொள்ளை தொடர்பாக கொள்ளையன் நாதுராமைத் தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை சுற்றிவளைத்து பிடிக்க முற்பட்டபோது ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையர்களை நோக்கி முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்தது தெரியவந்தது. தப்பியோடிய நாதுராம் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்குப்பிறகு குஜராத்தில் கைது செய்யப்பட்டான். பின்னர் அவன் ராஜஸ்தான் கொண்டு செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.


கொள்ளை வழக்கு விசாரணைக்காக நாதுராமை ஒப்படைக்கும்படி தமிழக காவல்துறை சார்பில் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கொள்ளையன் நாதுராமை தமிழக போலீசிடம் ஒப்படைக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, நாதுராமை தமிழக போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு நாளை அழைத்து வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக