மின்னம்பலம் :
மக்களவைத்
தேர்தலில் இந்தியா முழுவதும் சுமார் 342 தொகுதிகளில் பாஜக முன்னிலையில்
இருந்துவருகிறது. பாஜக ஆட்சியமைக்கப்போவது உறுதியான நிலையில், அவருக்கு உலக
நாடுகளின் தலைவர்கள், இந்திய அரசியல் கட்சியினர் வாழ்த்து
தெரிவித்துவருகின்றனர்.
வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக சேர்ந்து வளர்ச்சியை அடைவோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது” என்று நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனது ட்விட்டரில், “நாட்டு மக்களுக்கு நன்றி. இது இந்தியாவின் வெற்றி. இந்த வெற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற அமித் ஷாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், “மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புகளை புறந்தள்ளி மக்கள் சரியான தீர்ப்பினை தந்துள்ளனர். உங்களுடைய அற்புதமான செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி இது” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக