சனி, 8 ஏப்ரல், 2017

விவசாய கடன் தள்ளுபடிக்கு எதிராக தி இந்து’ பத்திரிக்கை இது ஒரு பொறூக்கிப் பத்திரிக்கை.. கொதித்து எழும் தோழர் திருமுருகன்

No automatic alt text available.’தி இந்து’ பத்திரிக்கையை ஏன் பொறூக்கிப் பத்திரிக்கை என்று சொல்கிறது மே17 இயக்கம் என்பதற்குரிய ஆதாரங்கள் வாரம் தோறும் அப்பத்திரிக்கையாலேயே வெளியிடப்படுகிறது.
தன்னுடைய சாதிவெறி, இனவெறி, முதலாளித்துவ சிந்தனை என அனைத்தையும் மிக நுணுக்கமாக அப்பத்திரிக்கை வெளியிடும். எழுத்தாள பத்திரிக்கையாளர்களையும், கார்ட்டூனிஸ்டுகளையும் கொண்டு இக்கருத்துக்களை தொடர்ந்து விதைத்து வருகிறது.
சாதிபார்த்து வேலைக்கு அமர்த்துவதும், அசைவம் சாப்பிடுவதை தனது அலுவலகத்தில் தடை செய்வதும்,
கோயம்பேட்டில் கருவாடு விற்கிறார்கள் என்று சிறுவணிகம் செய்யும் ஏழைகள் பிழைப்பினை அழிப்பதும், மெரினா கடற்கரையில் சுகாதாரமற்று உணவுப்பொருள் விற்கிறார்கள் என்று தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்துவதும், பெசண்ட் நகர் கடற்கரையில் வசதியானவர்களுக்கான போக்குவரத்து ஒழுங்கை கோரிப்பெருவதும்,

மறைமலை நகரில் தனது அலுவலக சுற்றுச்சுவர் அருகே உணவுக்கடையை தெருவோரத்தில் நடத்துபவர் ‘பெரியாரின் வாசகங்களை’ எழுதுகிறார் என்பதற்காக அவர் கடையை அடித்து நொறுக்குவதுமாக ‘பொறுக்கித்தனம்’ செய்துவரும் ‘தி இந்து’ போன்ற பத்திரிக்கைகளை நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் இயங்க அனுமதிக்காது. இது போன்ற வக்கிரமான பத்திரிக்கையில் கட்டுரை எழுதும் நம் தோழர்கள், அரசியல் பொறுப்புணர்ந்து எழுதுவதை நிறுத்தும் பொழுது தான் அப்பத்திரிக்கை தனிமைப்படுத்தப்பட்டு , அம்பலமாகும்.
தி இந்து, நேற்று என்ன செய்திருக்கிறது என்பதைப்பார்ப்போம்.
“காவேரி நீர் கேட்பதற்கு தமிழகத்திற்கு உரிமை இருக்கிறது, யோக்கியதை இருக்கிறதா?” என்று எழுதிய ‘தி இந்து’ , விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு ஒரு கார்ட்டூனை வெளியிட்டிருக்கிறது.
'எதற்கும் பயன்படாத, பிரச்சனைக்குரிய, பராமறிக்க இயலாத, ஒரு பெரும் சுமையை வங்கியின் தலையில் சுமத்தி இருப்பதாக’ கார்ட்டூன் வெளியிட்டிருக்கிறது.
‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமையை, 7 பெரிய நிறுவனங்களின் 8 லட்சம் கோடி ரூபாய் வராக்கடனைப் பற்றியோ கார்ட்டூன் போடாத ‘தி இந்து’ வரட்சியால் சாகும், ஏழை எளிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதை ‘பிரச்சனைக்குரிய சுமை’ என்று அங்கலாய்க்கிறது.
இப்படியான ஒரு பொறுக்கி பத்திரிக்கையை புறக்கணித்து வீழ்த்துவதற்கு என்ன செய்யப் போகிறது ‘தமிழகம்’?<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக