வெள்ளி, 1 ஜூலை, 2011

இறுதியில் புலிகளின் லீடர்கள் தோற்றதாக அல்லாமல் புலிகளின் தலைவரும் தோற்றுப் போனார்.

வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது”
- எஸ்.எம்.எம்.பஷீர்
“நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா”
                             சுப்ரமணிய பாரதி
புலிகளின் யுத்த பயிற்சி கையேடு பல தரப்பட்ட  படையணிகளையும் அதற்க்கான பயிற்சி பொறிமுறைகளையும் கொண்டிருந்தது சகலரும் அறிந்ததே . அவ்வாறான யிற்சிகளையும்  தாக்குதல்களையும் நடத்த நியமிக்கப்பட்ட தலைவர்களின் கீழ்  எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வெளியிட்ட கையேட்டில் மிகக் கவனமாக தலைமைத்துவத்தை போற்றும் , அத்தலைமைத்துவத்தின்  கீழ் கட்டுப்படும் "போராளிகள்' எதனை தலைமைத்துவத்திடம்  எதிர்பார்க்கலாம் எவ்வாறு தலைமைத்துவத்துக்கு பக்தியோடு இருக்கலாம் என்பது பற்றியெல்லாம் புலிகளின் “வழிகாட்டி” (Guidelines)  கூறுகிறது. ஆனால் மிகக் கவனமாக அவ்வழிகாட்டியின்  (கையேட்டின்) தலைமைத்துவம் பற்றிய தலைப்பு மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளது. இங்குதான் புலிகளின் தலைமைத்துவத்தின் கபடத்தனத்தையும் பட்டவர்த்தனமாக காணக் கூடியதாகவுள்ளது.     “வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் லீடருடையது” என்ற தலைப்பிலுள்ள அந்த கையேட்டின் “தலைமை” பற்றிய தலைப்பானது வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள் எல்லாம் தலைவருடையது என்பதை உண்மையில் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனையே நிதர்சனமாக வரலாறு இன்று நிரூபித்திருக்கிறது. பிரபாகரனின் தோல்வி புலிகளின் தோல்வியாக தமிழ் தேசிய வக்கிரத்தினதும் வன்முறையினதும் தோல்வியாக சகல தோல்விகளும்  முள்ளிவாய்க்காலில்  முடிவுற்றாலும் அது புலிகளின் தலைவரின் தோல்வியாக அடையாளப்படுத்திமட்டும் பார்க்க முடியாதவாறு தமிழர் தேசியஜனநாயக  சக்திகளும் தங்களை இணைத்து  அடையாளப்படுத்தி வந்துள்ளனர்.   தமிழர் தலைமைகளும்  தங்களின் இறுக்கமான குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் அரசியல் நகர்வுகளிலும் தோல்வியுற்ற தலைமைகள்தான். 
எது எவ்வாறாயினும் புலிகள் இயக்க "போராளிகள்" எனப்பட்டோர் தலைவர் என்ற தமிழ் சொல்லினூடாக மட்டும் தமது ஏக போக தலைவரான  பிரபாகரனுக்கு கீழ்படிந்த கட்டுப்பட்ட , அவரின் கட்டளையை சிரமேற்கொண்டு பலரின் சிரத்தை கொய்த , தற்கொலை செய்து பலரை  அழித்தொழித்த   வேளைகளிலெல்லாம் லீடர் என்ற ஆங்கிலச் சொல்லை பாவிக்க முடியவில்லை . ஏனெனில் லீடர் என புலிகள் கீழ் நிலை  தலைவர்களை ( குழு லீடர் )    மட்டும் சுட்டி நிற்பதாக குறித்து அவர்களின் தோல்விகள் லீடருடையது எனதாக்கினர். ஏனெனில் புலிகள் அமைப்பு என்றுமே தோற்காத தலைவரை (பிரபாகரனை ) கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தமது இயக்கத்தையும் தமிழ்  சமூகத்தினையும் கட்டமைத்தனர். நல்லூர் கந்தன் மீது கொண்ட பக்தியை ஒத்த பக்தியை (கடவுள் பக்தி)  லீடர் மீதும் வைக்க வேண்டும் என்றும வற்புறுத்தினர். கோலியாத் மீது தாவீது மேற்கொண்ட புத்தி சாதூரியமான 'போராளிகளை " உருவாக்க பயிற்சியளித்து இறுதியில் புலிகளின்  லீடர்கள் தோற்றதாக அல்லாமல் புலிகளின் தலைவரும் தோற்றுப் போனார். தலைவர் தான் லீடர் அல்ல என்ற கதை போய் தலைவர் லீடராகி தோற்றுபோனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக