செவ்வாய், 4 ஏப்ரல், 2017

தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... புள்ளி விபரம் ..

Prakash JP : ஹிந்தி திணிப்பின் விளைவுகளும், அழித்த மொழிகளும்...... ஹிந்தியை புறக்கணித்ததால் தமிழர்கள் அடைந்த பலன்களும்.. ஒரு பார்வை...
இங்கே உள்ள ஒரு சில படித்த அதிமேதாவிகள், ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி, 'ராஷ்ட்ர பாஷா' அதை எல்லோரும் ஆதரிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்... அவர்களுக்கு ஒரு மொழின் ஆதிக்கம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புரியவில்லை..
உண்மையில், இந்திய அரசியலைமைப்பு சட்டத்தின் படி, இந்தியாவுக்கு "தேசிய மொழி" என்று எதுவும் கிடையாது.. இந்தி ராஷ்ட்ர பாஷா என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்... ஹிந்தியின் ஆதிக்கத்தால், வீச்சால், திணிப்பால் எத்தனை மொழிகள், கலாச்சாரங்கள் அழியும் நிலையில் உள்ளன என்பது இவர்களுக்கு தெரியாது...
ஹிந்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் வடக்கு & மத்திய இந்தியாவில் பேசப்பட்ட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகள் பாதிக்கப்பட்டு, முக்கியத்துவம் இழந்து, அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. ராஷ்ட்டிர பாஷா ஹிந்தியால் கொல்லப்பட்ட “இந்திய” மொழிகள் பல... இவற்றில் இந்தியைவிட பல நூற்றூண்டுகால இலக்கிய பாரம்பரியம் உடைய பல மொழிகளும் அடங்கும். அவதி, போஜ்புரி, பிரஜ் பாஷா, ஹரியான்வி, மாகதி, மைதிலி, பஹாரி, சாத்ரி, ராஜஸ்தானி, சட்டிஸ்கரி என பல மொழிகளினிடத்தை இந்தி அபகரித்துக்கொண்டது.

முகலாயர் காலத்தில் இந்துஸ்தானி என்று கூறப்பட்ட, தில்லியிலும் அதன் அருகிலும் பேசப்பட்ட கடிபோலி மொழியே, இந்தியாகவும் உருதுவாகவும் பிறகு அவதாரம் எடுத்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால், கடிபோலி+சமஸ்கிருதம் = இந்தி, கடிபோலி+அரபு+பாரசீகம் = உருது.
இம்மொழிகள் அனைத்தும் இந்தியின் கிளைமொழிகள் என்று ஏமாற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கம் செய்து, இம்மொழிகளை பேசும் மக்களை எல்லாம் சேர்த்து "ஹிந்தி மொழி" பேசும் மக்கள் 40% சதம் என்று கதைவிட்டுகொண்டிருக்கிறது, இந்திக்கு இலக்கிய வளம் வாய்ந்த பிஹாரின் மைதிலியும் கிளைமொழி அல்ல. மும்பையின் பாலிவுட் இந்திக்கு போஜ்புரியும் கிளைமொழியும் அல்ல. அதனால்தான் போஜ்புரி சினிமா என்று தனியே இருக்கிறது.. உண்மையில் ஹிந்தி தாய்மொழியாய் கொண்டவர்கள் 20% சதம் இருக்கலாம்...
ஒரு மொழியினை அழிக்கும்போது, அந்த மொழி பேசும் மக்களின், வரலாற்றை, தலைமுறைகளை, அனுபவங்களை, பண்பாட்டினை, கலாசாரத்தினை, வாழ்வின் புரிதலை, மண்ணின் ஆழத்தை, சமூகத்தின் தொடர்ச்சியை எல்லாம் சேர்ந்து அழிகின்றது... ஒரு இனத்தை அழிகவேண்டுமானால், அவர்களின் மொழியை அழிக்கவேண்டும் என்பது சர்வாதிகாரிகளின் திட்டம்.
அதே போல, தமிழ், தெலுங்கை சினிமாக்களை போன்று, அதிகம் பேசப்படும் பஞ்சாபி, பெங்காலி, மராட்ட, குஜராத்தி மொழி சினிமாக்கள் பெரியளவில் வணிகரீதியில் வளராததற்கு ஹிந்தி மொழி திணிப்புக்கள் முக்கிய காரணம்.. பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஹிந்தி சினிமாக்களுடன் உள்ளூர் மொழி சினிமாக்கள் போட்டியிடமுடியவில்லை... சிறுக சிறுக, கன்னட, தெலுங்கு சினிமாக்கள் இந்த நிலையை அடையலாம்...
ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தால், மராட்டா, குஜராத், ராஜஸ்தான், ஒரிசான்னு, வங்காளம் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சம்மா அவங்களோட சுயத்த இழந்து வருகிறார்கள்... இந்தியை புறக்கணிக்கித்ததால், தமிழ்நாடு தனி தன்மையுடன், சுயத்தை இழக்காமல் இருக்கிறது....
பிறந்ததில் இருந்து தாலாட்டு முதற்கொண்டு எல்லாவற்றையும் இந்தியிலேயே கேட்டு வளரும் ஒரு குழந்தையுடன், இந்தியை ஒரு பாடமாக மட்டும் பள்ளியில் படிக்கும் நம் குழந்தைகள் எப்படி போட்டி போட முடியும்? இந்தி தேசியமொழி ஆக்கப்பட்டு அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தியில் தான் என்றால், இந்தி தாய்மொழியாய் இல்லாதவர்களின் நிலை என்னவாகும்???
1930க்கள் துவங்கி, ஹிந்தி திணிப்பை கடுமையாய் எதிர்த்துவரும் திராவிட இயக்கத்துக்கு நன்றி... உயிர் தியாகம் செய்த மொழி போர் மறவர்களுக்கும், தலைமையேற்று நடத்திய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார், மூவலூர் ராமாமிருதம், டாக்டர். தர்மாம்பாள் போன்ற எண்ணற்ற தலைவர்களுக்கும். 1936 ஆம் ஆண்டில் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்பு போரில் தனது பதின்ம வயதிலேயே களம் கண்ட கலைஞர், இரண்டாம் ஹிந்தி எதிர்ப்பு போரில் தலைமையேற்ற எண்ணற்ற மாணவ தலைவர்களுக்கும் நன்றிகள் பல...
தமிழர்கள், வேறெந்த இந்தியர்களைவிட, பெற்ற பலன்களும், அடைந்த வளர்ச்சியும் அதிகம்... இன்று பல நாடுகளில் பல துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குவதற்கு, அதிக அளவில் இருப்பதற்கும், ஹிந்தியை புறக்கணித்தது ஒரு முக்கிய காரணம்...
ஹிந்தி மொழி இல்லாமலேயே தமிழகம், ஹிந்தி மாநிலங்களை விட, எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்கிறது... முதலிடத்தில் இருக்கிறது... ஹிந்தி மாநிலங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறன.... ஹிந்தியை தாய் மொழியாகவே கொண்டிருப்புவர்கள், நூறு ரூபாய் தின சம்பளத்துக்கு, அலை அலையாய், சொந்த மாநிலம் விட்டு மாநிலம் வந்து, இங்கே தமிழ்நாட்டில் வேலை செய்துகொண்டு இருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக