வெள்ளி, 1 ஜூலை, 2011

20 ஆயிரம் கோடி Padmaban swamy Temple நகைகளின் மதிப்பு


திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை ஒன்றில் இருந்து இதுவரை கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. இன்னும் 2 பாதாள அறைகள் திறக்கப்பட வேண்டியுள்ளதால் நகைகளின் மதிப்பு மிகப் பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் மிகவும் பழமையானது. இங்கு ஆறு பாதாள அறைகள் உள்ளன. அதில் என்ன உள்ளது என்பதைத் திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பபட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 முன்னாள் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதன்படி மொத்தம் உள்ள 6 பாதாள அறைகளில் 4 அறைகளை இக்குழு ஆய்வு செய்து பார்த்தது. அப்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆய்வின்போது பெருமளவிலான நகைகள்,பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவை கிடைத்தன. அவற்றின் மதிப்பை அறிய கணக்கீடு செய்யப்பட்டது. இந்த மதிப்பீட்டில் அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1000 கோடி இருக்கும் என முதலில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போதோ இந்த மதிப்பு ரூ. 20,000 கோடியாக உயர்ந்துள்ளது. திருவாதாங்கூர் மன்னர்கள் அணிந்திருந்த விலைமதிப்பற்ற காசி நெக்லசுகள், மகுடங்கள், நகைகள், விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தவிர 3 மகுடங்கள், ஒரு பத்மநாபசுவாமி சிலை, அவல் என்னும் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த ஆயிரம் சரத்போலி செயின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு செயின் மட்டும் 18 அடி நீளம் உள்ளது. ஏராளமான தங்க செங்கோல்கள் மற்றும் பதக்கங்களும் அதில் இருந்தன.

இந்த பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதால் அங்கு விஷவாயு இருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டதால் முதலில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பிறகு அங்கு செல்லும் அனைவருக்கும் ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட்டது. மீதமிருக்கும் ஒரு அறை இன்று திறக்கப்படுகிறது.

18-வது நூற்றாண்டில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது இந்தக் கோவில். திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினரைக் கொண்ட அறக்கட்டளை மூலம் இக்கோவில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Valuables worth Rs. 20, 000 crore have been taken from Trivandum Padmanabhaswamy temple's secret chamber which was opened yesterday. Officials have already taken jewels and other valuables worth Rs. 1000 crore. There are 6 chambers in the temple. So far, 5 chambers have been opened. The last one will be opened today. 
மிகவும் வறுமையாக மக்கள் வாழும் ஒரு நாட்டில் உள்ள கோவில் ஒன்றில் இருந்து இருபது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு மோசமான மக்கள் விரோத ஆட்சியாளர்களாக  அன்றைய கேரளா மார்த்தாண்ட வர்மாக்கள் இருந்திருக்கிறார்கள்?
ஆதிவாசிகளையும் கேரளாவின் தாழ்த்தப்பட்ட ஈழவர் சமுகத்தையும் சுரண்டியும்  ஆங்கிலேயர்க்கு நாட்டை விற்றும் சம்பாதித்த தங்கம் அல்லவா?
மேட்டுக்குடி மலையாளிகள் எல்லாம் இந்த கேரளா ராஜாக்களை எதோ தெய்வப்பிறவிகள் போல் சித்தரிப்பது எவ்வளவு கொடுமை?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக