சனி, 6 ஜூலை, 2013

நடிகை ரோஜா YSR காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ! லக்கா? கிக்கா ? இந்த தடவையாவது கிக்கு கிடைக்காம லக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும்
ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா ‘‘மரோபிரஜா பிரஸ்தானம்’’ என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். நேற்று வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார். இதையொட்டி விசாகபட்டினத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஷர்மிளா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 1 ஆண்டாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அரசியல் வாழ்க்கையில் அவர் தலை தூக்காமல் இருக்க காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அவரை பழிவாங்குகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியும் உடந்தையாக உள்ளது. அவர் ஜெயிலில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் 16 பேர் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். 2014-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். இவ்வாறு அவர் பேசினார். ரோஜா ஆந்திரா அரசியலில் அதிஷ்டம் இல்லாதவர் என்று பெயர் எடுத்தவர் ! அடிச்ச காசை எப்படித்தான் ஜெகன் காப்பாத்த போகிறாரோ ?
ஷர்மிளா 200 நாள் பாதயாத்திரை சென்றதை தொடர்ந்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதியும் நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தேசம்மா கோவில் எனப்படும் சிவசக்தி அம்மன் கோவிலில் 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார்.

2014-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதி வேட்பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நடிகை ரோஜா கூறியதாவது:-

ராஜசேகர ரெட்டி 1470 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். அவரது மகள் ஷர்மிளா தந்தையை மிஞ்சி 2664 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஷர்மிளா பாத யாத்திரையின் போது பொது மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டதால் ஜெகன் மோகன் ரெட்டியால் மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக