வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

இலங்கையின் தேர்தல் நேரத்தில் NSA Chief அஜித் தோவலின் வருகை வீண் சந்தேகங்களுக்கு வழி வகுக்கிறது

 


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற டைட்டிலில் உள்ள திரு  அஜித் தோவல் இலங்கைக்கு திடீரென்று வந்துள்ளார்
குறிப்பாக முக்கிய தேர்தல் நேரத்தில் இவர் ஏன் மலையக  தலைவர்களை சந்திக்க வேண்டும்?
இதன் மூலம் இலங்கையின் தேர்தல் விவகாரங்களில் மூக்கை நுழைகிறார் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும்.
நீண்ட காலங்களாகவே இலங்கையின் உள்விவகாரங்களில் இவர்கள்  தலையிடுவது தெரிந்ததே.  .
மறுபுறத்தில் இவரை இந்நேரத்தில் சந்திப்பதன் மூலம் இலங்கையின் இந்திய வம்சாவளி தலைவர்கள் இன்னும் தங்களை இலங்கையர்களாக கருத்தவில்லையோ என்ற சந்தேகம் இலங்கையின் பெரும்பான்மை மக்களிடம் உருவாகும்.

இது வர இருக்கும் தேர்தலில் சிங்கள கடும்போக்காளர்களை உசுப்பி விடவும் கூடும்
ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவது சங்கிகளுக்கு வேப்பங்காய் என்பது உலகம் அறிந்த விடயம்தான்
நிச்சயமாக இந்த நேரத்தில் இவர் வருவது .
அதுவும் இந்திய வம்சாவளி எம்பிக்களை சந்திப்பது உள்நோக்கம் கொண்டதுதான்.  

படத்தின் இடமிருந்து வலமாக
வடிவேல் சுரேஷ் எம்பி - மருதப்பாண்டி ராமேஸ்வரம் எம்பி  அரவிந்த குமார் எம்பி அமைச்சர் - செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநர் - அஜித் தோவல் ரா தலைவர் - ஜீவன் தொண்டமான்  அமைச்சர்  -  இந்திய தூதர் 

Ajit Doval, National Security Advisor ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக