சனி, 27 ஜனவரி, 2018

பாதாளத்திற்கு செல்லும் பாஜகவின் செல்வாக்கு....விரைவிலேயே தேர்தல் ?-

Sutha - Oneindia Tamil : டெல்லி: லோக்சபாவுக்கு நாளை தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரிவு ஏற்படும் என இந்தியா டுடே - கர்வி மற்றும் சி வோட்டர் சர்வே ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே - கர்வி கருத்துக் கணிப்பில் நாளையே லோக்சபா தேர்தல் நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சரிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மோடிக்கு செல்வாக்கு அப்படியே இருந்தாலும் கூட பாஜகவுக்கு அதனால் பலன் கிடைக்காது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதேபோலவே சி வோட்டரின் கருத்துக் கணிப்பும் தெரிவித்துள்ளது.
 தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 1.7 சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கும். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 4.1 சதவீத வாக்கு சதவீத உயர்வு இருக்குமாம்.

 இந்தியா டுடே - கர்வி நடத்திய இன்னொரு சர்வேயில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 258 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை விட இது 24 சீட்கள் குறைவாகும்.
என் சி வோட்டர் நடத்திய சர்வேயில் கடந்த முறையை விட இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இடம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜக கூட்டணிக்கு 279 இடங்கள் கிடைக்குமாம். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 282 இடங்களில் வென்றது.
<;மறுபக்கம் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். அக்கூட்டணிக்கு 202 சீட்கள் கிடைக்கலாம். பாஜகவுக்கு பேரிடி பாஜகவுக்கு பேரிடி கடந்த ஆண்டு இதே இந்தியா டுடே கர்வி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 349 இடங்கள் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. 
ஆனால் தற்போது பாஜகவின் செல்வாக்கு பயங்கர அடி வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. சம பலத்தில் காங்கிரஸ், பாஜக சம பலத்தில் காங்கிரஸ், பாஜக வாக்குப் பங்கீட்டைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 40 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 38 சதவீதமும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராமர் கோவிலுக்கு ஆதரவு குறைகிறது ராமர் கோவிலுக்கு ஆதரவு குறைகிறது அதேபோல அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தேர்தலில் பெரிதா்க எதிரொலிக்காது என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். இதுகுறித்து கடந்த ஆண்டு கேட்கப்பட்டபோது 44 சதவீதம் பேர் எதிரொலிக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது 38 சதவீதம் பேர் எதிரொலிக்காது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக