புதன், 5 ஏப்ரல், 2017

டெல்லி வீதிகளில் தமிழக விவசாயிகள் உருண்டு புரண்டு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னக நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராட்ட குழுவை சேர்ந்த சில விவசாயிகள் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று அங்கபிரதட்சணம் செய்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஜெ.டி.ஆர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக