சனி, 8 ஏப்ரல், 2017

வாக்களர்களுக்கு பணம் கொடுத்த மொத்த விபர பட்டியல் சிக்கியது .. அதிமுக ஆட்சி கலைக்கப்படுவதற்கு இதுவே போதுமானது

Troll Mafia :அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணத்தில்..
செங்கோட்டையன் 37 பாகங்கள் 32, 830 வாக்காளர்களுக்கு , ரூ. 13 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரம் .
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் 38 பாகங்கள், 33, 193 ஓட்டுகள் ரூ. 13 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் என்றும் கூறப்பட்டுள்ளது...
ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கம், 27,837 ஓட்டுகள், ரூ. 11 கோடியே 13 லட்சத்து, 48 ஆயிரம்...
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 36 பாகங்கள், 32,092 வாக்காளர்களுக்கு ரூ.12 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரம்...
மின்சார துறை அமைச்சர் த ங்கமணிக்கு 37 பாகங்கள், 31, 683 வாக்காளர்களுக்கு, ரூ.12 கோடியே, 67 லட்சத்து, 32 ஆயிரம்..
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணிக்கு 42 பாகங்கள், 27,291 வாக்காளர்களுக்கு ரூ.14 கோடியே, 91 லட்சத்து, 64 ஆயிரம்..
நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு 33 பாகங்கள் 29219 வாக்காளர்களுக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்து 76 ஆயிரம்...என அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 89,65,80,000 ரூபாய்.
இவை ஓட்டுக்காக ₹4000 வீதம் வாக்களர்களுக்கு வழங்க ஏறக்குறைய
₹90 கோடி ரூபாய்.. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.. இதுவரை ₹50 கோடிக்குமேல் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

தலித் பெண்ணுடன் காதலால் பதவி இழந்த தேசாதிபதி மெயிற்லண்ட்.

என்.சரவணன் :தோமஸ் மெயிற்லண்ட் (Sir Thomas Maitland, 1759–1824) ஒரு இராணுவ ஜெனரலாக போர் முனைகளில் பணிபுரிந்ததன் பின்னர் இலங்கையின் இரண்டாவது ஆங்கிலேய தேசாதிபதியாக நியமிக்கப்பட்டார். முதலாவது தேசாதிபதி சேர் பிரெடெரிக் நோர்த்துக்கு அடுத்ததாக நியமிக்கப்பட்டவர் அவர். 1780 இல் இல் இந்தியாவில் சேவையாற்றிவிட்டு பிரித்தானியா திரும்பி 1790 இல் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 19-07.1805 முதல் 19.03.1811 வரையான 6 ஆண்டுகள் அவர் இலங்கையில் தேசாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் முக்கியமானது. இலங்கையின் நிர்வாகத்துறையில் குறுகிய காலத்தில் பல மாற்றங்களைச் செய்தார்.இலங்கையில் செய்த மாற்றங்கள்
பதவியைக் கையேற்ற முதல் ஆறு மாதங்களை இலங்கை பற்றிய அறிவைப் பெறுவதற்காக செலவளித்தார். ஆங்கிலேய அதிகாரிகள் செய்து வந்த ஊழல்களால் ஏராளமான அனாவசிய செலவீனங்களைக் கண்ட அவர் ஆங்கிலேயே திறைசேரியை கையாள்வதை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தார்.  ஆங்கிலேய அதிகாரிகள் பிழையான வழிகளில் சம்பாதிப்பதை தடுப்பதற்காக அவர்களின் சம்பளத்தை உயர்த்தினார். உள்நாட்டு மொழியை கற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களுக்கே பதவி உயர்வு என்று அறிவித்தார்.

ஆர் கே நகர் தேர்தலும் ஊழல் பெருச்சாளிகளும் Ravi Palette Cartoon

தடபுடலா திருமணம் செய்து விட்டு... தாலிகட்ட மறந்தானாம் அதுபோல....ரைடு எல்லாமே கெடுபிடியா அதிரடியா நல்லாத்தான் நடக்குது..ஆனால் குற்றவாளிகளைத்தான் தண்டிப்பதில்லை..தப்பிவிட்டுவிடுகிறார்கள். Operation Success -- Patient Out போங்கடா திருட்டுப் பசங்களா... ·முகநூல் பதிவு தாமோதரன்  . படம்
Ravi Palette

விவசாய கடன் தள்ளுபடிக்கு எதிராக தி இந்து’ பத்திரிக்கை இது ஒரு பொறூக்கிப் பத்திரிக்கை.. கொதித்து எழும் தோழர் திருமுருகன்

No automatic alt text available.’தி இந்து’ பத்திரிக்கையை ஏன் பொறூக்கிப் பத்திரிக்கை என்று சொல்கிறது மே17 இயக்கம் என்பதற்குரிய ஆதாரங்கள் வாரம் தோறும் அப்பத்திரிக்கையாலேயே வெளியிடப்படுகிறது.
தன்னுடைய சாதிவெறி, இனவெறி, முதலாளித்துவ சிந்தனை என அனைத்தையும் மிக நுணுக்கமாக அப்பத்திரிக்கை வெளியிடும். எழுத்தாள பத்திரிக்கையாளர்களையும், கார்ட்டூனிஸ்டுகளையும் கொண்டு இக்கருத்துக்களை தொடர்ந்து விதைத்து வருகிறது.
சாதிபார்த்து வேலைக்கு அமர்த்துவதும், அசைவம் சாப்பிடுவதை தனது அலுவலகத்தில் தடை செய்வதும்,
கோயம்பேட்டில் கருவாடு விற்கிறார்கள் என்று சிறுவணிகம் செய்யும் ஏழைகள் பிழைப்பினை அழிப்பதும், மெரினா கடற்கரையில் சுகாதாரமற்று உணவுப்பொருள் விற்கிறார்கள் என்று தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்துவதும், பெசண்ட் நகர் கடற்கரையில் வசதியானவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்கை கோரிப்பெருவதும்,

லாரி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததது

ஐதராபாத்: கடந்த 10 நாட்களாக நடந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. காப்பீடு பிரிமியம் தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஐதராபாத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்மு

கீதா லட்சுமி வீட்டில் 72 மணிநேர சோதனை .. எம்ஜியார் பல்கலை கழக துணைவேந்தர் ..


வருமானவரித்துறை அதிரடியாக தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அச்சர் விஜய பாஸ்கரின் இடங்களில் மட்டும் 22 மணிநேரம் சோதனை நடத்தியிருக்கிறது. இதையும் விஞ்சும் வகையில் எம்ஜிஆர் பல்கலை கழக துணை சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீட்டில் தொடர்ந்து 27 மணி நேரம் சோதனை நடத்திய வருமான வரித்துறை. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்தினர்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் 22 மணிநேரம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் முக்கிய ஆவணங்களும் பல கோடி ரூபாய் பணமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

கையும் களவுமாக பிடிபட்ட தளவாய் சுந்தரம் ... கைது செய்யப்படுவார் ?


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை வருமான வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது. இந்த சோதனையின் போது அவரது உதவியாளர்களிடமிருந்து 4.5 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ஏராளமான ஆவனங்கள் மற்றும் ஆர்கே நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதரங்கள் எல்லாம் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் நேற்றைய வருமான வரித்துறை சோதனையின் போது முக்கிய ஆவணம் ஒன்றை விஜயபாஸ்கரின் கார் டிரைவர் எடுத்துவிட்டு ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆவணம் மதில் சுவர் வழியாக வீசப்பட்டு விஜயபாஸ்கரின் ஆதரவாளரால் எடுக்கப்பட்டு மறைக்கப்பட்டது.

சிதம்பரம் கோவிலை மீட்க போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே குமுடிமலை கிராமத்தில் சிவனடியார் ஆறுமுகசாமி (94) உடல்நல குறைவால் காலமானார். 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரம் பாடியவர் ஆவார். நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர போராட்டம் நடத்தியவர் ஆவார்.  ஜெயலலிதாவும் சுப்பிரமணியம் சாமியும் சேர்ந்து கொண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலை பார்பனர்களுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தாரைவார்த்தனர் . இந்த கொடுமையால் அய்யா சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் மிகவும் மனம் நொந்த படியே இருந்தார்

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். உண்மை நிலவரமோ, ஒவ்வொரு அங்குலத்திலும் நொடிக்குநொடி வன்கொடுமைகள் நிகழும் பகுதி என்று ஹரியானா முழுவதையுமே அறிவிக்குமளவுக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஹரியானாவுக்கு சற்றும் குறையாத வன்கொடுமை பூமிதான்.

போலீசே ரவுடிகள் துணையுடன் பணப்பட்டுவாடா செய்யும் அற்புத காட்சிகள் .. RK Nagar

அரசியல்வாதிகள் சொன்னதை செய்வார்களா, மாட்டார்களா என மக்கள் எப்போதுமே பதைபதைப்புடன் இருப்பார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தைப் பொறுத்தவரை நக்கீரனில் முன்கூட்டியே சொன்ன செய்திகள், ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வருகின்றன.>சொன்னது நடந்தது!">நக்கீரன் மார்ச்27-29 இதழில் "முதல் தவணை ரூ.5000 டோக்கன்! கட்சி நிதி கபளீகரம்!' என ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் நடத்த திட்டமிட்டுள்ள பண விநியோகத்தை அட்டைப்பட கட்டுரையாக்கியிருந்தோம். அது அப்படியே ஏப்ரல் 4-ம் தேதி நள்ளிரவில் நிஜமாகத் தொடங்கியது.அதே இதழில் "கமிஷனர் மாறினாலும் போலீஸ் மாறவில்லை' என்ற தலைப்பில் ""கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டாலும், இணைக் கமிஷனர் சாரங்கன், துணைக் கமிஷனர் ஜெயக்குமார் போன்ற அதிகாரிகள் மாற்றப்படாத வரை ஆளும்தரப்புக்கு கவலையில்லை'' என குறிப்பிட்டிருந்தோம். 

கிரண் பேடி அவசரமாக டெல்லி பயணம் .. ஆளுநர் பதவி காலி அல்லது குடியரசு.. பதவி பரிசு? ... பேயாட்சி செய்தால் ...

மத்திய அரசின் அவசர அழைப்பால் கிரண் பேடி டெல்லி பயணம்! ...
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதல்வர் மற்றும் ஆட்சியாளர்களுக்குமிடையே அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, புதுவையில் அரசுப் பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் கலந்து கொண்டன.

நாம டயபடீஸ்ல ... உங்களுக்கு ஆட்டமா? சசிகலா தினகரனுக்கு டோஸ்

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே ஒருவித பரபரப்பில் மூழ்கிக்கிடந்த வேளையில் போயஸ் தோட்டத்தில் இளவரசி குடும்பத்தாருடன் டி.டி.வி. தினகரன் கடுமையான வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்ததார் என்று போயஸ்கார்டன் வட்டாரம் தெரிவித்தது. அதன் எதிரொலியாக ஜெயா தொலைக்காட்சியில் தினகரன் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், "ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனித்துவரும் இளவரசியின் மகன் விவேக், இப்போது திவாகரன் மற்றும் நடராஜனுடன் நெருக்கமாக இருக்கிறார். போயஸ் கார்டனிலிருந்து பல நூறு கோடிக்கும் மேல் கட்சி நிதியை எடுத்து தினகரன் இஷ்டத்திற்கு செலவுசெய்தது பற்றியும் இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இடைத்தேர்தல்; தி.மு.க.வில் ஒரு அதிருப்தி!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணியானது அதிகார பலத்தைக் கொண்டு அசராமல் வேலைசெய்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க.செயல்படவேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். நடைமுறையில், அக்கட்சியின் செயல்பாடு முந்தைய தேர்தல்களைவிட வேகமாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைமைக்கழகப் பேச்சாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்தல்-பிரச்சார அனுமதி வாங்குவதைக்கூட முறையாக செய்யாமல், பேச்சாளர்களைக் காத்திருக்கவைத்து திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

வடிவேலு வழக்கில் சிங்கமுத்துவுக்கு நீதிமன்ற அழைப்பாணை.. ஆஜராக உத்தரவு.. தவறினால் பிடிவாரன்ட்

சென்னை: நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள நிலமோசடி வழக்கில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் வடிவேலுவும் சிங்கமுத்துவும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து நில மோசடி செய்துள்ளதாக நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங்கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார்.

சரத்குமார் கடும் குற்றச்சாட்டு : வருமானவரி சோதனை நிச்சயமாக ஒரு அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கைதான் ...



அந்த மூன்று காண்டேயினர் 570 கோடியை பற்றி இன்றுவரை மோடியும் அமித் ஷாவும் வாயே திறக்கல.

சிரியா மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ..


வாஷிங்டன்: சிரியாவில் பொதுமக்கள் மீது விஷவாயு தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக சிரியா விமானப்படை தளம் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசியது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 2011 மார்ச் முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இப்போரால் இதுவரை குறைந்தது 3.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்தப் போரில் சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது.
சிரியா எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. ஆனால் இதை சிரியா மறுத்து வருகிறது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் விஷ வாயு தாக்குதல் நடத்தின.

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

சரத்குமார் வீட்டு ரெயிட் பின்னணி ... நாடார் ஓட்டுக்கள் பொன்னார் தமிழிசையிடம் இருந்து சரத்குமாருக்கு போகலாமா?

வருமானவரித்துறையினர் சோதனை
சரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததற்கு இரண்டு தமிழக அமைச்சர்களே காரணம் என்று சொல்கின்றனர் சமத்துவ மக்கள் கட்சியினர்.
ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து, வேட்பாளராக அந்தோணி சேவியர் என்பவரை அறிவித்தது. தொடர்ந்து வேட்பு மனுவை அந்தோணி சேவியர் தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, மாற்று வேட்பாளரின் வேட்பு மனு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆர் கே நகரில் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பாஜக முன்னெடுக்க ஆலோசனை?

#பிஜேபி க்கு டெபாசிட் கூட கிடைக்காது .,
#தீபா - செல்ல பெண் பிஜேபி யை விட மோசம் ..
 #OPS - செல்ல pet பாடையை தூக்கியது backfire ஆகி உள்ளது
 #திமுக வெல்லவும் விட கூடாது
. #அதிமுக வின் பெரிய அணியாக தினகரனை வளர விட கூடாது .
 அடுத்து என்ன என்ன ஜனநாயக விரோத சமாச்சாரங்களை செய்யலாம் உங்கள் ஆலோசனை அன்புடன் வரவேற்க படுகிறது..
அணுகவும்
 #BJP think tank C/o #RSS think tank  முகநூல் பதிவு  சவேரா

64 வது தேசிய விருது .. ஜோக்கர் தமிழில் சிறந்த படமாக .. வழமை போல தேசிய விருதுகள் வடநாட்டுக்குதான்

இயக்குநர் ராஜுமுருகனின் 'ஜோக்கர்' படத்துக்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார். கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் 'ஜோக்கர்'. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தராஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.
சிறந்த திரைப்பட விமர்சகருக்கான விருது தனஞ்சயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் கொடுமை ,கொலை ... கடூழியச் சிறை, மரணதண்டனை : யாழ் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்த குற்றவாளிக்கு கடூழியச் சிறை, மரணதண்டனை : நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு
ஜேசுதாஸ் லக்ஷ்மி என்ற 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலைசெய்த  என்ற குற்றவாளிக்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவுப் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். மாவட்ட மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கு இன்றைய தினம் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட  போதே யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

தருண் விஜய் எம்பியின் நிறவெறி அம்பலம் ... உதிரம் முழுதும் ஆதிக்க வெறி .. திருமாவளவன் கடும் சீற்றம்!


சென்னை: உதிர அணுக்கள் முழுவதும் ஆதிக்க வெறியேறிய ஒருவருக்குத் தான் இத்தகைய பார்வை இருக்க முடியும் என்று தருண் விஜய் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் காட்டமாக கூறியுள்ளார். தென்னிந்தியர்களை குறிப்பாக தமிழர்களை கறுப்பர்கள் என வர்ணித்து தமிழர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் தருண் விஜய். அவரை பலரும் அவரது டிவிட்டர் பக்கத்திற்குப் போய் கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ் தனது முகநூல் பக்கத்தில் போட்டுள்ள பதிவு: ஆப்பிரிக்க நாட்டவர் மீது டெல்லியில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கருத்து கூறியுள்ள பா.ஜ.க எம்.பி தருண் விஜய், "நாங்கள் இனவெறி கொண்டவர்கள் எனில், கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களுடன் சேர்ந்து வாழ்வோமா?" என்று கேட்டுள்ளார்.

ஜியோ இலவச சலுகை ரத்து! டிராய் உத்தரவாம்!


மூன்று மாதம் இலவசம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 'சம்மர் சர்ப்ரைஸ்' சிறப்புச் சலுகை திட்டத்தை டிராய் உத்தரவின்பேரில் திரும்பப் பெறுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதியோடு ஜியோவின் இலவச சேவை முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஜியோ பிரைம் திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசத்தை மேலும் 15 நாட்கள் நீட்டிப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றும், ரூ.303 கட்டணம் செலுத்தினால் ஜுன் வரையிலான மூன்று மாதங்களுக்கு இலவசங்கள் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை நிறுத்தும்படி தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய் உத்தரவிட்டதன்பேரில், ’சம்மர் சர்ப்ரைஸ்’ என்ற இந்த 3 மாதச் சலுகை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்வதாக தற்போது ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சரத்குமார் ராதிகா , அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் வருமான வரி சோதனை ! பாஜகவுடன் பேரம் படியல்ல?


ஏப்ரல் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடுகள் உள்பட, அதிமுக அம்மா கட்சி நிர்வாகிகள் தங்கியுள்ள 35 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கோடிக்கணக்கில் பணமும் ஆவணங்களும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாகவும் தினகரன் அணியினர் ரூ.100 கோடிக்குமேல் பணம் விநியோகம் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் திமுக, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, புதுக்கோட்டை வீடு, அவரது அலுவலகம், குவாரி, அவரின் கல்லூரி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை முதல் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் .. மாநிலங்கள் அவையில் அரசு பதில்!

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 5ஆம் தேதி மாநில நகர்புற வறுமை ஒழிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி-பதில் நேரத்தில் ஒரு உறுப்பினரின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, 'நகர்புற வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள் போன்ற திட்டங்கள் மூலம் உதவிபுரிவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக 24 ஆயிரத்து 245 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.மின்னம்பலம்

மலையாள மொழி கட்டாயம் : கேரள அரசு அதிரடி முடிவு !


கேரளாவில் மலையாள மொழியை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது. கேரளா அரசின் அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்றது. அதில், மாநிலத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத் திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழி கட்டாயமாக்கப்படும். மேலும் அதற்கென சட்டம் இயற்றவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டம், மேல்நிலைப்பள்ளி வரை மாணவர்கள் மலையாள மொழியை கட்டாயம் ஒரு பாடமாக படிக்க வழிவகை செய்யும். சில பள்ளிகள் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக வைத்திருக்காதது, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பாடத்திட்டத்திலிருந்து மலையாள மொழிப் பாடத்தை நீக்கியதுடன், அம்மொழியில் பேசும் மாணவர்களுக்கு தண்டனை அளித்த சம்பவத்தையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி: போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது போலீசார் தடியடி.. கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்..இன்று கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கையை, மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்ம மரணம் .. மானாமதுரை

மானாமதுரை : மானாமதுரை அருகே காதல் திருமணம் செய்த பெண் போலீஸ் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளாதேவி (25). அதே ஊரை சேர்ந்தவர் வீரராகவன் (32). இருவரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விகாஷ் (3) என்ற மகன் உள்ளார். கோவை ஆயுதப்படையில் போலீசாக  இருந்த ஷர்மிளாதேவி, சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை ஆயுதப்படைக்கு மாறுதலானார். இவரது கணவர் வீரராகவன் ஒடிசா மாநிலத்தில் ராணுவ சிப்பாயாக பணியாற்றுகிறார்.

மத்திய வங்கி ஆளுநர் : விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்தால் ஆபத்து ... அம்பானியின் முன்னாள் வேலைக்காரன் பின் எப்படி பேசுவான்?

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

நடிகன் ரஜினியின் அரசியல் நாடகம் தொடர்கிறது .... பாஜகவின் தேசிய செயற்குழுவில் .. சேரலாம் சேராமலும் விடலாம் ..படம் ஓடணும் இல்ல?


ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? வந்தால் அவர் எந்தக் கட்சிப் பக்கம் செல்வார்? போன்ற வினாக்களுக்கு விடை தெரியாமல் நடக்கும் ஆடு புலி ஆட்டத்திற்கு, இதுவரை முடிவே தெரியவில்லை. ரஜினியின் புதிய சினிமாக்கள் திரையிடத் தயாராகும் போதெல்லாம் இதுபோல நடக்கும். இது முடிவில்லா நீண்ட கால வரலாறு. இப்போது மீண்டும் ரஜினி உஷ்ணம் வேகமாக அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ரஜினி, பாஜகவுடன் கைகோர்க்க தயாராகி வருவதாகச் செய்திகள் தீயாகப் பரவி வருகின்றன. இதற்கு அச்சாரம் போடுவது போல பாஜக தரப்பிலிருந்து சிலர் ரஜினியுடன் பேசி வருகிறார்கள். பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் ரஜினியுடன் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

BBC.COM : தலாக் - பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக வேறு ஆணுடன் உறவு.. தலாக் .. பின் முதல் கணவனோடு சேரலாம் .



The women who sleep with a stranger to save their marriage - BBC ... முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணவனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.<> அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள்,>ஹலாலா< என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன. இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல். அதுபற்றிய விவரம்:> ஃபரா - இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுகமானவர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக ஃபரா தெரிவிக்கிறார். பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித்துள்ளார்.

பன்னீருக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் : ஆர்,கே,நகர் பிரசாரத்தில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியை ,,,,

ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரத்தில் திரு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்பது ஈவு இரக்கமற்ற மனிதநேயமற்ற செயல். இது போன்று அநாகரிகமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கும் இத்தகைய தரம்தாழ்ந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச்செல்ல அனுமதித்திருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தி.மு.கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
“இதய தெயவம் புரட்சித் தலைவி அம்மா” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு காட்டும் நன்றிக் கடனும் பண்பாடும் இதுதானா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

ஜாக்கி வாசுதேவ் நட்ட மரங்கள் எங்கே? எல்லாம் புலுடா! ஆதாரம் இதோ!

மலையை நாசமாக்கி மரங்களை வெட்டி காடுகளை அழித்து இயற்கையை கொள்ளை அடிப்பதில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் கேடி சாமியார் ஜாக்கி வாசுதேவ் . இவனது இஷா யோகம் என்பது மிகப்பெரும் காப்பரெட் வியாபாரமாக உருவாகி விட்டது.


வியாழன், 6 ஏப்ரல், 2017

ராமதாஸ் : ஆர் கே நகர் பணப்பட்டுவாடா ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை ஏன்?

;கோப்புப் படம்.ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையம் பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அருந்ததியர் மீதான வெறிதாக்குதல் .... குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா

thetimestamil : ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொதுவாகவே இந்த பகுதியில் உள்ள பள்ளியில் அருந்ததியர் வகுப்பைப் சேர்ந்த மாணவ, மாணவிகள்தான் கழிப்பறைகளை சுத்தம் செய்து வருகிறார்கள்.பொது குழாயில் நீர் குடிக்க இயலாது, பிடிக்கவும் இயலாது என்பது தொடங்கி தீண்டாமையில் பல வடிவங்கள் இந்த கிராமத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

பிரியங்கா காந்தி முழு நேர அரசியலில் ஈடுபாடு?

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் முழுமையாக அரசியல் பணியில் ஈடுபடமுடியவில்லை. சோனியாவின் அரசியல் பணியை, தொய்வின்றி தீவிரமாக செயல்படுத்தி வரும், ராகுல்காந்திக்கு துணையாக அவரது சகோதரி பிரியங்கா காந்தியை அரசியலில் ஈடுபடுத்த உயர்மட்ட தலைமையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பிரமுகர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள் . அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் அரசியல் பணியாற்ற விரைவில் பிரியங்காவை அறிமுகம் செய்யப் போகிறார் சோனியகாந்தி. மின்னம்பலம்

மீண்டும் வெடிக்கிறது நெடுவாசல் ... போராட்ட குழு தீர்மானம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நெடுவாசல் கிராமத்தைச் சுற்றியுள்ள 100 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் போராட முடிவு செய்துள்ளதால் நெடுவாசல் மீண்டும் போராட்டக்களமாக மாறவுள்ளது.
இந்தியா முழுவதுமாக 31 இடங்களில் சிறிய அளவில் ஹைட்ரோ கார்பன்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும் ஒன்றாகும்.
அதையடுத்து, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இயற்கை எரிவாயு எடுப்பதுக்கு கர்நாடக பாஜக எம்.பி. குடும்பத்தைச் சேர்ந்த ஜெம் லாபரட்டரீஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அனுமதி அளித்தது. இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் நாசமாவதுடன், அப்பகுதிவாசிகளுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்றும் கூறி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விரைவு தபாலில் தலாக் தலாக் தலாக் .. உபி தேர்தல் வாக்குறுதியை நினைவு படுத்தி புகார் ...

தனது கணவர் விரைவு தபால் மூலம் முத்தலாக் அனுப்பியுள்ளதாக பெண் ஒருவர் பிரதமர் மோடியிடம் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவாகரத்து செய்யும் முறை வழக்கில் உள்ளது. அதாவது, பொது இடங்களில் வைத்து விவாகரத்து செய்வது, சமூக வலைதளங்கள் மூலம் விவாகரத்து செய்வது, ஆண் குழந்தை இல்லை எனக் கூறி பெண்களை விவாகரத்து செய்வது முஸ்லிம் மதத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஆர்.கே.நகரில் போலீஸ் மூலம் பணப்பட்டுவாடா: திருச்சி சிவா

காவல்துறை மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருச்சி சிவா தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் ஆளுங்கட்சியாக உள்ள தினகரன் அணியினர் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக, பன்னீர் அணி, பாஜக, மா.கம்யூ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியைச் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி மாலை டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், ஆர்.கே.நகரில் போலீஸ் மூலமாகவே பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி. புகார் மனு அளித்தார்.

ஆர் கே நகரில் பணம் ஆறாக ஓடுகிறது ... கேள்வி கேட்பவருக்கு அடி உதை... கேடு கேட்ட தேர்தல் ஆணையம் .

மக்கள்
விகடன் : தமிழகத்தில் எத்தனைப் பிரச்னைகள் இருந்தாலும், தற்போது அனைவரின் முக்கிய எதிர்பார்ப்பாக இருப்பது ஆர்.கே நகர் தேர்தல் தான். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? யார், யாரெல்லாம் மண்ணைக்கவ்வப் போகிறார்கள் என்ற பரபரப்பு இப்போதே அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே மிகவும் எதிர்பார்க்கும் நிலையில், ஆர்.கே நகரைப்பற்றிச் சொல்லவா வேண்டும்? எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சிகளின் தோரணங்கள், வீதிகள்தோறும் கட்சியினரின் பிரசாரம், கரை வேட்டிகளின் அணிவகுப்பு என ஆர்.கே நகர்த் தொகுதி முழுவதுமே படுபிஸியாகக் காணப்படுகிறது. அது மட்டுமா? அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதும் கனஜரூராகவும், அடிதடிகளுடனும் நடந்து வருகிறது.

திமுக ஸ்டாலின் பாமக பாலு சந்திப்பு ... மதுவுக்காக நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக பெயர் மாற்றம்?

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பா.ம.க வழக்கறிஞர் பாலு இன்று நேரில் சந்தித்து பேசினார். பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன் உடன் சென்றிருந்தார். மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பா.ம.க சார்பாக வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டு உள்ள உத்தரவு தொடர்பாக கடிதத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் எம்.பி ஆகியோரின் அறிவுருத்தலின்படி கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலு, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள சுமார் 3300 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தலித் சித்திரவதைகளை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் ... தமிழ் இந்துவும்....

Vincent Raj : .
மிகுந்த துயரத்துடன் இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.சாதி கொடுமைகளுக்கு எதிராக பல ஊடகங்கள் குரல் கொடுத்து வருகின்றன.குறிப்பாக ஆங்கில இந்து அதிகமான தலித் பிரச்னைகளை எழுதி இருக்கின்றனர்.ஒரு சமயம் ஆசிரியர் குழு விவாதத்தின்போது ஒருவர்,நாம் அதிக அளவில் தலித் பிரச்னைகளை எழுதுகிறோம்.இதனால் சலிப்பு வருகிறது என்று கேள்வி எழுப்பியபோது, உங்களுக்கு சாப்பிட சலிப்பு வருமா? சாதி கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்.அவர்களின் நியாயத்தை எழுத சலிப்பு வர கூடாது என்று என்.ராம் கூறினார்.இதை கேள்விப்பட்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.ஆனால் தமிழ் இந்து இதற்கு நேர் எதிரானது.
தலித் மக்கள் மீது நடைபெறும் நூற்று கணக்கான வன்கொடுமைகளை தீண்டாமை சித்ரவதைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்து வருகிறது.இது மட்டும் அல்ல வன்கொடுமை நடத்துபவர்களுக்கு ஆதரவாகவும் எழுதுகிறது.

RSS ஸ்லீப்பர் செல் "சமஸ்" எடுத்த வாந்தி

Amudhan Ramalingam Pushpam  : சமஸ் இன்று தனது தமிழ் இந்து கட்டுரையில் பார்ப்பனர்களை திராவிட கட்சிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். யார் அவர்களை விலக்கினார்கள்? எங்களுக்கும் (பார்ப்பனர் அல்லாதோர்), அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்களை சமமாக நடத்த, பார்க்க முடியுமா அவர்களால்? எங்களோடு இணைந்து வாழ முடியுமா அவர்களால்? அவர்களுக்கு அடிமையாக வாழ மாட்டோம் என்று நாங்கள் சொல்வது அவர்களை விலக்குவதற்கு சமமா? மறுபடியும் சாமி என்று அவர்கள் முன்பு கும்பிடு போட வேண்டும் என்கிறாரா சமஸ்? ஒரு ஜெயா போதாதா? இவர்கள் எந்த லட்சணத்தில் இருப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள? வெறும் 3 % இருக்கிறவர்கள் தமது அளவுக்கு அதிகமாகவே வசதியாகவும் அதிகாரத்துடனும் இருக்கும் தமிழகத்தில் இதற்கு மேல் அவர்களுடன் என்ன உறவாட? தமது சாதிய அடையாளத்தை இந்து, இந்திய, இந்தி அடையாளமாக பிறர் மீது திணிக்க மாட்டோம் என்று பார்ப்பனர்களால் உறுதி கூற முடியுமா?

இரகசியமாக மன்னிப்பு கேட்ட ஹெச் .ராஜா .. போட்டுடைத்த அய்யாக்கண்ணு ..


பாஜகவின் எச்.ராஜா சமீபத்தில் தொலைப்பேசி உரையாடல் ஒன்றில் விவசாயிகளுக்காக டெல்லியில் போராடும் அய்யாக்கண்ணு பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில், அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருக்கிறார், அவர் ஒரு பிராடு, அவரை கடந்த 25 வருடமாக தெரியும், எனது வீட்டு வாசலில் வந்து கிடப்பார் என தரம் தாழ்ந்து பேசினார். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அய்யாக்கண்ணு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எச்.ராஜா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அவருக்கு போன் செய்து கேட்டதாக கூறினார். எப்ப சார் நான் உங்க வீட்ல வந்து இருந்தேன், நான் என்ன ஃபிராடு தனம் சார் செய்தேன் எனக் கேட்டேன் அதற்கு ராஜா சாரி அது தெரியாம நடந்து போச்சு நான் வேனா வருத்தம் தெரிவித்து அறிக்கை விடுகின்றேன் என தன்னிடம் கூறியதாக அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

டெல்லியில் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்குகிறது சரவண பவன் .. தமிழக விவசாயிகள் ..

தமிழக விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை செய்து வருகின்றனர். ஆனால் இந்த போராட்டங்களை சர்க்கஸ் போல ரசித்து பார்த்து வரும் மத்திய அரசு அவர்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்யக்கூட மறுத்து வருகிறது.வங்கிக்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு டெல்லியிலும், இந்தியாவின் மற்ற பகுதியில் இருந்தும், வாழ்த்துக்களும் ஆதரவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள சரவண பவன் கிளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் மதிய உணவை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த தகவலை சரவண பவனின் பணிபுரியும் செஃப் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். உலகிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு போடும் சரவண பவனை வாழ்த்துவோம்.வெப்துனியா 

புதன், 5 ஏப்ரல், 2017

அமெரிக்க லேப்டாப் தடையால் ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை நூறு வீதம் உயர்ந்தது


எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தடைவிதிக்கப்பட்ட முதல் வாரத்தில், ஏர் இந்தியாவின் டிக்கெட் விற்பனை நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தடையால் நூறு சதவீதம் உயர்ந்த ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை புதுடெல்லி: எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு கடந்த மாதம் தடை விதித்தது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

கிரண்பேடி அடாவடி ... அன்று கேஜ்ரிவால் .. இன்று நாராயணசாமி ..

கிரண்பேடி, நாராயணசாமி | கோப்புப் படம். புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்பதில் ஆளுருக்கு எதிராக தனது தொடர் நடவடிக்கைகளை கட்சிகளுடன் இணைந்து தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளார் முதல்வர் நாராயணசாமி. ஆளுநர் விமர்சித்த தலைமை செயலருக்கு அரண் அமைத்துள்ளார் முதல்வர். அதே நேரத்தில் கிரண்பேடி ஆதரவு அதிகாரிகளுக்கு சட்டப்பேரவையிலிருந்து சம்மன் அனுப்பி அவரை மவுனமாக்கியுள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றவுடன் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றவுடன் தொடர் நடவடிக்கைகளை கிரண்பேடி தொடங்கினார்.

கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம்.. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் ..

fire-onboard-MV-Daniela-1  பற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம் fire onboard MV Daniela 1கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா,   இந்தியா கடற்படைகள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படை, சிறிலங்கா விமானப்படை என்பன கூட்டாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
fire-onboard-MV-Daniela-5  பற்றியெரியும் கொள்கலன் கப்பல் – தீயை அணைக்க இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம் fire onboard MV Daniela 5பனாமா கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பற்றியிருப்பதாக நேற்று மாலை சிறிலங்கா கடற்படையிடம் உள்ளூர் முகவரால் அவசர உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக, சிறிலங்கா கடற்படையின் பி-412, பி-436 ஆகிய அதிவேக தாக்குதல் படகுகள் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளையும் மீட்டதுடன், தீணை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன.

மத்திய அமைச்சரவை மாற்றம்! சுஷ்மா சுவராஜ் பதவி நீக்கம்? வசுந்தரராஜி சிந்தியா புதிய வெளியுறவு அமைச்சர்?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சுஷ்மா ஸ்வராஜ் மாற்றப்பட்டு வசுந்தரராஜே சிந்தியா அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் வெளியாகி உள்ளன.
 By: Mathi டெல்லி: நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தீவிர ஆதரவாளரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்தரராஜே சிந்தியா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடி இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த போது அக்கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி உள்ளிட்டோர் ஓரம்கட்டப்பட்டனர்.

டெல்லியில் அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்

Farmers Association Leader Ayyakannu டெல்லி, ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது, திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை ஏற்றார். காவிரி மேலாண்மை அமைப்பது, விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் , நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி .. எந்தவித சட்ட நடவடிக்கையும் கூடாது .. தமிழகத்துக்கு மத்தியரசு நிதி அளிக்க ..

நில உச்சவரம்பு கொண்டுவந்ததுபோல், பண உச்சவரம்பு கொண்டுவரச்சொல்லுங்க அப்பொழுது தெரியும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த அரசு கையூட்டு வாங்கிக்கொண்டு எவ்வளவு கடன் கொடுத்திருக்கிறது என்று தெரியும்
சென்னை:'கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது' என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் கருதி ,மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தி உள்ளது. சாதகமான இந்த தீர்ப்பால், வேளாண் மக்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

ஜெ., வழக்கில் கர்நாடக மனு தள்ளுபடி.. இறந்து விட்டதால் இனி அவர் உத்தமரோ? அவாள் அவாள் அவாள் ..

அப்போ அபராதம் என்னாகும்? தீபக் கட்டணுமா வேண்டாமா? முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டால் அவரது வாரிசுகள் சொத்துக்களை அனுபவிக்கலாம் என்பது எவ்விதத்தில் சரி? இறந்தவர் உடலை சிறையில் போடமுடியதுதான் ஆனால் அபராதத்தை?
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது எப்படி என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரி, கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியது. கர்நாடக ஐகோர்ட், நான்கு பேரையும் விடுதலை செய்தது. பின்னர் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், நான்கு பேர் மீது விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.

நடிகை ரம்பா கணவருடன் சேர்ந்து வாழ சம்மதம் .. வழக்கு முடிவுக்கு வந்தது!

நடிகை ரம்பா உடன் சேர்ந்து வாழ அவரது கணவர் இந்திரன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சேர்ந்து வாழப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி மனுத்தாக்கல் செய்ததை அடுத்து விவகாரத்து வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளது. நடிகை திவ்யபாரதியின் மரணத்திற்குப் பின்னர் அவர் நடித்த படங்கள் பாதியில் நிற்க அவரைப் போல இருப்பதாக கூறி விஜயலட்சுமியை திரை உலகிற்கு கொண்டு படத்தை முடித்து வெளியிட்டனர் இயக்குநர்கள். டூப் போட வந்த விஜயலட்சுமி ரம்பாவாக பெயரை மாற்றிக்கொண்டு, தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பணிப்பெண் தற்கொலையை வீடியோ எடுத்த குவைத் வீட்டு எஜமானி!



வளைகுடா நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்தவர்கள், தங்கள் முதலாளிகளால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவிலிருந்து பணிக்காகச் செல்பவர்களும் துன்புறுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குவைத்தில் பெண் முதலாளி ஒருவர், தன்னிடம் பணிபுரியும் பெண் தற்கொலை செய்ய முயற்சி செய்ததைத் தடுக்காமல் அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி வீதிகளில் தமிழக விவசாயிகள் உருண்டு புரண்டு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராட்ட குழுவை சேர்ந்த சில விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அங்கபிரதட்சணம் செய்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஜெ.டி.ஆர்.

அருள்மிகு அம்பேத்கார் திருக்கோவில் ... அடப்பாவிகளா வாழ்க்கை முழுவதும் எதை எதிர்த்தாரோ ....

வெற்றி சங்கமித்ரா :  அருள்மிகு சுவாமி அம்பேத்கருக்கு திருக்கோவில்…… 2இப்படி வெளிவந்திருக்கும் ஓர் துண்டிறிக்கை பார்த்துவிட்டு மனம் பதறிவிட்டது. அந்த துண்டறிக்கை “அருள்பாலித்தவர் அம்பேத்கர், கடவுள் அம்பேத்கர்,சுவாமி அம்பேத்கர்” என்று அம்பேத்கரை விளிக்கிறது.
எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து பௌத்தம் தழுவினாரோ அந்த மதத்திடமே அம்பேத்கரை அடமானம் வைக்கத்தான் இந்த செயல் உதவும். தயவுகூர்ந்து அப்படி ஒரு முயற்சியிலிருப்பவர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள்…..
அம்பேத்கரை நீங்கள் பரப்பவில்லையானாலும் பரவாயில்லை ஆனால், தவறாக பரப்பிவிடாதீர்கள். மன்னிக்கமுடியா வரலாற்று பிழையாகிவிடும். ஒருவேளை அவரை நீங்கள் உயர்த்தி பார்க்க ஆசைப்படுவீர்களேயானால் பௌத்தத்தின் வழி பாருங்கள் அது அவர் கண்ட கனவு அதனுள்ளே இருக்கிறது.

மார்க்கண்டேய கட்ஜு : இந்தியாவில் தவிர்க்க முடியாதவாறு புரட்சி வெடிக்கும்


Markandey Katju :  India is heading for a Revolution
India is inevitably heading for a revolution. Why do I say so ? Let me explain
India is potentially a highly developed country, but actually a poor and backward country.
It is potentially a highly developed country because it has two of the basic requirements to be a highly developed country, viz. a huge pool of technical talent, and immense natural resources.
This was not the position in 1947 when India became independent. The British policy was broadly to keep India backward, feudal and largely unindustrialized, so that Indian industry may not emerge as a big rival to British industry. So we were not permitted by our British rulers to set up a heavy industrial base, but were permitted only some light industries like textiles, plantations, etc which, too, for a long time were mainly under British ownership. So till 1947 we had very few industries and very few engineers
The position today in 2017 is very different. Today we have a heavy industrial base, and a huge pool of competent engineers, technicians, scientists, managers, etc. Our I.T. engineers are manning Silicon Valley in California, and American Universities are full of our our mathematics and science professors.
In addition, we have immense natural wealth. India is not a small country like England or Japan. It is almost a continent.

BBC: வட மாநிலங்களில் ஊர் பெயர் தமிழில் எழுதப்படுமா? பழ.கருப்பையா கேள்வி

வட மாநிலத்தவர்களை கருத்தில் கொண்டு மைல் கற்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையது அல்ல என்றும், பொது மொழியான ஆங்கிலத்தில்தான் ஊர் பெயர்கள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும் என்றும் மூத்த அரசியல் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவருமான பழ.கருப்பையா பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஊர் பெயர்கள் இந்தி மொழியில் எழுதப்பட்டது பற்றி மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து குறித்து பழ.கருப்பையா குறிப்பிடுகையில், ''வடமாநிலத்தவர்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள மைல் கற்களில் ஆங்கிலப் பெயர்களை அகற்றிவிட்டு, இந்தியில் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டால், தமிழர்கள் மற்றும் தென் மாநிலத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் உள்ள மைல் கற்களில் தமிழிலும், பிற தென் இந்திய மொழிகளிலும் ஊர் பெயர்கள் எழுதப்படுமா?'' என்று வினவினார்.

பிரிட்டனுக்கான விசாவிலும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்களுக்கு அடி ... அமேரிக்கா சிங்கப்பூரை தொடர்ந்து ...

புதுடில்லி:அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும், விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன. இதனால், அங்கு வேலைக்கு ஊழியர்களை அனுப்பும் இந்திய நிறுவனங்களுக்கும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களின் கனவிலும், அடி மேல் அடி விழுந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட நுட்பமான தொழில்களில், இந்தியர்களே அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இந்திய, ஐ.டி., நிறுவனங்களும், இந்த நாடுகளில் தங்கள் கிளைகளை துவக்கி, இங்கிருந்து இந்தியர்களை வேலைக்கு அனுப்பி வருகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற, பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 'அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே' என்ற கோஷத்துடன், அமெரிக்கர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

திமுக ஆட்சியில் தான் அதிக அணைகள் (40) கட்டப்பட்டது... முல்லை பெரியாறும் எம்ஜியாரின் கேரளா பாசமும்?

சென்னை தாமோதரன் சூர்ய தேவன்:
விவசாயிகள் பிரச்சினை பற்றி பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன் - எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை நம்மிடமிருந்த, தமிழகத்தின் 2லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீராதாரமான முல்லைப்பெரியாறு அணையை அலாக்காக தூக்கி கேரளாவுக்கு கொடுத்தவர் கர்மவீரர் காமராஜர். காக்கா குருவி கூட கூடு கட்டாது, கீழே எந்த தாவரமும் வளராது, நிலத்தடி நீரை முழுதுமாக உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அழிப்பதால் மழை பெய்யாமலேயே போய்விடும், கரிமில வாயுவை அதிகமாக வெளியிட்டு காற்று மண்டலத்தையே விஷமாக மாற்றிவிடும் என்றெல்லாம் நாம் குற்றம் சாட்டும் அந்த கருவேல மரங்கள் தமிழகமெங்கும் இப்பபோ பரவிக்கிடக்க கர்மவீரர் காமராஜர் தான் காரணம் . காமராஜர் முதல்வராக இருந்த போது தான் ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கிவந்த கருவேல விதைகளை ராமநாதபுரம், தேனீ , மதுரை பகுதிகளில் தூவப்பட்டு விவசாய நிலங்கள் எல்லாம் பாழானது.
முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கிவைக்கமுடியும். அதிலிருந்து விடுவிக்கப்படும் மிகை நீர் தான் இடுக்கி அணையின் நீர் ஆதாரம். அந்த இடுக்கி அணையிலிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரத்தை நம்பித்தான் அப்போது கேரளாவின் மின் தேவை இருந்தது. 152 அடி வரை முல்லைப்பெரியாரில் தேக்கிவிடுவதால் அதன் மிகை நீரை நம்பி இருந்த இடுக்கி அணைக்கு போதிய நீர் இல்லாமல் , அங்கிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரமும் இல்லாமல் அல்லாடியாது கேரளா. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க கேரள அரசு கேட்டவுடன், அது நமது தமிழ்நாட்டுக்கு பாதகம் என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அணையின் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டார் முதல்வர் எம்ஜிஆர்.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

கவண் .. ஊடக பரபரப்பின் மறுபக்கத்தை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கிறது

ஒரு திரைப்படம் முழுமையான பொழுதுபோக்குப் படமாக மட்டுமே எடுக்கப் பட்டிருந்தாலும் எந்த விஷயங்களை வைத்து பொழுபோக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் முக்கியம். ஒரு கதாநாயகன், வில்லன் இடையே பகை, பழிவாங்கல் என செல்லும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, உண்மையாக நடக்கும் சம்பவங்களை, அதன் பின்னணியை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்குத் திரைப்படங்களுக்கும் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கிறது. கவண்,  கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு பார்த்து வரும் ஊடக பரபரப்பை, ஊடகத்தின் பலத்தை, பின்னணியை, மறுபக்கத்தை விலாவாரியாக காட்டியிருக்கும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம்.

தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... புள்ளி விபரம் ..

Prakash JP : ஹிந்தி திணிப்பின் விளைவுகளும், அழித்த மொழிகளும்...... ஹிந்தியை புறக்கணித்ததால் தமிழர்கள் அடைந்த பலன்களும்.. ஒரு பார்வை...
இங்கே உள்ள ஒரு சில படித்த அதிமேதாவிகள், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி, 'ராஷ்ட்ர பாஷா' அதை எல்லோரும் ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு மொழின் ஆதிக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புரியவில்லை..
உண்மையில், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் படி, இந்தியாவுக்கு "தேசிய மொழி" என்று எதுவும் கிடையாது.. இந்தி ராஷ்ட்ர பாஷா என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்... ஹிந்தியின் ஆதிக்கத்தால், வீச்சால், திணிப்பால் எத்தனை மொழிகள், கலாச்சாரங்கள் அழியும் நிலையில் உள்ளன என்பது இவர்களுக்கு தெரியாது...
ஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் வடக்கு & மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பாதிக்கப்பட்டு, முக்கியத்துவம் இழந்து, அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. ராஷ்ட்டிர பாஷா ஹிந்தியால் கொல்லப்பட்ட “இந்திய” மொழிகள் பல... இவற்றில் இந்தியைவிட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடைய பல மொழிகளும் அடங்கும். அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி, ராஜஸ்தானி, சட்டிஸ்கரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது.

சிங்கப்பூரில் பணிபுரிய இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு விசா மறுப்பு

பொருளாதார தேவைகளுக்கான சோதனை’ என்ற பெயரை சிங்கப்பூர் அரசாங்கம் சாதுர்யமாக சூட்டி இந்திய ஐ.டி. ஊழியர்களை வடிகட்டத் தொடங்கி உள்ளது. இது இந்தியா-சிங்கப்பூர் இடையே செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை மீறுவதாக அமைந்துள்ளது. எனவே சிங்கப்பூருடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் வலுத்து வருகிறது.
Stanly Rajan : கொஞ்ச காலமாகவே கேட்டுகொண்டிருந்த குரல்தான், சிங்கப்பூர் வாசிகள் லீ குவான் யூ காலத்திலே முணுமுணுக்க தொடங்கியிருந்தனர்
இந்த குட்டிநாட்டில் அந்நியர்கள் வந்து எல்லா வேலைவாய்ப்புக்களையும் பறிக்கின்றனர் எனும் ஒரு அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருந்தது
லீ குவான் யூ வேறுமாதிரியானவர், எல்லா விஷயங்களையும் காதுகொடுத்து கேட்பவர் அல்ல, நாட்டிற்கு எது தேவையோ அதில் மட்டும் வாய்திறப்பார்
இப்பொழுது அவரும் இல்லை
மக்களின் முணுமுணுப்பு கோபமாக மாறும் முன்னே சிங்கப்பூர் அரசு முந்திகொள்கின்றது தெரிகின்றது