சனி, 2 ஜூலை, 2011

பழைய கார்களின்பவனி இலங்கையில்

இலங்கையில் இன்னும் மொரிஸ் பெர்ஜோ ஆஸ்டின் பாரீன கேம்ப்ரிட்ஜ் போன்ற கார்கள் நல்ல நிலைமையில் அழகாக பவனி வருகின்றன

Kerala சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!இன்டர்போல் உதவியை நாடியது போலீஸ்

கொச்சி : சிறுமி கற்பழிப்பு விவகாரத்தில் சிக்கிய அரபு ஷேக்-பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது போலீஸ்

திருவனந்தபுரம் கொச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஷேக் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாட கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த 18 வயது மாணவியை அவரது தந்தையே கற்பழித்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளி சீரழித்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பரபரப்பு வழக்கில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இவர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், திரைத் துறையினர் என பலரும் அடக்கம்.

இந்த வழக்கு தற்போது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சிறுமியிடமிருந்து விசாரணை மூலம் பெற்ற தகவல்கள் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பலாத்கார வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை படிப்படியாக போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

5 ஸ்டார் ஹோட்டலில் சீரழித்த அரபு ஷேக்

இந்த நிலையில் சிறுமியின் செல்போனை போலீஸார் சோதனை செய்து பார்த்ததில் அதில் ஒரு அரபுஷேக்கின் படம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் கொச்சியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து தன்னை பலாத்காரம் செய்தார் என்றும் சிறுமி கூறினார்.

அந்த ஷேக் தற்போது சவூதிக்கு ஓடி விட்டார். இவர் மட்டுமல்லாமல் மேலும் சில வெளிநாட்டினரும் கூட தன்னை பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து ஷேக் உள்ளிட்ட வெளிநாட்டினரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளதாக தெரிகிறது.
 

English summary
Kerala police has decided to seek Interpol's help to nab a Saudi Arabian, who is involved in Cochin girl rape case. Some other foreigners also involved in this case, police sources say.

பாலியல் துன்புறுத்தல்.சிங்களவர்களை விட தமிழ்நாட்டில் அகதிகள் கேவலமாக





இலங்கையில் சிங்களவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழலாம் இந்தியாவில் தமிழர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ்வதில் பாரிய பிரச்சனை காணப்படுவதாக இலங்கையிலிருந்து இந்தியா சென்ற அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை நடத்துவதைவிட தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கேவலமாக நடத்தப்படுவதாக இலங்கை அகதியான வித்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தமக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால் பிள்ளைகளின் கல்விச் சான்றிதழை எரித்து ரேசன் கார்ட்களுடன் சென்று ஆர்பாட்டம் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.

அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மோசடி

கண்டிப் பகுதியில் போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வங்கிக் கிளைகள் 72இல் சுமார் 423 பவுண் எடை கொண்ட மூன்று கிலோவுக்கும் அதிகமான போலி தங்க நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த மூன்று சந்தேக நபர்களை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்டகாலமாக இச் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்; மூலம் வங்கிக் கிளைகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை மூன்று கிலோ 300 கிராம் எடை கொண்டதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று 2011 07 01 ஆம் திகதி கண்டி பிரதான நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யவுள்ளதாக அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

புலிகளின் வதை முகாம் அனுபவம்.அந்த 16 -17 வநது சிறுவனை, ‘அண்ணை’ என விழிக்கும் அவலத்தையும் காண முடியும்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் – 3

புலிகளின் ஒற்றர்களால் கைதுசெய்யப்பட்டேன்!


நான் எமது புத்தகக்கடையை அண்மித்தபோது, கடைக்கு முன்னால் சைக்கிளில் காலுன்றி நின்றவரின் உருவத்தை நன்கு அவதானிக்க முடிந்தது. ‘சந்தேகத்துக்கு இடமின்றி இந்தப்பொடியன் அவங்கடை ஆள்தான்’ என்பதை அனுமானித்துக் கொண்டேன். நான் எனது சைக்கிளைவிட்டு இறங்கியதும் அந்தப்பையன் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு, எனது கடையில் இருந்த தோழர் தவராசாவின் முகத்தையும் பார்த்தான். அதாவது ‘இவர்தான் நாங்கள் தேடிவந்த மணியம் எனபவரோ?’ என்ற கேள்வி அந்தப்பார்வையில் இருந்தது. பதிலுக்கு தவராசாவும் ‘உன்னைத்தேடி வில்லங்கமான ஆட்கள் வந்திருக்கிறாங்கள்’ என்ற தகவலைத் தன் கண்களால் எனக்கு உணர்த்தினார்.


வந்திருப்பவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதை ஊகித்தறிய எனக்குச் சிரமமேதும் இருக்கவில்லை. சாதாரணமாகவே, தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களுக்கு, சில அசாத்திய மோப்பக்குணங்கள் உண்டு. தனது இனத்திலுள்ள யாராவது ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால், சிறிதுநேர உரையாடலின் பின், அவர் எந்த ஊரவர், என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஓரளவு சரியாகச் சொல்லி விடுவர். இந்தப் ‘புலனாய்வு’த் திறமை, அவர்களைப் பொறுத்தவரை தமிழ் இயக்கங்கள் பற்றிய அவர்களது கணிப்பீடுகளுக்கும் பொருந்தும். இயக்கப் ‘பொடியளை’க் கண்டால், அவர்கள் எந்த இயக்கம் என்பதை சரியாக மதிப்பிட்டு விடுவர்.


என்னைப் பொறுத்தவரை, நான் தமிழன், அதிலும் யாழ்ப்பாணத் தமிழன் என்பதற்கும் அப்பால், ஓரளவு மானிடப் பண்புகள் பற்றிப் புரிந்து வைத்திருந்ததாலும், தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என்பனவற்றின் கொள்கைகளை மட்டுமின்றி, அதன் உறுப்பினர்களின் வளர்ப்பு முறைகள், பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்ததினாலும், வந்திருப்பவனைப் பற்றி தெளிவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.


அன்றைய காலகட்டத்தில், ஆயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டத்தில், ஐந்து புலிகளை புகுத்திவிட்டால், அவர்களை சுலபமாக இனம்கண்டுவிட முடியும். காரணம், சாதாரண மக்களுக்கும் புலி உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள தோற்ற மற்றும் பழக்க வழக்க  வித்தியாசங்களாகும். நீண்ட கொடிய யுத்தத்தின் காரணமாக உயிர்களையும் உடைமைகளையும் இழந்து, ஜே.ஆர்.ஜெயவர்த்தன – பிரேமதாச அரசுகளின் நீடித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வாடி வதங்கிப் போயிருந்த, சாதாரண தமிழ்ப் பொதுமக்களையும், பிரபாகரனால் ‘வேள்விக்கு வளர்த்த ஆட்டுக்கடாய்கள்’ போலிருந்த புலி உறுப்பினர்களையும், ஒருவர் சுலபமாக பாகுபடுத்திப் பார்த்துவிட முடியும்.


ஒரு கிராமப்புறச் சிறுவன், புலிகளினால் தமது இயக்கப் பயிற்சிக்காக பிடித்துச் செல்லப்படும்போது நோஞ்சானாகத்தான் இருப்பான். பின்னர் சில மாதங்களோ வருடங்களோ கழித்து அவனை அவனது பெற்றோர்களோ, உறவினர்களோ, ஊரவர்களோ, நண்பர்களோ காணும்போது, அடையாளம் தெரியாத அளவுக்கு அவனது உடலும் உள்ளமும் மாறிவிட்டிருக்கும். அவனுக்கு முகாமில் வழங்கப்படும் பயிற்சிகள், உணவு என்பன காரணமாக அவன் உருண்டு திரண்ட வாட்ட சாட்டமான ஆளாக மாறிவிட்டிருப்பதுடன், அவனது தோற்றத்தில் ஒரு அதிகார ஆணவ மிடுக்கும் உருவேறி இருக்கும். அவனது பெற்றோரே, அவனுடன் கதைக்கும்போது, மிகுந்த அவதானத்துடனும், பயபக்தியுடனும் கதைப்பதைக் காணக்கூடியதாகவிருக்கும். முன்பு அவனை ‘தம்பி’ என்றழைத்த ஊரவர்கள், ‘நீங்கள்’ என்றழைப்பதையும், முன்பின் பழக்கமில்லாத ஒரு வயோதிபர் கூட, அந்த 16 -17 வநது சிறுவனை, ‘அண்ணை’ என விழிக்கும் அவலத்தையும் காண முடியும்.


தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், மற்றைய இயக்கங்களை விட, புலிகள் இயக்கம் சற்று வித்தியாசமாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. மற்றைய இயக்கத்தவர்கள் போல புலிகள் மக்களுடன் கண்டபடி ஊடாடமாட்டார்கள். அவர்கள் மற்றைய இயக்கத்தவர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் சந்தேகக்கண்கொண்டே நோக்குவர். அந்த நோக்கில் பார்ப்பவர்களை மிரளப்பண்ணும் ஒரு பயங்கரப்பார்வை உள்ளுறைந்து இருக்கும்.


அப்பொழுதெல்லாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர், வழமையானதைவிட நீண்ட சேர்ட்டுகளை அணிந்திருப்பவர். சிலரது பின்பக்கத்தில் சேர்ட்டுக்குள்ளே பிஸ்ரல் துருத்திக் கொண்டிருப்பது தெரியும். அவர்களைப் பார்த்துவிட்டு, சில சாதாரண இளைஞர்களும், நீண்ட சேர்ட்டுகளை அணிந்துகொண்டு, சேர்ட்டுக்குள்ளே ஒரு தடியைச் செருகிக்கொண்டு, தம்மையும் ‘ஐ’ன்னாவாக (Intelligence) உருவகித்து மக்களைத் திகில்பண்ணச் செய்ததும் உண்டு! அப்பொழுது இந்த நீண்ட ‘பக்கி’ சேர்ட் அவர்களது ‘சிம்போலிக்காக’ப் பார்க்கப்பட்டது.


கிட்டு யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில், ‘கொக்கோகோலா’ பானம் அவர்களது இன்னொரு ‘சிம்போலிக்’காகச் சில காலம் இருந்தது. ஏதாவது ஒரு கடையில் வாட்டசாட்டமான இளைஞர்கள் வந்து கொக்கோகோலா பானம் கேட்டால், கடைக்காரர் அவர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களது தேவையை முதலில் பூர்த்தி செய்து அனுப்பி வைப்பது வழக்கம். பின்னர், அந்த நேரத்தில் புலிகளின் வன்னிப் பொறுப்பாளர் மாத்தையாவுக்கும் கிட்டுவுக்கும் இருந்த முரண்பாடு, முறுகலாக முற்றிய பின்னர், பரந்தனிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வழியில் பதின்மூன்றாம் கட்டையில் தேராவில் குளத்துக்கு அண்மையில் முகாமிட்டிருந்த மாத்தையா, கிட்டுவின் புலிகளுக்கு சென்ற ஒரு லொறி கொக்கோகோலா போத்தல்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் ‘காயப்போட்டதும்’ நடந்தது.


இந்த இடத்தில், புலிகளின் உறுப்பினர்களுக்கும், மாபெரும் சீன – வியட்நாமிய புரட்சிகளின் போது, தமது தாய்நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய கம்யூனிஸ்ட் கெரில்லாப் போராளிகளுக்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை தெரிந்துகொள்வது பயனுள்ளதாகவிருக்கும்.


அந்த நாடுகளில் நடைபெற்றது, முழுக்க முழுக்க பொது எதிரியான அந்நிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான புரட்சிகர மக்கள் யுத்தமாகையால், மக்கள் யார், போராளிகள் யார் என்பதை எதிரிகளால் சுலபத்தில் அறிந்துகொள்ள இயலாது. இதற்கு உதாரணமாக, இங்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.


ஒருமுறை வியட்நாமில் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் படைகள், விடுதலைப் போராளிகளான ‘வியட்கொங்’ கெரில்லாக்கள் 10 பேரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து, அவர்களது குழுவுக்கு தலைவன் யார் எனக் கேட்டனர். எவ்வளவோ மிரட்டிக் கேட்டும், (கழுத்தில் சைனைட் குப்பி அணியாத) அந்தப் போராளிகள் தமது தலைவனைக் காட்டிக்கொடுக்கவில்லை. “:நீங்கள் தலைவன் யாரெனச் சொல்லாவிட்டால், எல்லோரையும் ஒவ்வொருவராகச் சுட்டுவிடுவோம்” என எச்சரித்துவிட்டு, வரிசையில் முதலில் நின்றவனைச் சுட்டுக் கொன்றனர்.


அதன் பின்னர் அந்தப் போராளிகளை நோக்கி, “இப்பவாவது சொல்லுங்கள். உங்கள் தலைவன் யார்?” என வினவினர்.


அங்கு நிலைகுலையாது எஞ்சி நின்ற 9 பேரின் விரல்களும், அமெரிக்கப்படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தமது சக தோழனை நோக்கி நீண்டன. உண்மை அதுவல்ல என்ற போதிலும், தாம் சரியான ஆளை இனம்கண்டு ஒழித்துக்கட்டியதாக நம்பிய அமெரிக்கப்படையினர், அத்துடன் சுடுவதை நிறுத்திவிட்டனர்.


இதுதான் மக்களைச் சார்ந்து நின்று போராடும் பாட்டாளிவர்க்கப் போராளிகளுக்கும், புலிகள் போன்ற பாசிசப் பாணியிலான படைகளுக்குமுள்ள அடிப்படை வித்தியாசம்.


எனவே என்னைத்தேடி வந்திருந்த அந்த இளைஞனை யார் என்று அடையாளம் காண்பதில் எனக்கு எவ்வித சிரமமும் இருக்கவில்லை. எனது தலைக்கு மேலே ‘பாசக்கயிறு’ வீசப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.


தோழர் தவராசா என்னைப் பார்த்து, “உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிற்கிறான்” என மெதுவாகச் சொன்னார்.


அதற்கிடையில், அவனும் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, கடை வாசற்படிக்கருகில் வந்து நின்றான்.


நான் அவனைப் பார்த்து, “தம்பி என்னிட்டையோ வந்திருக்கிறீர்கள்?” என வினவினேன்.

“உங்களை வந்தால் ஒரு இடமும் போகாமல் நிக்கச் சொல்லி சின்னவன் அண்ணை சொன்னவர்” என அவன் என்னிடம் கூறினான்.

“சின்னவன் அண்ணை ஆர்?” என நான் அவனிடம் வினவினேன்.

“அவர்தான் எங்கடை ரவுண் (யாழ்.நகர) இன்ரெலியென்ற் (புலனாய்வு) பொறுப்பாளர்” என அவன் மீண்டும் கூறினான்.

“என்ன விடயமாக என்னைச் சந்திக்க வந்துள்ளார்?” இது நான்.

“எனக்குத் தெரியாது. அவர் வந்த பிறகு கதையுங்கோ” இது அவன்.

“சரி அவர் வரும்வரைக்கும் நீங்கள் உள்ளே வந்து இருங்கோ” என ஒரு ஆசனத்தை சுட்டிக்காட்டி அவனை அழைத்தேன். ஆனால் அவன் வரவில்லை. நான் எங்கும் தப்பியோடிவிடாதபடி என்னைக் காவல் காப்பது போல கடையின் முன்னால் நின்று கொண்டான்.


சிறிதுநேரம் கழித்து சின்னவன் என அழைக்கப்பட்டவர் கடைக்கு வந்துசேர்ந்தார். அவருடன் இன்னுமொருவரும் வந்தார். அவர் தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கமொன்றில் வேலை செய்பவர் எனப் பின்னர் அறிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் யாழ் வீதியிலிருந்த புலிகளின் நகரக் காரியாலயம் சென்று, அங்குள்ள பொறுப்பாளரிடம் என்னைக் கைதுசெய்யப்போவதை அறிவித்துவிட்டு வரவே சென்றனர் என்பதையும், பின்னர்தான் அறிந்து கொண்டேன். எனக்காக முதலில் காத்துநின்ற இளைஞனின் பெயர் ஜெயந்தன் என்பதையும்; தெரிந்து கொண்டேன்.

நேராக என்னிடம் வந்த சின்னவன் தனது அடையாள அட்டையை என்னிடம் காண்பித்து, “நான் சின்னவன், புலனாய்வுத்துறை யாழ் நகரப் பொறுப்பாளர், உங்களை ஒரு விசாரணைக்காக கூட்டிச்செல்ல வந்திருக்கிறேன்” என்றான்.


“என்ன விசாரணை என்று அறியலாமோ?” என நான் அவனிடமும் வினவினேன்.


“அதை விசாரணை நடாத்துபவர்கள் உங்களிடம் சொல்வார்கள்” எனப் பதிலளிக்கப்பட்டது.


அதன்பின்னர் கடையிலிருந்த மேசையின் லாச்சிகளை அவன் திறந்து ஆராய்ந்தான். பின்னர் அதற்குள்ளிருந்த இலங்கையின் வீதி வரைபடம் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டான்.


பின்னர் தோழர் தவராசாவை உற்றுநோக்கிய புலிகளின் ஒற்றன், “இவர் யார்?” என வினவிவிட்டு, தன்னுடன் வந்தவர்களை நோக்கி “இவரை என்ன செய்வது? கொண்டுபோகவா?” எனக் கேட்டான்.


இந்த இடத்தில் நான் குறுக்கிட்டு, “அவர் மருந்து வாங்குவதற்கு பணம் கேட்டு என்னிடம் வந்தவர். அவரை எதற்காகக் கொண்டு போகிறீர்கள்?” என்று கேட்டேன்.


பின்னர் அவர்கள் கடையைப் பூட்டித் திறப்பைத் தம்முடன் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். இந்தச் சந்தர்ப்பத்தில் தவராசா தனது பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குப் பறப்பட்டுவிட்டார். அவரை அவர்கள் விட்டுவிட்டது எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவர்கள் அவரையும் கைதுசெய்து கொண்டு போயிருந்தால், வாய்பேச முடியாத அவரது குமர்ப்பிள்ளை உதவியின்றி தத்தளித்திருப்பார். அத்துடன் நோயாளியான தவராசாவும் புலிகளின் வதை முகாமில் சில நாட்களிலேயே மரணித்திருப்பார்.


நான் உயிருடன் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை கிஞ்சித்தும் அற்ற ஒரு நிலையில், தவராசாவின் கண்களும் எனது கண்களும் இறுதியாக ஒருமுறை சந்தித்துக் கொண்டன. அவரது கண்களில் தெரிந்த வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சோகமும், நிராசையும் இன்றும் எனது மனக்கண்ணில் வந்து போய்க்கொண்டே இருக்கிறது.

இந்த இடத்தில் ஒரு சோகமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். நான் புலிகளின் பிடியிலிருந்து ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலையாகி வந்தபோது, முதல் Nலையாக தோழர் தவராசாவைச் சென்று பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும்கூட, புலிகளின் உளவாளிகள் தொடர்ந்தும் என்னைக் கண்காணித்து வந்ததால், எனது கட்சித் தோழர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தேன். நான் அவசரப்பட்டு சந்தித்தால், என்னைவிட அவர்களுக்குத்தான் தொல்லைகள் உருவாகும் என்பதால் அவ்வாறு தவிர்த்தேன்.

அந்தச் சூழ்நிலையில் ஒருநாள் தவராசாவின் உரும்பிராய் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த எனது ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணியை எதேச்சையாகச் சந்தித்த போது, “தவராசா அண்ணர் எப்படி இருக்கிறார்?” என ஆவலுடன் வினவினேன்.

“அவரா, அவர் மோசம் (மரணித்து) போய் ஒரு மாசமாச்சு. நேற்றுத்தான் அந்தியேட்டி நடந்தது” என அவர் சொன்னார். இந்தத் தகவல் எனக்கு பேரதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது. குறிப்பாக அவர் இல்லாத சூழலில், அவரது மகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என நான் மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் ஒருமுறை தற்செயலாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் அவரது மகளைக் கண்டு சுகம் விசாரிக்க முடிந்தது. அதன்பின்னர் 1990 ஒக்ரோபர் 30 மாபெரும் இடப்பெயர்வு, பின்னர் கொழும்புக்கு இடம் பெயர்ந்தமை என்பன காரணமாக தவராசாவின் மகள் பற்றி எதுவும் அறிய முடியவில்லை.

ஆனால் நான் வெளிநாட்டுக்கு வந்தபின்னர், தோழர் தவராசாவின் சொந்த ஊரான உடுப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவருடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை டிப்போவில் ஒன்றாக வேலை செய்தவருமான இன்னொரு தோழர் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதாவது, தவராசாவின் அந்த வாய்பேச முடியாத மகளையும் புலிகள் கொன்றுவிட்டார்கள் என அந்த தோழர் கவலையுடன் தெரிவித்தார். ஆக மொத்தமாக தோழர் தவராசாவின் முழுக்குடும்பத்தையும், ஈழப்போராட்டமும் அதன் மூலம் வளர்ந்த பாசிச மாபியாக் கும்பலும் அழித்துவிட்டது. இப்படி எத்தனை குடும்பங்களோ?


தோழர் தவராசா புத்தகக்கடையை விட்டு அகன்றபின்னர் புலிகளின் ஒற்றர்களுடன் நான் போகத் தயாரானேன்.


தொடரும்

பாக்யராஜ்:நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க

K Bagyaraj"காலம் மாறிவிட்டது. இனி மைக் பிடித்து பேசாமல் இருப்பதுதான் நல்லது. நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க, என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.

'களவாணி' படத்தை இயக்கிய ஏ.சற்குணம் அடுத்து, 'வாகை சூட வா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். 'களவாணி' பட நாயகன் விமல், இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேரள நடிகை இனியா நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.

விழாவில், இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த திரைக்கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை குறிப்பிட்டுக் காட்டினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், "இனிமேல் அதிகமாக பேசப்போவதில்லை'' என்பதையும் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், "முன்பெல்லாம் விழாக்களில் நிறைய பேசுவேன். அந்த காலம் கடந்து விட்டது. இனிமேல் அளந்துதான் பேசுவேன்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், நான் ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தேன். கேரளாவில் கொஞ்ச நாட்கள், ஆந்திராவில் கொஞ்ச நாட்கள் என வெளிïர்களில் தங்க ஆரம்பித்தேன்.

என் சூழ்நிலைக்கு தகுந்தபடி, ஒரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அங்கே போய் நடித்துவிட்டு வந்தேன். என் மகனுக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அதனால், ஹைதராபாத்தில் சில நாட்கள் இருந்தேன்.

இனிமேல், நான் அளந்துதான் பேசுவேன். அதிகமாக பேசமாட்டேன். 'மைக்'கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். (சிரித்தபடி), நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் கடும் உழைப்பு இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பினேன். இப்போது அப்படி அல்ல. நேரம் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை காலதாமதமாக உணர்ந்தேன்.

'சுப்பிரமணியபுரம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. அந்த வாய்ப்பை நழுவ விட்டேன். அடுத்து, 'களவாணி' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. பிறகு அதுவும் கைநழுவிப் போனது.

என் மகனுக்கு நேரம் நன்றாக இருந்தால், அந்த இரண்டு பட வாய்ப்புகளும் கிடைத்து இருக்கும்,'' என்றார்.

விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், வசந்த், சேரன், அமீர், சிம்புதேவன், விஜய், பிரபு சாலமன், ஜனநாதன், பாண்டிராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா, கவிஞர்கள் வைரமுத்து, அறிவுமதி, இசையமைப்பாளர் ஜிப்ரான், பட அதிபர் டி.சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் பேசினார்கள்.

பட அதிபர் முருகானந்தம் வரவேற்று பேசினார். இயக்குநர் சற்குணம் நன்றி கூறினார்.

English summary
Bagyaraj, one of the star campaigner for DMK in the recent assembly elections attended his first film event after the election results. The actor - Director told that he has decided to talk less in the stages in future as a 'safety measure'.

கல்​ம​ரங்​கள்! சாத்​த​னூர் கிரா​மத்​தில் 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் தோன்​றிய மரம்


பூங்காக் ​கள் என்​றாலே அவற்​றில் பூக்​கள்,​​ செடி​கள்,​​ கொடி​கள்,​​ மரங்​கள் என்று உயி​ருள்ள தாவ​ரங்​கள்​தாம் இருக்​கும்.​ பெரம்​ப​லூ​ருக்கு அருகே சாத்​த​னூர் கிரா​மத்​தில் "தேசிய கல்​ம​ரப் பூங்கா' நம்​மைத் திகைக்க வைக்​கி​றது.​ கல்​லில் மரங்​களா?​ என்று சற்று வியப்​பு​டன் விழி​களை உயர்த்​திப் பார்க்​கி​றோம்.​ ​ ​ ​சாத்​த​னூர் கிரா​மத்​தில் 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் தோன்​றிய மரம் ஒன்று புவி​யின் தோற்ற வர​லா​ற்றுக்குச் சான்​று​கூ​றும் தட​ய​மாக இப்​போது படுத்​தி​ருக்​கி​றது.​ ​இப்​போது இந்த ஊருக்கு கிழக்கே 100 கிலோ மீட்​டர் தொலை​வில் கடல் அமைந்​துள்​ளது.​ஆனால் 12 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் இவ்​வூ​ரின் மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்​டர் வரை கடல் பர​வி​யி​ருந்​த​தா​கப் புவி​யி​யல் ஆய்​வு​கள் கூறு​கின்​றன.​ புவி​யி​யல் வர​லாற்​றின்​படி இக்​கா​லம் "கிரி​டே​சஸ் காலம்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றது.​ இக்​கா​லத்​தில் இன்று இருப்​பது போன்று கட​லில் பல்​வேறு உயி​ரி​னங்​கள் வாழ்ந்​தி​ருக்​கின்​றன.​இவ் ​வி​லங்​கு​கள் இறந்த பின்பு ஆறு​க​ளி​னால் அடித்​து​வ​ரப்​பட்ட மணல்,​​ களி​மண் இவற்​றால் மூடப்​பட்டு கட​லின் அடி​யில் அமிழ்ந்​தன.​ கட​லோ​ரப் பகு​தி​யி​லும் அதன் அரு​கி​லும் தழைத்து வந்த மரங்​க​ளும் ஆற்று வெள்​ளத்​தி​னால் அடித்​து​வ​ரப்​பட்டு இவ்​வி​லங்​கு​க​ளு​டன் கட​லில் அமிழ்ந்​தன.​ காலப்​போக்​கில் வெப்​பம்,​​ அழுத்​தம் ஆகி​ய​வற்​றால் பசு​ம​ரங்​கள் கல்​ம​ரங்​க​ளாக உரு​மா​றின.​இவ்​வூ​ரில் காணப்​ப​டும் கல்​லு​ரு​வா​கிய பெரிய அடி​ம​ரம் ஏறத்​தாழ 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய திருச்​சி​ராப்​பள்ளி பாறை​யி​னப் பகு​தி​யில் அமைந்​தி​ருக்​கின்​றது.​ இது "கோனி​பெ​ரஸ்' வகை​யைச் சார்ந்​த​தா​கக் கரு​தப்​ப​டு​கி​றது.​இம்​ம​ரம் 18 மீட்​டர் நீள​மு​டை​யது.​ ​ சாத்​த​னூ​ருக்கு அரு​கில் வர​கூர்,​​ ஆனைப்​பாடி,​​ ​ அலுந்​த​ளிப்பு,​​ சார​தா​மங்​க​லம் ஆகிய ஊர்​க​ளின் அருகே நீரோ​டைப்​ப​கு​தி​க​ளி​லும் சில மீட்​டர் நீள​முள்ள கல்​ம​ரங்​கள் காணப்​ப​டு​கின்​றன.​இந்​திய புவி​யி​யல் துறை​யைச் சார்ந்த டாக்​டர் எம்.எஸ்.கிருஷ்​ணன் அவர்​க​ளால் 1940-ம் ஆண்​டில் இக்​கல்​ம​ரங்​கள் பற்​றிய செய்தி முத​லில் தெரி​விக்​கப்​பட்​டது.​ ​புவி​யி​யல் தோற்​றத்​தின் வர​லாற்று கல்​வெட்​டா​கக் காணக்​கி​டைக்​கும் இக்​கல்​ம​ரங்​கள் பற்றி "மழை மண் மரம் மானு​டம்' என்ற அமைப்​பின் மூலம் சமத்​துவ சமூ​கச் சுற்​றுச்​சூ​ழ​லுக்​கான செயல்​பாட்​டா​ள​ரான கட​லூர் மாவட்​டம்,​​ இரா​ம​நத்​தம் கிரா​மத்​தைச் சேர்ந்த இர​மேசு கருப்​பை​யா​வி​டம் கேட்ட போது அவர் நம்​மி​டம் பகிர்ந்து கொண்​டவை:​""இந்​தக் கல்​ம​ரங்​க​ளைப் போன்றே திண்​டி​வ​னத்​துக்கு அருகே திரு​வக்​க​ரைப் பகு​தி​யி​லும் கல்​ம​ரங்​கள் காணப்​ப​டு​கின்​றன.​ இது​போன்ற கல்​ம​ரங்​கள் பல இடங்​க​ளில் கிடைத்​தா​லும் தொடர்ச்​சி​யாக 18 மீட்​டர் நீளம்​கொண்ட அடி​ம​ரம் இது என்​பது சிறப்பு.​ ​ இதன் அரு​கில் முன்பு நடப்​பட்ட ஒரு புளி​ய​ம​ரத்​தின் வேர் இக்​கல்​ம​ரத்​தின் தொடர்ச்​சிக்கு இடை​யூ​றாக அமைந்து கல்​ம​ரத்​தைத் துண்​டாக்கி நிற்​கி​றது.​ இடை​யூ​றான இந்த மரத்தை அங்​கி​ருந்து அகற்ற வேண்​டும்.​ ​இக்​கல்​ம​ரம் திறந்த வெளி​யில் இருப்​ப​தால் வெயி​லி​லும்,​​ மழை​யி​லும் பாதிக்​கப்​பட்டு சிறு​துண்​டு​க​ளா​கச் சிதை​வு​றும் வாய்ப்பு இருக்​கி​றது.​ ​எனவே இந்த வர​லாற்​றுச் சின்​னத்​தைப் பேணிக் காக்க மேற்​கூரை ஒன்றை நிறு​வுவது அவ​சி​யம்.​ வரும் பார்​வை​யா​ளர்​கள் தொட்​டுப் பார்ப்​ப​தை​யும்,​​ அதன் மீது ஏறி நடக்​கா​மல் இருக்​க​வும் அதைக் கண்​ணா​டிப் பெட்​டிக்​குள் வைத்​துப் பாது​காக்க வேண்​டும்.​இதைப் புவி​யி​யல் அறி​வும்,​​ அனு​ப​வ​மும் கொண்​ட​வர்​க​ளைக் கொண்டு பரா​ம​ரிக்க வேண்​டும்.​ இது​கு​றித்து விளக்​கம் அளிக்க சரி​யான ஒரு​வர் இல்​லா​த​தால் வரு​கின்ற உள்​நாட்டு,​​ வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​கள்,​ ஆய்​வா​ளர்​கள்,​​ மாண​வர்​க​ளுக்குப் பல அரிய செய்​தி​களை உணர்த்த முடி​யா​மல் போகி​றது.​பெரம் ​ப​லூர்,​​ அரி​ய​லூர் பகுதி புவி​யின் தோற்​றத்​தைப் பற்​றி​யும் பல்​வேறு உயி​ரி​னங்​கள் பற்​றி​யும் ஆய்வு மேற்​கொள்​ளத்​தக்க வகை​யில் காலக் கரு​வூ​ல​மாக இந்​தக் கல்​ம​ரங்​கள் இருக்​கின்​றன '' என்​றார் இர​மேசு கருப்​பையா.-​நீதி​செங்​கோட்​டை​யன்

50 ஆயிரம் கோடி நகைகள்,ஒரு அறையில் மட்டும். மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறையில் ஒரு அறையில் இருந்த பொருட்களின் மதிப்பு ஸி50 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது. இதனால் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து, கோயிலைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள பாதாள அறைகளை திறந்து அங்குள்ள நகைகளை கணக்கெடுத்து மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 27ம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் நியமித்த 7 பேர் குழு நகைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஏ முதல் எப் வரை பெயரிடப்பட்டுள்ள இந்த அறைகளில் முதலில் சி முதல் எப் வரையிலான அறைகள் திறக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பொருட்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 136 வருடங்கள் திறக்கப்படாமல் இருந்த ஏ மற்றும் பி ஆகிய அறைகளில் ஏ அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த அறை இரண்டரை மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. இதன் உயரம் ஒன்றரை மீட்டர் மட்டுமே. இதனால் அறையில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்ட பின்னரே நகைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

உள்ளே ஒரு பெரிய மரப்பெட்டி இருந்தது. பல ஆண்டுகளாகிவிட்டதால் அந்த நகை பெட்டி சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அதிலிருந்த நகைகள், ரத்தினங்கள், வைரங்கள் ஆகியவை சிதறி கிடந்தன. அந்த அறையின் ஒரு மூலையில் தங்க கட்டி, தங்க கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள், ரத்தினங்கள், நூற்றுக்கணக்கான தங்க செயின்கள், தங்க கம்பிகள் ஆகியவை இருந்தன.

இவை தவிர தங்க நாணயங்கள் குவிந்து கிடந்தன. தங்க நாணயங்கள் ஒவ்வொன்றும் 50 பைசா அளவில் இருந்தது. இது தவிர பழைய ஒரு பைசா நாணயம் அளவிற்கும் ஏராளமான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட இரண்டரை கிலோ எடை கொண்ட 4 ராட்சத தங்க செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

தங்க செயின்களில் வைரங்கள், மாணிக்கம், மரகதம் ஆகியவை பொறுத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை நடந்த பின்னரும் நகைகள் கணக்கெடுப்பு பணி முடியவில்லை. இந்த ஒரு அறையில் இருந்த நகைகளின் மதிப்பு மட்டுமே ஸி50 ஆயிரம் கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறைகளில் உள்ள நகைகள் கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னரே பி அறை திறக்கப்படும். இந்த அறையிலும் அறை ஏ&யில் காணப்பட்டது போல் விலை மதிப்பு மிக்க தங்கம், வைரம், ரத்தினங்கள் ஏராளமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பத்மநாப சுவாமி கோயிலில் தோண்ட தோண்ட கிடைத்து வரும் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டிவிட்டதால் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இக்கோயிலைச் சுற்றிலும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதாள அறை இன்று திறப்பு

பத்மநாப சுவாமி கோயிலில் ஏ முதல் எப் வரை 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் ஏற்கனவே 4 அறைகள் திறக்கப்பட்டன. இவற்றில் ஸி1000 கோடி மதிப்புள்ள நகைகள் குறிப்பாக கோயிலில் பயன்படுத்தப்படும் ஆபரணங்கள் கிடைத்தன. நேற்று மேலும் ஒரு ரகசிய அறை திறக்கப்பட்டது. இதில் ஸி50 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் இருந்தன. இவை குவியலாகவும் மூட்டை மூட்டையாகவும் கொட்டிக் கிடந்தன. இன்று மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதிலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கேரளா ராஜாக்கள் எவ்வளவு மக்களை சுரண்டி உள்ளார்கள் என்பது மிகவும் தெளிவாகிறது. உலக சரித்திரத்தில் இந்த இந்திய ராஜாக்களை போன்ற கொள்ளைக்காரர்கள் வேறு எங்கும் இல்லை என்றே சொல்லாம். இந்த வரிசையில் ராஜராஜ சோழனையும் சேர்க்கலாம். ஆயிரம் கோடி செலவழித்தாலும் தஞ்சை கோவிலை கட்டமுடியாது. எப்படி அவரால் கட்ட முடிந்தது? எல்லாம் கொள்ளைதான்? 

Tamilnadu அகதி முகாமில் பெண் குழந்தை பலாத்காரம்? (இரண்டரை வயது) தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை


குழந்தை பலாத்காரம்? இலங்கை அகதிகள் போராட்டம்

காலாப்பட்டு : விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 465 குடும்பத்தை சேர்ந்த 1,787 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள புதுமுகாமை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி தேவதர்ஷினி. இவர்களது மகள் திவ்யா (இரண்டரை வயது). நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டு இருந்தது. ரகுநாதன் வெளியில் சென்றிருந்தார். குழந்தை திவ்யாவை வீட்டின் முன்பு தூங்க வைத்து விட்டு, வீட்டுக்குள் தேவதர்ஷினி சமையல் செய்து கொண்டிருந்தார்.  

அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர், அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனை பார்த்த முகாம் மக்கள் கூச்சலிட்டனர். சிலர், அவரை துரத்தினர். முதலியார்குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்று அவர்கள் தேடிய போது, கடற்கரை ஓரம் முட்புதரில், அந்த சிறுமி கிடந்தாள். உடல் முழுவதும் காயங்கள் இருந்தது.
தப்பியோடிய இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதைறிந்த முதலியார் குப்பம் மீனவ பஞ்சாயத்தார் அங்கு வந்து, இளைஞரை மீட்டு சென்றனர்.

ஆத்திரமடைந்த முகாம் மக்கள், கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி சிவனேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி, இளைஞரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கனகசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில், சிறுமியை தூக்கிச்சென்ற வாலிபர் முதலியார்குப்பம் மீனவர் குப்பத்தை சேர்ந்த சுகுமார்(21) என்பது தெரிந்தது.

புதுவையில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையில், முகாமை சேர்ந்தவர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அகதி முகாம் நுழைவு வாயில் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து சப்&கலெக்டர் சண்முகம், அவர்களிடம் பேச்சு நடத்தினார். முகாம் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று முகாம் மக்கள் கலைந்து சென்றனர்.
எங்கே போய்விட்டார்கள் இந்த நெடுமாறன் சீமான் வைகோ வகையறாக்கள்? 
இருந்து பாருங்கள் வழக்கம்போல யாரவது தலையிட்டு குற்றவாளியை ஏதாவது சிறு தண்டனையுடன் தப்பவிட்டுவிடுவார்கள். ஆனால் இதற்காக தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் போராட்டத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டம் ஆர்பாட்டம் எதுவும் செய்யாது. அகதிகளிடம் தான் காசு இல்லையே? 
புலன்பெயர்களை கவரும் ஜாலவித்தைகளிலும் தமிழ்நாட்டு வாக்கு வங்கிகளை வேட்டை யாடும் விவகாரங்களில் மட்டும்தான் இந்த சீமான் மாறன் கோஷ்டி ஈடுபடும்,

ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்,

சென்னை:கடந்த ஒன்றரை மாதத்தில், தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை, வெளி மாநிலங்களுக்கு கடத்தி வந்த 29 கடத்தல்காரர்கள், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக மாதம் 20 கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ரேஷன் அரிசி மொத்தமாக வாங்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க, அரசு உத்தரவிட்டது.குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் புதிய கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதும், கடத்தல்காரர்கள், அவர்களுக்கு துணையாக இருப்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன்படி, கடந்த மாதம் 13ம் தேதி முதல், கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் பயனாக, நேற்று முன்தினம் வரை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த 683 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பல ஆண்டுகளாக ரைஸ் மில் நடத்தியும், பினாமி பெயர்களில் லாரிகளை வைத்துக் கொண்டும் வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசியை கடத்தி, போலீசிடம் சிக்காமல் இருந்த முக்கிய அரிசி கடத்தல்காரர்களான, சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபு, திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த பாத்துமுத்து, ஷேக் மொய்தீன் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து, கோவை, கரும்புக்கடையைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம், 27, உடுமலைப்பேட்டை, பூலவாடியைச் சேர்ந்த சுப்ரமணி, இவரது கூட்டாளியான, திருப்பூர் அனுப்பம்பாளையம் புதூரைச் சேர்ந்த சிவானந்தம், 39, கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த மேகநாதன், சங்கரன் கோவில் வட்டம், ஆளடிப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ், 25, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜா ஆகிய ஆறு பேருடன் சேர்த்து 29 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதத்தில் 1,126 வழக்குகள் பதியப்பட்டு, கடத்தல்காரர்களிடம் இருந்து 4,526 குவிண்டால் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர, மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர்களும் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறும்போது, ""அரிசி கடத்தல்காரர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது புதிய சாதனை. தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பிடிபடுபவர்கள் மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Raj Rajaratnam தண்டனைத் தீர்ப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு

அமெரிக்க கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்துக்கான தண்டனை ஒத்திவைப்பு

late news http://namathu.blogspot.com
 ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறை; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் ராஜரத்தினத்தின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் குற்றவாளியாக காணப்பட்டு இருக்கின்ற கோடீஸ்வரரும், இலங்கை வம்சாவளித் தமிழருமான ராஜ் ராஜரட்ணத்துக்கான தண்டனை அடுத்த மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் வர்த்கதம் நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் நடத்தியமை ஆகியன சம்பந்தமாக 14 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. வழக்கு விசாரணையின் போது அவர்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இவர் குற்றவாளிதான் என்று மன்ஹட்டான் நீதிமன்றம் கடந்த மே 11 ஆம் திகதி தெரிவித்திருந்தது.. இவருக்கான தண்டனை இம்மாதம் 29 ஆம் திகதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது தண்டனைத் தீர்ப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த ராஜ் ராஜரத்தினம் அமெரிக்காவில் கொடிகட்டி பறப்பது நமக்கு எல்லாம் பெருமை என்று எண்ணியிருந்தோம் இப்போதுதான் தான் சாயம் பூரணமாக வெளுத்துவிட்டது. படிக்காதவன் படித்தவன் பேதமில்லாமல் அவரர் தம் பங்குக்கு பிராடு பண்ணுவதே நம்மவர் கலாசாரம் ஆகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது,
கிரெடிட் கார்ட் மோசடி கூலிக்கு தாதா குண்டர் ரவுடியிசம் போன்ற குடிசை கைத்தொழில்கள் இவற்றை மறைக்க புலிவால் பிடித்தல் கொடி தூக்குதல் போன்ற காவடி எடுப்புக்கள்... ம்ம்ம்

raj and asha rajaratnam 

தமிழ்நாட்டின் கடன் சுமை,கலைஞர் பதில்

தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரித்து விட்டதாக ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே? கலைஞர் பதில்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


கேள்வி: 2006 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழ்நாட்டின் கடன் சுமை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து விட்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ் சாட்டியிருக்கிறாரே?


பதில்: 2006 ம் ஆண்டு தி.மு.க. பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 31 3 2006 அன்றே, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு ரூபாய் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும்.


அதாவது அ.தி.மு.க. ஆட்சியிலேயே அந்த அளவிற்கு கடன் சுமையை வைத்திருந்தார்கள். அந்த கடன் தொகை தான் தற்போது ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிகிதம் அளவிற்கு கடன் சுமை வைத்திருந்தார். தி.மு.க. ஆட்சியில் கடன் சுமை மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவிகிதம் தான்.


தி.மு.க. அரசின் மீது ஜெயலலிதா இந்த அளவிற்கு குறை கூறிய போதிலும், இந்தியாவின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 9 4 2011 அன்று சென்னையிலே கூறும்போது, "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாக கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை ஓவர்டிராப்ட்டை தமிழக அரசு பெற்றதில்லை'' என்று கழக அரசின் நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டி சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மனித உணர்ச்சிகள் நாய்களுக்கும் புரியும்!

மனிதர்களின் உணர்ச்சிகளை நாய்கள் இனம் கண்டறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதாக நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மகிழ்ச்சியான மற்றும் கோபமான மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், சிரிக்கின்ற மற்றும் அழுகின்ற மனிதர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளையும் நாய்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம்.

தெற்கு தீவில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகம் 90 டியூனிடின் வகை நாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வின் போது குழந்தைகளின் சிரிப்பு, அழுகை, கொஞ்சல் போன்ற உணர்வுகளை பதிவு செய்தும் மனிதர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களையும் நாய்களிடம் காட்சிப்படுத்தினர் ஆய்வாளர்கள்

உடல்மொழியை வெளிப்படுத்தும் நாய்கள்

அந்த காட்சியில் இருந்த உணர்வுகளை நாய்களை புரிந்து கொண்டு உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தியதாக டெட் ரப்மென் என்ற ஆஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார். மனிதர்களின் உணர்வுகளை உடனடியாக புரிந்து கொள்வதில் நாய்கள் மிகச்சிறந்தவை என்று ஒடாகோவில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மனித உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாய்கள் அவற்றின் உடல்மொழியை வெளிப்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றியுள்ள பிராணிகள்

நாய்கள் நன்றியுள்ளவை, விசுவாசம் மிக்கவை அதனால்தான் உலகம் முழுவதும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. வீட்டு எஜமானர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப காரியங்களை நிறைவேற்றுவதில் கில்லாடிகளாக உள்ளன. இது நாய்களிடம் இயல்பிலேயே அமைந்துள்ள சிறப்பம்சமாகும்.

English summary
Dogs can tell the difference between a happy and an angry person and a laugh from a cry, a New Zealand study claims. To reach the conclusion, researchers at the University of Otago, in the South Island, put 90 Dunedin dogs through their paces - showing some recorded images of babies laughing, crying and babbling and giving others verbal instructions from human's displaying happy or stern expressions.

மங்காத்தா சீரியஸ் த்ரில்லர்! - வெங்கட் பிரபு

பொதுவாக தனது படங்கள் பற்றி பெரிதாக பில்டப் கொடுக்காதவர் வெங்கட் பிரபு. ஆனால் விதிவிலக்காக, தனது இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படமான மங்காத்தா குறித்து பல்வேறு செய்திகளை பேஸ்புக், ட்விட்டர் மூலம் வெளியிட்டு ரசிகர்களை பெரிய எதிர்ப்பார்ப்புக்குள்ளாக்கி வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டரில் இப்படிக்கூறியுள்ளார் வெங்கட் பிரபு:

"மங்காத்தா படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. கொஞ்சம் ரிலாக்சுக்காக சிறு சிறு காமெடி சீன்கள் இருக்கும். ஆனால் படம் கண்டிப்பாக வெகு சீரியஸான த்ரில்லர்.

அஜீத் இப்படத்தில் வித்தியசமாக இருப்பார். படத்தின் இரண்டரை மணி நேரமும் பரபரவென்று இருக்கும்.. இது இதுவரை வந்த 'தல' படங்களை விட இது வித்யாசமான படமாக இருக்கும்.. தயாராக இருங்கள் ! " என்கிறார்.

ஆரம்பத்தில் அஜீத் பிறந்த நாளில் படம் வரும் என்றார்கள். பின்னர் ஆகஸ்ட் 15ம் தேதி என்றார்கள். இப்போது, 'ஆகஸ்ட் 12 அல்லது 19-ல் 'மங்காத்தா' ஆட்டம் துவங்கும் ' என கூறியுள்ளார்.

எல்லாம் சரி... இசை வெளியீட்டுத் தேதியையாவது சரியா சொல்லுங்கப்பா என்கிறார்கள் காத்திருக்கும் தல ரசிகர்கள்...!

English summary
Venkat Prabhu, the director of Ajith's Mangatha says that the film is a stunning action thriller and the fans will be seen a new Ajith in this movie.

அம்மாவின் பொற்கால ஆட்சி மலர்ந்தது, ஓடுங்க............ ஓடுங்க........

http://images-mediawiki-sites.thefullwiki.org/00/3/4/0/5247524571272919.jpg
இன்று வரலாறு காணாத கொலை, கொள்ளை, மின்வெட்டு, வழிப்பறியில் சிக்கி சீரழிந்து வருகிறது தமிழகம். அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உலக சாதனை படைத்து விடும்போல அம்மாவின் பொற்கால ஆட்சி.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியை பற்றி ஒப்பாரி வைத்த பதிவர்களை தேடினால்  ஒரு சிலர் மருத்துவ குறிப்பு எழுத ஆரம்பித்துவிட்டார்கள் இன்னும் சிலர் ஜோதிடம், ஆன்மிகம் என்று போய்விட்டனர். இப்போது தமிழகத்தின் நிலையை பதிவு போடுவார்களா என்று பார்த்தால் மூச்சை காணோம்.


இன்று   யாராவது அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேட்டை பற்றி பதிவு எழுதினால் இந்த அம்மா கோஷ்டிகள் போடும் முதல்  பின்னூட்டம் இதுதான் "யோவ் ஒருமாசம் தானேயா ஆயிருக்கு". என்ன அருமையாக சமாளிக்கிறார்கள். இதே உங்கள் வீட்டில் கொலையோ, கொள்ளையோ இல்லை வழிப்பறியோ நடந்திருந்தால் இப்படி சொல்வீர்களா? ஒரு மாதம், அதையேதான் நானும் கேட்கிறேன் இந்த ஒரு மாதத்தில் எங்கிருந்து வந்தார்கள் இவ்வளவு கொள்ளைக்காரர்களும், கொலைக்காரர்களும்?  போகிரப்போக்கை பார்த்தால் சங்கிலி திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடுவதை விட  சங்கிலி வைத்திருப்பவர்கள் தான் ஆந்திராவுக்கு ஓடவேண்டும் போல.

அமைதி பூங்காவாம்! அம்மா ஆட்சியில்  பூங்கா எப்படி இருக்கும் என்று கூட  தெரியாத அம்மா கோஷ்டிகள் தி.மு.க ஆட்சியின் போது சொன்ன கருத்து "அம்மா ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாம்".   நேற்று இரவு தமிழகம் இருளில் தத்தளித்த போதுதான் நானும் பார்த்தேன் அம்மாவின் அமைதிப்பூங்காவை, பொற்கால ஆட்சியை. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேட்டை  எந்த ஒரு அரசும் நிகழ்த்தியது இல்லை. வரலாறு படைத்து வருகிறார் அம்மா.

சென்னையில் வரலாறு காணாத மின்வெட்டை கண்டு மக்கள் அலறுகிறார்கள்,  பள்ளி மாணவர்கள் இன்னும் புத்தகம் கிடைக்காமல் தவிக்கிறார்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள், பள்ளிகளின் பணக்கொள்ளையை பார்த்து பெற்றோர்கள் விழி பிதுங்குகிறார்கள், கொள்ளையர்களிடம் பணத்தையும் கணவனின் உயிரையும் கொடுத்த பெண்கள் கதறுகிறார்கள் இதுதான் இன்றைய தமிழக மக்களின் நிலை.

ஆட்சிக்கு வந்த ஒருவாரத்திலேயே  அனைத்து  சமச்சீர் கல்வி  புத்தகங்களையும் படித்து முடித்து அதில் குறைக்கண்டுப்பிடித்துவிட்டார், புதிய தலைமை செயலக கட்டிடத்தின் அடியில்  இரவோடு இரவாக பள்ளம் தோண்டி ஊழலை கண்டுப்பிடித்துவிட்டார் "அஸ்திவாரத்திலேயே ஊழல்" என்று.  இன்னும் என்னென்ன கொடுமைகளை நாங்கள் பார்க்கப்போகிறோம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க ஆட்சியின் துரித நடவடிக்கை இதுதான், போர்கால நடவடிக்கை இதுதான் போல. அரசு பேருந்தில் கலர்கலராக வண்ணம் அடித்து  அதிக டிக்கெட் வசூல் செய்வதை தடுக்காமல்  எங்கே போனது இவர்களுடைய போர்கால நடவடிக்கை?. கடந்த ஆட்சியில் டிக்கெட் வசூலை கண்டு  ஒப்பாரி வைத்தவர்கள் தானே இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்?  என்ன சொல்லபோகிறீர்கள் இனி?

தி.மு.க ஆட்சியின் போது ஒருவன் ரோட்டில் வழுக்கி விழுந்துவிடகூடாது உடனே சில ஒப்பாரி மீடியாக்கள் சென்று அவனிடம்  மைக்கை நீட்டிவிடுவார்கள் "ஐயா இதுக்கு காரணம் மைனாரிட்டி தி.மு.க அரசுதான்னு சொல்லுங்க" என்று.  இப்போது அந்த ஒப்பாரி மீடியாக்கள் எல்லாம் எங்கே போனது? 

இதுவரை இலவச வண்ண தொலைகாட்சி திட்டத்திற்காக  வாங்கப்பட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் அனாதை ஆசிரம்மங்களுக்கு போகுமாம், ஆடு -மாடு இலவசமாம், மின்தடையை நீக்க வழியை காணோம் மிக்சி, பேன் விரைவாக கொடுக்க அமைச்சர்கள் ஆலோசனை நடக்கிறதாம், காப்பீடு திட்டம் ரத்து அதற்கு மாற்றாக புதிய காப்பிடு திட்டம் வருமாம்(அடுத்த ஆட்சியிலா என்று தெரியவில்லை), கடன் ஒருலட்சம் கோடி என புதிய ஒப்பாரி வைப்பவருக்கு மோனோ ரயில் திட்டம் வேண்டும் இவருக்கு சிறந்த நிர்வாகி என பெயர் வேறு.

இனி  இந்த அம்மா புதிதாக எதுவும் கொண்டு வர வேண்டாம் கோட நாட்டியல் உட்கார்ந்துக்கொண்டு இது சரியில்லை அது சரியில்லை என்று அறிக்கையும், ஆர்ப்பாட்டமும் நடத்த சொன்னாரே அந்த காரணத்தையாவது இவர் சரி செய்யலாமே?  கலைஞர் கொண்டுவந்த புதிய  மின்சார நிலையங்களை விரைவாக முடிக்கலாமே? செய்வாரா இந்த "தங்கத்தாரகை"(இப்போதைக்கு தோடுக்கு விலக்கு). 
http://thoppithoppi.blogspot.com/2011/07/blog-post.html

"ரபி பெர்னாட்" நமக்கு வாய்த்த அடிமைகள் நல்ல உழைப்பாளிகள்


மாநிலங்களைப் பதவிக்கு ரபி பெர்னார்டை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெ! வாழ்த்துகள்! விசுவாசத்துக்கு அது எந்த மட்டத்திலிருந்து வந்தாலும் கண்டிப்பாக பரிசு உண்டு என்பது அதிமுகவில் மீண்டும் நிருபணம் ஆகியுள்ளது! இது ஒன்று தான் என்ன ஆனாலும் அதிமுகவில் மட்டும் தொண்டர்கள் தங்கள் தலைமை மீது நேரடியாக குற்றச்சாட்டு எப்போதுமே சொல்லாததற்கு காரணம் எனலாம்!
அண்மையில்  இவர் அளவுக்கு டிவியில் அம்மா புராணம் வேறு யாரும் பாடியதில்லை என்றே சொல்லவேண்டும். அடிமைகளுக்கே உரிய நூறு வீத விசுவாசத்தை காட்டினால் எப்படியும் ஜெயலலிதா ஏதாவது எலும்புத்துண்டுகள் தருவார் என்பது மிகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
தமிழகத்தின் மிகப்பெரும் சாபம் இதுவாகும்.
மக்கள் நலனில் ஈடுபாடு அல்லது ஏதாவது கொள்கை கோட்பாடு போன்ற எதுவும் தேவை இல்லை நூறுவீதம் அடிமைத்தனம் இருந்தால் போதும் உயரே பறந்து விடலாம். 

ஜெயலலிதாவின் கால்கழுவ துடிக்கும் சினிமா பிரபலங்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கணக்காய், சினிமாக்காரர்கள் மீண்டும் முதல்வர் ஜெ.வை நேரில் சந்தித்து, “பாசத் தலைவிக்கு பாராட்டு கூட்டம்” நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. எத்தனை தடவை விரட்டி அடித்தாலும் இவர்கள் மீண்டும் மீண்டும் வந்து தான் தொலைவார்கள் என்பது முன்னாள் காக்கா கூட்ட உறுப்பினரான முதல்வருக்குத் தெரியாதா என்ன? இப்போதைக்கு தேதி இல்லை என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறார். கொசுறாக, “இலங்கைத் தமிழர்களுக்காக (?!) பேரணி ஒன்று நடத்தப் போகிறோம். அதற்கு பர்மிஷன் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்து விட்டு வந்திருக்கிறார்கள். மாநில முதல்வர் ஐயா! மாநகர கமிஷனர் ரேஞ்சுக்கு அவரை ஆக்கிவிட்டு வந்திருக்கிறார்கள்! எல்லாவற்றையுமே தங்கள் சினிமா கதை ரேஞ்சுக்கே அணுகினால் எப்பூடி?!

சொத்து வரி கணக்கும் ஜெயலலிதாவின் அதிஷ்டமும்

1993-94-ம் ஆண்டுகளின் போதும் முதல்வராக இருந்த ஜெ. அப்போது சொத்து வரியை கணக்கில் காட்டவில்லையாம். அவர் பதவி போன பிறகு தி.மு.க. ஆட்சியில் 1996-ம் ஆண்டு எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்த்ரேட் கோர்ட்டில் சொத்து வரி உதவி ஆணையர் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்த போது தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி (வழக்கம் போல) ஜெ. மனு கொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இப்போது காற்று மீண்டும் ஜெ. பக்கம் வீசத் தொடங்கியிருக்கும் வேளையில், உயர்நீதிமன்றத்தில் ஜெ. தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்று சொத்து வரி வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார்.
“1993-94-ம் ஆண்டில் செல்வவரி கணக்கை செலுத்த தேவையில்லை என்று எனக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆடிட்டர் மற்றும் சில சட்ட நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனையை ஏற்று நான் செயல்பட்டேன். எனவே நான் வேண்டுமென்றே கணக்கு காட்டவில்லை என்று குற்றம்சாட்ட முடியாது.” என்று ஜெ. மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நல்ல ஆடிட்டர்கள்! நல்ல நியாயம்!!
சொத்து வரி கணக்கும் ஜெயலலிதாவின் அதிஷ்டமும் 

Ramadas: சமச்சீர் கல்வி பிரச்சனையே அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு உதாரணம்


அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு சமச்சீர் கல்வி பிரச்சனையே உதாரணம்: ராமதாஸ்

அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு சமச்சீர் கல்வி பிரச்சனையே உதாரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,

69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி கல்விக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதகால அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு கல்வி பிரச்சனையே உதாரணம். மற்றப்படி பாராட்டும் படி பெரிய அளவில் ஒன்றும் இல்லை.
பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும் என்றார்.

20 ஆயிரம் கோடி Padmaban swamy Temple நகைகளின் மதிப்பு


திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை ஒன்றில் இருந்து இதுவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. இன்னும் 2 பாதாள அறைகள் திறக்கப்பட வேண்டியுள்ளதால் நகைகளின் மதிப்பு மிகப் பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பழமையானது. இங்கு ஆறு பாதாள அறைகள் உள்ளன. அதில் என்ன உள்ளது என்பதைத் திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பபட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி மொத்தம் உள்ள 6 பாதாள அறைகளில் 4 அறைகளை இக்குழு ஆய்வு செய்து பார்த்தது. அப்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆய்வின்போது பெருமளவிலான நகைகள்,பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவை கிடைத்தன. அவற்றின் மதிப்பை அறிய கணக்கீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதோ இந்த மதிப்பு ரூ. 20,000 கோடியாக உயர்ந்துள்ளது. திருவாதாங்கூர் மன்னர்கள் அணிந்திருந்த விலைமதிப்பற்ற காசி நெக்லசுகள், மகுடங்கள், நகைகள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர 3 மகுடங்கள், ஒரு பத்மநாபசுவாமி சிலை, அவல் என்னும் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த ஆயிரம் சரத்போலி செயின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு செயின் மட்டும் 18 அடி நீளம் உள்ளது. ஏராளமான தங்க செங்கோல்கள் மற்றும் பதக்கங்களும் அதில் இருந்தன.

இந்த பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால் அங்கு விஷவாயு இருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டதால் முதலில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பிறகு அங்கு செல்லும் அனைவருக்கும் ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டது. மீதமிருக்கும் ஒரு அறை இன்று திறக்கப்படுகிறது.

18-வது நூற்றாண்டில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது இந்தக் கோவில். திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினரைக் கொண்ட அறக்கட்டளை மூலம் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Valuables worth Rs. 20, 000 crore have been taken from Trivandum Padmanabhaswamy temple's secret chamber which was opened yesterday. Officials have already taken jewels and other valuables worth Rs. 1000 crore. There are 6 chambers in the temple. So far, 5 chambers have been opened. The last one will be opened today. 
மிகவும் வறுமையாக மக்கள் வாழும் ஒரு நாட்டில் உள்ள கோவில் ஒன்றில் இருந்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு மோசமான மக்கள் விரோத ஆட்சியாளர்களாக  அன்றைய கேரளா மார்த்தாண்ட வர்மாக்கள் இருந்திருக்கிறார்கள்?
ஆதிவாசிகளையும் கேரளாவின் தாழ்த்தப்பட்ட ஈழவர் சமுகத்தையும் சுரண்டியும்  ஆங்கிலேயர்க்கு நாட்டை விற்றும் சம்பாதித்த தங்கம் அல்லவா?
மேட்டுக்குடி மலையாளிகள் எல்லாம் இந்த கேரளா ராஜாக்களை எதோ தெய்வப்பிறவிகள் போல் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை?
 

ரம்லத்துக்கு இன்னும் சொத்துக்களை மாற்றவில்லை? -விவாகரத்தில் சிக்கல்



மனைவி ரம்லத்துக்கு தருவதாகக் கூறிய சொத்துக்களை இன்னும் பிரபுதேவா மாற்றிக் கொடுக்காததாலேயே வழக்கு தாமதமாவதாக தெரியவந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து வழக்கில் இருவருமே நேற்று ஆஜராகவில்லை. இதற்குப் பின்னணியில் பரபரப்பான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

பிரபுதேவாவும், நயன்தாராவும் கடந்த வருடம் இறுதியில் திருமணத்துக்கு தயாரானதும் ரம்லத்துதான் கோர்ட்டுக்கு போனார். நயன்தாரா கணவரை பிரிக்க முயற்சிப்பதாகவும் பிரபுதேவாவை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பிரபுதேவா- ரம்லத் இடையே சமரசம் ஏற்பட்டது. இருவரும் மனம் ஒத்து பிரிவதாக மனுதாக்கல் செய்தனர்.

அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடு, அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் ஐதராபாத்தில் உள்ள பிளாட்கள் போன்றவற்றை மனைவி மற்றும் மகன்களுக்கு வழங்குவதாக பிரபுதேவா உறுதி அளித்தார். ஜூன் 30-ந்தேதிக்குள் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் இன்னும் சொத்து பத்திரங்கள் ரம்லத் வசம் வரவில்லை என்று கூறப்படுகிறது.

வருகிற 10-ந்தேதி வழக்கு விசாரணையின்போது ரம்லத் மற்றும் குழந்தைகள் பெயரில் ஏற்கனவே குறிப்பிட்டப்படி சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதா? என்ற தகவல் பிரபுதேவா தரப்பில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்.

Sai Trust ஆந்திர அரசு ஏற்காது- சலுகைகள் தொடரும்

சாய் அறக்கட்டளையை ஆந்திர அரசு ஏற்காது- சலுகைகள் தொடரும்

ஹைதராபாத்: சாய்பாபா அறக்கட்டளையை ஏற்று நடத்தும் எண்ணமே இல்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மேலும், அறக்கட்டளைக்கு அரசு அளித்து வரும் சலுகைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. சாய்பாபா உயிருடன் இருக்கும் வரை அறக்கட்டளை எந்தவித பிரச்சனையும் இன்றி நடந்தது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு அறக்கட்டளை பிரச்சனை மயமாக உள்ளது. இதனால் சாய் அறக்கட்டளையை ஆந்திர அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அன்மையில் போலீசார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 35 லட்சத்தை கைபற்றினர். அறக்கட்டளை உறுப்பினர்களோ அது சாய்பாபாவுக்கு மகா சமாதி கட்ட கொடுத்த பணம் என்றனர். ஆனால் பக்தர்கள் நம்பவில்லை. அவர்களுக்கு அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சாய்பாபா அறக்கட்டளையை ஏற்று நடத்தும் எண்ணமே இல்லை என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சாய்பாபா அறக்கட்டளையை அரசு ஏற்று நடத்தாது. அறக்கட்டளைக்கு பணமாகவும், நகையாகவும் ஏராளமான பக்தர்கள் நன்கொடை அளிக்கின்றனர். இதனால் தற்போது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, சொத்து மற்றும் நிதி விபரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு அறக்கட்டளையை கேட்டுக் கொண்டுள்ளோம். அவ்வாறு பெறப்படும் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு 6 மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறக்கட்டளைக்கு உத்தரவிடப்படும்.

சாய்பாபா இருந்தபோது அறக்கட்டளை தொடர்பாக எந்தவித சந்தேகமோ, புகாரோ எழவில்லை. ஆனால் அவர் மறைவுக்குப் பிறகு அறக்கட்டளை செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மையை உறுபடுத்த தான் இந்த விஷயத்தில் அரசு தலையிட முடிவு செய்தது.

அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சலுகை விலையில் மின்சாரம், குடி தண்ணீர் போன்றவை வழங்கப்படுகிறது. சொத்து வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் இனியும் தொடரும்.

திருப்பதி தேவஸ்தானத்தில் இருப்பது போன்று சாய்பாபா அறக்கட்டளைக்கும் ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. ஆனால், கண்காணிப்புக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கனிமொழி, ராசாவுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும்: ஜஸ்வந்த் சிங்

டெல்லி: 2ஜி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ள கனிமொழி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

யாராவது கொலை, திருட்டு அல்லாத குற்றச்சாட்டுக்கு உள்ளானால் விசாரணை நடக்கையில் அவர்கள் சிறையில் அடைக்கப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர்களுக்கு நிரந்தரமாக ஜாமீன் மறுக்க முடியாது.

ஜாமீன் என்பது குடிமக்களின் உரிமை. கனிமொழி எம்.பி., ஆ. ராசா ஆகியோருக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாஜகவின் கருத்தன்று. அவர்களை நிரந்தரமாக சிறையிலேயே வைக்க வேண்டும் என்று பாஜக கூறவில்லை என்றார்.

English summary
Senior BJP leader Jaswant Singh has told that Kanimozhi MP and A. Raja should be given bail. He makes it clear that is his opinion and not the party's.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக யாரிருந்தாலும் கடும் நடவடிக்கை"


தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணரமுடிகிறது. ஆயுதத்துடன் நடமாடுபவர்கள் யாராகவிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நான் கட்டளையிடுகின்றேன் என கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாதுகாப்பு அதிகமாகவுள்ள திமிலைத்தீவு பகுதியில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளையானது வெறுமனே சாதாரணமான ஒரு விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளைகளும் கொலைகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணம் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்துகொண்டு சிலர் ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகும். இந்த ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பில் எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றினை நாங்கள் தேடியளிப்போம் என அவர் எச்சரித்துள்ளார்.

நிச்சயம் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட ஐந்துபேரையும் தண்டிப்போம் எனவும் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

நேற்று மட்டக்களப்பு திமிலைதீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளையினை தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வங்கி முகாமையாளர்களையும் மட்டக்களப்பில் உள்ள முன்னாள் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல் கட்சியாக உள்ளவர்ளையும் இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடாந்து கருத்து தெரிவிக்கையில்,

"ஊடகங்களுக்கு தெளிவாகக் கூறுகின்றேன். இந்த நாட்டில் ஆயுதம் வைத்திருக்கக்கூடியவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரே. வேறு எவரும் ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவ்வாறு வைத்திருந்தால் அவர்கள் யாராகவிருந்தாலும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

அவற்றை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் தேடுதல்களையும் சுற்றிவளைப்புக்களையும் வீதித்தடைகளையும் ஏற்படுத்த வேண்டியேற்படும். இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படும். இவற்றை எவராலும் தடுக்கமுடியாது. எந்த அரசியல் கட்சியாகவிருந்தாலும் சரி அவர்கள் எவராக இருந்தாலும் சரி யார் பிள்ளையாக இருந்தாலும் சரி பரவாயில்லை. நாம் நடவடிக்கையெடுப்போம். இங்கு சொல்லப்படும் சொல்லுக்கும் நான் பொறுப்பெடுக்கின்றேன்.

ஆரம்பத்தில் ஐந்து இயக்கங்களிடம் ஆயுதங்கள் இருந்தன. பின்னர் அவர்களில் விடுதலைப் புலிகள் தவிர ஏனையவர்கள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்தனர். இறுதியில் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் பயங்கரவாதத்துக்கு இடம் கிடையாது. அபிவிருத்திக்கும் சுதந்திரத்துக்கும்தான் இடமுண்டு.

மனதில் உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு சமாதானத்துக்கானவர்கள் போல் நடிக்கமுடியாது. அவ்வாறு நடிப்பவர்களை எமக்கு தெரியும். எமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனைபவர்களை தேடி அழித்தே ஆகுவோம்.

அபிருத்திக்கோ, சமாதானத்துக்கோ குந்தகம் விளைவிக்கும் சம்பவம் இருந்தால் அதுபற்றி அறிவிக்கவேண்டும். அறிவிக்காமல் இருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

24 மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பிற்காக கஷ்டப்படுகின்றோம். ஆனால் ஆயுதம் தரித்த ஐந்து பத்துப்பேர் அவற்றினை சீர்குலைத்துவருகின்றனர்.

நான் பொலநறுவை உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ளேன். இந்த மாவட்டங்களில் மட்டக்களப்பிலேயே அதிக கொள்ளை, கொலை, கப்பம் கோருதல் என்பன இடம்பெற்றது. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களாக இருந்தவர்கள் வியாபாரிகளிடம் கப்பம் பெற்றுக்கொண்டு சொகுசாக வாழ்ந்துவந்தார்கள்.

அந்த நிலை குறைந்திருந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களில் மட்டக்களப்பிலேயே அதிக வன்முறைச் சம்பங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து சில அரசியல் கட்சிகளின் பின்புலம் தொடர்பிலும் தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன.

திமிலைதீவில் இடம்பெற்ற இந்த வங்கிக் கொள்ளையானது அந்த வங்கியிலே இடம்பெறவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக இடம்பெறாமையும் ஒரு காரணம் என நான் அறிகின்றேன்.

ஏற்கனவே களுவாஞ்சிகுடியிலும் இவ்வாறான வங்கிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களை பிடித்ததுடன், ஒருவரை பிடிப்பதற்கான நடவடிக்கையில் நாம் ஈடுபட்டுள்ளோம். பிடித்தவர்களிடம் இருந்து 30 இலட்சம் ரூபா பணத்தினையும் மீட்டுள்ளோம்.

இதேபோன்று தான் இந்தக் கொள்ளையுடன் தொடர்புபட்டவர்களையும் நாங்கள் விரைவில் பிடிப்போம். அந்த ஐவரையும் தண்டிப்போம்.

வங்கி முகாமையாளர்கள் வங்கி பாதுகாப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளையும் பலப்படுத்த வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் இன்றிலிருந்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மேலாக இராணுவத்தினரின் பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும்போது அதனை தெரியப்படுத்துவதற்கான தந்திரோபாயங்களை வங்கியில் மேற்கொள்ளவேண்டும். அவற்றில் அபாய ஒலிகளை எழுப்பக்கூடிய சமிக்ஞைகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

அதனை முகாமையாளர் தாம் இருந்தவாரே எவருக்கும் தெரியாதவாறு எழுப்புவதற்கான ஒழுங்கிணை செய்யவேண்டும். அந்த அபாய ஒலியானது வங்கியின் சுற்றுப்புறத்தில் நூறு மீற்றருக்காவது கேட்கக்கூடியவாறு அமையவேண்டும்.

இன்றில் இருந்து வங்கிக்குள் எந்த வாகனமும் உட்செல்ல அனுமதிக்ககூடாது. வங்கி முகாமையாளர் உட்பட பாதுகாப்பு தரப்பினரின் வாகனங்களும் உட்செல்லமுடியாது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.

வங்கிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு பாதுகாப்பு கமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். அத்துடன் வங்கியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அருகில் இருக்கும் வீட்டு உரிமையாளர்களுடன் உறவுகளைப்பேண வேண்டும். அவர்களை மாதம் ஒரு முறையாவது அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாக பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும்.

வங்கிகள் தங்களது பாதுகாப்புக்களை தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களது பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டே பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டும். பாதுகாப்பு படையினரின் அறிவுறுத்தலை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்.

இந்த கலந்துரையாடலுக்கு நேரத்துக்கு சமூகம் தராத வங்கி அதிகாரிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கி உயர் அதிகாரிகளுக்கு அறிவிப்பேன். இங்கு கலந்துரையாடப்படும் விடயம் வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பான விடயம். இவற்றுக்கு உரிய நேரத்துக்கு சமூகமளிக்காதவர்கள் வங்கிகளின் பாதுகாப்பில் எவ்வாறு அக்கரைகொள்வர், எனவும் கேள்வியெழுப்பினார்.

இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு தரப்பினர் சார்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் கட்டளைத்தளபதி பிரிக்கேடியர் மகிந்த முதலிகே, மட்டக்களப்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் கரவிட்ட மற்றும் படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈரோஸ், டெலோ, புளோட், ஈ.பி.டி.பி.ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சர்? பிரதமர் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஊழல் புகார்கள் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கடும் நெருக்கடியில் உள்ளது. இதையடுத்து அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் திட்டமிட்டு வருகிறார். இதை அவரை சமீப காலமாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் குடியரசுத் தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், விலைவாசி உயர்வுப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும், பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்தும் குடியரசுத் தலைவருடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறபப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தைப் பொறுத்தவரை கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத்துறை நீடிக்கும் என்றும் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சர்?

ராசா இடம் இன்னும் காலியாக உள்ளதால் அவருக்குப் பதில் திமுகவிலிருந்து டி.ஆர்.பாலு அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. அவரை பிரதமர் விரும்பாவிட்டால் டி.கே.எஸ். இளங்கோவன் அமைச்சராக்கப்படலாம்.

தயாநிதி மாறன் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயம், வேறு சில அமைச்சர்கள் நீக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.

English summary
PM Manmohan Singh met president Prathiba Patil and discussed about cabinet reshuffle, sources say. Some ministers will lose their posts, the sources say. T.R.Baalu may be given minister post again.

தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு


ஈழ மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண் கலங்கிய சூர்யா, சிவகுமார்! (

இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு உதவும் சூரியா, சிவகுமாரின் அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஈழ மாணவன் ஒருவன் தனது கஷ்டங்களை சொல்லும் போது சூரியா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

தற்போது பயங்கரவாதம் இல்லை. சகலரும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கக்கூடிய

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக அரசாங்கம் எவரையும் ஏற்காது


* வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பைவிட அரசுக்கே மக்கள் ஆதரவு உண்டு.
* வடக்கில் சகல உள்ளூராட்சி சபைகளிலும் அரசு போட்டியிடும்.

அரசாங்கமோ ஜனாதிபதியோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த நிலை நாட்டில் இன்றில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது பயங்கரவாதம் இல்லை. சகலரும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கக்கூடிய நிலை உள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் அதன் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கும். அதே போன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் சுதந்திரமாக தெரிவிக்க முடியும்.
தற்போது தமிழ் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமது தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது தொடர்பில் சர்வதேச அழுத்தங்களின் விதத்தில் மாற்றம் காணப்படுகின்றது. இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே சர்வதேச அழுத்தங்களும் உள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றிருந்த காலம் ஒன்றிருந்தது. அவர்களின் பின்னணியில் அப்போது புலிகள் செயற்பட்டனர். புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறப்பட்ட யுகம் ஒன்று இருந்தது.
அரசாங்கம் இவற்றை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை நோக்குகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பைப் போன்றே அரசாங்கத்திற்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஆதரவு உண்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வவுனியாவைப் பொறுத்த வரை கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 41 வீதமான வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 49 வீத ஆதரவையும் பெற்றிருந்தது.
இம்மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் கிளிநொச்சியில் 3 உள்ளூராட்சி சபைகளிலும் அரசாங்கம் போட்டியிட உள்ளது. இம் முடிவுகளும் அரசாங்கத்திற்கான ஆதரவை தெளிவுபடுத்துவது உறுதி. அரசாங்கம் ஒரு போதும் விடுதலைப்புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறு ஏற்றுக் கொண்டதனால்தான் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தார். இப்போதும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்புதான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என்பதை அரசு ஒரு போதும் ஏற்காது.
தற்போது வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கிலும் அரசாங்கத்திற்கு சிறந்த ஆதரவு நிலவுகிறது. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசம் என்ற நிலை இன்றி 30 வருடங்களுக்கு பின்னர் இம்முறை தான் சுதந்திரமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தே வடக்கு மக்கள் வாக்களித்தனர். அப்போது ஜனநாயகம் பற்றி எவரும் பேசியதில்லை. இன்று ஜனநாயகம், சுதந்திரம் என்று பலரும் குரல் கொடுக்கின்றனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வை நாம் தமிழ் மக்களுக்காகவே விரைவு படுத்துகிறோம். இதன் நன்மைகளை தமிழ் மக்களே அடைவர். எந்த அமைப்புகளுக்காகவும் நாம் தீர்வை முன்வைக்கவில்லை.தற்போது வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
புலிகள் தமது பிள்ளைகளை கடத்திச் சென்றநிலை இன்று அம்மக்களுக்கு இல்லை. பொதுவாகவே வடக்கில் தற்போது கடத்தல், காணாமல் போதல் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் தேவை தமக்கான வீடு, விவசாயம் செய்வதற்கான சூழல், தமது பிள்ளைகளுக்கான கல்வி, தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவையே. அதனைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே அரசாங்கம் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலவிட்டு வருகின்றது. ஒரு தனி நபர் என்ற நோக்கில் அதை நோக்கினால் தெற்கில் 25 பேருக்கு செலவிடக்கூடிய நிதி வடக்கில் ஒருவருக்காக செலவிடப்படுகின்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீள்குடியேற்றப்பட்டு தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே மீள்குடியேறுவதற்காக எஞ்சியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நிறைவு பெற்றுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முடிவுற்றதும் எஞ்சியுள்ள 12 ஆயிரம் பேரும் மீள்குடியேற்றப்படுவார்கள். பாராளுமன்றம் சகல கட்சிகளினதும் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் சபையாகும். அதனால்தான் பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதைப் போல அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்கும். இது விடயத்தில் அரசாங்கம் அதன் தெளிவான தீர்மானத்தை தெரிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வகட்சிகளின் கருத்துக்களும் இத்தீர்வில் இணைத்துக்கொள்ளப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர், சர்வகட்சி குழுவின் செயற்பாடுகள் 2009 மே மாதத்தில் முன்னர் இடம் பெற்றவை. எவ்வாறெனினும் சர்வகட்சிக் குழுவின் கருத்துக்களையும் இனப்பிரச்சினைத் தீர்வில் இணைத் துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் குறிப்பிட்டார்.

இறுதியில் புலிகளின் லீடர்கள் தோற்றதாக அல்லாமல் புலிகளின் தலைவரும் தோற்றுப் போனார்.

வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”
- எஸ்.எம்.எம்.பஷீர்
“நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா”
                             சுப்ரமணிய பாரதி
புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட  படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே . அவ்வாறான யிற்சிகளையும்  தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ்  எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும் , அத்தலைமைத்துவத்தின்  கீழ் கட்டுப்படும் "போராளிகள்' எதனை தலைமைத்துவத்திடம்  எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் “வழிகாட்டி” (Guidelines)  கூறுகிறது. ஆனால் மிகக் கவனமாக அவ்வழிகாட்டியின்  (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது. இங்குதான் புலிகளின் தலைமைத்துவத்தின் கபடத்தனத்தையும் பட்டவர்த்தனமாக காணக் கூடியதாகவுள்ளது.     “வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது” என்ற தலைப்பிலுள்ள அந்த கையேட்டின் “தலைமை” பற்றிய தலைப்பானது வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் தலைவருடையது என்பதை உண்மையில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனையே நிதர்சனமாக வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தோல்வி புலிகளின் தோல்வியாக தமிழ் தேசிய வக்கிரத்தினதும் வன்முறையினதும் தோல்வியாக சகல தோல்விகளும்  முள்ளிவாய்க்காலில்  முடிவுற்றாலும் அது புலிகளின் தலைவரின் தோல்வியாக அடையாளப்படுத்திமட்டும் பார்க்க முடியாதவாறு தமிழர் தேசியஜனநாயக  சக்திகளும் தங்களை இணைத்து  அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.   தமிழர் தலைமைகளும்  தங்களின் இறுக்கமான குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் அரசியல் நகர்வுகளிலும் தோல்வியுற்ற தலைமைகள்தான். 
எது எவ்வாறாயினும் புலிகள் இயக்க "போராளிகள்" எனப்பட்டோர் தலைவர் என்ற தமிழ் சொல்லினூடாக மட்டும் தமது ஏக போக தலைவரான  பிரபாகரனுக்கு கீழ்படிந்த கட்டுப்பட்ட , அவரின் கட்டளையை சிரமேற்கொண்டு பலரின் சிரத்தை கொய்த , தற்கொலை செய்து பலரை  அழித்தொழித்த   வேளைகளிலெல்லாம் லீடர் என்ற ஆங்கிலச் சொல்லை பாவிக்க முடியவில்லை . ஏனெனில் லீடர் என புலிகள் கீழ் நிலை  தலைவர்களை ( குழு லீடர் )    மட்டும் சுட்டி நிற்பதாக குறித்து அவர்களின் தோல்விகள் லீடருடையது எனதாக்கினர். ஏனெனில் புலிகள் அமைப்பு என்றுமே தோற்காத தலைவரை (பிரபாகரனை ) கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தமது இயக்கத்தையும் தமிழ்  சமூகத்தினையும் கட்டமைத்தனர். நல்லூர் கந்தன் மீது கொண்ட பக்தியை ஒத்த பக்தியை (கடவுள் பக்தி)  லீடர் மீதும் வைக்க வேண்டும் என்றும வற்புறுத்தினர். கோலியாத் மீது தாவீது மேற்கொண்ட புத்தி சாதூரியமான 'போராளிகளை " உருவாக்க பயிற்சியளித்து இறுதியில் புலிகளின்  லீடர்கள் தோற்றதாக அல்லாமல் புலிகளின் தலைவரும் தோற்றுப் போனார். தலைவர் தான் லீடர் அல்ல என்ற கதை போய் தலைவர் லீடராகி தோற்றுபோனார்.

றெமீடியஸ்:பத்திரிகை தர்மத்தை துளியும் மதிக்காமல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிப்பதில்லை - மாநகர எதிர்க்கட்சி உறுப்பினர் றெமீடியஸ் குற்றச்சாட்டு
யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிக்காமலும் அவர்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து என்னுடன் கலந்துரையாடப்படாமலும் நடந்து வருகிறார்கள் என மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினரும் சட்டத்தரணியுமான றெமீடியஸ் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற ஆறாவது மாதாந்தக் கூட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் முதல்வரின் அனுமதியுடன் சபையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாநகரசபைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் என்னை அனைவரது முன்னிலையில் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக நியமித்தனர். இருந்தும் யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் எனக்கு உரிய கௌரவம் அளிக்காமலும் அவர்களால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து என்னுடன் கலந்துரையாடப்படாமலும் நடந்து வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும் பத்திரிகைக்கு என்று பொதுவாக ஒரு தர்மம் உண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகும் சில பத்திரிகைகள் பத்திரிகை தர்மத்தை துளியும் மதிக்காமல் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு என் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது வருந்தத்தக்கது.

அத்துடன் என்னிடம் எதுவித விசாரணையும் நடத்தாமல் நான் கட்சி மாறிவிட்டதாக செய்திகள் வெளியிட்டதன் மூலம் பத்திரிகை தர்மமே குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது ஒருவரைப்பற்றி ஒரு செய்தி வெளியிடுவதனால் முதலில் சம்மந்தப்பட்டவருடன் தொடர்பு கொண்டு செய்தியின் உண்மைத்தன்மை ஊர்ஜிதம் செய்த பின்னரே வெளியிடுவதுதான் முறை ஆனால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பத்திரிகை இவ்விதமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவதில் முனைந்து நிற்கின்றது.

தொடர்ந்து பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு பல வழிகளில் இரவு பகல் பாராது சிரத்தையுடன் முன்னின்று உழைத்த மாநகர முதல்வருக்கும் மாநகர சபை ஊழியர்களுக்கும் மக்கள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.  

இம் மாதாந்த கூட்டத்தில் ஏற்கனவே நடைபெற்ற கடந்த மாதத்திற்கான சுகாதாரக்குழு  மராமரத்துக்குழு நிதிக்குழு அறிக்கைகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டன

சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்?: சிபிஐ சந்தேகம்

முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.சாதிக் பாட்சாவின் மரணம் தொடர்பான வழக்கை தமிழக போலீசிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி சிபிஐ ஏற்றது.சென்னையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தற்போது தங்களது சந்தேகங்களை உறுதிசெய்ய சாதிக் பாட்சாவின் உள் உறுப்புகள் மற்றும் இதர ரசாயன ஆய்வு முடிவுகளுக்காக சிபிஐ அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.பாட்சாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர் டெக்காலின் அறிக்கையில் இருந்து தாங்கள் கண்டறிந்தவை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.சாதிக் பாட்சா சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மார்ச் 17-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ அவரிடம் விசாரணை நடத்திவந்த நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.பின்னர் சாதிக் பாட்சாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வோம்- ராமதாஸ்

சென்னை: திமுகவுடனான கூட்டணியை உள்ளாட்சித் தேர்தலில் தொடருவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக மட்டும் மோசமான தோல்வியைத் தழுவவில்லை. மாறாக காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே மகா அடியை வாங்கியுள்ளன.

தங்களது தோல்விகளுக்கு இந்தக் கட்சிகள் படு ஈசியான ஒரு பதிலை வைத்துள்ளன. அது திமுகவுடன் சேர்ந்ததால்தான் வீணாய்ப் போனோம் என்ற பதில்.

நன்றி கொஞ்சம் கூட இல்லாத காங்கிரஸ்காரர்கள் இப்போது திமுகவால்தான் தோற்றோம் தோற்றோம் என்று ஊர் ஊராகப் போய்த் தம்பட்டம் அடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் கூட திமுகவால்தான் தோல்வியைச் சந்தித்தோம் என்றார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ராமதாஸ். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பொதுக்குழு கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று கூறினார் அவர்.

சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 31 இடங்கள் கொடுக்கப்பட்டு பின்னர் ஒன்று பிடுங்கப்பட்டு, 30 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 3 இடங்களில் மட்டுமே பாமக வென்றது.

பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் பனிப்போர் மூண்டு வந்த நிலையில்தான் அவர்கள் தேர்தலை சந்தித்தனர். இந்த நிலையில் ஒருவரை ஒருவர், சரியாக பணியாற்றாமல் கவிழ்த்து விட்டுக் கொண்டதாக தேர்தலுக்குப் பின்னர் இருதரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி கல்விக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த ஒன்றரை மாதகால அதிமுக அரசின் மோசமான செயல்பாட்டிற்கு கல்வி பிரச்சனையே உதாரணம். மற்றப்படி பாராட்டும்படி பெரிய அளவில் ஒன்றும் இல்லை.

பொதுமக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்ற 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடை நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட வேண்டும் என்றார் அவர்.
 

English summary
PMK founder Dr. Ramadoss has said that the party will decide on the alliance with DMK in general council meeting soon. He released the shadow budget in Chennai today.

தயாரிப்பாளர் கொலை- கன்னட நடிகைக்கு 3 ஆண்டு சிறை- காதலருக்கு 10 வருடம்

மும்பை: டிவி தயாரிப்பாளர் நீரஜ் குரோவர் கொலை வழக்கில் கன்னட நடிகை மரியா சூசைராஜுக்கு 3 ஆண்டும், அவரது காதலர் எமிலி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் இன்று விதிக்கப்பட்டது. மரியா ஏற்கனவே சிறைக் காலத்தை அனுபவித்து விட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்த டிவி தயாரிப்பாளர் குரோவர். அப்போது வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்ந்தவர் மரியா சூசைராஜ். இந்தித் திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்க மும்முரமாக இருந்தவர். இவருக்கும் குரோவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நட்பானது. இதை மரியாவின் காதலர் எமிலி ஜெரோம் விரும்பவில்லை.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு மே 27ம் தேதி இரவு மும்பை புறநகர்ப் பகுதியான மலட் பகுதியில் உள்ள மரியாவின் வீட்டுக்கு சென்றார் ஜெரோம். அங்கு தங்கியிருந்த குரோமுக்கும் அவருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் ஜெரோம், குரோவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.

இதையடுத்து மரியா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரும், ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டினர். கிட்டத்தட்ட 300 துண்டுகளாக உடலை குதறி எடுத்த இருவரும், அதை தானே அருகே ஒரு காட்டில் போட்டு விட்டனர்.

இந்த வழக்கில் இருவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான விசாரணை மும்பை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த விசாரணையில் ஜெரோம் கொலையாளி என்றும், அவருக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களை அழித்ததாக மரியா குற்றவாளி என்றும் மும்பை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.

அதன்படி ஜெரோமுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மரியாவுக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. மரியா 3 ஆண்டுகளை ஏற்கனவே சிறையில் கழித்து விட்டதால் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

தண்டனை விவரத்தைக் கேட்டதும் குரோவரின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல அரசு வக்கீல் ஆர்.வி.கினியும் கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கினி கூறுகையில், இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்படும் என்றார்.

குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர் கூறுகையில் இதுதான் தீர்ப்பா?. மிக அதிர்ச்சியாக உள்ளது. கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என இந்தக் கொலையாளிகளுக்கு தீர்ப்பளிக்க வேண்டும். எனது மகனைக் கொன்ற மரியாவும், ஜெரோமும் சாக வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். இந்த தீர்ப்பு பெரும் ஏமாற்றமளிக்கிறது என்றார் கோபத்துடன்.

குரோவர் கொலை வழக்கில் ஜெரோமுக்கும், மரியாவுக்கும் மிகச் சாதாரணமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், மரியாவை விடுதலை செய்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
English summary
Kannada Actress Maria Susairaj was sentenced 3 yrs imprisonment and her lover Gerome was given 10 yr jail term in Neeraj Grover murder case. Since Maria had spent 3 yrs in prison she was ordered to be released by a Mumbai court. Gerome killed Grover in Mumbai in 2008 at Maria's residence. Later both Maria and Gerome made Grover's body into 300 pieces and thrown them near Thane in a forest.