இலங்கையில் சிங்களவர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழலாம் இந்தியாவில் தமிழர்களுடன் ஒன்றுசேர்ந்து வாழ்வதில் பாரிய பிரச்சனை காணப்படுவதாக இலங்கையிலிருந்து இந்தியா சென்ற அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை நடத்துவதைவிட தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கேவலமாக நடத்தப்படுவதாக இலங்கை அகதியான வித்யா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமக்கு பாதுகாப்பு வழங்காவிட்டால் பிள்ளைகளின் கல்விச் சான்றிதழை எரித்து ரேசன் கார்ட்களுடன் சென்று ஆர்பாட்டம் செய்வோம் என அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
பெற்றோர் வீட்டில் இல்லாதவேளையில் அவர்களின் குடிசைக்குள் நுழைந்து குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு குழந்தையின் தாய் ஓடி வருகையில், சந்தேகநபர் குழந்தையையும் தூக்கிக் கொண்டு ஓடியுள்ளான்.
அயலவர்களும் துரத்தவே குழந்தையை கீழே எறிந்துவிட்டு தப்பியோடியுள்ளான். இதனால் காயமடைந்த குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக