A 17-year-old tribal student from a private Odisha institute has been selected by the United Nations to participate in the July 12 "Malala Day" youth session at the UN headquarters in New York, the institute said Saturday.Laxman Hembram, the tribal student of Kalinga Institute of Social Sciences (KISS), will be participating as the youth leader representative from India
பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை சரமாரியாக சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார். இந்நிலையில், மலாலாவின் 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12-ம்தேதி மலாலா தினம் இளைஞர் அமர்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவனை ஐ.நா. தேர்வு செய்துள்ளது. 17 வயதான லட்சுமணன் ஹெம்ப்ராம் (வயது 17) என்ற அந்த மாணவன், கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிலையத்தில் படித்து வருகிறான். அவன் இந்தியாவின் இளம் தலைவர் பிரதிநிதியாக மலாலா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.