சனி, 8 ஏப்ரல், 2017

நாம டயபடீஸ்ல ... உங்களுக்கு ஆட்டமா? சசிகலா தினகரனுக்கு டோஸ்

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதுமே ஒருவித பரபரப்பில் மூழ்கிக்கிடந்த வேளையில் போயஸ் தோட்டத்தில் இளவரசி குடும்பத்தாருடன் டி.டி.வி. தினகரன் கடுமையான வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்ததார் என்று போயஸ்கார்டன் வட்டாரம் தெரிவித்தது. அதன் எதிரொலியாக ஜெயா தொலைக்காட்சியில் தினகரன் பிரச்சாரத்தின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. விசாரித்ததில், "ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனித்துவரும் இளவரசியின் மகன் விவேக், இப்போது திவாகரன் மற்றும் நடராஜனுடன் நெருக்கமாக இருக்கிறார். போயஸ் கார்டனிலிருந்து பல நூறு கோடிக்கும் மேல் கட்சி நிதியை எடுத்து தினகரன் இஷ்டத்திற்கு செலவுசெய்தது பற்றியும் இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
அதன் எதிரொலியாகவே ஜெயாவில் ஆர்.கே.நகர் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இது பற்றி பெங்களூரில் சிறையிலிருக்கும் சசிகலாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், தினகரனுக்குப் பேசி, தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். குறிப்பாக, தனக்கும் இளவரசிக்கும் சர்க்கரை பிரச்னை அதிகமாகி, உடல் நலிவுற்றிருப்பதைக் கண்டுகொள்ளாமல் இப்படி செய்வதா எனக் கோபத்துடன் கேட்டதும் தினகரன் ஆடிப்போய்விட்டார்” என்கிறது கார்டன் வட்டாரம்.  நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக