Shyamsundar - /tamil.oneindia.com :
மோடி அரசுக்கு சிம்ம சொப்பனமாக மாறப்போவது இந்த 6 தமிழக எம்.பி.க்கள்தான்
சென்னை: திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகி இருக்கும் புள்ளி
விவரங்கள் எல்லாம் பாஜகவிற்கு அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்று என்பது
குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் பாஜக அசத்தல் வெற்றியை சுவைத்து இருக்கிறது. மொத்தம் 303
தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது.
மாறாக காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே தனித்து வென்றுள்ளது. இதனால்
காங்கிரஸ் கட்சி, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.
இந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனக்கு போட்டியாக கருதிய எல்லா கட்சிகளையும்
வீழத்திவிட்டது.
பகுஜன சமாஜ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி
என அனைத்து கட்சிகளையும் பாஜக அசால்ட்டாக வீழத்திவிட்டது.
திரிணாமுல்
மட்டும் சில இடங்களில் வென்றுள்ளது. ஆனால் அந்த வெற்றியும் பெரிய வெற்றி
இல்லை.
யாரும் நினைக்காத அளவிற்கு பாஜகவிற்கு ஒரே போட்டியாக திமுக மாறி
உள்ளது.
ஆம், இந்திய அளவில் பாஜகவிற்கு தற்போது இருக்கும் ஒரே போட்டி
காங்கிரஸ் கிடையாது. திமுகதான். ஆம் தற்போது திமுக லோக்சபாவில் மூன்றாவது
பெரிய கட்சியாக மாறியுள்ளது.
அதே சமயம் வாக்கு சதவிகிதம் அடிப்படையில்
திமுகதான் இரண்டாவது பெரிய கட்சி.
திமுக மொத்தம் 20 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 20 தொகுதியிலும்
வென்றுள்ளது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3 கூட்டணி
கட்சி வேட்பாளர்களும் வென்று இருக்கிறார்கள்.
மொத்தம் 23 தொகுதியில்
திமுகவின் சின்னம் வென்றுள்ளது. இங்கு திமுக பெற்று இருக்கும் வாக்கு
சதவிகிதத்தை வேறு எந்த கட்சியையம் எங்கும் பெறவில்லை.
திமுக கூட்டணி சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 52.88 % வாக்குகளை
பெற்றுள்ளது . அதேபோல் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 3
பேர் 54.43% வாக்குகளை சராசரியாக பெற்று இருக்கிறார்கள். திமுக தனியாக
சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 55.28 % வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ்
திமுக இருக்கும் 10 இடங்களில் 53.20% வாக்குகளை பெற்றுள்ளது.
இதை போல இந்தியாவில் வேறு எந்த மாநில கட்சியும், எதிர்க்கட்சியும்
வாக்குகளை பெறவில்லை. காங்கிரஸ் கட்சி கூட இத்தனை வாக்கு சதவீதங்களை
பெறவில்லை. மத்திய பிரதேசத்தில் சில இடங்களில் மட்டும் காங்கிரஸ் 50%
வாக்குகளை தாண்டியது. ஆனால் திமுக போல எல்லா இடங்களிலும் 50% வாக்குகளை
காங்கிரஸ் கடக்கவில்லை.
பாஜக எப்படி
அதேபோல் இன்னொரு பக்கம் பாஜக மட்டும்தான் 50% வாக்குகளை பல இடங்களில்
கடந்து இருக்கிறது. சில இடங்களில் இது 60% வாக்குகள். தென்னிந்தியாவில்
பாஜக பெரும்பாலான தொகுதிகளில் 50% வாக்குகளை கடக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக பாஜக 50% வாக்குகளை கடந்து இந்த முறையும்
சாதனை படைத்து இருக்கிறது.
. கடைசி நேர அதிரடியால்
எம்.பி. ஆன அதிசயம்!
ஒரே போட்டி
ஒரே போட்டி
இதன் மூலம் பாஜக கட்சிக்கு எதிரான மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுத்து
இருக்கிறது.ஆம் வாக்கு சதவிகிதத்தை அடிப்படையில் திமுக என்ற மாநில
கட்சிதான் தற்போது பாஜகவிற்கு ஒரே போட்டி. திமுகவிற்கு தமிழக மக்கள்
மிகப்பெரிய வெற்றியை தந்து இருக்கிறார்கள் என்பது இந்த தேர்தல் மூலம்
தெளிவாகிறது.
//tamil.oneindia.com
//tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக