தர்மபுரியில்
இளவரசன் -திவ்யா காதலர்கள் விவகாரத்தில் நேற்று
இளவரசனை பிரிந்துவிடுவதாக கோர் ட்டில் திவ்யா உறுதியுடன் கூறினார். இந்நிலையில் இன்று இளவரசன் தர்மபுரியில் அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மரணம் அடைந்துள்ளார். இது கொலையா? தற்கொலையா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ‘’முதலில் திவ்யாவையும், அவரது தாயார் தேன்மொழியையும், அவரது தம்பியையும் அவர்கள் சிக்கியிருக்கின்ற கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும். அரசு அவர்களை அதன் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.ஆட்கொணர்வு பேரானை வழக்கை பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட ஆள் நீதிமன்றத்தின் முன்னாள் வந்துவிட்டால் அந்த வழக்கில் வீரியம் முடிந்துவிட்டது என்று பொருள். அதன் பிறகு அந்த வழக்கில் விசாரணை நடத்த தேவையில்லை. ஆனால், நீதிமன்றத்திற்கு திவ்யாவும் இளவரசனும் வந்த பிறகும் கூட திரும்ப திரும்ப அந்த வழக்கில் விசாரிப்பதற்கு உரிய சூழல் எப்படி அமைந்தது என்று தெரியவில்லை.மார்ச் மாதம் 27ம் தேதி நடைபெற்ற அந்த விசாரணையில் தன் கணவரோடு வாழ விரும்புகிறேன் என்று சொன்னபோதே அவரை இளவரசனுடன் அனுப்பியிருக்க வேண்டும். அல்லது அவர் வயது குறைவாக இருக்கிறார் என்று கருதியிருந்தால் அவரை அரசாங்க காப்பகத்தில் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் சில சக்திகள் அழுத்தங்களுக்கு பணிந்து அவரை தாயாரோடு அனுப்புகிறோம் என்கிற பெயரால் சதிக்கும்பலோடு அனுப்பிவிட்டார்களோ என்ற அய்யத்தை ஏற்படுதியிருக்கிறது.;எனவே, இது தொடர்பாக திவ்யா முன்னுக்கு பின் முரணாக பேசவேண்டிய நிர்ப்பந்தம் எப்படி இருந்தது என்பது உட்பட, முழுமையாக விசாரிக்க வேண்டும். தற்கொலை என்று இதை மூடிவிடவோ, இதன் பின்னணியில் இருக்கிற குற்றவாளிகளை தப்ப வைக்கவோ, சட்டமும் அரசும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக