சனி, 25 மே, 2019

கல்விச் சீர்திருத்தம் ( சீர்குலைப்பு) : மோடியின் 100 நாள் இலக்கு!

கல்விச் சீர்திருத்தம்: மோடியின் 100 நாள் இலக்கு!மின்னம்பலம் :இரண்டாவது முறையாக மோடி பொறுப்பேற்றவுடன் கல்வித் துறையில் முக்கியச் சீர்திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. 303 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இம்முறை ஆட்சியமைக்கிறது. மோடி மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மேற்கொள்ளவுள்ள பல முக்கிய நடவடிக்கைகளில் கல்விச் சீர்திருத்தமும் ஒன்று. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கல்வித் துறையில் சில முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1986ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை புதிதாகத் தொடங்குவதற்கான அனுமதி, உயர்கல்விக்கான ஒற்றை விதிமுறை போன்ற நடவடிக்கைகளை முதல் 100 நாட்களுக்குள் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?

மத்திய அமைச்சராகிறார்   ஹெச்.ராஜா?மின்னம்பலம்:  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனியாகவே அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார் மோடி. 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 இடங்களில் வெற்றிபெற்றது. இம்முறை அதைவிட 21 தொகுதிகள் அதிகமாக பெற்று பாஜக மட்டுமே 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 352 இல் பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில் , “மீதமுள்ள 190 இடங்களில் ஏன் தோல்வி அடைந்தோம், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏன் ஒரு இடம் கூட பாஜகவுக்குக் கிடைக்கவில்லை ?” என்பதே பாஜக தலைவர் அமித் ஷாவின் முக்கியக் கேள்வியாகவும், ஆலோசனையாகவும் இருந்து வருகிறது. தமிழக ஆர்எஸ்எஸ் அமைப்பும் இது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

இஸ்லாமியர்களை தாக்கிய பசுப் பாதுகாவலர்கள்! ..வீடியோ


மின்னம்பலம் :மக்களவைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு வென்று, இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்க உள்ளார். அதற்குள்ளாக, மத்தியப் பிரதேச மாநிலம் சியோனியில் மூன்று இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி எடுத்துச்செல்வதாக செய்திகள் பரவியதைத் தொடர்ந்து ஒரு பெண் உட்பட மூன்று இஸ்லாமியர்களை பசுப் பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், தங்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷங்களை எழுப்பும்படி பசுப் பாதுகாவலர்கள் வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மூன்று இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று நபர்களும் தாக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன.
அந்த வீடியோவில் பசுப் பாதுகாவலர்கள் கைகளில் கம்புகளுடன் நிற்கின்றனர். மூன்று இஸ்லாமியர்களை ஒருவர்பின் ஒருவராக மரத்தில் கட்டி கடுமையாக தாக்குகின்றனர். சுற்றி நிற்கும் மக்கள் வேடிக்கை பார்ப்பதுபோல வீடியொ வெளியாகியுள்ளது. ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி பசுப் பாதுகாவலர்கள் இஸ்லாமியர்களை தாக்கியுள்ளனர். மேலும் அவர்களுடன் வந்த பெண்ணை செருப்புகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மற்ற பசுப் பாதுகாவலர்களையும் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!

Shyamsundar - /tamil.oneindia.com : மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான் 
சென்னை: திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி விவரங்கள் எல்லாம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 
லோக்சபா தேர்தலில் பாஜக அசத்தல் வெற்றியை சுவைத்து இருக்கிறது. மொத்தம் 303 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. மாறாக காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே தனித்து வென்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 
 இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனக்கு போட்டியாக கருதிய எல்லா கட்சிகளையும் வீழத்திவிட்டது. 
பகுஜன சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளையும் பாஜக அசால்ட்டாக வீழத்திவிட்டது. 
திரிணாமுல் மட்டும் சில இடங்களில் வென்றுள்ளது. ஆனால் அந்த வெற்றியும் பெரிய வெற்றி இல்லை. 
 யாரும் நினைக்காத அளவிற்கு பாஜகவிற்கு ஒரே போட்டியாக திமுக மாறி உள்ளது. 
ஆம், இந்திய அளவில் பாஜகவிற்கு தற்போது இருக்கும் ஒரே போட்டி காங்கிரஸ் கிடையாது. திமுகதான். ஆம் தற்போது திமுக லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறியுள்ளது. 

மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?

மின்னம்பலம் : மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள சூழலில், அதற்கு நேர்மாறாக தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார்தான். தேனி தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட 76,693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிலையில் ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது. இதுதொடர்பான கேள்வி நேற்று அதிமுக, பாஜக என இரு தரப்பினர் மத்தியிலும் எழுப்பப்பட்டது.

மம்தா வாக்கு வங்கி சரிகிறதா? மேற்கு வங்க கம்யுனிஸ்டுகளின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றது?

மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா...! வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்
  தினத்தந்தி :  2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மோடியின் அலையை மேற்கு வங்காளத்தில் தடுக்க தவறினார். மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்ததும் சற்று சறுக்கல் நேரிடும் என எதிர்பார்த்த பா.ஜனதா மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய கிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தியது.
மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு களமிறங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. அது வாக்கு எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது. மாநிலத்தில் 23 தொகுதிகளில் வெல்வோம் எனக் களமிறங்கிய பா.ஜனதா அதனை நிறைவேற்றும் வகையில் முன்னிலையை பெற்றது.< மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இருந்தது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்... 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

pollachipollachi nakkheeran.in - kalaimohan : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வசந்தகுமார் சபரீராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளர். இந்த கடந்த மாதம்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி பொள்ளாச்சி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு பின்னர் சிபிஐ க்கு மாற்றப்பட்டது. 
இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை வழக்கு பதிவு செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விதிகளின் அடிப்படையில், முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரெண்டு பேருக்கு ஒருத்தர் ஓட்டு போட்டது திமுக கூட்டணிக்குதான்.. அசரடிக்கும் புள்ளி விவரம்

திமுக கூட்டணி tamil.oneindia.com - veerakumaran :
சென்னை:  லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் அதிமுகவுடன் அந்த கட்சி அமைத்த, கூட்டணி பெரும் தோல்வியில் சென்று முடிவடைந்துள்ளது.
அதிகரிப்பு தமிழத்தில் திமுக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிக வாக்கு வங்கியை பெற்று அசத்தியுள்ளது. அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்கு வங்கியை பார்த்தால் கண்டிப்பாக அதிர்ச்சிதான் கிடைக்கும். சீட்டுகள் மட்டுமல்ல, ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதம் என்ன என்பதும் அரசியல் கணக்கில் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும் எவ்வளவு வாக்குகளை தமிழகத்தில் பெற்றன என்பது தொடர்பாக ஒரு பார்வை.
திமுக மட்டுமே தனித்து 32.76% வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்- 12.76%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2.40%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2.43%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1.11% வாக்குகளை பெற்றுள்ளன. ஆக மொத்தம், திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் என்பது, 51.46% ஆகும்.

வெள்ளி, 24 மே, 2019

நடிகர் பிரகாஷ் ராஜை பின்தள்ளிய நடிகர் மன்சூர் அலிகான் .

Mohan BJP elected with over 5.4 lakh votes as against congress Arshad's tally of 4.9 lakh votes. Actor Prakash Raj is way behind at 25,881 votes, according to the Election Commission.
mansoor alikhan, naam tamilar katchi, dindugul, loksabha election, prakash raj, votes, மன்சூரலிகான், நாம் தமிழர் கட்சி, திண்டுக்கல், லோக்சபா தேர்தல்/tamil.indianexpress.com : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான், 54,957 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ஐந்தாம் இடமே கிடைத்தது. திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் கண்ட நடிகர் மன்சூரலிகான்,
பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ் ராஜை  (25,881 votes) விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.
மன்சூரலிகான் , திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் டீக்கடையில் டீ குடித்து கொண்டேயும், தெருவில் குப்பை வாரிக் கொண்டேயும் வாக்கு சேகரித்தார்.. திடீரென கடைக்குள் நுழைந்து பஜ்ஜி, வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். ஊசிமணி, பாசி மணி நடுரோட்டில் கடை போட்டு என கூவி விற்கும் அளவுக்கு பிரச்சாரம் களை கட்டியது.

தென் சென்னையை தட்டி பறித்த தமிழச்சி தங்கபாண்டியன் .. எல்லா தரப்பையும் எப்படி வென்றார்?


எப்படி வென்றார் தமிழச்சி தங்கபாண்டியன்?!’ – தென்சென்னையை ஆச்சர்யப்படுத்திய 4 விஷயங்கள்"
– தென்சென்னையை ஆச்சர்யப்படுத்திய 4 விஷயங்கள் ஆ.விஜயானந்த் - விகடன் :
தோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது. அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தன், அ.ம.மு.க வேட்பாளர் இசக்கி சுப்பையா உட்பட யார் மனதையும் காயப்படுத்தும் அளவுக்கு அவர் விமர்சனங்களை முன்வைக்கவில்லை.< தென்சென்னை தொகுதியில் மூன்றாவது முறையாக இலை துளிர்ப்பதைத் தடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன். அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை எதிர்த்து 2,62,212 வாக்குகள் வித்தியாசத்தில் சூரியனை மலரச் செய்திருக்கிறார். எழுத்தாளர், பேச்சாளர், ஆங்கிலப் பேராசிரியை எனப் பல பிளஸ்கள் இருந்தாலும், தேர்தல் களத்தைத் தமிழச்சி எதிர்கொண்ட விதத்தை ஆச்சர்யத்தோடு விவரிக்கின்றனர் தென்சென்னை தொகுதி உடன்பிறப்புகள்.
1. படித்தவர்கள் நிரம்பி இருக்கும் தொகுதியாகப் பார்க்கப்படும் தென்சென்னையில் கற்றவர்கள் மத்தியில் படித்த வேட்பாளராகப் பிரசாரம் செய்தார். அடித்தட்டு மக்களிடம், `நான் இன்னும் கிராமத்து சுமதிதான்’ என்ற அணுகுமுறை பெரிதும் கைகொடுத்தது. எந்த வேட்பாளரும் செய்ய முடியாத அளவுக்கு நேரடியாக வாக்காளர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டார். தோற்றம், பேச்சு உட்பட பல விஷயங்கள் தமிழச்சிக்கு பிளஸ்ஸாக மாறியது.

ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து .. மோடிக்கு பரூக் அப்துல்லா சவால்

Modi cant remove article 370, 35A from Kashmir: Farooq Abdullah tamil.oneindia.com - arivalagan. ஜம்மு: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா சவால் விட்டுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 35A மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு சட்டப் பிரிவுகள் மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருப்பதாகவும் பாஜக கூறியிருந்தது.
இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, காஷ்மீர் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி ஆகியோர் அப்போதே கண்டனம் தெரிவித்தனர். இது இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் உள்ள உறவை துண்டிக்கும் செயலாக இருக்கும் என்றும், இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம் என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கேரளாவில் வரலாறு படைத்த காங்கிரஸ்! - தென் இந்தியாவில் ராகுல் காந்தி வென்ற கதை

கேரளாவில் ராகுல்vikatan.com - -sathya-gopalan : நடந்துமுடிந்துள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில், 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைபற்றி, தனிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதில், ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 90 இடங்கள் வரை  கைப்பற்றியுள்ளது. அதேபோல, மற்ற கட்சிகள்100 இடங்கள் வரை கைப்பற்றியுள்ளன.
இந்தத் தேர்தல், ராகுலுக்கு சற்று சோகமான தேர்தல் என்றே கூற வேண்டும். காங்கிரஸின் கோட்டையான உத்தரப்பிரதேசம் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். இதற்கு முன்னதாக இரண்டு முறை அமேதி மக்களவை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார். 
ஆனால் அதேவேளை, வயநாட்டில் மாபெரும் வெற்றிபெற்று வரலாறு படைத்துவிட்டார். சுமார் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

இளையராஜா அரசியல்? முதல் கட்டமாக கமலையும் ரஜனியையும் இணைக்கும் முயற்சி!

டிஜிட்டல் திண்ணை: அரசியலில்  ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைன் வந்தது. கொஞ்ச நேரம், ‘டைப்பிங்’ மோடில் இருந்த வாட்ஸ் அப் சில நிமிடங்களில் மெசேஜை அனுப்பியது.
“மே 23 ஆம் தேதி மக்களவை தேர்தல் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று அரசியல் தலைவர்கள் பலரும் ரிசல்ட் அறிய ஆவலோடு காத்திருந்தார்கள். தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்திவிட்டார்கள். அதேநேரம் சட்டமன்றத் தேர்தல் வரும்போது கட்சி தொடங்குவேன் என்று ஏற்கனவே அறிவித்து விட்ட ரஜினியும் இந்தத் தேர்தலின் முடிவுகளை டிவியில் பார்த்துள்ளார். மோடி வெற்றி முகத்தில் இருந்தபோதே அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. இது வெளியே தெரிந்தது. இதைத் தாண்டி நேற்றைய தேர்தல் முடிவுகள் பற்றி தனது நெருக்கமான வட்டாரத்துடன் விவாதித்திருக்கிறார் ரஜினி என்பதுதான் முக்கியமான விஷயம்.

திருமாவளவன் :தமிழகம் போல காங்கிரசோடு கைகோர்த்து செயல்பட்டிருந்தால் பாஜகவை ஒடசெய்திருக்க முடியும்

பாஜக வெற்றிபெற இதுதான் காரணம்: திருமாவளவன்மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் விசிக போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3,219 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றிபெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 24) திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர். வெற்றிச் சான்றிதழை அவரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அகில இந்திய அளவில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. சங் பரிவார் கைகளில் ஆட்சி போய்விடக் கூடாது என்று நினைத்த எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் அணி திரண்டது போல மற்ற இடங்களிலும் ஒன்று சேர்ந்து காங்கிரசோடு கைகோர்த்து செயல்பட்டிருந்தால் பாஜகவை புறமுதுக்கிட்டு ஓடச் செய்திருக்க முடியும். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததன் காரணமாக பாஜக எதிர்ப்பு வாக்கு வங்கி சிதறிவிட்டதால், அது பாஜக தனிப்பெரும்பான்மை பெறக் காரணமாகிவிட்டது.

தமிழ்நாடு தேர்தல் ..கட்சிகள் வாங்கிய ஓட்டு சதவிகிதம்

நக்கீரன் :நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணியும், மாநிலத்தில் திமுக கூட்டணியும் அதிக இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் திமுக கூட்டணி 51.46% ஓட்டுக்களை பெற்றுள்ளது.
அதில் திமுக 32.76%,காங்கிரஸ் 12.76%,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2.40%,இந்திய கம்யூனிஸ்ட் 2.43%,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1.11% மற்றும் சில கூட்டணி கட்சிகளின் சதவிகிதம் எல்லாம் சேர்ந்து 51.46% வாக்குகளை திமுக கூட்டணி பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணியில் அதிமுக 18.48%,பாமக 5.24%,பிஜேபி 3.66%,தேமுதிக 2.19% ஆக அதிமுக கூட்டணியில் 29.57% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
மேலும் மக்கள் நீதி மய்யம்,நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் சில சுயேட்சைகள் எல்லாம் சேர்ந்து 17.11% வாக்குகளை பெற்றுள்ளனர்.
கடந்த முறை விட இந்த முறை நோட்டாவிற்கு கம்மியான வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.இந்த முறை நோட்டாவிற்கு 1.28% பேர் மட்டுமே போட்டுள்ளனர்.
இதில் திமுகவிற்கு கடந்த முறை விட இந்த முறை அதிகமான சதவிகிதம் பெற்றுள்ளனர்.மேலும் அதிமுகவிற்கு கடந்த முறையை விட இந்த முறை 15% குறைவாக பெற்றுள்ளனர்.

சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயால் குறைந்தது 15 மாணவர்கள் பலி

BBC : சூரத்தில் வெள்ளிக்கிழமை மாலை வணிகவளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீயால், குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கட்டடத்தில் இருந்து குதித்தபோது 15 மாணவர்கள் உயிரிழந்தனர் என்று குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
டேக்சிலா எனும் கட்டடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ எரிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான காட்சிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் இருந்து மாணவர்கள் குதிப்பது காட்டப்பட்டு வருகிறது.
இந்த தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.

வெற்றிச் சான்றிதழில் விழுந்த மலர்.. கலைஞர் சமாதியில் கலங்கிய கனிமொழி!

கனிமொழிசன்றிதலில் மலர்vikatan.com - -sathya-gopalan :
தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 மக்களவை தொகுதிகளில் 37 இடங்களில் தி.மு.க அமோக வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகளில் இருந்து போட்டியிட்ட பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பா.ம.க-வின் அன்புமணி, தே.மு.தி.க-வின் சுதீஷ் போன்ற பல தலைவர்களும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இவர்களில் தூத்துக்குடியில் களமிறங்கிய தி.மு.க-வின் கனிமொழிக்கும், பா.ஜந்வின் தமிழிசைக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கிச் சூடு ஆகியவை ஆளும் கட்சி மீதான நல்லெண்ணத்தை உடைத்தது. அதனால் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பா.ஜ.க-வுக்கு, அங்கு வெற்றி வாய்ப்பு சற்று கடுமையாகவே இருந்தது. அந்த நேரத்தில் கனிமொழி செய்த சில சிறப்பான செயல்கள் மக்கள் மத்தியில் அவர் செல்வாக்கை உயர்த்தியது. மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காகக் கனிமொழி, தூத்துக்குடியில் தனியாக ஒரு வீடு எடுத்து அங்கேயே தங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை... இடைத்தேர்தல் வெற்றி ..

இடைத்தேர்தல் வெற்றி: சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை!மின்னம்பலம் : தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக. 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஒசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. வழக்குகளைக் காரணம் தள்ளிவைக்கப்பட்ட நான்கு தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, அதிமுக 7 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுக தலா 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
இதன் மூலமாக அதிமுக – 9, திமுக – 13 இடங்கள் என்ற நிலை தொடர்ந்து வருகிறது.

சிதம்பரத்தில் திருமா வெற்றி .... வெற்றி பெற்றோர் விபரம்


கலைமோகன் - நக்கீரன் :  சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக
வேட்பாளர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு இழுபறிகள் மற்றும் முன்னிலை, பின்னடைவுகளை சந்தித்து, 23 ஆவது இறுதி சுற்றில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாமல் இருந்தது.
இரண்டு வாக்கு ஒப்புகை விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றதால் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் தற்போது 500229 வாக்குகள் பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தி சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சிதம்பரம் :-  தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)
அரக்கோணம் -  எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
  • ஆரணி - எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
  • மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
  • வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
  • தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
  • சிதம்பரம் - திருமாவளவன் (விசிக )
  • கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
  • கடலூர் - டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
  • தருமபுரி - செந்தில் குமார் (திமுக)
  • திண்டுக்கல் - வேலுசாமி (திமுக)
  • ஈரோடு - அ.கணேசமூர்த்தி (மதிமுக - திமுக சின்னம் )
  • கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி (திமுக)
  • காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக)

தினகரனின் கணக்கு! – தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் சசிகலா உறவுகள்..

சசிகலாதினகரன்33…12…7… தினகரனின் கணக்கு! – தேர்தல் முடிவுகளால் கொந்தளிக்கும் சசிகலா உறவுகள்.. 
ஆ.விஜயானந்த்  - vikatan:  : “எதிர்பார்க்கும் தோல்விக்கும் தலையில் இடி விழும் அளவுக்கான தோல்விக்கும் ஏராளமான வித்தியாசம் இருக்கிறது. தினகரன், தன்னைச் சுற்றியிருக்கும் சிலர் மட்டுமே சொல்வதை வைத்துக்கொண்டு செயல்பட்டார். அவருக்கு ஆலோசனை கூறிக்கொண்டிருந்த அ.ம.மு.க வேட்பாளர், தற்போது மக்கள் நீதி மய்யத்தோடு வாக்கு வித்தியாசப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்.”
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஸ்டாலினுக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் எடப்பாடிக்கும் ஓரளவுக்கு நிம்மதியைத் தரத் தொடங்கியுள்ளன. `வாக்கு எண்ணிக்கை முடிவில் எத்தனை சட்டமன்றத் தொகுதிகளைத் தக்க வைக்க முடியும்?’ எனக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை. `இந்தத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்குக் கிடைத்த தோல்வி சசிகலா ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. சசிகலாவை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் தினகரன்’ எனக் கொதிக்கின்றனர்.

இயந்திரம் வென்றது! இந்தியா தோற்றது! வட மாநிலங்களில் VVPAT வாக்கு எண்ணினால் பாஜக 100 ஐ தாண்டாது? சமுக வலையில்....

Swathi K ; புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான், இந்து/ முஸ்லீம், கோட்சே, நேரு, ராஜிவ், ராமர் கோவில் இதை மட்டுமே பேசி நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் திசைதிருப்பி 300 சீட்'க்கு மேல் வெற்றி பெற முடியும் என்றால் இனியும் இதுவே தொடரும்...
மக்களை தேசபக்தி, மதவெறியில் முட்டாள் ஆக்கும் வித்தை தெரிந்தவர்கள் அதையே தான் மறுபடி மறுபடி செய்வார்கள்..
ஆறுதலான ஒரே விஷயம் கேரளா, தமிழ்நாட்டில் இதுவரை நுழையவில்லை.. ஆனால் நுழைவார்கள்.. ஏற்கனவே இந்தியாவின் தன்னாட்சி அமைப்புகளை கைப்பற்றிய RSS/ BJP மீதி அமைப்புகளையும் கைப்பற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில்..
முற்றிலும் ஜனநாயகம் அடித்து நொறுக்கப்படும்.. அதன் விளைவுகள் தெரிய சில வருடங்கள் ஆகலாம்.. ஆனால் அதை எளிதாக சரி செய்ய முடியாது.. மக்களின் உரிமைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்படும்..
தமிழ்நாட்டில் இருந்து வடமாநில முட்டாள்களை புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் புரிந்தது..
வாழ்த்துக்கள் புதிய இந்தியா!!
Prabhakaran Kumar : அநேகமாக இதுவே நாம் சந்தித்த கடைசி தேர்தல் என தோன்றுகிறது.... அடுத்த 5 வருடங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் வரலாற்றின் குப்பை தொட்டிக்கு எறியப்படும்...... வட நாட்டினரை பயத்தில் வைத்தே ஓட்டை பெற்றுவிட்டனர்....

Raja Baskar Rajakula Pandian மாநில கட்சித்தலைவர்களான மாயாவதி,மம்தா, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு இவர்களின் பிரதமர் பதவி ஆசையால் கூட்டணி சரியாக அமையவில்லை. அதீத நம்பிக்கை அனைத்து எதிர்கட்சிகளுக்கும் வினையாகிவிட்டது. ஒரே ஒரு ஆறுதல் விந்தியமலைக்கு தெற்கே (கர்நாடகா தவிர) பா.ஜ.க. வெற்றி பெறவில்லை என ஆறுதல் அடையலாம். அதுவும் தமிழகம் பெரியார் பூமி என நிரூபித்துவிட்டது.

திருமாவளவனின் வெற்றி .. கடும் போர்முனையில் களமாடி பெற்ற வெற்றி!

Sivasankaran Saravanan : தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் அவரது இந்த வெற்றியை மகத்தான சாதனையாக கருதுகிறேன். பலரும் சொல்வது போல் அவர் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் இந்த இழுபறியே இருந்திருக்காது. என்றாலும் அவரது சுய அடையாளம் இன்று காப்பாற்றப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் அதிகாரப்பூர்வமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டு திமுக உறுப்பினராக மாறுகிறார். மறுநாள் வேட்பு மனுத்தாக்கல் அன்று வேண்டுமென்றே பாமக வழக்கழிறஞர்கள் , அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் , அவர் எப்படி உதயசூரியன் சின்னத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என கேட்கின்றனர். பாமக வழக்கறிஞர்கள் ஒன்றும் ஏதுமறியா குழந்தைகள் அல்ல. இருந்தாலும் ரவிக்குமார் வாயால் அது வரவேண்டும் என கிடுக்கிப்பிடி போடுகிறார்கள். ரவிகுமார் தரப்பும் அவர் திமுக உறுப்பினராகிவிட்டார் என்ற சான்றுகளை தேர்தல் அதிகாரியிடம் காட்டுகிறார்கள்.
இதேபோன்ற ஒரு நெருக்கடியை திருமாவளவனுக்கும் தர பாமக திட்டமிட்டது. விசிக வின் நிறுவன தலைவரே விசிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டார் என்பதை தம்பட்டம் அடித்து அவரது இமேஜை காலி செய்யவேண்டும் என்பது அவர்களது திட்டம். அதை உணர்ந்த திருமாவளவன் வெற்றி வாய்ப்பை பற்றி பெரிதும் கவலைப்படாமல் துணிந்து தனிச்சின்னமாம் பானை சின்னம் கண்டார்.

மொத்தம் தெரிவான 5 கம்யுனிஸ்ட் எம்பிக்களில் 4 பேர் திமுக கூட்டணியில் இருந்து ...

LR Jagadheesan : ஆறாவது முறையாக தமிழ்நாட்டு முதல்வராகும் வரலாற்று சாதனைக்கான வாய்ப்பு வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் (அதுவும் ஏராளமான சட்டவிரோத முறைகேடுகள் மூலம்) தன்னிடம் இருந்து பறிபோக வஞ்சகத்தோடு ஒத்துழைத்த இடதுசாரிகள் குறித்து கலைஞர் வெளியிட்ட கவலைதோய்ந்த வார்த்தைகள் இவை.
சரியாக மூன்றாண்டுகள் கழித்து ஒட்டுமொத்த நாட்டில் இருந்தும் இந்திய நாடாளுமன்றம் செல்லும் மொத்த இடதுசாரி உறுப்பினர்கள் ஐந்து பேரில் நான்குபேரை தம் தோளில் சுமந்து வெற்றி பெற வைத்திருக்கிறது கலைஞரின் கட்சியான திமுக. அதுவும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவைவிட, ஆண்ட மேற்குவங்கத்தைவிட என்றுமே ஆளாத தமிழ்நாட்டில் இருந்து இந்த நான்குபேர் செல்வதற்கு திமுகவின் ஒத்துழைப்பும் உழைப்புமே முதன்மைக்காரணம்.

திருமாவளவனின் வெற்றி உறுதி .... நீண்ட இழுபறிக்கு பின் முன்னணியில்


நக்கீரன் :சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவன் வெற்றி உறுதி. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இழுபறியில் நீடித்து வந்த நிலையில் திருமாவளவன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதிமுக வேட்பாளருடன் 2825 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது

ராகுல் காந்தி ; மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன்


tamil.news18.com : உத்தரப் பிரதேச அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிதி இராணியை விட 50 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்திருக்கும் முக்கியமான தொகுதிகளில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி. நேரு குடும்பத்தின் ஆஸ்தான தொகுதி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நான்காவது முறையாக அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.>கடந்த மூன்று முறைகளைப் போல அல்லாமல் இந்தமுறை காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைவராக ராகுல் காந்தி தேர்தலைச் சந்திக்கிறார். அதனால், இந்தத் தொகுதி இன்னமும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரமராவதற்கான வாய்ப்புள்ள ஒருவராகவும் ராகுல் காந்தி அடையாளம் காணப்பட்டுள்ளார். அதனாலும், இந்தத் தொகுதி மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக உள்ளது.
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட தொகுதி, அமேதி தொகுதி எப்போதும் காங்கிரஸின் கோட்டை. 1977-ம் ஆண்டு, நேரு குடும்பத்தைச் சேர்ந்த இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இந்திரா காந்தி, கொண்டுவந்த அவசரநிலைக் காலகட்டம் முடிவுக்குப் பிறகு இந்தியா சந்தித்த முதல் தேர்தல் அது. நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிரான கடுமையான எதிர்ப்பு இருந்த காலம்.

YSR காங்கிரஸ் ஆந்திராவில் பிரமாண்ட வெற்றி .. ஜெகன் ஆட்சி அமைக்கிறார் . ரோஜா பேட்டி ..வீடியோ

tamiloneindia -Venkatesh Kannaiah : மத்தியில் மாபெரும் கூட்டணி அமைக்கலாம் என்ற கனவில் இருந்த சந்திரபாபு நாயுடுவையே புலம்ப வைக்கும் விதமாக
வெளியாகியுள்ளது ஆந்திர மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள். இரண்டு தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது.
சந்திரபாபு நாயுடு, அவர் மகன் நாரா லோகேஷ், மற்றும் மூத்த தலைவர்களும் அங்கு தோல்வியை சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற தொகுதிகளில் 25ல் 24ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றது. 175 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலுல் 150 இடங்களை ஜெகன் மோகன் ரெட்டி கைப்பற்றியுள்ளார்.
திரைப்பட நடிகர் மற்றும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வந்தார்.  50% மேலான வாக்கு வங்கிகளை ஜெகன் மோகன் கைப்பற்றியுள்ளார். சந்திரபாபு நாயுடு தன்னுடைய ஆட்சியில் தன் மக்களுக்கு, விவசாயிகளுக்கு, பெண்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை செய்தார். அது அவரை மீண்டும் அரியணையில் அமர்த்தும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் நிலை என்னவோ வேறாக முடிந்துவிட்டது.
நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இன்றும் கூட 39% வாக்குவங்கிகளை தன் வசம் வைத்துள்ளது. பாஜகவிற்கு ஒரு இடத்திலும் வாக்குகள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. 1%க்கும் குறைவான வாக்குகளையே பாஜக பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 23 மே, 2019

தமிழகத்தில் 5 இலக்கியவாதிகள் நாடாளுமன்றத்திற்கு .. கனிமொழி .தமிழச்சி தங்கபாண்டியன் .ஜோதிமணி . ரவிக்குமார் ..வெங்கடேசன். ..

தூத்துக்குடியில் கனிமொழி நாவல்களை படைத்தவர் தலித்திய அரசியல் பெயர் மாற்றிக் கொண்டார் சாகித்ய அகாடமி விருது tamiloneindia: சென்னை: : தமிழகத்தில் இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் 5 பேர் எம்பிக்களாக்கி இருக்கின்றனர். தமிழகத்தில் அரசியலுக்கும், இலக்கியத்துக்கும் ஒரு நீண்டகால தொடர்பு உண்டு. திரு விளையாடல் படத்தின் தருமியின் வசனம் போல தமிழக அரசியலில் பிரிக்க முடியாத ஒன்று. லோக்சபா தேர்தலில், எழுத்துலக, இலக்கிய உலக தொடர்பில் இருக்கும் 5 பேர் எம்பிக்களாகி இருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அம்சம்… அந்த ஐவருமே திமுக மற்றும் அதன் கூட்டணியில் இருப்பவர்கள். >திமுக சார்பில் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இலக்கிய வாதிகள் தேர்தலில் களம் கண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிட்டார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ரவிக்குமார் ஆகியோர் களம் கண்டார்.

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்

tamiloneindia : சென்னை: ˆ தமிழகத்தில் பாஜக வெற்றி என்று கணிக்கப்பட்ட
கோவை தொகுதியில் அதன் வெற்றியை புதிய அரசியல் குழந்தையான கமலின் மநீம தட்டி பறித்திருக்கிறது.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி தான் தேர்தல் முடிவுகள் சொல்லி இருக்கின்றன. கருத்துக் கணிப்புகளில் சொன்னபடியே 300க்கும் அதிகமான தொகுதிகளில் சொல்லி அடித்த படி பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இனி ஆட்சி அமைப்பது… கட்சியினருடன் ஆலோசனை என்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மத்தியில் தொடரும். தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி, மோடி அலை வீசுகிறது என்ற பிரச்சார களத்தில் பேசப்பட்டாலும்.. வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
இன்னும் சொல்ல போனால் மத்தியில் அறுதி பெரும்பான்மை பெற்ற பாஜகவால் தமிழகத்தில் கணக்கை தொடங்க முடியவில்லை.
எப்படி ஒரு கஷ்ட காலம் பாருங்க.. திமுக வரலாற்றிலேயே இதுதான் கசப்பான வெற்றி!

வயநாட்டில் ராகுல் காந்தி பிரமாண்ட வெற்றி.. இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் ராகுல்தான்!

அமேதியில் பின்னடைவு tamil.oneindia.com/authors/kalai-mathi  டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 12 லட்சம் வாக்குகள் பெற்ற அவர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளார்.
வயநாட்டில் வெற்றி நாடுமுழுவதும் 542 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலை வகித்தார். ஆனால் தற்போதைய நிலவரப்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி முன்னிலை வகிக்கிறார்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பின்னடைவை சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.< காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் ராகுல்காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். 12,76,945 வாக்குகள் பெற்ற ராகுல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேனீயில் பன்னீரின் மகன் முன்னணியில் .. இளங்கோவன் பின் தங்குகிறார் .. அந்த 20 evm திருட்டு வேலை செய்கிறது?

நக்கீரன் : இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் இருந்து நடந்து வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் பின்னடைவில் இருக்கின்றனர்.தேனி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை விட  38 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இதனால் அதிமுக கூட்டணியில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ள ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் என்று சொல்லப்படுகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் 17 வது முதல்வராகப் பதவியேற்கிறார்! .. சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய 7 விஷயங்கள்

vikatan.com - சத்யா கோபாலன் : ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. பத்தாண்டுகளுக்குப் பிறகு இழந்த செல்வாக்கை அவர் மீட்டிருப்பதாகவும் ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன. இப்படியொரு வெற்றிக்காக ஜெகன் கொடுத்த விலையும் சாதாரணப்பட்டதல்ல....
1. ஆந்திர மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர ரெட்டி. நான்கு முறை எம்.பி, 4 எம்.எல்.ஏ எனத் தொடர் வெற்றிகளைக் குவித்தவர். 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நல்லமலா காட்டுப் பகுதி வழியாக ஹெலிகாப்டரில் பயணித்தார். அந்த வாகனம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு ருத்திரகொண்டா மலை உச்சியில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திடீர் மரணத்தை ஆந்திர மக்கள் எதிர்பார்க்கவில்லை. 

ஆ.ராசா நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

நீலகிரி தொகுதியில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆ.ராசாzeenews.india.com/tamil : 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்றும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகத்தில் உள்ள 38 தொகுதி உட்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதியிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
2ஜி விவகாரம் மூலம் மிகவும் புகழ் பெற்ற முன்னால் அமைச்சர் ஆ.ராசா திமுக சார்பில் நீலகிரி(தனி) தொகுதியில் போட்டியிட்டார்.

அன்புமணியும் பின்னடைவு தருமபுரி தொகுதியில் திமுக முன்னிலை....

Alagesan - tamil.oneindia.com : தருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணிக்கு பெரும் பின்னடைவு தருமபுரி:
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். 542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் 90 இடங்களுக்கு மேல் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் 45 மையங்களில், 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும், ஒரு எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டன. தருமபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் களமிறங்கினார். இந்தநிலையில், முதல்சுற்றில் 2311 வாக்குகள் முன்னிலை பெற்றார் அன்புமணி, பின்னர், அடுத்தடுத்த சுற்றுகளில், முன்னிலை பெற்ற திமுக வேட்பாளர் செந்தில்குமார், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக இடம் பெற்ற நிலையில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தநிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதமாக தேர்தல் முடிவு வந்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேனியில் என்ன நடக்கிறது?

மின்னம்பலம் : 5 மணி நிலவரம்: தேனியில் என்ன நடக்கிறது?தேனி மக்களவைத் தொகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் 4 வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடை பெற்றுக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் 14 வது பூத்தின் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு பதிலாக 64 வது பூத்தின் வாக்குப் பதிவு இயந்திரம் இருந்திருக்கிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 1மணி நேரம்வரை அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2.45 மணிக்கு மீண்டும் 6ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “4, 5 ஆகிய சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்கள். அதனை துரிதப்படுத்த வேண்டும் என்று சொன்னோம். விரைவில் அறிவிப்பதாக உறுதியளித்தனர். இல்லையெனில் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம். அனைத்து தொகுதிகளிலும் 10 சுற்றுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் இங்கு 3 சுற்றைத் தாண்டவில்லை. தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளையும் இன்னும் அறிவிக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியிருக்கிறோம். விரைவில் செய்வதாக உறுதியளித்துள்ளார்கள். பிரச்சினை தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் நாங்கள் பிரச்சினை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

மீண்டும் இந்தியா வென்றுவிட்டது: மோடி

மீண்டும் இந்தியா வென்றுவிட்டது: மோடிமின்னம்பலம் : மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் சுமார் 342 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்துவருகிறது. பாஜக ஆட்சியமைக்கப்போவது உறுதியான நிலையில், அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள், இந்திய அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை அடைவோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில், “நாட்டு மக்களுக்கு நன்றி. இது இந்தியாவின் வெற்றி. இந்த வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அமித் ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !

பேராசிரியர் சாய்பாபா -  மனைவி
vinavu.com - அனிதா : ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அண்டா செல் எனப்படும் கொடுஞ்சிறையில் உள்ள பேராசிரியர் சாய்பாபாவை விடுவிக்கும்படி அண்மையில் ஐ.நா.-வின் மனித உரிமை அதிகாரிகள் கோரியிருந்தனர்.
பேரா. சாய்பாபாவின் உடல்நிலை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்தாக முடியும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஐநா அதிகாரிகளின் விசாரணைகளுக்கு அரசு தரப்பில் எந்தவித பதிலும் தரப்படவில்லை.

நான் தான் பிரதமர்: கறாராக பேசும் மாயாவதியால் உடைகிறது 3வது அணி!

வெப்துனியா: நான் தான் பிரதமர் வேட்பாளர். என்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தால் மட்டுமே 3வது அணிக்கு ஆதரவு என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கறாராக கூறி வருவதால் மூன்றாவது அணி சிதறுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நாளை இந்நேரம் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும். காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சி அமைக்க முடியாவிட்டால் மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் என்றும் இந்த அணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது ஆனால் இந்த மூன்றாவது அணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதுதான் தற்போதைய பிரதான கேள்வியாக உள்ளது.
பிரதமர் ரேஸில் மாயாவதி, மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், நிதிஷ்குமார், சரத்பவார் என ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கின்றது. இந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தன்னை பிரதமராக்க ஆதரவு அளித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கறாராக தெரிவித்து உள்ளதாகவும், இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒருசிலர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், இதனால் மூன்றாவது அணி சிதற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

தேர்தல் முடிவுகள் தெரிய 5 மணி நேரம் வரை தாமதமாகும்.. ஒப்புகை சீட்டு சரிபார்க்க ...'

தேர்தல்தேர்தல்vikatan.com - தினேஷ் ராமையா : வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாளே இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள நாடு முழுவதுமுள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 90.99 கோடியாக இருந்தது. மொத்த வாக்குப்பதிவு 67.11 சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பிரித்து வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
அதற்கு முன்பாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நாள்களில் பிற்பகலில் யார் ஆட்சிக்கு வருவார் என்பது குறித்த தெளிவான பிம்பம் கிடைத்துவிடும்.
ஆனால், இந்தமுறை அந்தத் தெளிவான பிம்பம் சில மணிநேரங்கள் தாமதமாகவே கிடைக்கும் என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரம். இதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் விவிபாட் எந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க ஆகும் கூடுதல் நேரத்தையே.

அமரர் ஆர் டி சீத்தாபதி.. திமுகவின் கோட்டையாக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் ....

Sivasankaran.Saravanan : திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதுபெரும்
தொண்டர்களில் ஒருவரான ஆர் டி சீத்தாபதி அவர்களது மறைவுச்செய்தி நேற்றைய தினம் வந்தது. அதே பகுதியில் தான் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது அவரது வீட்டை கடந்து போவேன். இருந்தபோதிலும் அவர் எத்தகைய செல்வாக்கு பெற்ற நபர் என்பதை நான் நேற்றுவரை அறியவில்லை. ஒரு செல்வாக்குள்ள அரசியல்வாதிக்கான எந்த டாம்பீகத்தையும் அந்த வீட்டில் நான் கண்டதில்லை என்பது அதற்கு காரணமாக இருக்கும்.
மரணச்செய்தி கேள்விப்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் தளபதி ஸ்டாலின் அந்த வீட்டுக்கு வருகை தருகிறார். திமுக முக்கிய பிரமுகர்கள் இரவு முழுவதும் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள். இன்றைய தினம் திரும்பவும் வந்த ஸ்டாலின் அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று கலந்துகொள்கிறார் . இதையெல்லாம் பார்த்த பிறகு தான் அவரது உயரம் எனக்கு தெரியத்தொடங்கியது.

புதன், 22 மே, 2019

தேவகௌடாவுக்கும் பிரதமர் ஆகும் விருப்பம் உள்ளதாம் .. ஸ்டாலினிடம் ...

பிரதமர் லாபி: ஸ்டாலினிடம் பேசிய தேவகவுடாமின்னம்பலம் : தேர்தல் முடிவுகளுக்காக இந்தியாவே காத்திருக்கும் நிலையில், பல்வேறுபட்ட கணக்குகளை வைத்துக் கொண்டு பல தலைவர்கள் காய்நகர்த்தி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியா, பாஜக ஆட்சியா அல்லது மாநிலக் கட்சிகள் இணைந்து காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் சேரும் கூட்டணி ஆட்சியா என்று பல்வேறு வியூகங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஒருவேளை காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 150 இடங்களுக்கும் மேல் பெற்றுவிடும் நிலையில் பந்து மாநிலக் கட்சிகள் பக்கம் திரும்பும். அப்போது 1996, 98 போல ஐக்கிய முன்னணியைப் புதுப்பித்து மாநிலக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் பிரதமர் ஆகலாம் எனவும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதில் இருந்தே லாபியில் இறங்கிவிட்டனர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- சத்யபிரத சாகு
மாலைமலர் :தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை: பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:- தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 8 மணிக்கே தபால் வாக்குகளுடன் சேர்த்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

மம்தா சிதம்பரத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை?

வெப்துனியா :காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதமும்
நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அகமது படேல், குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
திமுகவின் சார்பில் கனிமொழி, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சதீஷ் சந்திர மிஷ்ரா, சிபிஎம் சார்பில் சீதாராம் யெச்சூரி, சிபிஐ சார்பில் டி.ராஜா, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், திருணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிக் ஓ பிரைன், சமாஜ்வாதி ராம்கோபால் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மனோஜ் ஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் மஜீத் மேமன், தேசிய மாநாட்டுக் கட்சியின் சார்பில் தேவிந்தர் சிங் ராணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஓட்டு எண்ணிக்கை பெரிய குளறுபடியில் முடிய வாய்ப்புள்ளது.. எண்ணி முடிந்த பின்தான் ஒப்புகை சீட்டு பரிசீலனை ?

Swathi K : நாளைக்கு நாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை பெரிய குளறுபடியில் முடிய வாய்ப்புள்ளது..
"பாராளுமன்ற" தேர்தலில் முதல் முறையாக ஒப்புகை சீட்டு (VVPAT Receipt) எண்ணிக்கையை EVM மெஷின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு அது இரண்டும் ஒன்றாக இருக்கிறதா என்று உறுதி செய்யவேண்டும்.. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 EVM மெஷினில் இந்த ஒப்பீடு செய்யவேண்டும்.. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 30-40 EVM வரை இந்த சோதனை செய்யப்படும்..
இது நல்ல செய்தி.. இப்ப பிரச்சனைக்கு வருவோம்..
1. இந்த ஒப்பீட்டில் எண்ணிக்கை மாறுபட்டால்.. என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான வரைமுறை இதுவரை இல்லை.. எண்ணிக்கை மாறுபடும் போது.. அந்த சட்டசபைக்கு (not parliament) உட்பட்ட எல்லா இடங்களிலும் VVPAT Receipt எண்ணி அதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று 22 எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்..
2. தேர்தல் கமிசன் முதலில் EVMல் உள்ள எல்லா ஓட்டுக்களையும் எண்ணி முடித்த பின்பு தான் VVPAT Receipt எண்ணி சரிபார்க்கபடும் என்று பிடிவாதமாக இருக்கிறது.. ஆனால் எதிர்கட்சிகள் முதலில் VVPAT Receipt எண்ணி சரிபார்த்து விட்டு... அவை சரியாக இருந்தால் மட்டும் EVM ஓட்டை கணக்கிடவேண்டும்.. ஒரு வேளை இரண்டுக்கும் வித்தியாசம் இருந்தால்.. VVPAT Receipt மட்டுமே அந்த சட்டசபை தொகுதி முழுவதிற்கும் எண்ணி அதன் முடிவை அறிவிக்கவேண்டும்..

தூத்துக்குடி மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.... ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் .. ஸ்டாலின்

tamil.cdn.zeenews.com : சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான
போராட்டத்தில் அதிமுக அரசின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் திமுக அரசு அமைந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: ஸ்டாலின் அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அதிமுக அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள்.