minnambalam.com - Pandeeswari Gurusamy : நடிகர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சோத்துல விஷம் தான் என இளம் பெண் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் பெருந்துயரம் நடந்து 80 நாட்கள் கடந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். விஜய்யின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விஜயின் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவரிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த போது, விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சாப்பாட்டுல விஷம் வைத்து விடுவேன் என்று தெரிவித்தது பெரும் அதிர்ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டுள்ளேன் . ஒருமுறை அதிமுகவிற்கும் ஒருமுறை சீமானுக்கும் ஓட்டு போட்டேன். இந்த முறை கண்டிப்பாக விஜய்க்கு ஓட்டு போட உள்ளேன். ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு எந்த சலுகைகளும் இல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை .. அரசி பருப்பில் கூட ஊழல்.. இலவசம் இலவசம் என்று சொல்கிறார்கள். ஆனால் பஸ்ஸில் கூட ஏற்றுவது இல்லை தண்ணீர் வசதி சாலை வசதி முறையாக செய்து தரப்படுவதில்லை.
சீமானுக்கு கடந்த முறை ஓட்டு போட்ட நீங்கள் இந்த முறை ஏன் விஜய்க்கு ஓட்டு போடுவீர்கள் என்ற கேள்விக்கு, அவர் மரங்கள்,விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது விஜய் வரவில்லை. விஜய் வரவில்லை என்பதால் தான் அவருக்கு போட்டோம். இப்போது விஜய் வந்துவிட்டார்.. எங்கள் அண்ணன் வரும் போது வேறு யாருக்கு ஓட்டு போடுவது என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் வந்தால் பெண்களுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு இருக்கும். மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும். அண்ணன் விஜய் வந்தால் எங்களுக்கு அனைத்தும் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
என் வீட்டில் 9 பேர் இருக்காங்க.. 9 பேரும் விஜய் அண்ணனுக்கு தான் ஓட்டு போடுவாங்க அப்படி போடலனா சோத்துல விஷம் தான். விஜய் அண்ணா வெற்றி பெற்றால் முருகனுக்கு மாலை போட்டு வருவதாக வேண்டிக் கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக