சனி, 9 டிசம்பர், 2017

ஆர் கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி திடீர் மாற்றம்

ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar election,  பிரவீண் நாயர், Praveen Nair, வேலுச்சாமி,Veluchamy, ராஜேஷ் லக்கானி,  Rajesh Lakhoni,தேர்தல் கமிஷன்,Election Commission,  திமுக,DMK, தேர்தல் அதிகாரி,Election Officer,தினமலர் :சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான வேலுச்சாமி மீது பல்வேறு கட்சிகள் புகார் அளித்துள்ளன. வேலுச்சாமி தனது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை என திமுக சார்பில் இன்று காலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இதே போன்று விஷால் வேட்புமனு விவகாரத்திலும் வேலுச்சாமி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டது.

பல புகார்கள் வந்ததை அடுத்து தேர்தல் அதிகாரி குறித்து ராஜேஷ் லக்கானி இன்று ஆலோசனை மேற்கொண்டார். தலைமை தேர்தல் கமிஷனுக்கும் இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேலுச்சாமி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் பிரவீண் நாயரே தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என ராஜேஷ் லக்கானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தலைமை தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில் வேலுச்சாமி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக