புதன், 28 ஆகஸ்ட், 2024

வாழை - ஒரு விடலையின் பாலியல் சிக்கல்கள்


 Vimalaadhithan Mani
:   டீச்சர் மீது விடலை பையனுக்கு கிரஷ் வரலாம், ஆனால் அதுவே சீரியசான காதலாக வாழை படத்தில் காட்டப்பட்டு இருப்பது விரசத்தின் உச்சம்.
பூங்கொடி படம் வரைவது, மஞ்சள் பூசும் பூங்கொடி என தொடங்கும் டூயட் பாடலை பாடுவது,  பூங்கொடி டீச்சரின் கர்சீப்பை திருடி ரகசியமாக முகர்ந்து ஆனந்திப்பது,
மாட்டிக்கொண்டதும் அந்த கர்சீப் தன்னுடைய அக்காவினுடையது என பொய் சொல்வது,
பூங்கொடி டீச்சருடன் டிவிஸ் 50ல போக காலில்  காயமென்று நாடகம் ஆடுவது,    பின் டீச்சருடன் டிவிஸ் 50ல போய்க்கொண்டே  காதல் கனவு காண்பது,
குடும்ப கஷ்டத்துக்கு வேலைக்கு செல்வதற்கு பதில்  டீச்சரை சந்திக்க பள்ளிக்கு செல்லவேண்டும் என்று அம்மாவுடன் தகராறு செய்வது,
பள்ளியில் பஞ்சுமிட்டாய் பாட்டிற்கு பூங்கொடி டீச்சருடன் காதல் உணர்வுடன் நடனமாடுவது என படம் முழுவதும் விடலை பையனின் பாலியல் உணர்வுகளால் மட்டுமே உந்தப்பட்ட காதல் அழுத்தமாக சொல்லபடுகிறது. 

பதின்பருவ குழந்தைகளுடன் படம் பார்க்க செல்லும் குடும்பஸ்தர்களை நெளிய வைக்கும்  "கவித்துவமான காட்சிகள்" என்று சிலாகிக்கப்படும் இந்த விடலை பருவத்து சிறுவனின் காதல் காட்சிகள் வாழை படத்தில் பாதிக்கும் மேலாக விரவியிருக்கிறது.
இதை பார்க்கும் விடலை பருவத்து சிறுவர்களுக்கு இதே போல டீச்சரை காதலிப்பது தவறே அல்ல எனும் சிந்தனை வரலாம். தப்பே இல்லை என சொல்ல வருகிறாரா உலக தரம் வாய்ந்த இயக்குநர்.?
சிறுவர்களுடன் படம் பார்க்க செல்லும் குடும்பஸ்தர்கள் நெளியபோவது நிச்சயம். இதைத்தான் உலக தரம் வாய்ந்த படம்னு கூவுறாய்ங்க  அறிவுஜீவிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக