மின்னம்பலம் :இரண்டாவது
முறையாக மோடி பொறுப்பேற்றவுடன் கல்வித் துறையில் முக்கியச்
சீர்திருத்தங்கள் சிலவற்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சில தினங்களில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. 303 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இம்முறை ஆட்சியமைக்கிறது. மோடி மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மேற்கொள்ளவுள்ள பல முக்கிய நடவடிக்கைகளில் கல்விச் சீர்திருத்தமும் ஒன்று. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கல்வித் துறையில் சில முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1986ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களை புதிதாகத் தொடங்குவதற்கான அனுமதி, உயர்கல்விக்கான ஒற்றை விதிமுறை போன்ற நடவடிக்கைகளை முதல் 100 நாட்களுக்குள் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளைப் பிரதமர் அலுவலகம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கல்வி அமைச்சகம் மட்டுமின்றி, மற்ற எல்லா அமைச்சகங்களும் 100 நாள் ஆட்சிப் பணிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து சொல்லப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது தொடர்பான திட்டம் பாரதிய ஜனதா கட்சியின் 2014ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இடம் பெற்றிருந்தது. புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக 2015ஆம் ஆண்டில் பாஜக அரசு 2 கமிட்டிகளை அமைத்தது. இதில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 2ஆவது கமிட்டியில் உயர்கல்வி தொடர்பான முக்கியச் சீர்திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து 2018ஆம் ஆண்டில் இம்முடிவு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறை ஆட்சியமைத்துள்ள நிலையில், 100 நாட்களுக்குள் கல்வித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக