வியாழன், 9 மே, 2019

சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை ..சுப.முத்துகுமார் கொலை... வெளியேறிய 17 முக்கிய தோழர்கள் பட்டியல்

சுப.முத்துகுமார்
சில்ற இல்லப்பா - No Mone : சீமான் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றிய கதை .
2009 ஈழ இனப்படுகொலைக்கு பிறகு எழுந்த மிகப்பெரிய எழுச்சியை வைத்து தொடங்கப்பட்டது நாம் தமிழர் இயக்கம். இதை பெரியாரிய இயக்கங்கள் தான் வளர்தெடுத்தது . அந்த சமயத்தில் சீமானுக்கு பெரிய ரோல் எதுவும் கிடையாது . அண்ணன் சுப.முத்துகுமாரை வைத்தே இயக்கம் நடந்து வந்தது. இந்த சமயத்தில் தான் நாம் தமிழர் இயக்கம் 2010 ஆம் ஆண்டும் சுப.முத்துகுமார், சீமான் மற்றும் பெரியாரிய இயக்கங்கள் இணைந்து மதுரையில் நாம் தமிழர் கட்சியை அறிவித்தனர். நிற்க
அண்ணன் சுப முத்துகுமார் அவர்கள் தமிழ்தேசியத்திற்காகவே உழைத்தவர் . விடுதலை புலிகளுக்கு உதவியதாக சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததும் புலிகளுக்கு உதவி செய்தவர் . இது இந்திய உளவுத்துறையின் கண்ணை உருத்தியது . அண்ணன் சிறிது நாள் தலைமறைவாக இருந்து வந்தார் .

நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தவுடன் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துகுமாரின் மேல் அனைவருக்கும் மதிப்பு அதிகமாவதை பொறுத்துகொள்ள முடியாத சில அல்லறை சில்லைறைகளும்,சீமானும் சேர்ந்துகொண்டனர் . கட்சி தொடங்கி சில மாதங்களிலே சுப. முத்துக்குமாரை கூலிப்படை கொலைசெய்கிறது .முத்துகுமாரின் ஊர்வலத்தில் அண்ணன் சீமான் கண்ணீர் மல்க வீரவசனம் பேசினார். ஆனால் இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் ஊத்தி மூடப்பட்டது .இதில் தான் அண்ணனின் சூச்சமம் இருக்கிறது .
கட்சியில் இருந்த சுப.முத்துகுமாரின் தோழர்கள் எதிர்த்து கேள்வி கேட்க அதற்கு பதில்சொல்ல முடியாமல் அவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். கட்சியை தன்னுடைய கட்டுப்பாடில் கொண்டுவருகிறார். சீமானின் சுயரூபம் தெரிந்தவுடன்

நாம் தமிழரின் ஆதரவு தளம் உடைகிறது .ஈழத்துக்காகவும் தமிழக மக்களின் வாழ்வுக்காகவும் இரவுபகல் பாராமல் உழைத்த அத்தனை தோழர்களும் தன்னுடைய பேச்சுக்கு உடன்படாதவர்களையும் சில அல்லறை சில்லறைகளை வைத்து அவதூறு பரப்பச்செய்து தோழர்களுக்கு களங்கம் ஏற்படுத்தி கட்சியை விட்டு நீக்குகிறார்.
சீமானின் போக்கை கண்டித்து கட்சியை விட்டு உண்மையாக நாம் தமிழர் கட்சி உருவாகக் காரணமாக இருந்த முக்கியமான நபர்கள் அதிகமானோர் வெளியேறுகிறார்கள்.
தற்போது அந்த கட்சி எதற்கு உருவாக்கப்பட்டது என்று தெரியாத சில்லறைகள் தான் அந்த கட்சியை இயக்கி கொண்டு இருக்கிறது .அனைத்து முக்கிய தோழர்களும் வெளியே வந்தவுடன் அது சில குறிப்பிட்ட சாதி பற்றாளர்களின் கொட்டமாக மாறிவிட்டது .அதன் பிறகு தான் சில்லறைகளின் பேச்சை கேட்டு பெரியாரிய எதிர்ப்பை பேச தொடங்குகிறார் .இப்போது அந்த கட்சியை சில பார்ப்பனர்களும், சாதி பற்றாளர்களும் வழி நடத்திகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தான் இதற்கு அஜண்டா போட்டு எழுதி கொடுக்க அதை சீமான் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிறார். அந்த பின்னாடி இருந்து கண்டண்ட் கொடுக்குற குரூப் சங்கர் அப்பா, கல்யாண சுந்தரம் ,கார்த்தி இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கும் கட்சி தொடங்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை .
அந்த கட்சியில் இருந்து வெளியே வந்த முக்கிய தோழர்கள் :-
1)மதுரை செந்தில்
2)திருநெல்வேலி கரிகாலன்
3)அதியமான்
4)அம்பத்தூர் சுந்தரமூர்த்தி
5)டேவிட் பெரியார்
6)திருநெல்வேலி மணிகண்டன்
7)கோயம்புத்தூர் சந்திரன்
8 )பெரம்பலூர் வீரமுத்துகுமார்
9)ராமநாதபுரம் திருமுருகன்
10)ஐயநாதன்
11)சிபி சந்திரன்
12)தூத்துக்குடி பிரபு
13)தஞ்சாவூர் நல்லதுரை
14)நீலகிரி ஆனந்தன்
15)வேலூர் திருமலை
16)விழுப்புரம் சைலேந்தர்
17)கூடலூர் ஆனந்த
இன்னும் பலர் உள்ளனர் . நாம் தமிழர் இயக்கம் தொடங்கி கட்சிக்காக உழைத்த அத்தனை தோழர்கள் மீதும் சில்லறைகளை வைத்து அவதூறு பரப்ப செய்தவர் சீமான் .
எதற்காக கட்சி தொடங்கப்பட்டதோ சிலரின் சுயநலத்திறகாக அந்த கட்சி பண வேட்டைக்கு பயண்பட்டுகொண்டு இருக்கிறது . கட்சியை உருவாக்க பாடுபட்ட அத்தனை பேருக்கும் துரோகம் செய்துள்ளார் சீமான். சுப.முத்துகுமார் அண்ணனின் கனவு அனைத்தும் இன்று பணத்திற்காக விற்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக