கலைமோகன் - நக்கீரன் : சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக
வேட்பாளர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். பல்வேறு இழுபறிகள் மற்றும் முன்னிலை, பின்னடைவுகளை சந்தித்து, 23 ஆவது இறுதி சுற்றில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாமல் இருந்தது.
இரண்டு வாக்கு ஒப்புகை விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ணும் பணி நடைபெற்றதால் முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் தற்போது 500229 வாக்குகள் பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வீழ்த்தி சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
சிதம்பரம் :- தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)
அரக்கோணம் - எஸ்.ஜெகத் ரட்சகன் (திமுக)
- ஆரணி - எம் கே விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)
- மத்திய சென்னை - தயாநிதி மாறன் (திமுக)
- வட சென்னை - கலாநிதி வீராசாமி (திமுக)
- தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக)
- சிதம்பரம் - திருமாவளவன் (விசிக )
- கோயம்புத்தூர் - பி.ஆர். நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
- கடலூர் - டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் (திமுக)
- தருமபுரி - செந்தில் குமார் (திமுக)
- திண்டுக்கல் - வேலுசாமி (திமுக)
- ஈரோடு - அ.கணேசமூர்த்தி (மதிமுக - திமுக சின்னம் )
- கள்ளக்குறிச்சி - கவுதம் சிகாமணி (திமுக)
- காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக)
- கன்னியாகுமரி - ஹெச். வசந்த குமார் (காங்கிரஸ்)
- கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்)
- கிருஷ்ணகிரி - டாக்டர் ஏ. செல்லகுமார் (காங்கிரஸ்)
- மதுரை - சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
- மயிலாடுதுறை - எஸ். ராமலிங்கம் (திமுக)
- நாகப்பட்டினம் - எம்.செலவராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
- நாமக்கல் - ஏ.கே.பி. சின்ராசு (கொமுதேக - திமுக சின்னம் )
- நீலகிரி - ஆ.ராசா (திமுக)
- பெரம்பலூர் - டி.ஆர். பச்சமுத்து (ஐ.ஜே.கே - திமுக சின்னம் )
- பொள்ளாச்சி - சண்முக சுந்தரம் (திமுக)
- ராமநாதபுரம் - நாவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக் )
- சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் (திமுக)
- சிவகங்கை - கார்த்தி சிதம்பம் (காங்கிரஸ்)
- ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக)
- தென்காசி - தனுஷ் எம்.குமார் (திமுக)
- தஞ்சாவூர் - எஸ்.எஸ். பழனி மாணிக்கம் (திமுக)
- தேனி - ரவீந்திர நாத் குமார் (அதிமுக)
- திருவள்ளூர் - கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்)
- தூத்துக்குடி - கனிமொழி (திமுக)
- திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
- திருநெல்வேலி - ஞானதிரவியம் (திமுக)
- திருப்பூர் - சுப்பராயன் - (இந்திய கம்யூனிஸ்ட்)
- திருவண்ணாமலை - அண்ணாதுரை சி.என் (திமுக)
- விழுப்புரம் - டி.ரவிக்குமார் ( விசிக - திமுக சின்னம் )
- விருதுநகர் - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக