சனி, 9 டிசம்பர், 2017

தமிழ் ராக்கர்ஸ் உண்மை நிலை......

தமிழ் ராக்கர்ஸ் உண்மை நிலை என்ன?
மின்னம்பலம் :ஒரு திரைப்படத்தின் மூலம் எப்படியெல்லாம் ரகளை செய்ய முடியுமோ, அத்தனை ரகளையையும் செய்தது தமிழ்ப்படம். சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது.
தமிழ்ப்படம் 2.0 என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதிலேயே இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படங்களை இதில் கலாய்க்கப்போகிறார்கள் எனத் தெரிந்தது. அதிலும், போலீஸ் கதை என்ற டேக்லைனுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்திருப்பதால் சமீபத்தில் வெளியான சிங்கம் 2 முதற்கொண்டு பல படங்களை ஒரே வெட்டாக வெட்டுகிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், மேலும் வித்தியாசமாக ஒரு வேலையைச் செய்திருக்கிறார் சி.எஸ்.அமுதன்.

தமிழ்ப்படம் 2.0 தியேட்டர்களில் அடுத்த வருடம் மே 25ஆம் தேதியும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் மே 26ஆம் தேதியும் ரிலீஸ் செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன், அதிகாரபூர்வ பைரசி பார்ட்னர் என்ற இடத்திலும் தமிழ் ராக்கர்ஸின் லோகோவை வைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு பந்திலும் சிக்சர் அடிக்கும் சி.எஸ்.அமுதன் படத்திலும் மெகா சிக்ஸ் அடிக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக