சனி, 31 ஆகஸ்ட், 2024

கொல்கொத்தா பெண் டாக்டர் கொலையாளி : ரொட்டி வேண்டாம்... முட்டை நூடுல்ஸ்தான் வேண்டும்... சிறையில் அடாவடி

 மாலை மலர் :  கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பயற்சி டாக்டர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செயப்பட்டார்.
இந்த சம்பவத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க அரசு உதவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராய் என்பவர்தான் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சஞ்சய் ராய் இடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்று இரவு தொடக்கம்! தீவுத்திடலில்

 tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கார் பந்தயத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 பந்தய நிகழ்வான 'சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

22 வகை மோர்க்குழம்புகள்”

 No photo description available.வெங்கடேஷ் ஆறுமுகம் :   “22 வகை மோர்க்குழம்புகள்”
சைவ ரெஸ்டாரெண்ட் துவங்கவுள்ள நண்பர் ஒருவர் அவரது கடையின் ப்ரமோஷனுக்காக வித்தியாசமா ஒரு உணவுத் திருவிழா ஐடியா கொடுங்கன்னு கேட்டார்! அவர் கடை கோவை - கேரள எல்லையில் அமையவுள்ளது! இந்த ஓணத்திற்கு முன்பே கடையை திறக்க உள்ளார் ஆகவே மோர்க்குழம்புத் திருவிழான்னு ஒரு ஐடியா தந்திருக்கேன்! கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், புளிக் குழம்பு, தயிர், பாயாசம்னு ₹199 தான் ஒரு ரெகுலர் அன்லிமிட் சைவ சாப்பாடு! ஆனா 22 வகை மோர்க்குழம்புகள் உண்டு! கடை திறப்பு விழா, லொகேஷன் & கடையின் பிற விபரங்கள் வெகு விரைவில்!
கேரளா மோர்க்குழம்பு (புளிசேரி)
வெண்டைக்காய் மோர்க்குழம்பு

இலங்கையின் தேர்தல் நேரத்தில் NSA Chief அஜித் தோவலின் வருகை வீண் சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது

 


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற டைட்டிலில் உள்ள திரு  அஜித் தோவல் இலங்கைக்கு திடீரென்று வந்துள்ளார்
குறிப்பாக முக்கிய தேர்தல் நேரத்தில் இவர் ஏன் மலையக  தலைவர்களை சந்திக்க வேண்டும்?
இதன் மூலம் இலங்கையின் தேர்தல் விவகாரங்களில் மூக்கை நுழைகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
நீண்ட காலங்களாகவே இலங்கையின் உள்விவகாரங்களில் இவர்கள்  தலையிடுவது தெரிந்ததே.  .
மறுபுறத்தில் இவரை இந்நேரத்தில் சந்திப்பதன் மூலம் இலங்கையின் இந்திய வம்சாவளி தலைவர்கள் இன்னும் தங்களை இலங்கையர்களாக கருத்தவில்லையோ என்ற சந்தேகம் இலங்கையின் பெரும்பான்மை மக்களிடம் உருவாகும்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

பொது இடத்தில் பெண்களின் முகங்கள், குரல்களுக்கு தடை விதிக்கும் தாலிபனின் புதிய சட்டங்கள்

பிபிசி தமிழ் : “ஒழுக்கத்தை ஊக்குவிப்பதையும், தீயொழுக்கத்தை தடுப்பதையும்” நோக்கமாக கொண்டது என தாலிபன்கள் கூறும் புதிய சட்டங்கள் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களின் வீடுகளுக்கு வெளியே முகங்களை காட்டுவதையும், பொதுவெளியில் சத்தமாக பேசுவதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன.
இந்த புதிய சட்டங்களுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது குறித்து தங்களின் கவலையையும் தெரிவித்துள்ளது.

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்

 zeenews.india.com  - Sudharsan :  : அந்நிய செலவாணி முறைக்கேடு வழக்கில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.
மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது.
அதாவது, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) 37A பிரிவின்கீழ் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.908 கோடி அபராதம் கடந்த ஆக. 26ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் முடிவில் விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில்,"அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலதிபர் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது" என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

பொய் குற்றச்சாட்டு கொடுத்த நடிகைகள் மீதும் நடவடிக்கை வேண்டும்" - பிருத்விராஜ் வலியுறுத்தல்

 tamil.news18.-Vijay Ramanathan :   தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / "பொய் குற்றச்சாட்டு கொடுத்த நடிகைகள் மீதும் நடவடிக்கை வேண்டும்" - பிருத்விராஜ் வலியுறுத்தல்
“ஹேமா கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், பொய் புகார் கொடுத்த நடிகைகளும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
கேரள நடிகை ஒருவர் கடந்த 2017ல் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

புதன், 28 ஆகஸ்ட், 2024

வாழை - ஒரு விடலையின் பாலியல் சிக்கல்கள்


 Vimalaadhithan Mani
:   டீச்சர் மீது விடலை பையனுக்கு கிரஷ் வரலாம், ஆனால் அதுவே சீரியசான காதலாக வாழை படத்தில் காட்டப்பட்டு இருப்பது விரசத்தின் உச்சம்.
பூங்கொடி படம் வரைவது, மஞ்சள் பூசும் பூங்கொடி என தொடங்கும் டூயட் பாடலை பாடுவது,  பூங்கொடி டீச்சரின் கர்சீப்பை திருடி ரகசியமாக முகர்ந்து ஆனந்திப்பது,
மாட்டிக்கொண்டதும் அந்த கர்சீப் தன்னுடைய அக்காவினுடையது என பொய் சொல்வது,
பூங்கொடி டீச்சருடன் டிவிஸ் 50ல போக காலில்  காயமென்று நாடகம் ஆடுவது,    பின் டீச்சருடன் டிவிஸ் 50ல போய்க்கொண்டே  காதல் கனவு காண்பது,
குடும்ப கஷ்டத்துக்கு வேலைக்கு செல்வதற்கு பதில்  டீச்சரை சந்திக்க பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அம்மாவுடன் தகராறு செய்வது,
பள்ளியில் பஞ்சுமிட்டாய் பாட்டிற்கு பூங்கொடி டீச்சருடன் காதல் உணர்வுடன் நடனமாடுவது என படம் முழுவதும் விடலை பையனின் பாலியல் உணர்வுகளால் மட்டுமே உந்தப்பட்ட காதல் அழுத்தமாக சொல்லபடுகிறது. 

சஞ்சய் ராய் வாக்குமூலம் : மது குடித்தேன், சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றேன், பெண் மருத்துவரை பாலியல் கொடுமை செய்து கொன்றேன்!

 .hindutamil.i : கொல்கத்தா: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான சஞ்சய் ராய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டு உள்ளார். கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம்நேற்று முன்தினம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது மத்திய தடயவியல் குழு, சிபிஐ குழுவை சேர்ந்த மருத்துவர்கள் சுமார் 3 மணி நேரம் சஞ்சய் ராயிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

சார்ள்ஸ் விஜயவர்தனா எஸ் பி - யாழ்ப்பாணம் புலிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட நேர்மையான காவல் அதிகாரி!

ராதா மனோகர் : திரு .சார்ள்ஸ் விஜயவர்தனா எஸ் பி - யாழ்ப்பாணம்!
இணுவில் - ஒரு முடித்திருத்தகத்தின் அருகில் காவலுக்கு நின்றிருந்த ராணுவ வீரரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் குண்டு துளைத்து உள்ளே இருந்த ஒருவர் மீது பாய்ந்தது
அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்
அப்போது நிலவி வந்த சமாதான ஒப்பந்த கால சூழ்நிலையை குழப்ப வேண்டுமென புலிகள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்
அப்போது புலிகளின் யாழ்மாவட்ட பொறுப்பாளனாக கொடியவன் ஆஞ்சநேயன் என்கின்ற இளம்பரிதி கொலைகளை சர்வசாதாரணமாக நிறைவேற்றி கொண்டிருந்த காலம்.
பல்கலைக்கழக மாணவர் தலைவர் என்ற டைட்டிலில் யாழ்ப்பாண புலி மக்கள் படையின் defacto தலைவராக செல்வராசா கஜேந்திரன்  கொடூரங்களை அரங்கேற்றி கொண்டிருந்த அதே காலம்.
இந்த சம்பவத்தை வைத்து இலங்கை அரசை ஒரு போருக்கு தூண்டுவிட முடிவு செய்து மக்களை தூண்டி விட்டனர்.புலிகள்  .
மக்கள் எப்போதும் ராணுவத்தினரை விட புலிகளுக்கே பயந்தார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்கதான்.. மத பிரசாரம் செய்ய இல்லை.. வீரமணி பாய்ச்சல்!

 tamil.oneindia.com - Mathivanan Maran  :  சென்னை: இந்து சமய அறநிலையத்துறை என்கிற அமைச்சகமானது கோவில்களின் நிர்வாகத்தை மேற்கொள்ளவும், பாதுகாப்பு வழங்கவும்தானே தவிர..
இந்து மதத்தை பிரசாரம் செய்வதற்கான துறை அல்ல என அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்திய தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு திமுகவின் தோழமை இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் 24.8.2024 அன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற்றுள்ளது. காணொலிக் காட்சி வழியாக மாநாட்டைத் தொடங்கி வைத்து வாழ்த்தி உரையாற்றியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Kerala சினிமாவின் பாலியல் ...மோகன்லால் உள்பட அனைவரும் ராஜினாமா.. மலையாள நடிகர் சங்கம் கலைப்பு

 மாலை மலர்  :  கேரள திரைப்படத்துறையில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக ஹேமா அறிக்கை சமர்ப்பித்த நிலையில் இந்த பிரச்சனை மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் சமீப காலமாக எரிமலை போல வெடித்திருக்கும் பாலியல் குற்ற சம்பவத்திற்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றனர்.
மலையாள திரைப்படம் நடிகர்கள் சங்கத்தின் ப்ரெசிடண்ட் பொறுப்பில் இருப்பவர் நடிகர் மோகன்லால். அவர் தற்பொழுது அவரது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : எந்தெந்த முதலீட்டாளர்களை சந்திக்க திட்டம்?

 Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி பி எஸ் கோளாறு சவுதி அரேபியா பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்த தெலுங்கானா இளைஞர்கள்

 மாலை மலர் : சவுதி அரேபியாவில் டவர் டெக்னீஷியனாக பணிபுரியும் தெலுங்கானாவைச் சேர்ந்த 27 வயதான ஷாபாஸ் கான், கடந்த மூன்று ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள கான் அல் ஹாசா பகுதியில் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டவர் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர் 5 நாட்களுக்கு முன்பு சக ஊழியருடன் வழக்கமான வேலைக்காக புறப்பட்டார். பணிதொடர்பாக, ஷாபாஸ் மற்றும் சக ஊழியர் ஜிபிஎஸ் உதவியுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஜிபிஎஸ்-ல் ஏற்பட்ட கோளாறால் இருவரும் ரூபா அல்-காலி பாலைவனத்தின் நடுவே சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்ற காரில் எரிபொரும் தீர்ந்துவிட்டது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

"துரைமுருகன் பற்றி ஸ்டாலின் சொல்லிதான் ரஜினி பேசினார்"... கே.பி.முனுசாமி பகீர்!

minnambalam.com :  Selvam :  “நடிகர் ரஜினிகாந்தை பேசவைத்து திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்றுவதற்கு ஸ்டாலின் அச்சாரம் போட்டிருக்கிறார்” என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (ஆகஸ்ட் 26) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில், திமுகவில் அசாத்தியமான சீனியர்களை சாதுரியமாக ஸ்டாலின் கையாண்டு வருகிறார் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலைஞர் கண்களிலேயே விரல்விட்டு ஆட்டியவர் என்றும் ரஜினி பேசியிருந்தார்.

ஜெர்மனி: நிகழ்ச்சியில் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்.. 3 பேர் பலி – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

 maalaimalar : “ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் [வயது 56, 67] மற்றும் ஒரு பெண்ணை[வயது 56] கொடூரமாக கொன்றுளளார்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார்

 மாலை மலர் :  நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவதி குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே

 minnambalam.com - Aara  ஆகஸ்டு 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, கட்சியின் கொடியேற்றி வைத்திருக்கிறார் விஜய்.
சரியாக ஒரு மாதத்தில் அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்.