சனி, 9 டிசம்பர், 2017

மீனவர்களை ஏமாற்றும் அரசு – அம்பலப்படுத்தும் குமரி மாவட்ட இளைஞர்கள்!



ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதே போல பல்வேறு சந்தர்ப்பங்களில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் அவை எதையும் அரசு முறையாக வழங்கியதில்லை என்பதை, தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தே விளக்குகின்றனர் இளைஞர்கள்
கொந்தளிக்கும் குமரி பூத்துறை கிராம இளைஞர்கள் ! – வீடியோ</>கரை திரும்பாத மீனவர்களை மீட்கக் கோரி, குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பூத்துறை கிராம இளைஞர்கள் மத்திய மாநில அரசுகள் மீனவர்களுக்கு செய்யும் துரோகத்தையும். மீனவர்கள் செத்து மிதக்கும் போது ஆர்.கே. நகரில் விஷால் வேட்புமனு பற்றி விவாதம் நடத்தும் ஊடகங்களையும் தங்களது பேச்சில் தோலுரிக்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகட்டும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஆகட்டும் மீனவர்களுக்கு கண்கட்டுவித்தை காட்டி வருகின்றனர். மறுபுறம் சமூக வலத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மீனவர் போராட்டங்களை சீர்குலைக்கும் வகையிலான மதவெறிப் பிரச்சாரத்தை நடத்திவருகின்றனர்.
மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை ஒருங்கிணைத்த பாதிரியார்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, இங்கு கலவரம் ஏற்படும் சூழல் உள்ளது ஆகையால் போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள் என மறைமுகமாக மிரட்டி போராட்டத்தைத் திரும்பப்பெற வைத்துள்ளனர்.
ஆனால் இந்த தடைகளைத் தாண்டி கூடங்குளம், நெடுவாசல், மெரினா போல ஒரு மக்கள் எழுச்சியை நாங்கள் உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேசான் கொடுக்கும் தொழில்நுட்ப மந்திர சாவி !

Karthikeyan Fastura :நேற்று எங்களுக்கு 6.4 லட்ச : ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் புதையல் கிடைத்தது. அமேசான் Cloud Serviceஆன AWS 10000 டாலர்களுக்கு Credit செய்துவிட்டிருக்கிறார்கள்.
ஸ்டார்ட்அப் உலகில் இது மிகப் பெரிய வரம். இந்த Programக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைத்துவிடாது. பல விண்ணப்பங்கள் நிராகரிப்படும். உண்மையிலேயே இந்த ஸ்டார்ட்அப் மதிப்பு மிக்கதா, இதன் தயாரிப்புகள் எப்படி என்று அலசி ஆராய்ந்து தான் இதை கொடுப்பார்கள்.
இதை போன்றே மிக முக்கியமான இன்னொரு Program Microsoft Bizspark. 2015ல் இதிலும் நாங்கள் தேர்வானோம். அதனால் மாதம் 150$ க்கு Credit வீதம் ஒரு ஸ்டார்ட்அப் டீமில் உள்ள ஐவருக்கு இதை வழங்குவார்கள். அதைவைத்து அவர்கள் Microsoft Cloud Service Products எதை வேண்டுமென்றாலும் வாங்கலாம். மேலும் அவர்களது பல லட்சம் பெறுமானமுள்ள மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். எங்களுடைய நிறுவனத்தில் உள்ள Windows OS, MS Office, Dot Net என்று எல்லாமே ஒரிஜினல் வெர்சன். Pirated கிடையாது. மேலும் டேட்டாபேஸ், செர்வர் என்று எல்லாமே இலவசம். ஐநூறு வெப்சைட்டுகள் வரை ஏற்ற முடியும். அவ்வளவு இடம் கொடுத்தார்கள்.

ராகுல் : குஜராத் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்?

தினத்தந்தி : குஜராத் மாநிலத்தில் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத்தில் கல்வியை தனியாருக்கு விற்றது ஏன்?: பிரதமருக்கு ராகுல் கேள்வி புதுடெல்லி: குஜராத் மாநில சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடியின் பிறந்த மாநிலமான குஜராத்தின் வளர்ச்சியின்மை தொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தினம் ஒரு கேள்வி வீதம் பிரதமருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதுவரை பத்து கேள்விகளை முன்வைத்துள்ள ராகுல் இன்று பதினொன்றாம் கேள்வியை பதிவிட்டுள்ளார். குஜராத்தில் பொறியியல் படித்த 80 சதவீதம் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கின்றனர். விற்பனை செய்ய வழியில்லாமல் போனதால் டாட்டா நானோ கார் தொழிற்சாலை திட்டமும் சொதப்பலாக போனது. தேர்வுகளை வியாபாரமாகவும், பள்ளிகள், கல்லூரிகளை கடைகளாகவும் ஏலம் விட்டு விட்டீர்கள். குஜராத்தின் கல்வி கூடங்களை விற்றது ஏன்? என்று ராகுல் வினவியுள்ளார்.

ஆர் கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி திடீர் மாற்றம்

ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar election,  பிரவீண் நாயர், Praveen Nair, வேலுச்சாமி,Veluchamy, ராஜேஷ் லக்கானி,  Rajesh Lakhoni,தேர்தல் கமிஷன்,Election Commission,  திமுக,DMK, தேர்தல் அதிகாரி,Election Officer,தினமலர் :சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி மீது பல்வேறு கட்சிகள் புகார் அளித்துள்ளன. வேலுச்சாமி தனது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என திமுக சார்பில் இன்று காலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதே போன்று விஷால் வேட்புமனு விவகாரத்திலும் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

தமிழ் ராக்கர்ஸ் உண்மை நிலை......

தமிழ் ராக்கர்ஸ் உண்மை நிலை என்ன?
மின்னம்பலம் :ஒரு திரைப்படத்தின் மூலம் எப்படியெல்லாம் ரகளை செய்ய முடியுமோ, அத்தனை ரகளையையும் செய்தது தமிழ்ப்படம். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.
தமிழ்ப்படம் 2.0 என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதிலேயே இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படங்களை இதில் கலாய்க்கப்போகிறார்கள் எனத் தெரிந்தது. அதிலும், போலீஸ் கதை என்ற டேக்லைனுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருப்பதால் சமீபத்தில் வெளியான சிங்கம் 2 முதற்கொண்டு பல படங்களை ஒரே வெட்டாக வெட்டுகிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், மேலும் வித்தியாசமாக ஒரு வேலையைச் செய்திருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

திருமாவளவன் தலைக்கு ஒரு கோடி அறிவித்த இந்து பயங்கரவாதி கைது !

திருமா தலை கேட்டவர் கைது!மின்னம்பலம் :திருமாவளவன் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த இந்து முன்னேற்றக் கழக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற தலித் இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “ராமர் பிறந்த இடத்தில் அல்லது ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதியைக் கட்டினார் என்று இந்து அமைப்புகள் வாதிடுகிறார்கள். ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக 400 ஆண்டுகள் கழித்து வாதிடுகிறார்கள்.
தற்போது சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும் அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் பௌத்த விகாா்களாக இருந்தன. அந்தப் பௌத்த விகாா்களை இடித்துவிட்டுதான் சிவன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன, பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே ஒரு வாதத்திற்காகச் சொல்வதானால், அந்தக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அவற்றின் மீது புத்த விகாா்களைக் கட்ட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன - நாகநாதன் பேட்டி

tamilthehindu சமஸ் :திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன்.
தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை இரண்டிலிருந்தும் திராவிட இயக்கத்தை எப்படி வேறுபடுத்துவீர்கள்? அதாவது, உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில்? 
 நான் பிறந்தது திருவாரூர். பின்னாளில் வளர்ந்ததெல்லாம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில். சின்ன வயதிலேயே திராவிட இயக்கப் பற்று வந்துவிட்டது. விசித்திரம் என்னவென்றால், எங்கள் குடும்பத்தில் நான்தான் அப்படி. காங்கிரஸ் குடும்பம்.  தாய்மாமா எம்.எஸ்.ராஜா சுதந்திரப் போராட்ட வீரர். ஆகையால், என் அம்மாவே என்னைக் கடுமையாகக் கண்டிப்பார். ஆனால், எனக்குத் திராவிட இயக்கம்தான் பிடித்தது.

BBC : பிட் காயின் வர்த்தகம் என்றால் என்ன ? எச்சரிக்கும் ரிசேர்வ் வங்கி ..

டிஜிட்டல் பணமான பிட்காயின் மதிப்பு அதி வேகத்தில் மேலே ஏறிச் செல்கிறது. இதனால் உலகம் முழுதும் சிலருக்கு வாட்டம், வேறு சிலருக்கு ஊட்டம். கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றான இதன் அபரிமித வளர்ச்சியை குறித்த இந்தியாவின் நிலையை பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் டேவினா குப்தா. பிட்காயினின் மதிப்பு காளை வேகத்தில்
பாய்வதைப் பல்வேறு தரப்பினர் வரவேற்றாலும், வளர்ந்து வரும் நாடுகளின் நிதிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் இதைப் புரிந்துகொள்ள முயல்கின்றன.< பிட்காயின் பரிமாற்றங்களை சீனாவின் மத்திய வங்கி மொத்தமாக நிறுத்தியுள்ளது. இந்தோனேஷியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் பிட்காயின்களை ஒரு பணம் செலுத்தும் முறையாக இருப்பதற்குத் தடை விதித்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பிட்காயின் என்பது "காகித பணம்" போன்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதே நேரம் பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கென்று வழிகாட்டு நெறிமுறைகளும் எதுவும் இல்லை.

மோடியின் 6 பில்லியன் யுரோ கமிஷன் ... கத்தார் 36 Rafale விமானத்தை €1.1 பில்லியனுக்கு.. அதே 36 Rafale விமானத்தை இந்தியா €7.87 பில்லியனுக்கு

Troll Trousers 2.0 : கத்தார் 36 Rafale விமானத்தை €1.1 பில்லியனுக்கு வாங்குது அதே 36 Rafale விமானத்தை இந்தியா €7.87 பில்லியனுக்கு வாங்குது.... இதைத்தான் ஊழல்னு சொல்றோம்... அதானிக்கு சம்பாதிச்சி கொடுக்குறான் மோடின்னு.... ஆனா டவுசர் பயலுக மோடி வாங்குற விமானத்துல ஹாரன் அடிக்குமேன்னு வந்து கதை கதையா கட்டுரை எழுதுவானுங்க.... ஏன்டா கத்தார் காரனுக்கு தேவைப்டாத வசதி அப்டி என்னடா இந்தியாவுக்கு அதுவும் € 6 பில்லியனுக்கும் அதிகமான தொகையை கொடுத்து வாங்குறீங்க? நல்லா வேலை பாக்குறான் மோடி அதானிக்கும் அம்பானிக்கும்....

குஜராத் வரிசையில் காத்திருந்து ஓட்டு போடும் மக்கள்.. முதற்கட்ட தேர்தல்

dhinamalar :ஆமதாபாத்:   குஜராத்தில், 89 தொகுதிகளுக்கு, இன்று(டிச.,9) முதற்கட்ட சட்டசபை தேர்தல் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 89 தொகுதிகளில் நடக்கும் இந்த தேர்தலில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு அவை சரி செய்யப்பட்ட பின்னர் ஓட்டுப்பதிவு துவங்கியது. முதல்வர் ரூபானி முதல் ஆளாக சென்று ஓட்டு போட்டார்.பகரூச் சட்டசபை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், திருமண கோலத்தில் வந்து ஓட்டு போட்டனர்.
சாதனை படைக்கும் வகையில், மக்கள் தங்களது ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் டுவிட்டரில் கூறியள்ளதாவது: ஓட்டுப்போடுவது ஜனநாயகத்தின் ஆன்மாவாக உள்ளது. முதல் முறையாக ஓட்டு போடும் வாக்காளர்களை வரவேற்கிறேன். குஜராத் மக்கள் அதிகளவு ஓட்டு போட்டு, ஜனநாயக திருவிழா கொண்டாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மீனவர்களை மீட்கக் கோரி சென்னையில் 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டம்-

tamilthehindu: நொச்சிக்குப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை மீனவர்கள். | படம்: எல்.சீனிவாசன்
ஒக்கி புயலால் நடுக்கடலில் மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்றுகோரி, சென்னையில் மீனவ குடும்பத்தினர் 2,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நொச்சி குப்பத்தில் தொடங்கிய போராட்டம் தற்போது சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 25 கிராமங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் குமரி மீனவர்களை மீட்கக் கோரிப் போராடி வருகின்றனர்.
   
முன்னதாக அவர்கள் தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் கூடிய அவர்களுக்கு அங்கே போராட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சேப்பாக்கத்தில் மீனவ குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினாவில் கூடிய மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீஸார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை.. மனுஸ்மிருதியே காரணம்....


Sanmuga Veeramani :  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் தீட்டியிருக்கிறது. அதில் ஒரு பத்தியில் இவ்வாறு குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் மனு(அ)தர்ம சிந்தனைகளும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
பெண்கள் குறித்து வர்ணாச்ரம சிந்தனைகள் என்ன? தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைக் கீழே தருகிறேன். மேற்படி தலையங்கத்துடன் இணைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், இளம் பருவ காலத்தில் கணவனாலும், கணவன் இறந்தபிறகு, மைந்தராலும் பெண்கள் காக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் எதுவும் கிடையாது.”
(மனு(அ)தர்மம், 148, அத்தியாயம் 5)
”ஆண்கள் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியம் இல்லை. அவன் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை. ஓர் ஆணாக இருந்தால் போதும். அவன் அழகனாகவோ அல்லது அசிங்கமான வனாகவோ அவனுடன் உடலுறவை அனுபவி,” என்று பெண்கள் கூறுவார்கள். ” (14)

குஜராத்தில் காங்கிரசுக்கு வெற்றி முகம் .... பாஜகவின் கதை ....? It may be a photo finish for BJP, Congress in Gujarat polls: survey


Vijayasankar Ramachandran : குஜராத்தில் காற்று மாறி வீசத் தொடங்கியது போலிருக்கிறது.
போட்டி தீவிரமாகிக் கொண்டிருக்கிறது
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள், பிஜேபிக்கு எதிராக கிராமப்புற மக்களின் உணர்வு தெளிவாக வெளிப்படுவதாகவும் (குறிப்பாக விவசாயிகள்)
நகர்ப்புறங்களில் மக்கள் உஷாராகஅமைதி காப்பதாகவும் கூறுகிறார்கள். பட்டேல்கள் ஜாதிரீதியாக வாக்களிப்பார்களா அல்லது மதரீதியாக முடிவெடுப்பார்களா என்பது கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இவர்களில் ஒரு பிரிவினர் விவசாயிகளாகவும், மற்றொரு பிரிவினர் சிறு தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இரு தரப்பினருமே பொருளாதாரரீதியாக பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

மோடியின் பொதுக் கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20,000த்தை தாண்டவில்லை.
யோகி ஆதித்யநாத் கூட்டத்துக்கு 100 பேர் கூட வரவில்லை.
ஹார்டிக் பட்டேலின் கூட்டங்களுக்குத்தான் அதிகமாக மக்கள் வருகிறார்கள்
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சர்வேயில் (ஆங்கில இந்து நாளிதழில் இன்று வெளியாகியிருக்கிறது)

கர்நாடக கொட்டுறேஷ்வரா மட சாமியார் பாலியல் ... 20 வருடங்களாக பெண் சப்பிளை செய்த டிரைவர் சாட்சியம்


பெண் சப்ளை
டிரைவர் கைவண்ணம்? சமையல்கார பெண் சமையல்கார பெண்ணுடன் மடாதிபதி உல்லாசம்.. வைரலான வீடியோ பெங்களூர்: மடாதிபதி ஒருவர் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலானதால், மடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தின் கங்காவதி நகரில் அமைந்துள்ளது, கல்மதா மடத்தின் மடாதிபதி கொட்டுரேஷ்வரா (56) மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த இந்த மடம் 400 ஆண்டுகள் பழமையானது.

குஜராத்.. காங்கிரஸ் பக்கம் வீசுகிறதா வெற்றிக்காற்று?- முடிவை நிர்ணயிக்கும் 'ஜி.எஸ்.டி, மும்மூர்த்திகள்'

tamilthehindu : குஜராத்தில் நடக்கப்போவது சாமானியர்களை பொருத்தவரை சட்டப்பேரவைத் தேர்தல். ஆனால், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அப்படிஅல்ல. 2019-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் மிகப்பெரிய கதைக்கு எழுதும் முன்னோட்டமாகும்.
தங்களுக்கு உரிய சந்தேகங்கள், குறைபாடுகளை தெரிந்து கொள்வதற்காக காங்கிரஸ், பாஜக நடவு செய்துள்ள பரிசோதனைச் செடிதான் குஜராத் தேர்தல். போட்டி, சந்தேகம், நிச்சயமற்றதன்மை ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிதான் குஜராத் தேர்தல் என்று கூறலாம்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள மாநிலம் குஜராத். கடந்த 1960-ம் ஆண்டு மே1-ம் தேதி ஒருங்கிணைந்த மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பிரிந்து, குஜராத் மாநிலம் தனியாக உருவானது. 4.33 கோடி வாக்காளர்கள் கொண்ட அந்த மாநிலத்தில் இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

காஞ்சி சங்கராச்சாரி -- அனுராதா ரமணன் மீதான பாலியல் அத்துமீறல் Flashback

போலி சாமியார்ன்னு யார் யாரையோ தூற்றும் உலகம் உலகமகா பொம்பள பொருக்கி ஒருத்தனை பாப்பார கூட்டம் குடை போட்டு மறைத்து வைத்துள்ளது
==================================


netrikannetrikan.blogspot.com/நெற்றிக்கண் .: கிழட்டு காஞ்சி காமேடி தன்னை விட பேத்தி  வயசு இருக்கிற நடிகை ஸ்வர்ணமால்யா கூட குஜாலா இருந்தான் அதப்பத்தி வாய் திறக்கமாட்டானுக,பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார் ஆசிவாங்க போன தன்னை காமேடி தொடாத இடத்த்தில் தொட்ட்தா சொல்லி புகார் அதுக்கு அன்னைக்கு வாய்திறக்கல,

அனுராதா ரமணன் பரபரப்பான அந்த விவகாரம்
======================================
காமகேடிகள் லீலை  அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர்  இருந்தாலும் அனுராதா ரமணன் போல துணிந்து காம்கேடியை  கிழிச்சவர் யாரும் இல்லை ...
சங்கரராமன் கொலையில் மாட்டிய காமேடி மீது பழைய தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை ஊரை கூப்பிட்டு சொன்னார் ...அனுராதா ரமணன் சென்னை திருவான்மிïரில் உள்ள தனது வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ தங்க நாகாபரணம்: காஞ்சி சங்கராச்சாரியார்கள் தானம்

tamilthehindu :சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் மூலவர் கபாலீஸ்வரருக்கு 7.5 கிலோ எடையுள்ள தங்க நாகாபரணத்தை காஞ்சி சங்கராச்சாரியார்கள் நேற்று சமர்ப்பித்தனர்.
சென்னையில் உள்ள பழமை யான கோயில்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலும் ஒன்று. இது திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர்களால் பாடப்பெற்ற திருத்தலமாகும். இந்த கோயில் 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் மனதால் பூஜித்து முக்தி அடைந்த பெருமை கொண்டது. ரூ.2.75 கோடி மதிப்பில் இங்கு எழுத்தருளியுள்ள கபாலீஸ்வரருக்கு ரூ.2.75 கோடி மதிப்புள்ள 7.5 கிலோ எடை கொண்ட தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதற்காக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகிய இருவரும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை வருகை புரிந்தனர். அவர்களுக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்... சசிகலா குடும்பம்தான் ஊழல் செய்தது போல் இந்த அயோக்கியன்..

savukkuonline.com : 27 செப்டம்பர் 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு.   ஜெயலலிதாவிடம், விசாரணை நீதிபதியிடம் பேசியாயிற்று.   நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று கூறி, 16 பக்கம் கொண்ட தீர்ப்பு நகல் என்று ஒன்றை காண்பித்திருக்கிறார்கள்.   அதை அப்படியே நம்பி,  ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற எவ்விதமான தயாரிப்பு வேலையும் இல்லாமல் ஜெயலலிதா, படோடாபமாக, அதிமுக அடிமைகளை பரப்பன அக்ரஹாரா வட்டாரம் முழுக்க பேனர்களை வைக்கச் சொல்லி, ஆடம்பரமாக கையசைத்தபடி நீதிமன்றம் சென்றார்.
மற்ற அடிமைகளெல்லாம் உரிய நேரத்துக்கு வந்து விட, பன்னீர்செல்வம் மட்டும் தாமதமாக வந்தார். அவரை பெங்களுரு காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை.    கூட வந்த அல்லக்கைகள் ஃபார்மர் சீப் மினிஸ்டர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கவும், காவல்துறை அவரை உள்ளே அனுப்பியது.  12 மணிக்கெல்லாம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும், ஜெயலலிதாவுக்கான தண்டனை என்ன என்பதற்கான வாதத்துக்கு முன் ஜெயலலிதா தரப்பில் ப்ரேக் வேண்டும் என்று கேட்கப்பட்டது.  அதையடுத்து அரை மணி நேரம் நீதிமன்றத்தை ஒத்தி வைத்தார் குன்ஹா.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

_2ஜி_ வழக்கு ... பார்ப்பனிய முதலாளித்துவ அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி

Adv Manoj Liyonzon : ஆ_ராசா_2ஜி_வழக்கில்_இருந்து_விடுதலையாவார்
இதை நான் சொல்வதால் நீங்கள் என்னை தூற்றுவீர்கள். ஆனாலும் ஒரு வழக்கறிஞராகவும் அதற்குமுன்பு முதலீட்டுச் சந்தையில் நான் வேலை பார்த்ததில் கிடைத்த அனுபவத்தையும் பொருளாதார அறிவையும் வைத்து இதை என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது. மிக நிச்சயமாக ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையாவார்.
TRAI- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தொலைபேசி கட்டணங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டப்படி இல்லை. ஆனால் தகுதியுள்ள புதிய நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கி சந்தையில் போட்டியை உருவாக்கி தொலைபேசி கட்டணங்கள் குறைய வழிவகை செய்ய முடியும். அதன்மூலம் விளிம்பு நிலை மனிதர்களும் குறைந்த கட்டணத்தில் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த முடியும்.
இதை ஆ.ராசா நடைமுறைபடுத்தினார்.
புதிய நிறுவனங்களும் உரிமம் பெற ஆவன செய்தார்.
ஒவ்வொரு முறையும் நியாயமான விலையில் அலைகற்றை ஏலம் அறிவித்த போது சந்தையில் இயங்கிக் கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்குள்ளே முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு யாரும் விண்ணப்பிக்காமல் பார்த்துக் கொண்டன. 6 மாதங்கள் வரை விண்ணப்பிக்காமல் இழுத்தடித்தன. இதனால் மறுமுறை மிகக் குறைந்த விலையில் ஏலம் அறிவிக்கச் செய்து ஒன்றுக்கொன்று போட்டி போடாமல் மிகக்குறைந்த விலையில் ஏலம் எடுத்து அதிக கட்டணத்தில் சேவைகளை வழங்கி கொள்ளை லாபம் பார்த்தன.

இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம்

இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை: திருமாவளவன் விளக்கம்மாலைமலர் : அம்பேத்கார் நினைவு நாள் கூட்டத்தில் இந்து கோவில்களை இடிப்பதாக சொல்லவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ‘மாலை மலருக்கு’ அளித்த பேட்டி வருமாறு:-
மீண்டும் கவர்னர் அதிகாரி சந்திப்பு, மக்கள் சந்திப்பு என்று களம் இறங்கி விட்டாரே?
பதில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதும் வரவேற்க கூடியதேயாகும். அது அவரின் மனித நேயத்தை காட்டுகிறது. கவர்னரின் இந்த நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் வரவேற்று பாராட்டுகிறோம். ஆனால் மாவட்ட அதிகாரிகளை சந்திப்பது அவர்களிடம் ஆலோசனை நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மீறல் மட்டுமல்ல சட்ட மீறலாகும்.

சென்னை: மீனவர்களின் குரலை முடக்கத் துடிக்கும் டெட்பாடி அரசு!

நாடு அறிவியலில் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பல நவீன கருவிகள் வந்து விட்டன. செயற்கைக்கோள் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவம், கடற்படை, விமானப்படை வைத்து என்ன செய்கிறார்கள்?
கி புயலில் சிக்கிய மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் இன்று (08.12.2017) காலை 10:30 மணியளவில் கோட்டை நோக்கிப் பேரணி நடத்தப் போவதாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர்.
இன்று காலையில்  சென்னை நொச்சிக் குப்பம், ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம்,  திருவான்மியூர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகளும் மீனவர்களும் நொச்சிக் குப்பம் பகுதியில் காலையில் குவிந்தனர்.

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை? தந்தையின் இரண்டாவது தாரம் சரளாவையும் தஸ்வந்த் டார்ச்சர்

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை?சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், குன்றத்துரில் தன் தாய் சரளாவைக் கொலைசெய்துவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்றான். இவனை அந்தேரி பகுதியில், இன்று (டிசம்பர் 8) மீண்டும் கைது செய்திருக்கின்றனர் போலீசார். இந்த கொலை வழக்கில், அவனது தந்தை சேகரும் உடந்தையாக இருந்தாரா என்பது பற்றி தமிழகக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியன்று, ஏழு வயது சிறுமி ஹாசினி கொலையானார். அவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் தஷ்வந்த். ஹாசினியிடம் தஷ்வந்த் பாலியல் ரீதியாக அத்துமீறியதும், அவரது பிணத்தை எரித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த தஷ்வந்தை, கடந்த செப்டம்பர் மாதம் அவரது தந்தை சேகர் ஜாமீனில் அழைத்துவந்தார்.
கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று, தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு தஷ்வந்த் தப்பிச்சென்றான். இவனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீஸ் படை கைதுசெய்தது. சென்னை செல்வதற்காக விமானநிலையத்திற்கு அழைத்துவரும்போது, தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து மீண்டும் தப்பினான்.

‘பாக்கியம் ராமசாமியின் மரணம்… அப்புசாமி, சீதாப்பாட்டிக்கு தெரியாது!’


‘நகைச்சுவை என்பது எப்போதுமே அனாதையாகாது’ என்றொரு வாசகத்தைச் சொன்ன, வாசகத்தின் மூலம் நகைச்சுவையின் அடர்த்தியையும் உண்மையையும் சொன்ன பாக்கியம் ராமசாமி இப்போது நம்மிடையே இல்லை.
ஜ.ரா.சு. என்றால் சிலருக்குத் தெரியும். ஜே.ஆர்.எஸ். என்றால் ஒருசிலருக்கு மட்டுமே தெரியும். பாக்கியம் ராமசாமி என்றால் எல்லோரும் அறிவார்கள். சிரிக்கச் சிரிக்க, நம் வயிறு வலிக்க வலிக்க எழுதிய பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன், உடல்நலக் குறைவால் மறைந்தார்.
எனக்கு, பன்னெண்டு பதிமூணு வயது இருக்கும் போதே, குமுதம், விகடன் வாங்கும் வழக்கம் வந்துவிட்டது. அப்போதே எழுதியவர் பெயர் பார்க்கும் பழக்கம் உண்டு. அவர் எழுத்து பிடித்துப் போனது. சிரிக்க வைத்தது. எளிமையான நடை கட்டிப்போட்டது. அந்த வாரம் புத்தகம் வாங்கியதும் இவருடைய எழுத்தையே தேடித்தேடிப் படித்தேன். ஒருகட்டத்தில்தான் தெரிந்தது… என்னைப்போலவே ஏராளமான வாசகர்கள், அவர் எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று!

பாஜக எம்பி பதவி ராஜினாமா ... மோடியின் ஆட்சி பிடிக்கவில்லை மகாராஷ்டிரா பாந்திரா தொகுதி ...

நக்கீரன்: மோடியின் ஆட்சி முறை பிடிக்காததால் பாஜக எம்பி கட்சியிலிருந்தும், மக்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பந்த்ரா கோண்டியா தொகுதியில் மக்களவை உறுப்பினர் நானா பட்டோலி. இவர், ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அரசு விவசாயக் கடன் குறித்தும், விவசாயிகள் தற்கொலைகள் குறித்தும் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.">மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மோடி குறித்து விமர்சித்த நானா பட்டோலி, பிரதமர் தம்மை நோக்கி கேள்விகள் எழுப்பப்படுவதை விரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சேகர் ரெட்டியின் அமைச்சர்கள் பதவிகளில் தொடர்வது தமிழகத்துக்கு நல்லதா?மு.க.ஸ்டாலின் பேட்டி

நக்கீரன் : சேகர் ரெட்டியின் டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பதவிகளில் இன்னும் தொடர்வது தமிழகத்துக்கு நல்லதா?மு.க.ஸ்டாலின் பேட்டி<>திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (08-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
செய்தியாளர்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் சேகர் ரெட்டி பற்றி வெளியான செய்தியில் ஓபிஎஸ் பெயரும் இடம்பெற்று, அவருக்கு வழங்கப்பட்ட தொகை பற்றியும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பிஎஸ்ஓ-வுக்கு பணம் கொடுக்கப்பட்டது, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்பட 8 பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதே?

ஸ்டாலின்: டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டுமல்ல, வீக் இதழிலும் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. இதை ஒரு புதிய செய்தியாக நான் கருதவில்லை. காரணம், நான் தொடக்கத்தில் இருந்தே மணல் மாஃபியா சேகர் ரெட்டி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் எந்தளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

சேகர் ரெட்டியின் 'டைரி' குறிப்பு அமைச்சர்களின் பெயர் பட்டியல் ... பன்னீர் . விஜயபாஸ்கர் ......

tamilthehindu :தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வருமான வரித்துறை சோதனைகள் மிக அதிகமாக அரங்கேறின. இனியும் தொடரலாம்.
அந்த வகையில், ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சோதனை 2016 டிசம்பர் 21-ம் தேதி அன்று அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை. தமிழக அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரும் கரும்புள்ளி என விமர்சிக்கப்பட்டது. காரணம், பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளர் ஒருவர் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அதுவே முதன்முறை.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு சாதாரண ஒப்பந்ததாரராக வாழ்க்கையைத் தொடங்கிய சேகர் ரெட்டி அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானதும் பின்னர் கோடிகளில் புரளும் அளவுக்கு உயர்ந்ததும் பக்கம்பக்கமாக எழுதித் தீர்க்கப்பட்டன. அவருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான நெருக்கம் குறித்து பல்வேறு தகவல்களும் வெளியிடப்பட்டன.

சேகர் ரெட்டி ஊடக கூலிகளுக்கு மாதாமாதம்.... ரங்கராஜ் பாண்டே , ஹரிஹரன்,தன்யா ராஜேந்திரன் ,கார்த்திகை செல்வன்

Steephan Raj : ரங்கராஜ் பாண்டவேம், ஹரிஹரனும் எச்சை பொறிக்கிகள் பணத்துக்கு ஊடக தர்மத்தை விற்றவர்கள் என்று நன்றாக தெரியும் ஆனால் " கார்த்திகை செல்வன் " ? இனிமே 7 மணிக்கு மேல நியாயம் தர்மம்னு ஏதாவது பேசுனீங்க ................பிஞ்சிடும் ! தன்யா ராஜேந்திரன் இதெல்லாம் ஒரு பொழப்பு ? இந்த அடிமை கூட்டத்துகிட்டேயே இவ்வளவு வாங்கி இருக்காணுங்க பிஜேபிகிட்ட எவ்வளவு வாங்கி இருப்பானுங்க ?

தினமலர் நெல்லை :சென்னை: சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றிய டயரின் ஒரு பகுதியை “டைம்ஸ் நவ்” தொலைக்காட்சி வெளியிட்டது. அந்தப் பக்கங்களின்படி எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவை முழுக்க சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறியது. துணை முதல்வர் ரூ. 2.5 கோடி பணம் பெற்றதாகவும் தனியார் தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டது. இந்தச் செய்தியின் அடிப்படையில் அதிமுக அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் இன்று கோரினார்.

தப்பிய தஷ்வந்த் மீண்டும் பிடிபட்டார் ... போலீஸ் பிடியிலிருந்து..

tamilthehindu :தாயை கொலை செய்து மும்பையில் தலைமறைவாக இருந்து சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் தப்பிச்சென்ற தஷ்வந்த் மீண்டும் போலீஸாரிடம் சிக்கினார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்த தஷ்வந்த், பெற்ற தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தனிப்படை போலீஸார் பிடித்தனர், நேற்று சென்னை அழைத்து வரும் வழியில் தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றார். இன்று மீண்டும் அவரை தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

கடும் புயல் ... முன்கூட்டியே தெரிந்தும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை

தீக்கதிர் தலையங்கம்

கடும் புயல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்தும் மத்திய மாநில அரசுகள்உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதால் அதன் விளைவை குமரிமாவட்ட மக்களும் மீனவர்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாவட்டத்தை புரட்டிப் போட்ட புயலின் கோரத் தாண்டவத்தில் இருந்து மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இன்னும் மீளவில்லை. ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னமும் கடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எந்தஇடத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கூட, சகல ஏற்பாடுகளையும் வைத்துக்கொண்டிருக்கும் மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. குமரி,தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில்கரை சேர்ந்திருப்பதாக தகவல்கள் வந்தபோதிலும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரமாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன் வளத்துறை அதிகாரிகளையும் அங்கு அனுப்பவில்லை.அண்டை மாநிலமான கேரளாவையும் ஒக்கி புயல் கடுமையாக தாக்கியது. அம்மாநில மீனவர்களும் காணாமல் போயினர்.

கணவன் உடப்பட 3 பேரை கொன்று செப்டிக் டாங்கில்

mumbaimurderதினமணி : மும்பை: மும்பை காந்திப்படாவைச் சேர்ந்த சவிதா பாரதி (43) என்ற பெண் தன் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கில் புதைத்து வைத்த சம்பவம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை காந்திப்படாவில் சவிதா பார்தி(42) என்ற பெண் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் வீட்டை பரிசோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபச்சாரத் தொழில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்களை போலீஸார் மீட்டனர். மேலும், சவிதா பார்தி மற்றும் வாடிக்கையாளர் ஒருவரையும் கைது செய்தனர்.

ஜெ.,வை பார்க்க, அரசு நியமித்த மருத்துவர் குழுவினரை கூட அனுமதிக்கவில்லை

மருத்துவமனை,ஜெ.,,சந்திக்கவில்லை,அரசு டாக்டர்கள்,வாக்குமூலம்
மருத்துவமனை,ஜெ.,,சந்திக்கவில்லை,அரசு டாக்டர்கள்,வாக்குமூலம் தினமலர் :ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது.>நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை:/>ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை கண்காணிப்பதற்காக, அரசு தரப்பில், மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனை மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, மருந்தியல் துறை துணை பேராசிரியர், முத்துசெல்வன், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர், தர்மராஜன்... பொது மருத்துவத் துறை பேராசிரியர், டிட்டோ, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், பாலாஜி ஆகியோர், இடம் பெற்றிருந்தனர்.

ஜெ., அறைக்கு தினமும் சென்ற சசிகலா... லண்டன் செல்ல மறுத்த ஜெ.,- டாக்டர் பாலாஜியின் சாட்சியம்

Mayura Akilan - Oneindia Tamil ஜெ.கைரேகை சர்ச்சை...ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் டாக்டர் பாலாஜி விளக்கம்- வீடியோ சென்னை: அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் தினமும் போய் பார்த்தேன் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான டாக்டர் பாலாஜி கூறியுள்ளார். தான் தமிழக அரசு மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால், சிகிச்சைக்கு வந்த லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்களை அழைத்து சென்றதாக கூறினார். தினமும் ஜெயலலிதா அறைக்கு சசிகலா மட்டும் தான் செல்வார். எழுந்தவுடனேயே அவர் சசிகலாவை தான் அழைப்பார் என்றும் பாலாஜி கூறியுள்ளார். அரசு மருத்துவர்கள் குழு அரசு மருத்துவர்கள் குழு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சார்பில் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த டாக்டர்கள் குழுவிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். அரசு சார்பில் இடம்பெற்றிருந்த சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி முன்னாள் இயக்குனர் விமலா, அரசு மருத்துவர்கள் முத்துச்செல்வன், கலா, டிட்டோ ஆகியோர் இதுவரை விளக்கமளித்துள்ளனர். டாக்டர்கள் அளித்த பதில் டாக்டர்கள் அளித்த பதில் இதுவரை ஆஜரான டாக்டர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவில்லை என்றே தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பிரிவு அருகே ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தனர். 

தொப்பி சின்னம் கொங்கு முன்னேற்ற சாதிகட்சிக்கு ... எடப்பாடி பழனிசாமியும் அதே ...

தொப்பி சின்னத்தை வாங்கிக் கொடுத்தது  அதிமுகவா?மின்னம்பலம் :ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்தைக் கைப்பற்றுவதும், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதுமே முதல்கட்ட வெற்றியாகக் கருதப்படும் நிலையில், டி.டி.வி.தினகரன் எந்த தொப்பி சின்னத்துக்காக டெல்லி வரை சென்று போராடினாரோ, அதை மிக எளிதாக பெற்றிருக்கிறது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொப்பி சின்னம் தினகரனுக்கு கிடைத்துவிடக் கூடாது என்று கடுமையான காய் நகர்த்தலில் ஈடுபட்ட நிலையில் கொங்கு கட்சி ஒன்றுக்குத் தொப்பி சின்னம் கிடைத்திருப்பது அரசியல் அரங்கில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் பிறகுதான் இந்தக் கட்சியைப் பற்றி பலருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது.