வியாழன், 4 ஜூலை, 2013

சனிபார்வை குஜராத்துக்கு நகர்கிறது! மோடியுடன் சுப்பிரமனியம் சுவாமி சந்திப்பு ! BJP யுடன் இணைய தயார் என அறிவிப்பு !

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று திடீரென சந்தித்தார். பின்னர் தமது ஜனதா கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க தயார் என்றும் அவர் அறிவித்தார். டெல்லியில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழுக் கூட்டத்தில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க மோடி வருகை தந்துள்ளார். இன்று காலை டெல்லி வந்த மோடியை குஜராத் பவனில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, நான் முன்னாள் ஜன சங்க அமைப்பைச் சேர்ந்த ஜனசங்கி. பாரதிய ஜனதா கட்சி விரும்பினால் அக்கட்சியுடன் நாங்கள் இணைகிறோம். என்னுடைய சித்தாந்தமும் பாஜகவின் சித்தாந்தமும் ஒன்றுதான். இரு கட்சிகளும் இணைய வேண்டும் என பாஜக விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன். நரேந்திர மோடி எனது பழைய நண்பர். அவரது தலைமையை நான் பாராட்டுகிறேன். அவரை 1972ஆம் ஆண்டில் இருந்தே தெரியும். அவர் பாஜக தலைமை ஏற்பதை ஆதரிக்கிறேன். நாங்கள் பழைய நண்பர்கள் என்றார் அவர்.
இப்படியாகத்தானே வாஜ்பாயி முதலாக ஜெயலலிதாவரை ப்ளாக் மெயில் செய்து காலத்தை ஓட்டினார் நல்லது மோடியின் ஜோதியில் ஐக்கியமாகட்டும் நாட்டுக்கு நல்லது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக