nakkheeran.in - kalaimohan :
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு
ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர்
அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம்
பெயர்ந்துள்ளார். இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசின் இந்த
செயலுக்கு எதிராக தங்களது அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தி
வருகின்றனர்.
சனி, 11 மே, 2019
10 காண்டேயினர்களில் வாள்கள் .. இலங்கை ஐ எஸ் தீவிரவாதிகள் .. எஸ் எம் மரிக்கார் எம்பி தகவல்
veerakesari :சிறிலங்காவில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 காண்டேயினர்களில் வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார், ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், 10 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாள்கள் சிறிலங்கா முழுவதும் புழக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பள்ளிவாசல்களில் வாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் வாள்களை பதுக்கி வைத்துள்ளனர் என்ற தவறான கருத்து சமூகத்தில் பரவியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Daily news : From
2010 to date, 10 containers of swords had been imported to the country
and people were in possession of these swords. However, as several
swords have been found in mosques, there is a wrong notion being spread
among society that the Muslim mosques are storing swords, said UNP-MP
S.M. Marikkar in Parliament yesterday.
திலகவதி ஆணவக் கொலையா? ஆகாஷின் தந்தை சந்தேகம்!
மின்னம்பலம் :
கடலூர்
மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி
திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக பேரலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்னும் இளைஞனை கைது
செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் சாதி மோதல் பதட்டம் நீடித்துவருகிறது. இதுதொடர்பாக ஆகாஷ் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூல வீடியோவை நாம் வெளியிட்டிருந்தோம். அது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.
மாணவி திலகவதி கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி பாமகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். (இன்று மே 11) திலகவதியுடைய பெற்றோர்கள் பாமக பிரமுகர்களின் புடைசூழ கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

ஜம்மு காஷ்மீா் ("Wilayah of Hind) விலயா ஹிந்த் மாகாணம் ஐ.எஸ். ஐ எஸ் தங்களுக்கு சொந்தமான பகுதி என்று அறிவித்துள்ளது.
NEW DELHI/SRINAGAR: Islamic State (ISIS) claimed for the first time that it has established a "province" in India, after a clash in Jammu and Kashmir between terrorists and security forces killed a terrorist with alleged ties to the group. The terrorist organisation's Amaq News Agency late on Friday announced the new province, that it called "Wilayah of Hind", in a statement that also claimed ISIS inflicted casualties on Army soldiers in the town of Amshipora in Shopian district of the state.
Samayam Tamil : ; இந்தியாவின் ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஐ.எஸ். பயங்கரவாத தரப்பு தங்களுக்கு சொந்தமான பகுதி என்று முதல் முறையாக அறிவித்துள்ளது. ;ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் உயிாிழந்தாா். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையவா் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து ஐ.எஸ். அமைப்பின் இணையதளமான “Amaq News Agency” அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில், விலயாஹ் ஆஃப் ஹிண்ட் என்ற பகுதியை தங்களுடைய புதிய மாகாணமாக ஐ.எஸ். அறிவித்து இருந்தது.

பிட்ரோடா மன்னிப்பு : ராகுல் உத்தரவு
தினமலர் :
புதுடில்லி: சீக்கிய கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கருத்திற்கு காங்.
தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்காக மன்னிப்பு கேட்க
வேண்டும் எனவும் பிட்ரோடாவுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார்.
1984-ல் சீக்கிய கலவரததில் சீக்கியர்களை கொலை செய்ய பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பா.ஜ. குற்றம்சாட்டியது.
பிட்ரோடாவின் கருத்து காங்.கின் குணத்தையும், மனநிலையையும் காட்டுகிறது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு காங். கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா கூறுகையில், பா.ஜ.வின் மிகப்பெரிய பொய் இது . 1984-ல் நடந்தது குறித்து பா.ஜ.வுக்கு இப்போது என்ன கவலை. கலவரம் நடந்தது நடந்து விட்டது. முடிந்து போன விஷயம் என கூறினார்.பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், பிட்ரோடாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.

சின்மயி உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கொக்காய் மீது பாலியல் புகார் .
Raj Dev :
உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல்
புகாரை மறுபடியும் விசாரிக்க வலியுறுத்தி சின்மயி போராட்டம் நடத்த இருப்பதாக ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. தன்னுடைய மீடூ போன்ற ஒன்று இதில் இருப்பதை அவர் முகர்ந்திருக்கலாம். வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய போது தெரிவித்தபடி எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையையும் தொடங்க அவர் இன்னும் முன்வரவில்லை. தனக்கான நீதியை பெறாமலே பாதிக்கப்பட்ட வேறொருவர் மீது அக்கறை கொள்வதை சிலர் வரவேற்கக்கூடும். சின்மயி புகாரின் தன்மையை இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் சகோதரி ரஹைனா போட்டுடைத்தார். சின்மயி மிக மோசமான பொய்களை கூச்சமின்றி சொல்லக் கூடியவர் என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் வைரமுத்து மீது எந்த நற்சான்றிதழையும் அவர் வழங்கவில்லை. வைரமுத்து மீது இந்த பிம்பம் திரைத்துறையில் ஏற்கனவே இருப்பதையும் கூறினார். அதை பயன்படுத்தி தன்னிடம் வைரமுத்து தவறாக நடந்து கொண்டதாக சின்மயி கூறி இருக்கலாம் என்பதை ரஹைனாவின் அந்த பேட்டி சொல்லாமல் சொன்னது.

மே.வங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை
vinavu.com - கலைமதி : மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் இப்போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும்
நிலையில் இருக்கிறார்கள். மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசுக்கும்
இடதுசாரிகளுக்கும் இருந்த போட்டி, இப்போது திரிணாமூல் – பாஜக என
மாறியுள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜக கொடிகளுடன் ‘பாரத் மாதா கீ ஜெய்’
என முழங்கிக்கொண்டு செல்வது மாநிலம் முழுவதும் காணும் காட்சியாக உள்ளது.
இடதுசாரி ஆதரவாளர்கள் பாஜக ஆதரவாளர்களாக மாறியிருக்கும் நிலையை அம்மாநில இடதுசாரி தலைவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, சிபிஎம் கட்சியின் பத்திரிகையான கனசக்திக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த ஆபத்தை சுட்டிக்காட்டியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் என்ற எண்ணெய் சட்டியிலிருந்து, பாஜக என்ற நெருப்பில் விழுவதால் எந்த பலனும் இல்லை என அவர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடம் - தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை
மாலைமலர் :
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி
பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை
தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
சென்னை:; பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.

மொத்தம் 30 குழந்தைகள்.. அதில் 27 குழந்தைகள் அவர்களுடையது...? குழந்தை விற்பனை வழக்கில் வெளிவரும் உண்மைகள்
.nakkheeran.in - kalaimohan :
ராசிபுரத்தில்
பணத்திற்கு பச்சிளங்குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 30
குழந்தைகள் விற்கப்பட்டுளளதாக அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த,
ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளரான (எப்என்ஏ) அமுதவல்லி, கொல்லிமலை, நாமக்கல்
உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளை வாங்கி, குழந்தையில்லா தம்பதிகளிடம் சட்ட
விரோதமாக விற்பனை செய்ததாக அண்மையில் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வெளியாகி
பெரும் அதிர்ச்சியை கிளப்ப அது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவருக்கு
உடந்தையாக இருந்ததாக அவருடைய கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றிய
முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வின், ஹசீனா,
லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமேரிக்கா சீன பொருட்களுக்கு வரியை உயர்த்தியது ... திருப்பூருக்கு அடிக்குது லக் - ரூ. 30 ஆயிரம் கோடிக்கு ஆர்டர் குவிகிறது
tamil.goodreturns.in : கோவை: அமெரிக்கா-சீனா இடையில் நடக்கும் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால், ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளின் பின்னலாடை வர்த்தகர்கள் தங்களின் பார்வையை இந்தியா மீது திருப்பியுள்ளன. இதனால் நடப்பு நிதியாண்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் ஆர்டர்கள் குவியும் என்று திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே சுமார் 4400 கோடி ரூபாய்க்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது என்று இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்தார்.
தினமலர் : வாஷிங்டன்: அமெரிக்கா, ஏற்கனவே அறிவித்தபடி, இன்று(மே 10) சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10 - 25 சதவீதம் உயர்த்தியது.
இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.
அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், 'சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்' என தெரிவித்திருந்தார்.

வாப்பாவின் பெயரை சொன்னால் காதுகளையும் வாயையும் வெட்டி விடுவார் .. .. தற்கொலை குண்டுதாரியின் மகள் சாட்சியம்
TM.LK “வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய
காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின்
நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை பொலிஸ் மற்றும் வைத்தியசாலை
தகவல்கள் தெரிவிக்கின்றன./>
கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய
தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின்
நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார்.
நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த சஹ்ரானின் மனைவி மற்றும் மகள், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு, கடந்த 8 ஆம் திகதி அழைத்துவரப்பட்டனர்.
அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

வெள்ளி, 10 மே, 2019
குருஷ் முருங்கை ..யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்து பிரபலமான முருங்கை ரகம் .. ஆண்டுக்கு ரூ. 19,80,000 லாபம்!
இ.கார்த்திகேயன் -vikatan.com - எல்.ராஜேந்திரன் :
அவியல், கூட்டு, சாம்பார் எனப் பலவித உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய், முருங்கைக்காய். ஐயப்பன் பூஜை விரதகாலங்கள், திருவிழாக்கள், முகூர்த்த தினங்கள் போன்ற காலங்களில் முருங்கையின் விலை உச்சத்துக்குப் போய்விடும். கிராமங்களில் ‘முருங்கையைப் போட்டவன் வெறுங்கையா நின்னதில்லை’ என்று ஒரு சொலவடை சொல்வதுண்டு. முருங்கைக்கு எப்போதும் சந்தையில் விற்பனை வாய்ப்பு இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கையை விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம். இவர், ‘குருஷ்’ எனும் ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை எனும் ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார்புரம் எனும் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே இருக்கிறது, தர்மலிங்கத்தின் முருங்கைத் தோட்டம். நம் வருகைக்காகத் தோட்டத்தில் காத்திருந்த தர்மலிங்கத்திடம், நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.>

ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே பயணிகள் ரயில்... தமிழ் தெரியாத ஹிந்தி ஸ்டேஷன் மாஸ்டரால் விபரீதம்
nakkheeran.in - kalaimohan :
மதுரை
அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் சிக்னல் கோளாறு
ஏற்படுத்துள்ளது. இருப்பினும் அந்த ரயில்வே ஸ்டேஷனின் ஸ்டேஷன் மாஸ்டர்
ஜெயக்குமார் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த
வழித்தடத்தில் செல்ல அனுமதித்திருக்கிறார்
அப்போது சற்றுமுன்புதான் அந்த ரயில் மதுரை
நோக்கி சென்றது என கேட் கீப்பர் கூற அதிர்ந்த ஜெயக்குமார்
திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு இரண்டு ரயிலையும்
நிறுத்த சொல்லியுள்ளார். இதனால் ஒரே தடத்தில் இரு ரயிலும்
எதிரெதிரே நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், மொழி தெரியாமல் தவறிழைத்த கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவாசிங் மீனா ஆகியோரை உயர் அதிகாரிகள் பணியிடம் நீக்கம் செய்தனர்.

கிரண்பேடிக்கு எதிரான தீர்ப்புக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!
மின்னம்பலம் :
புதுச்சேரி
துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற
மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கோப்புகளை ஆய்வு செய்ய வழங்கிய கூடுதல் அதிகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஏப்ரல் 30ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. அரசின் நடவடிக்கைகளில் தலையிடத் துணைநிலை ஆளுநருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மேலும், அரசின் நடவடிக்கைகளில் அன்றாடம் துணை நிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு விபரம் ..
மின்னம்பலம்: கடலூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு சாதிப் பதற்றப் பொறி விழுந்திருக்கிறது. காதலித்த பெண்ணையே காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் மனித நேயமுள்ளவர்களை கவலைக்கு உள்ளாக்க, கடலூர் மாவட்டத்திலோ இந்த கொலையால் சாதிப் பதற்றம் உயிர்த்து எழுந்துள்ளது.
பொதுவாகவே வட மாவட்டங்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தற்கொலை செய்துகொண்டாலோ, கொல்லப்பட்டாலோ அதற்கு வன்னியர் சமூகத்தினர்தான் (பாமக) காரணம் என்றும்... வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டால் அல்லது தற்கொலை செய்துகொண்டால் தலித்துகள்தான் காரணம் (விசிக ) என்றும் கொடிபிடித்து கோஷம் போடுவது தொடர்கதையாகிவருகிறது. இதுபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுவருவதால் காவல்துறை அதிகாரிகள் நொந்து நூலாகிப்போகிறார்கள்.
பொருளாளர் பதவியை இழக்கிறாரா துரைமுருகன்?
மின்னம்பலம் :
“திமுக
பொருளாளர் துரைமுருகன் மக்களவைத் தேர்தல் நேரத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு
பேட்டி அளித்தார். இயல்பாக கேள்விகளை எதிர் கொண்டவர், ’நீங்க இப்ப
வருத்தத்தில் இருக்கிறதா ஒரு பேச்சு திமுகவுலயே இருக்கே?’ என்ற கேள்விக்கு,
‘ஆமா. நான் வருத்தத்தில் தான் இருக்கேன். என் அண்ணன் கலைஞர் இல்லையேங்குற
வருத்தம். துரை துரைனு என்னை வாய் நிறைய கூப்பிடுவார். அவர ஒரு நாள் நான்
பாக்கப் போகலேன்னா கூட, வீட்டுக்கு போன் அடிச்சுடுவார். இப்ப அந்த போன் மணி
ஒலிப்பதே இல்லை’ என்று சொல்லியிருந்தார் துரைமுருகன். இப்போது அந்த மணி
ஒலிக்கவில்லை என்பதன் அர்த்தம் இப்போதைய தலைவர் ஸ்டாலின் தன்னை எதிலும்
கலந்து பேசுவதே இல்லை என்பதுதான்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தன் மகனுக்காக போராடிப் பெற்ற துரைமுருகன், வருமானவரித்துறை நடவடிக்கைகளால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இந்த ரெய்டு குறித்து ஸ்டாலின் வெளிப்படையாக மேடைகளில் கண்டனம் தெரிவித்தபோதும் தனிப்பட்ட முறையில் தன்னுடன் ஸ்டாலின் வேலூர் விவகாரம் பற்றி அதிக அக்கறை எடுத்து பேசவில்லை என்ற குறை துரைமுருகனுக்கு இருந்தது.
இது மட்டுமல்ல ரெய்டுக்கு பிறகு துரைமுருகன் பற்றி ஸ்டாலினும் ஸ்டாலின் குடும்பத்தினரும் தங்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட சில விஷயங்களும் துரைமுருகன் காதுக்கு சென்றடைந்துள்ளது. துர்கா ஸ்டாலின் தனது வட்டத்தில், ’என் வீட்டுக்காரரு தமிழ்நாடு ஃபுல்லா சுத்தி சுத்தி கடுமையாக உழைக்கிறார். ஆனா வேலூர் ரெய்டு மூலமா இப்படி தேர்தல் நேரத்தில் கட்சிக்கு கெட்ட பேர் ஆயிடுச்சு’ என்று வருத்தப்பட்டுள்ளார்.

டுப்பிளிகேட் நடிகரை வைத்து பிரசாரம்... வெய்யிலாம் .. ..டெல்லி பாஜக வேட்பாளர் காம்பீர்.
Mahalaxmi : ·
பிரச்சாரம் செய்யக்கூட உடம்பு வணங்காத பிஜேபி வேட்பாளர்
காம்பீர்.. காருக்குள்ள உட்கார்ந்து கொண்டு தனக்கு ஒரு டூப்ளிகேட்டையும் ரெடி பண்ணி கூப்டுகிட்டு போயிருக்கான் பாருய்யா இந்த செளகிதார். டூப்ளிகேட் டை வண்டியில மேலே நிற்க வைச்சு கை ஆட்டிட்டு வர வைச்சுட்டு கீழே கார் ல இவரு ஏசியிலே உட்கார்ந்துட்டு வரார் பாருங்கள்..இந்த டெல்லி பாஜக வேட்பாளர் காம்பீர்.!! இவங்கதான் மோடி செளக்கிதார்ங்களாம்.! இவனுங்க பொறுப்புக்கு வந்தா நாடு உறுப்படவா செய்யும்?
நக்கீரன் :பாஜக சார்பில் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பிரச்சாரத்தின் போது சினிமா காட்சிகளில் வரும் டூப்ளிகேட் கம்பீர் வேடமிட்டு காரில் ஒருவர் பயணம் செய்யும் புகைப்படத்தை டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவரும் , டெல்லி மாநில துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் பிரதமர் மோடி! டைம்ஸ் இதழ் பரபரப்பு கட்டுரை
zeenews.india.com/tamil :
இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் பிரதமர் மோடி என சூட்டி அமெரிக்க டைம்ஸ் இதழ் கட்டுரை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியாகும் "டைம்ஸ் இதழ்" 2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது. இந்த இதழ் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி கட்டுரை வெளியிட்டு உள்ளது. பிரதமர் மோடியின் படத்தை அட்டைப்படமாக வடிவமைத்து "இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற பெயரில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
"இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர்" என்ற தலைப்புடன் இதழின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி இடம் பிடித்திருந்தார். ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக்கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்டு உள்ளது

சின்மயி பொள்ளாச்சி பாலியல் ... அல்ல அல்ல உச்சநீமன்ற நீதிபதிக்கு எதிராக போராட்டமாம் .. அனுமதி மறுப்பு!
மாலைமாலர் :
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்
தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக,
சென்னையில் பாடகி சின்மயி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சென்னை:
உச்ச
நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக உச்சநீதி மன்ற முன்னாள்
பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னையில் பாடகி சின்மயி போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்த புகாருக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பின்பற்றிய நடைமுறைகளுக்கு சில வழக்கறிஞர்கள், பெண் உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்
veerakesari :இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாகவும் சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மாணவி உயிரிழப்பு: ஆட்சியரிடம் மனு!
மின்னம்பலம் :
ராமநாதபுரம்
மாவட்டம், பாப்பானம் பகுதியைச் சேர்ந்த முனியசாமியின் மகள் சந்தியா.
மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 5ஆம் தேதியன்று நீட் தேர்வில்
பங்கேற்பதற்காகத் தன் தந்தையுடன் மதுரைக்குச் சென்றார். திருப்பாலை ஜெயின்
வித்யாலயாவில் தேர்வு எழுதிவிட்டு, வெளியே வரும்போது சோர்வாக வந்தார்.
மாலையில், அவர் ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறினார்.
செல்லும் வழியில், திருபுவனம் அருகே சந்தியா திடீரென மயங்கிக் கீழே சரிந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கோடை வெயிலில் மதிய நேரத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சந்தியாவின் மரணம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வடமாநில கொள்ளையர் ஓடும் ரயிலில் கைவரிசை... படங்கள் வெளியீடு!!
nakkheeran.in - elayaraja : சேலம் அருகே, ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளை கும்பல்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கொள்ளையர்களின் படங்களை தனிப்படை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, மாவேலிபாளையத்தில் ஆலப்புழா, சேரன், மயிலாடுதுறை, மங்களூரு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து ஒரு கும்பல் பெண்களிடம் நகைகளை பறித்து வந்தனர். மாவேலிபாளையம் அருகே, ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் அந்தப்பகுதியில் செல்லும்போது மட்டும் அனைத்து ரயில்களும் 20 கிமீ வேகத்தில் செல்லும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, கொள்ளை கும்பல் நகைகளை கொள்ளையடித்து விட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விடுகின்றனர். கடந்த இரு நாள்களுக்கு முன்பு, சேலத்தில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அனைத்து ரயில்களிலும் காவல்துறை பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
முதல்கட்ட விசாரணையில், இந்த கொள்ளையில் ஒரே கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், உத்தரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள்தான் இச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய கொள்ளையர்களின் படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த கும்பல் ஓடும் ரயில்களில் கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர்கள்.
பழைய ரயில் கொள்ளையர்களான அவினேஷ், மிதுன், குந்தன், அமால், முகேஷ்குமார், தீபக்குமார், பாலாஜி, ஜக்கிசிங், கிரிஷான், சன்னிகுமார், அஜய், பிட்டுராம், கிரிஷான் குமார், மிதுன் குமார் ஆகிய பதினான்கு பேரின் படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்தப்படங்கள் தமிழ்நாட்டின் அனைத்து ரயில்நிலையங்களிலும் பயணிகளின் பார்வையில் படும்படி ஒட்டி வைக்கப்பட்டுள்ளது
எழுத்தாளர் தோப்பில் மீரான் காலமானார் ..1997 இல் சாய்வு நாற்காலி நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர்
மாலைமல்ர் :
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நெல்லை:
கன்னியாகுமரி
மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது
மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
இவர்
பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை
எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி
விருது பெற்றவர்.
இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

குர்ஆனின்.. பழிவாங்குதல் குறித்த நிலைப்பாடு மிகவும் ஆபத்தானவை.... ?
Imam Adhnan :
குர்ஆன் கொண்டிருக்கும் பழிவாங்குதல் குறித்த நிலைப்பாடு மிகவும்
ஆபத்தானவை. அது பழிவாங்குவதை விசுவாசம் கொண்டவர்கள் மீது கடமையாகவே முன்வைக்கிறது.
நோன்பை முஸ்லிம்கள் மீது கடமையாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அதே சொல்லை
(குதிப), அதே நெரெடிவ் ஃபோமை இதற்கும் அல்குர்ஆன் பயன்படுத்தியிருக்கும்.
அது போதாதென்று, பழிவாங்குவதில் வாழ்வு இருக்கிறதென்றும் அதனை
சிந்திப்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள் என்றும் தொடர்ந்தும் வசனங்கள்
அடுக்கப்படுவதை அவதானிக்கலாம்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِى الْقَتْلٰى...
2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- (உங்களைச் சார்ந்த) சுதந்திரமுடையவன் (கொல்லப்பட்டால் கொலை செய்தவர்களின்) சுதந்திரமுடையவனும்; (அப்படியே உங்களின்) அடிமைக்கு (அவர்களின்)அடிமை; பெண்ணுக்குப் பெண் என்பதாகவே பழிதீர்க்கப்பட வேண்டும். இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.

வியாழன், 9 மே, 2019
சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை ..சுப.முத்துகுமார் கொலை... வெளியேறிய 17 முக்கிய தோழர்கள் பட்டியல்
சுப.முத்துகுமார் |
2009 ஈழ இனப்படுகொலைக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய எழுச்சியை வைத்து தொடங்கப்பட்டது நாம் தமிழர் இயக்கம். இதை பெரியாரிய இயக்கங்கள் தான் வளர்தெடுத்தது . அந்த சமயத்தில் சீமானுக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது . அண்ணன் சுப.முத்துகுமாரை வைத்தே இயக்கம் நடந்து வந்தது. இந்த சமயத்தில் தான் நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டும் சுப.முத்துகுமார், சீமான் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் இணைந்து மதுரையில் நாம் தமிழர் கட்சியை அறிவித்தனர். நிற்க
அண்ணன் சுப முத்துகுமார் அவர்கள் தமிழ்தேசியத்திற்காகவே உழைத்தவர் . விடுதலை புலிகளுக்கு உதவியதாக சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் புலிகளுக்கு உதவி செய்தவர் . இது இந்திய உளவுத்துறையின் கண்ணை உருத்தியது . அண்ணன் சிறிது நாள் தலைமறைவாக இருந்து வந்தார் .
நாம்
தமிழர் கட்சி ஆரம்பித்தவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில்
முத்துகுமாரின் மேல் அனைவருக்கும் மதிப்பு அதிகமாவதை பொறுத்துகொள்ள முடியாத
சில அல்லறை சில்லைறைகளும்,சீமானும் சேர்ந்துகொண்டனர் . கட்சி தொடங்கி சில
மாதங்களிலே சுப. முத்துக்குமாரை கூலிப்படை கொலைசெய்கிறது .முத்துகுமாரின்
ஊர்வலத்தில் அண்ணன் சீமான் கண்ணீர் மல்க வீரவசனம் பேசினார். ஆனால் இந்த
வழக்கு இரண்டு ஆண்டுகளில் ஊத்தி மூடப்பட்டது .இதில் தான் அண்ணனின் சூச்சமம்
இருக்கிறது .
கட்சியில் இருந்த சுப.முத்துகுமாரின் தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க அதற்கு பதில்சொல்ல முடியாமல் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். கட்சியை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவருகிறார். சீமானின் சுயரூபம் தெரிந்தவுடன்

கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை கோரி அக்கட்சி உறுப்பினரின் மனைவி மனு.. சூலூர் தொகுதியில் வீடியோ
தினகரன் : கோவை: சூலூரில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர்
கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் உறுப்பினராக
இருந்தவரின் மனைவியே கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள வினோத
சம்பவம் நிகழ்ந்துள்ளது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள
நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து
வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டரின் மனைவி
ஒருவர், அளித்துள்ள புகார் மனு அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மக்கள் நீதி
மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி வீட்டில்
இருந்து வெளியே சென்ற பாலமுருகன் அடுத்த நாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொழும்பு பள்ளிவாசலில் 46 வாள்கள் துப்பாக்கி மீட்பு.. மாளிகாவத்தை பகுதியில் ...
வீரகேசரி: கொழும்பு, மாளிகாவத்தை – கெத்தாராமை பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குளிருந்து 46 வாள்களும், கைத்துப்பாக்கியொன்றும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தையில் 46 வாள்கள் மீட்பு!
மேற்படி ஆயுதங்கள் உறையொன்றினுள் இட்டு கிணறொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தோட்டக்கள் நிரப்பப்பட்ட சிறிய ரக கைத்துப்பககி, 53 கத்திகள், கூரிய ஆயுதங்கள், 25 இருவெட்டுக்கள், ஐஸ் போதைப்பொருள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இங்கு மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது&
ராஜீவ் காந்தி கொலை -: 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி
BBC :
ராஜீவ் காந்தி கொலை
வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில்
உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்பதை வியாழக்கிழமை பரிசீலித்தது.
பிறகு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது, "இந்த மனுவில் விசாரணைக்கு ஏற்பதற்கு உரிய வாதம் ஏதும் இல்லை" என்று கூறினார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.
ராஜீவ் கொலையில் உடன் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்றும் அப்பாஸ் கோரினார்.

ஸ்டாலின் விகடன் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
Mahalaxmi : ஜூனியர் விகடனில் வெளியான தேர்தல் நிதி, சிக்கிய மார்ட்டின், சிக்கலில் திமுக என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானது
மு.க.ஸ்டாலின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வெளியான கட்டுரைக்கு விகடன் குழுமம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என நோட்டீஸ்
இதுதான் அந்த பதிவு :
விகடன் :500 கோடி தேர்தல் நிதி? - சிக்கிய மார்ட்டின்... சிக்கலில் தி.மு.க!
மார்ட்டின் சாம்ராஜ்ஜியத்தை யாராலும் அசைக்க முடியவில்லை. சி.பி.ஐ விசாரணை... ஐ.டி. ரெய்டு... வழக்குகள்... கைது... இவை எதுவுமே மார்ட்டினுக்குப் புதிதல்ல. இந்தச் சோதனையின் அடுத்த அத்தியாயம்தான் இப்போது நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு. மார்ட்டினுக்கு நெருக்கமான பழனிச்சாமியின் மர்ம மரணம், தேர்தல் நிதிக்குப் பண உதவி என இப்போதைய ரெய்டின் பின்னணியில் பல்வேறு பரபரப்பு செய்திகள் படபடக்கின்றன.
சான்டியானோ மார்ட்டின் என்பதுதான் அவரது பெயர்... ஆனாலும் ‘லாட்டரி மார்ட்டின்’ என்றால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும்! கோவையைச் சேர்ந்த மார்ட்டின், லாட்டரி தொழிலில் இந்தியா முழுவதும் கால் பதித்தவர். பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி. தமிழகத்தில் லாட்டரியைத் தடை செய்தாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டி, வி.வி.ஐ.பி-யாக வலம் வருபவர். ஹோமியோபதி மருத்துவமனை, மில்கள், டி.வி சேனல், சினிமா என்று மார்ட்டின் அண்ட் கோ பாதம் பதிக்காத தொழில் இல்லை. இதனாலேயே அரசியல் தொடர்புகளும் அதிகம்.

ராகுல்காந்தியின் பிரித்தானிய குடியுரிமை வழக்கு தள்ளுபடி
தினமலர் :
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை பெற்றதாக ஒருவர் என்று கூறி அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட
வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் தலைவர்
ராகுல், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக, சமீபத்தில்
சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், ராகுலிடம்
விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில்,
ஜெய் பகவான் கோயல், சி.பி.தியாகி ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய லோக்சபா தேர்தலில்,
காங்.,தலைவர் ராகுல், உத்தர பிரதேச மாநிலம், அமேதி, கேரள மாநிலம், வயநாடு
தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஆனால், அவர், பிரிட்டன் குடியுரிமையும்
பெற்றுள்ளதாக கூறப்பட்டது ள்ளது.
இலங்கையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது.. அம்பாந்தோட்டை பகுதியில் ..
வீரகேசரி :காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர். சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாட்களாக அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் நசார் மொகமட் ஆசாத், பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார். காத்தான்குடியில் இருந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் குழுவொன்றே இவர்களைக் கைது செய்து விசாரணைகளை நடத்தி வருகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு அறிவிப்பு:
தினமணி :சென்னை: தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர்
கொண்ட 'அட் ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக அரசு நடவடிக்கை
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வழிநடத்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட 9 பேர் கொண்ட 'அட் ஹாக்' குழுவை நியமித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது. இதையடுத்து சங்கத்தை நி"
நடிகர் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்பட
தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் கூறப்பட்டது.
இதையடுத்து சங்கத்தை நிர்வகிக்க சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக
நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.
இந்த நியமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மலம் திணித்து வன்கொடுமை: முதல்கட்ட அறிக்கை தாக்கல்!
மின்னம்பலம் :
மன்னார்குடி
அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் வாயில் மலத்தைத் திணித்து
வன்கொடுமையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக அரசிடம் முதல்கட்ட
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார் திருவாரூர் ஆட்சியர்
ஆனந்த்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள திருவண்டுதுறையைச் சேர்ந்தவர் கொல்லிமலை. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். கடந்த மாதம் 28ஆம் தேதியன்று செங்கல் சூளை பணிக்குச் சென்ற கொல்லிமலையை, அதே ஊரைச் சேர்ந்த ராஜேஷ், சக்திவேல், ராஜ்குமார் ஆகிய மூவரும் தாக்கினர். மரத்தில் கட்டிவைத்து அவர் வாயில் மலத்தைத் திணித்து, சிறுநீர் கழித்தனர். இது தொடர்பாக கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கொல்லிமலை.

ஸ்டாலின் : தேர்தல் அதிகாரி சாஹூ மீது நம்பிக்கை இழந்து விட்டோம்
மின்னம்பலம் :
தலைமைத்
தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை
இழந்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த எதிர்க்கட்சியினர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சாட்டினர். இதுபோலவே ஈரோட்டுக்கும் 20 விவிபாட் இயந்திரங்கள் கொண்டுவந்துள்ளனர். இவை தொடர்பாக விளக்க வேண்டுமென திமுக சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதியில் மறுதேர்தல்?
ஜீவாதங்கவேல்
நக்கீரன் : ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ஈரோடு சாலை போக்குவரத்து கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில்தான் தேனியில் 50 வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் நேற்று இரவு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியது.
இதை அறிந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகள் போராட்டத்தில் இறங்கினர். இது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது என அரசியல் கட்சியினர் தேர்தல் அதிகாரியை கேள்வி கேட்க, தேனி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பல்லவிபல்தேவ் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்க வேண்டும் என்றார்.

மெக்காலே பிரபுவின் கல்வி புரட்சி .. பார்ப்பன இந்து மனு சட்டத்தை அடித்து நொறுக்கிய மேதை!
பார்ப்பானுக்கு மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும் . சத்திரியனுக்கு மட்டுமே நிலம் வைத்திருக்க உரிமை உண்டு எனவும் வைசியனுக்கு மட்டுமே வியாபாரம் செய்யும் உரிமை உண்டு எனவும் . சூத்திரன் இவர்களுக்கு அடைமையாக இருந்து வேலைசெய்ய வேண்டும் எனவும் என்றிருந்த இந்து மனு தர்ம சட்டத்தை பிரிட்டீஷார் ஏற்றுகொள்ளாமல் . சட்டம் என்றால் எல்லோருக்கும் சமமாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் 1773 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு சட்டத்தை எழுத தொடங்கியது.
அதன் விளைவாக சத்திரியர் மட்டுமே சொத்து வைத்திருக்கலாம் என்ற சட்டத்தை 1995 ஆம் ஆண்டு மாற்றி அனைவரும் சொத்து வைத்திருக்கலாம் என்ற சட்டத்தை அமுல்படுத்தியது
1804 ஆம் ஆண்டில் பெண் சிசு கொலைக்கான தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 இல் கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
பார்ப்பன பெண்ணை கெடுத்த சூத்திரன் கொல்லப்படவேண்டும் இந்து மத சட்டம் 384/7 இல் ..
ஒரு பார்ப்பனன் காம இச்சை கொண்டு ஒரு சூத்திர பெண்ணோடு உறவு கொள்ளலாம் ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதே ஆகும் இந்து மதசட்டம் 9 இல் 178.
பார்ப்பனர்கள் குற்றம் செய்துவிட்டால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில் அவர்களும் தண்டனை பெறுவதற்கான சட்டம் பிரிட்டீஷாரால் 1817 கொண்டுவரப்பட்டது.
சூத்திரப்பெண் திருமணம் செய்த அன்றே பார்ப்பனர்களுக்கு பணிவிடை செய்ய ஏழு நாட்கள் கோயிலில் இருக்கவேண்டும் ( கணவனோடு அல்ல) இது பிரிடீஷாரால் 1819 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது .
பார்ப்பனன் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற மனு தர்ம சட்டம் 1835 ஆண்டு lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக சூத்திரனும் கல்வி கற்கலாம் என்ற அரசானை வெளியிடப்பட்டது

புதன், 8 மே, 2019
தந்தையைக் கொலை செய்த மகள் : திடுக்கிடும் சம்பவம் .. கோவில்பட்டி
வெப்துனியா ; கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்
புத்தூர் விபி சிந்தன் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பையா(66). அங்குள்ள
ஒரு தனியார் மில்லில் வேலை செய்து ஓய்வுபெற்றவர் இவர் அந்த ஊரின்
பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துவந்தார். இந்நிலையில் சுப்பையா கடந்த 3 ஆம்தேதி
அதிகாலை உடல் வெந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முன்தினம் இறந்தார்.இதனையடுத்து சுப்பையாவை பெட்ரோல் ஊற்றிக்
கொலை செய்ததாக அவரது மூத்தமகள் மூக்கம்மாளை நாலாட்டின் புத்தூர் போலீஸார்
நேற்று கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் மூக்கம்மாள் கூறியதாவது: காந்திராஜன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒருமகள் பிறந்தனர். மல்லிப்பட்டிணத்தில் தொழில் சரியாக இல்லாததால் 4 ஆண்டுகள் கழித்து திருச்சியில் உள்ள பர்மா பஜாருக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தோம்.
பின்னர் கணவர் அடிக்கடி குடித்து வந்ததால் எனக்கும் அவருக்கும் சண்டை வலுத்தது.போலீஸில் நான் புகார் செய்தேன். இதனையடுத்து இருவரையும் அழைத்து சமாதானம் பேசி சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதற்கு நான் ஏற்றுக்கொள்ளவில்லை.ஸ்ரீரங்கம் கோர்டில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தேன்.

கமலஹாசனின் பிக் பாஸ்' சீஸன் 3 - பிரமாண்ட செட்டில் கமல்ஹாசன் ஷூட்
vikatan.com - அய்யனார் ராஜன் :
தமிழ்த் தொலைக்காட்சி உலகில் 2017-ல் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’.
புதிய பரிமாணத்தில் ஆங்கராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன்.
இரவு 9 மணியானால் ஊரே டிவி முன் உட்கார்ந்து, முற்றிலும்
தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் பிரபலங்கள் பேசும் புறணியைக் கேட்கத் தொடங்கியதில், ஷோ செம ஹிட். ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட, சேனலின் டி.ஆர்-பியும் எங்கேயோபோனது. அடுத்து சீஸன் 2 ஆரம்பித்தது. ’ஷோ குறித்த அறிமுகம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பில்தான் முதல் சீஸன் ஹிட் ஆனது; இரண்டாவது சீஸன் அப்படியிருக்காது’ எனப் பேசினார்கள். ஆனால், அந்தப் பேச்சுக்களைப் பொய்த்துப் போக வைத்து இந்த முறையும் அதே வரவேற்பு. இம்முறை கூடுதலான ஒரு விஷயம் என்னவெனில், நடிகர் கமல் அரசியல்வாதியாகியிருந்தார். எனவே, அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை வார இறுதி எபிசோடுகளில் பார்க்க முடிந்தது. ஓர் உதாரணம்: பிக் பாஸ் வீட்டுக்குள் அமைக்கப்பட்ட சிறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, ’வெளியில் உள்ள சிறைச்சாலைகளைப்போல் வசதி வாய்ப்புகளெல்லாம் இல்லை’ என சசிகலாவின் ’பெங்களூரு சிறை வசதி சர்ச்சை’யைச் சீண்டினார்.

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் 19ல் மறுவாக்குப்பதிவு
கதிரவன் - நக்கீரன் :
தமிழகத்தில் 13
வாக்குச்சாவடிகளில் வரும் 19ம் தேதி
மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோட்டில் 1 வாக்குசாவடியிலும் கடலூரில் 1 வாக்குசாவடியிலும், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் 1 வாக்குசாவடி்யிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளும் மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்களால் தமிழகத்தில் 46 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேணடியிருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். இந்நிலையில், 13 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

தேனி ஒட்டு இயந்திர மோசடி .. பன்னீர் வாரணாசிக்கு போனது இதுக்குத்தான்? மழுப்பும் தேர்தல் ஆணையம்!
மோடியின் பேரணியில் பன்னீரும் மகனும் |
கோவையிலிருந்து நேற்றிரவு திடீரென 50க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த திமுக,
அமமுக, காங்கிரஸ் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். தேனியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைக்கவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் இந்த விவகாரம் இன்று (மே 8) பூதாகரமாக வெடித்தது. திமுக கூட்டணி வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவை சந்தித்து மனு அளித்தார்.
மதுரை அரசு மருத்துவ மனையில் மின்தடை.. மூவர் உயிரிழப்பு!
மின்னம்பலம் :
மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த புகாருக்கு மருத்துவமனை டீன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று (மே 7) மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அங்கு மின் தடை ஏற்பட்டது. சூறைக் காற்றால் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மீண்டும் மின் இணைப்பு ஏற்படுத்தத் தாமதமாகியிருக்கிறது. இதனால் மதுரை ராஜாஜி மருத்துவமனையின் வென்டிலேட்டர் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன்காரணமாக மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின் தடை ஏற்பட்ட போது மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனியம்மாள், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மே 21ம் தேதி டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம்? ராகுல்-நாயுடு மெகா பிளான்
tamil.oneindia.com - VelmuruganP.:
டெல்லி:
மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் டெல்லியில் வரும் 21ம்
தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்பட
வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம்தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மீதி உள்ளது. அதுவும் வரும் மே 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மே 21 ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை சந்தித்து பேசினார். அப்போது விவிபாட் வாக்கு ஒப்புகை சீட்டுக்களை எண்ணுவதை அதிகரிப்பது குறித்து விவாதித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.