புதன், 5 ஏப்ரல், 2017

ஜெ., வழக்கில் கர்நாடக மனு தள்ளுபடி.. இறந்து விட்டதால் இனி அவர் உத்தமரோ? அவாள் அவாள் அவாள் ..

அப்போ அபராதம் என்னாகும்? தீபக் கட்டணுமா வேண்டாமா? முக்கிய குற்றவாளி கொல்லப்பட்டால் அவரது வாரிசுகள் சொத்துக்களை அனுபவிக்கலாம் என்பது எவ்விதத்தில் சரி? இறந்தவர் உடலை சிறையில் போடமுடியதுதான் ஆனால் அபராதத்தை?
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது எப்படி என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரி, கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கியது. கர்நாடக ஐகோர்ட், நான்கு பேரையும் விடுதலை செய்தது. பின்னர் கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், நான்கு பேர் மீது விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது.


கடந்த பிப்.,14ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு பிறகு, சசிகலா உள்ளிட்ட மூன்றுபேரும் பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட, 100 கோடி ரூபாய் அபாரதம் செல்லும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருந்தது.

இந்த சூழ்நிலையில், ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க கோரியும், அபராதத்தை எப்படி வசூலிப்பது என்பதை தெரிவிக்க கோரியும் கர்நாடக மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக