ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

நடிகர் ரியாஸ்கான் மீது பாலியல் புகார்

 மாலை மலர் :  நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.
நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவதி குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.



சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.

தற்போது, ரியாஸ் கான் மீது புகார் தெரிவித்துள்ள ரேவதி, நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக