புதன், 3 ஜூலை, 2013

பாரதிராஜா: நாம் மூதாதையர்களை தான் வழிபட்டு வந்துள்ளோம் நாம் மதங்களற்ற மனிதர் என்பது எனக்குத் தெரியும்.

;எம் மக்களின் முடிவே என் முடிவு! பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்!
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள அன்னக்கொடி திரைப்படம் பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாரதிராஜா அன்னக்கொடி திரைப்படத்தின் மூலம் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவு படுத்தியிருப்பதாக புகார் கொடுக்கப்பட்டு ‘அன்னக்கொடி’ திரைப்படத்திற்கு தடைகோறி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது
இந்நிலையில் பாரதிராஜா தனது ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “என்மீதும் என் படைப்பின் மீதும் குற்றம் கண்டுபிடித்துள்ள என் மக்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். நாம் மதங்களற்ற மனிதர்களென்பதை. நம் முன்னோர்கள் வழிபடும் தெய்வங்கள், அதற்கு முன்னோடியாக உள்ளவர்களைத்தான் நாம் வழிபடுகிறோம் என்பதும் எனக்குத் தெரியும் வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்” என்பது பழமொழி. கண்ணகி காலத்தில் திருட்டுச் சிலம்பு என சந்தேகப்பட்டதனாலே “கோவலனைக் கொண்டு வா” என்ற வார்த்தையை தவறாக கொண்டு “கொன்று வா” என திருத்திச் சொன்னதனால் மதுரையை எரித்த கதை உண்டு. நாம் வணங்கும் மூனுசாமிக்கும், முனிசாமிக்கும் வித்தியாசம் உண்டு. மூனு சாமி என்பது முக்குலத்தோர் சாமி. முனிசாமியை முனி என்றும் சொல்கிறோம்.என் ‘அன்னக்கொடி’ திரைப்படத்தைப் பார்த்து அந்த வார்த்தையை உற்றுக்கவனித்து முனிசாமியா, மூனுசாமியா என்பதை தீர்க்கமாக தெரிந்துகொண்டு, அதன்பின் என் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.வட்டார வழக்கில் வெளிவந்துள்ள ‘அன்னக்கொடி’ படைப்பு எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. அதேபோல் இது எந்த ஒரு தனிப்பட்ட வட்டாரத்திற்கும் சொந்தமானதல்ல. இது அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து வட்டாரங்களுக்கும் சொந்தமான ஒரு பொதுவான கதை” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக