புதன், 5 ஏப்ரல், 2017

திமுக ஆட்சியில் தான் அதிக அணைகள் (40) கட்டப்பட்டது... முல்லை பெரியாறும் எம்ஜியாரின் கேரளா பாசமும்?

சென்னை தாமோதரன் சூர்ய தேவன்:
விவசாயிகள் பிரச்சினை பற்றி பேச அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவேன் - எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின்
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதுவரை நம்மிடமிருந்த, தமிழகத்தின் 2லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீராதாரமான முல்லைப்பெரியாறு அணையை அலாக்காக தூக்கி கேரளாவுக்கு கொடுத்தவர் கர்மவீரர் காமராஜர். காக்கா குருவி கூட கூடு கட்டாது, கீழே எந்த தாவரமும் வளராது, நிலத்தடி நீரை முழுதுமாக உறிஞ்சிவிடும், காற்றில் உள்ள ஈரப்பதத்தை அழிப்பதால் மழை பெய்யாமலேயே போய்விடும், கரிமில வாயுவை அதிகமாக வெளியிட்டு காற்று மண்டலத்தையே விஷமாக மாற்றிவிடும் என்றெல்லாம் நாம் குற்றம் சாட்டும் அந்த கருவேல மரங்கள் தமிழகமெங்கும் இப்பபோ பரவிக்கிடக்க கர்மவீரர் காமராஜர் தான் காரணம் . காமராஜர் முதல்வராக இருந்த போது தான் ஆஸ்திரேலியாவிலிருந்து வாங்கிவந்த கருவேல விதைகளை ராமநாதபுரம், தேனீ , மதுரை பகுதிகளில் தூவப்பட்டு விவசாய நிலங்கள் எல்லாம் பாழானது.
முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி வரை நீரை தேக்கிவைக்கமுடியும். அதிலிருந்து விடுவிக்கப்படும் மிகை நீர் தான் இடுக்கி அணையின் நீர் ஆதாரம். அந்த இடுக்கி அணையிலிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரத்தை நம்பித்தான் அப்போது கேரளாவின் மின் தேவை இருந்தது. 152 அடி வரை முல்லைப்பெரியாரில் தேக்கிவிடுவதால் அதன் மிகை நீரை நம்பி இருந்த இடுக்கி அணைக்கு போதிய நீர் இல்லாமல் , அங்கிருந்து எடுக்கப்படும் நீர் மின்சாரமும் இல்லாமல் அல்லாடியாது கேரளா. இந்த அணையின் நீர் மட்டத்தை 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க கேரள அரசு கேட்டவுடன், அது நமது தமிழ்நாட்டுக்கு பாதகம் என்றெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் அணையின் மட்டத்தை 136 அடியாகக் குறைக்க ஒப்புக்கொண்டார் முதல்வர் எம்ஜிஆர்.
இதனால் முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி இருந்த மதுரை, இராமநாதபுரம், மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்தன. குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது போல், 1977 வரையில் அணையின் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழக போலீசை விலக்கி, பாதுகாப்பையும் கேரள போலீசிடமே ஒப்படைத்தார் எம்ஜிஆர். எம்ஜிஆரின் இப்படிப்பட்ட வள்ளல்தன்மையால் தான் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் தன் உரிமையை இழந்து இத்தனை காலமும் அல்லாடி வருகிறது.
பெரும் மழை பெய்தபோது தமிழகத்தின் எல்லோர் வீட்டுக்குள்ளும் , கடலுக்குள்ளும் வெள்ளம் போகும்படிக்கு ஏரிகள், நீர்நிலைகள் என ஒன்றைக்கூட பராமரிக்காமல் , தூர் வாராமல் வைத்திருந்த ஜெயா , மேகதாதுவில் தடுப்பணை , பாலாற்றில் தடுப்பணை , பவானி ஆற்றில் அணை என நம்மை சுற்றி உள்ள எல்லா மாநில நதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றபோதும் அதுபற்றி கவலைப்படாமல் தானுண்டு தன் அடிமை அமைச்சர்கள் உண்டு என கம்பீரமாக ஆட்சி செய்த ஜெயா தான் விவசாயிகளுக்கும் , விவசாயத்துக்கும் அனுசரணையாக இருந்தார் என நான் சொன்னால் ஜெயாவின் ஆவி கூட என்னை மன்னிக்காது
கண்ணில் எதிர்ப்படுபவரிடம் போய், உங்களுக்கு உடனே நினைவுக்கு வரும் 4 அணைககளின் பெயரை சொல்லுங்க என்றால் , முல்லை பெரியாறு அணை, கல்லணை, மேட்டூர் அணை பேச்சிப்பாறை அணையை சொல்லுவார்கள். முல்லை பெரியாறு அணை பென்னி குவிக்காலும், கல்லணை கரிகாலனாலும் , மேட்டூர் அணையும் பேச்சிப்பாறை அணையும் வெள்ளைக்காரன் காலத்திலும் கட்டப்பட்டது தான் என்றாலும் கூட , காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் தமிழ்நாட்டில் நிறைய்ய அணைகள் கட்டப்பட்டது என்ற ஒரு கருத்துவாக்கம் இங்கு உண்டு . உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதன் உண்மைத்தன்மையை ஆராய முற்படாமல் ,காலம் காலமாக சில சங்கதிகள் சொல்லப்படுவதுண்டு.அப்படியான ஒரு கருத்துருவாக்கம் தான் இது. காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் , ஜெயா போன்றவர்கள் ஆண்ட இந்த தமிழகத்தில், விவசாயிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் நேர்மையாக பாடுபட்ட ஒரு கட்சி இங்கு உள்ளதென்றால் அது திமுக தான்.
திமுக ஆட்சியில் தான் சிறிதும் பெரிதுமாக 40அணைகள் பாசனத்துக்காக இந்த தமிழ்நாட்டில் கட்டப்பட்டது. திமுகவின் முயற்சியால்த தான் காவிரியை மீட்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது , விவசாயத்துக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது, விவசாயிகளின் கடன் ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டது , சென்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் கூட , 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்படும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரப்படும் என அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சி தான் , நடு ரோட்டில் நின்று பாடுபடும் விவசாயிகளுக்காக டெல்லிக்கே சென்று ஆதரவு தெரிவித்து, அவர்களின் பிரச்சினை தீர்க்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவேன் என ஸ்டாலின் அறிவித்தது .ஆனால் இத்தனை வலிமையான திமுக, விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் எப்போதும் குரல் கொடுக்கும் திமுக , அதை ஒரு கருத்தாக்கமாக முன்னெடுத்து மக்கள் மனத்தில் பதிய வைக்கவில்லையே என்பது என்னைப்போன்ற அபிமானிகள் மனக்குறை .
காட்டாறாக ஓடிய காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி விவசாயத்தை செழிக்க செய்தவன் கரிகாலன் என்பதால், கரிகாலனை மட்டுமே சரித்திரம் பெருவளத்தான் என போற்றுகிறது. ஒரு அணை கட்டிய கரிகாலனையே கொண்டாடியது சரித்திரம் என்றால் , 40 அணைகள் கட்டி விவசாயத்தை போற்றிய எங்கள் கலைஞரை, இதே சரித்திரம் , கலைஞர் பெருவளத்தான் எனப்போற்றும் காலம் வராமலா போய்விடும்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக