Hindu tamil : இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இது 7.1 ரிக்டராக பதிவானது.
இந்நிலையில் நேபாள – திபெத் எல்லையில் தற்போது மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அது 4.5 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சீன ஊடகங்கள் தரப்பில், திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன், 8 ஜனவரி, 2025
நேபாளம் – திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
செவ்வாய், 7 ஜனவரி, 2025
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு - என்ன காரணம்?
BBC News தமிழ் : எதிர்பார்க்கப்பட்டபடியே கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள தனது வீட்டில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "2015-ஆம் ஆண்டில் பிரதமரான கணம் முதலே கனடாவுக்காகவும் கனேடிய மக்களுக்காகவும் பாடுபட்டு வந்துள்ளேன்.
நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளேன். கொரோனா தொற்று காலத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்ததை கண்ணுற்றேன்.
வட அமெரிக்க கண்டத்தில் தடையில்லா வர்த்தகம் நீடிக்க உழைத்தேன்" என்றார்.
திங்கள், 6 ஜனவரி, 2025
சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு! சிறுபிள்ளைத்தனமானது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
ஆனால் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் முழு உரையையும் வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் மதிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இலங்கை நுண் கடனில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தற்கொலை.. அதிர்ச்சி புள்ளிவிபரம்
tamlmirror : இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக் கடன் பெறுகின்றனர், அதில் 24 இலட்சம் பேர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையிலுள்ள நுண் நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்கு கடன் வசதிகளை வழங்குவதாகவும், கடனை செலுத்த முடியாத சில பெண்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சில பிரதிநிதிகளினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதாகவும் ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு
hindutamil.in : விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.3) தொடங்கி நடைபெற்றது.
அன்றிலிருந்து இன்று வரை மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது.
முதல்நாளில் செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளான சனிக்கிழமை மாநாட்டு பிரதிநிதிகளின் விவாதம் நடைபெற்றது.
கைது வளையத்தில் கதிர் ஆனந்த்… துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்! நடந்தது - நடப்பது என்ன?
minnambalam.com - Aara : “ஜனவரி 3-ஆம் தேதி காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் துரைமுருகன் கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடு, அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வளாகம், துரைமுருகனின் ஆதரவாளர்கள் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் தொடர்பான இடங்கள் என மொத்தம் நான்கு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
துரைமுருகனின் வீட்டில் யாரும் இல்லாததால் நிர்வாக நடைமுறைகள் முடிந்து அவரது வீட்டுக்குள் அமலாக்கத்துறை அதிகாரிகள் நுழைவதற்கு அன்று மதியம் 2:30 ஆகிவிட்டது.
லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ceylonmirror.net -Jeevan : லைக்கா சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்
ஸ்வர்ணவாஹினி, ஸ்ரீ FM, மொனரா TV உள்ளிட்ட இலங்கை வெகுஜன ஊடகங்களின் உரிமையை லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் லைக்கா குழுமம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், லண்டனை தலைமையகமாகக் கொண்ட லைக்கா குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை ஊடகத்துறையில் “மறைமுகமாகவும் இரகசியமாகவும்” தொழில்களை கையகப்படுத்துவதாக சிவில் செயற்பாட்டாளர் ஜமுனி கமந்த துஷார உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
அருந்ததியர் பேரணி - தலைநகரில் கூடுவோம், தலை நிமிரச் செய்வோம்.!
Kathiravan Mayavan : தலைநகரில் கூடுவோம்,
தலை நிமிரச் செய்வோம்.!
ஜனவரி - 06 . காலை 10 மணி
எழும்பூர் எல் .ஜி .சாலை சந்திப்பு ..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொடுக்கப்பட்ட அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
அடித்தட்டு மக்களின் உரிமைகளை வென்றிட இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட சமூக நீதிப் போற்றுகின்ற, ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அனைவரும் அணி திரளுவோம்.
தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு தலைவர் இரா. அதியமான் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆதிக்க தலித்சாதியினாரலால் அபகரிக்கப்படும் அருந்ததியர் மக்களின்
இட ஒதுக்கீடு பாதுகாத்திட சென்னையில் கூடுவோம்.
.மும்பை கதிரவன்
இலங்கை அரசியல் - என்னதான் நடக்கிறது?
Salman Lafeer : கொழும்பு துறைமுகத்தில் எரிபொருள் கப்பல் தரித்து நின்றது. பணத்தை செலுத்தி எரிபொருளை நாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்தது.
மின்சாரம், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் இல்லை.
பணவீக்கம் உச்சத்தை தொட்டிருந்தது, ரூபாயின் பெறுமதி மிக மோசமாக விழுந்தது,
எங்கு பார்த்தாலும் வரிசை, வரிசையில் நின்றாலும் பொருள் கிடைக்காது என்கிற நிலைமை.
மக்களின் அன்றாட வாழ்வே தலைகீழாய் நிலைகுலைந்து போயிருந்தது.
அப்பொதைய நாட்டு நிலமை Debt unsustainable. நாடுகள் கடன் கொடுக்கத் தயாரில்லை.
முதலிடவும் தயாரில்லை. பணவீக்கம் அதிகம். பணத்தை அச்சிட முடியாது. Tax கூட்டவேண்டும். ஆனால் மிகையாகக் கூட்டவும் முடியாது. உள்நாட்டு வருமானம் குறைவு.
துரைமுருகன் ரெய்டு: பிடிபட்ட இரண்டரை கோடி ரூபாய்… அமலாக்கத்துறையின் அடுத்த மூவ் என்ன?
மின்னம்பலம் - Aara : வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டிலும், அவரது குடும்பத்தினர் நிர்வகிக்கும் கிங்ஸ்டன் கல்லூரியிலும் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தினர்.
ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கிய ரெய்டு, துரைமுருகன் வீட்டில் நேற்று இரவுடன் முடிந்தது. ஆனால் கிங்ஸ்டன் கல்லூரியில் இன்றும் அமலாக்கத் துறையினரின் ரெய்டு தொடர்ந்தது.
இதுபற்றி வேலூர் வட்டாரங்களில் விசாரித்தபோது,
“2019 மக்களவைத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் என்பவருடைய இடத்தில் பத்து கோடிக்கும் மேல் பணம் ஐ.டி.யால் பறிமுதல் செய்யப்பட்டது.
சனி, 4 ஜனவரி, 2025
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த ED ரெய்டு நிறைவு!
minnambalam.com -christopher : வேலூர் காட்பாடி அருகே காந்திநகரில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்த வந்தனர்.
ஆனால் கதிர் ஆனந்த் துபாய் சென்றிருந்தால், துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
அதேவேளையில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள துரைமுருகன் ஆதரவாளரும், திமுக மாவட்ட நிர்வாகியுமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்கள், கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.
வெள்ளி, 3 ஜனவரி, 2025
Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல்!
சுமதி விஜயகுமார் ; Gisele Pelicot . உலகெங்கிலும் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களுக்கு ஒரு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
'பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனைத்து பெண்களும் இனிமேல் சொல்ல வேண்டும்.
Gisele Pelicot டால் முடிந்தது. என்னாலும் முடியும் என்று. வெட்கப்பட வேண்டியது நாங்கள் இல்லை.
அவர்கள் தான்.'
Dominique Pelicot அவரது கணவர்.
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் இருவரும் happily married .
அவர்களின் காதலுக்கு சாட்சியாய் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
Gisele ஒரு நிறுவனத்தில் பணிபுரிய, Dominique பல தொழில் துவங்கி எதுவும் சரிவர அமையாமல் இருந்தார். அந்த சமயத்தில் Gisele க்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட , இருவரும் பிரிகிறார்கள்.
காதல் மீண்டும் அவர்களை இணைக்கிறது.
கோவையில் 50 ஆக்கிரமிப்பு வீடுகள்.ஒரே நாளில் இடிப்பு . மேலும் 151 கட்டிடங்களை இடிக்க முடிவு
tamil.oneindia.com - Velmurugan P ;கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 28-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைந்துள்ளது.
இந்த கால்வாயை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை காலி செய்ய வேண்டும் என்று பலமுறை அறிவுறுத்தியும் அங்கிருந்தவரகள் கேட்கவில்லை.. இதையடுத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 50 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
மேலும் 151 கட்டிடங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையை ஒட்டி கிராமங்களே இல்லை என்கிற அளவிற்கு அந்த பகுதியில் எல்லா ஊர்களும் கோவை மாநகரை ஒட்டி வளர்ந்துவிட்டன. இதனால் கோவை மாநகரை சுற்றியுள்ள எல்லா பகுதிகளும் மாநகராட்சியில் தற்போது இணைக்கப்பட உள்ளன. கோவை மாநகரம் தற்போது 100 வார்டுகளாக உள்ள நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், இதன் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
ஐஎஸ் ஐ எஸ் கொடியுடன் சம்சுதீன் ஜாபர் வண்டியை செலுத்தி மக்கள் மீது தாக்குதல் – America நியுஓர்லியன்ஸ் பயங்கரவாதம்
வீரகேசரி : ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் வண்டியை செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் – நியுஓர்லியன்ஸ் சம்பவம் குறித்து அதிகாரிகள் தகவல்
அமெரிக்க - நியு ஓர்லியன்சில் வண்டியை கண்மூடித்தனமாக செலுத்தி பொதுமக்கள்மீது மோதிய நபர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியுடன் தனது வாகனத்தை செலுத்தினார் என விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளன
இது தொடர்பில் ரொய்ட்டர் செய்திச்சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் அமெரிக்க இராணுவீரரானநபர் ஒருவர் ஐஎஸ்; அமைப்பின் கொடியுடன் தனது வண்டியை மிக வேகமாக செலுத்தி தற்காலிக வீதிதடைகளை கடந்து வந்து புதுவருடத்தன்று பொதுமக்கள் மீது மோதினார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவர் ஏனையவர்களின் உதவியுடனேயே செயற்பட்டிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
வியாழன், 2 ஜனவரி, 2025
16 மாநகராட்சிகள் 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம்
Hindu Tamil : சென்னை: நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டு சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம் மற்றும் மறு சீரமைப்புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது.
எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலைக் கருத்தில்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகிறது.
Bhopal Gaz leak போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றம்.. Toxic Waste From 1984 Gas Tragedy
மாலை மலர் : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு திடீரென விசவாயு கசிவு ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டது.
ஆனால் தொழிற்சாலையில் இருந்து நச்சுக் கழிவு அகற்றப்படாமல் இருந்தது. நச்சுக் கழிவை பாதுகாப்பாக இங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்தது.
புதன், 1 ஜனவரி, 2025
அண்ணாமலையின் பொய்களை பரப்பும் முட்டாள்களில் நீங்களும் ஒருவரா?
சுமதி விஜயகுமார் : ஒவ்வொரு முறையும் பிஜேபி ஒன்றியத்தில் வெற்றி பெரும் போதும், வடமாநிலத்தவர்களால் தான் வெற்றி கிடைத்தது என்று கூறி,
அவர்களை மிக கேவலமாக சித்தரித்து பதிவுகள் இடப்படும். பீடா வாயன்கள், பாணி பூரி, அறிவில்லாதவர்கள் என்று. அதையெல்லாம் கடந்த உபி தேர்தல் அடித்து நொறுக்கியது.
தினம் தினம் ஒருவேளை சோற்றுக்கே போராடும் அந்த மக்களுக்கு மேலே நடக்கும் அரசியலை ஒரு இடத்தில் அமர்ந்து , அலசி ஆராய எல்லாம் நேரம் கிடைக்காது.
சொல்ல வேண்டியதை, தரவுகளுடன், மக்கள் மொழியில் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை துருவ் ரதி நிரூபித்தார்.
கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளும் இல்லை,
கல்வி கற்க வாய்ப்பு அமையாதவர்கள் எல்லாம் முட்டாள்களும் இல்லை.
அரகலய கொலைக் களமாவதை தடுத்த ஜெனரல் சவேந்திரா டி சில்வா தன்னிலை விளக்கம்
2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும்,
ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் அவரைத் தவறாகப் புரிந்து கொண்டதாகவும்,
அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி (சிடிஎஸ்) ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று வலியுறுத்தினார்.
இலங்கையின் 8வது சி.டி.எஸ்., ஜெனரல் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் செயலில் சேவையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா 2022 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 8ஆவது பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
பங்களாதேஷில் எல்லை தாண்டிய 95 இந்திய மீனவர்களை வங்கதேசம் விடுதலை செய்வதாக அறிவிப்பு
tamil.oneindia.com - Nantha Kumar R : டாக்கா: மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் மோதலுக்கு நடுவேயும் கூட வங்கதேசம் நம் நாட்டிடம் பணிந்துள்ளது. அதன்படி வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 95 மீனவர்களை விடுதலை செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இதன் தலைவராக முகமது யூனுஷ் உள்ளார். இவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பொதுமக்கள் மீது டிரக்கால் மோதி துப்பாக்கி பிரயோகம் : 10 பேர் உயிரிழப்பு!
தினமணி : அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2024 இல் 223 படங்கள் தோல்வி- - ரூ.1,000 கோடி இழப்பு! உச்ச நட்சத்திரங்களால் நாசமாகும் தமிழ் சினிமா
மாலைமலர் : “2024-ம் ஆண்டு தமிழ் சினிமா பெரும் வசூல் குவிக்கும், இந்திய சினிமாவையே தமிழ் சினிமா கவனிக்க வைக்கும் என்று அனைவருமே எதிர்பார்த்தனர்.
முன்னணி நடிகர்களின் படங்களால் பெரிய அளவில் லாபம் ஈட்டலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா இந்த ஆண்டு கண்ட சாதனைகள், வேதனைகள் குறித்து திரைப்பட வினியோகஸ்தர் சங்க தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் கூறியதாவது:-
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 241 படங்கள் ரிலீசாகி உள்ளன. இதில் அதிக படங்கள் தோல்வி அடைந்து உள்ளன என்பது வருத்தமான விஷயமே.
தாய்லாந்து பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது!
மாலை மலர் : பாங்காக் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் இணைகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அந்நாடு அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெறுகிறது.
இதுபற்றி தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது என அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.