வெள்ளி, 1 ஜூலை, 2011

டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சர்? பிரதமர் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஊழல் புகார்கள் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கடும் நெருக்கடியில் உள்ளது. இதையடுத்து அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் திட்டமிட்டு வருகிறார். இதை அவரை சமீப காலமாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பாக அவர் குடியரசுத் தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், விலைவாசி உயர்வுப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும், பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்தும் குடியரசுத் தலைவருடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறபப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தைப் பொறுத்தவரை கபில் சிபல் வசம் தொலைத் தொடர்புத்துறை நீடிக்கும் என்றும் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சர்?

ராசா இடம் இன்னும் காலியாக உள்ளதால் அவருக்குப் பதில் திமுகவிலிருந்து டி.ஆர்.பாலு அமைச்சராக்கப்படலாம் என்று தெரிகிறது. அவரை பிரதமர் விரும்பாவிட்டால் டி.கே.எஸ். இளங்கோவன் அமைச்சராக்கப்படலாம்.

தயாநிதி மாறன் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேசமயம், வேறு சில அமைச்சர்கள் நீக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது.

English summary
PM Manmohan Singh met president Prathiba Patil and discussed about cabinet reshuffle, sources say. Some ministers will lose their posts, the sources say. T.R.Baalu may be given minister post again.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக