சனி, 9 டிசம்பர், 2017

பெண்களுக்கு எதிரான வன்முறை.. மனுஸ்மிருதியே காரணம்....


Sanmuga Veeramani :  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் தீட்டியிருக்கிறது. அதில் ஒரு பத்தியில் இவ்வாறு குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் மனு(அ)தர்ம சிந்தனைகளும் ஒரு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
பெண்கள் குறித்து வர்ணாச்ரம சிந்தனைகள் என்ன? தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைக் கீழே தருகிறேன். மேற்படி தலையங்கத்துடன் இணைத்துப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், இளம் பருவ காலத்தில் கணவனாலும், கணவன் இறந்தபிறகு, மைந்தராலும் பெண்கள் காக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் எதுவும் கிடையாது.”
(மனு(அ)தர்மம், 148, அத்தியாயம் 5)
”ஆண்கள் அழகாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியம் இல்லை. அவன் இளைஞனாகத்தான் இருக்க வேண்டும் என்பதுமில்லை. ஓர் ஆணாக இருந்தால் போதும். அவன் அழகனாகவோ அல்லது அசிங்கமான வனாகவோ அவனுடன் உடலுறவை அனுபவி,” என்று பெண்கள் கூறுவார்கள். ” (14)

”பரத்தையர் போன்று ஆண்களின் பின்னே ஓடுதல், மனம் மாறும் இயல்பு மற்றும் இயற்கையாகவே பாசத்துடன் இல்லாதிருப்பது ஆகிய குணங்கள் உடைய பெண்கள், என்னதான் அவர்களுடன் பற்றார்வத்துடன் இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய கணவர்களுக்கு உண்மையாக இருக்கமாட்டார்கள். ” (15)

”அவர்களின் சொந்த இயற்கையான குணமே இது என்பதை அறிந்திருப்பதால், அவ்வாறு அவர்கள் சிருஷ்டிக் கடவுளால் படைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தப்பிச் செல்லாதவாறு ஆண்கள் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.” (16)
”படுக்கை, ஆசனம், நகை, காமம், சினம், நேர்மையின்மை, துரோகம் மற்றும் கெட்டநடத்தை ஆகியவைதான் பெண்களின் குணங்களாகும்.” (18)
”பெண்களுக்கு என்று தனியே வேத சுலோகங்கள், சடங்குகள் இல்லை. இது மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ள சட்டமாகும். பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஆண்களைப் போன்று பலம் உள்ளவர்கள் அல்லர், பொய்யைப் போல் மாசு வடிவினர். இது நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.” (19, அத்தியாயம் 9)
”கணவனுக்கு உண்மையாக இல்லாத ஒரு பெண் இந்த உலகில் இடித்துரைக்கப்பட வேண்டியவளாவாள். பின்னர் மறுபிறவியில் அவர் நரியின் கருப்பையில் பிறப்பாள். பல்வேறு நோய்களாலும் சித்திரவதை செய்யப்படுவாள்.” (30 அத்தியாயம் 9)
”விதவைத் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும்.” (64,65 அத்தியாயம் 9)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக