வியாழன், 6 ஏப்ரல், 2017

RSS ஸ்லீப்பர் செல் "சமஸ்" எடுத்த வாந்தி

Amudhan Ramalingam Pushpam  : சமஸ் இன்று தனது தமிழ் இந்து கட்டுரையில் பார்ப்பனர்களை திராவிட கட்சிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். யார் அவர்களை விலக்கினார்கள்? எங்களுக்கும் (பார்ப்பனர் அல்லாதோர்), அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்களை சமமாக நடத்த, பார்க்க முடியுமா அவர்களால்? எங்களோடு இணைந்து வாழ முடியுமா அவர்களால்? அவர்களுக்கு அடிமையாக வாழ மாட்டோம் என்று நாங்கள் சொல்வது அவர்களை விலக்குவதற்கு சமமா? மறுபடியும் சாமி என்று அவர்கள் முன்பு கும்பிடு போட வேண்டும் என்கிறாரா சமஸ்? ஒரு ஜெயா போதாதா? இவர்கள் எந்த லட்சணத்தில் இருப்பார்கள் என்று நாம் புரிந்து கொள்ள? வெறும் 3 % இருக்கிறவர்கள் தமது அளவுக்கு அதிகமாகவே வசதியாகவும் அதிகாரத்துடனும் இருக்கும் தமிழகத்தில் இதற்கு மேல் அவர்களுடன் என்ன உறவாட? தமது சாதிய அடையாளத்தை இந்து, இந்திய, இந்தி அடையாளமாக பிறர் மீது திணிக்க மாட்டோம் என்று பார்ப்பனர்களால் உறுதி கூற முடியுமா?
பிறரது பண்பாட்டை, மொழியை, நம்பிக்கையை, அறிவை, உழைப்பை, கலையை மதிக்கும் மாண்பு இருக்கிறதா இவர்களுக்கு? தான் ஒரு ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்பது மறுபடியும் நிரூபித்திருக்கிறார் சமஸ். ஆர் எஸ் எஸ் கூடாரத்தில் கற்றவற்றை வந்து வாந்தி எடுத்திருக்கிறார். ஒரு புறம் பாஜக நம்மை அடித்து உதைத்து அவர்கள் வழிக்கு கொண்டு வர முயல்கின்றனர். இன்னொரு புறம் சமஸ் போன்றவர்கள் நம் தோளில் கை போட்டு காட்டியும் கூட்டியும் கொடுக்கின்றனர்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக