ஞாயிறு, 21 டிசம்பர், 2025

மென்டல் செல்வராகவனை விட்டு கீதாஞ்சலி பிரிய காரணம் இதுதானா?

 tamil.oneindia.com - Hema Vandhana : சென்னை: தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன்.. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனின் அனைத்து போட்டோக்களையும் கீதாஞ்சலி நீக்கியிருந்தார். இதன் மூலம் இவர்கள் பிரிய இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் பற்றி திண்டுக்கல் வெங்கடேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Aramnaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ், "சொன்ன நேரத்துக்கு படங்களை செய்யாததால் சில தயாரிப்பாளர்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டார்கள்..
Geethanjali Selvaraghavan dhanush



Also Read
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பதவி நீக்க நோட்டீஸ்.. ஏற்பது பற்றி ஆய்வு - சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு
சூர்யா - ஆயிரத்தில் ஒருவன்

சூர்யாவை வைத்து எடுத்த படத்தையும் ஃபிளாப் ஆக்கிவிட்டார்.. ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே போன்ற படங்களின் போது ஏற்பட்ட பட்ஜெட் குளறுபடிகள் நடந்தன.. எந்த தயாரிப்பாளர்களையுமே செல்வராகவன் வாழ வைக்கவில்லை... பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர், சொன்ன பட்ஜெட்டிற்குள் படங்களை முடிக்காதவர்.. இது அவரது சினிமா உலக வீழ்ச்சிக்கே காரணமாகிவிட்டது..

போதை பழக்கத்துக்கும் ஆளாகி, இதய நோய்களும் செல்வராகவனை பாதிப்படைய செய்தன.. பிறகுதான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று அங்கிருந்து மீண்டு வந்தார்.. இப்போது அவரிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. நிறைய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்..
மெண்டல் மனதில்

ஆனால் டைரக்‌ஷனில் வேகம் எடுக்கவில்லை.. 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2 படத்தை இன்னமும் எடுத்து கொண்டிருக்கிறார்.. 20 சதவீதம் ஷூட்டிங் பாக்கி உள்ளது.. இதற்கு நடுவில் இன்னொரு படம் எடுக்க போவதாக சொல்கிறார்.. அந்த படத்துக்கு "மெண்டல் மனதில்' என்ற டைட்டில் வைத்துள்ளார்.

Recommended For You
Puthandu Palan 2026: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. குருவின் அருளால் ஜாக்பாட்டும் உண்டு

கடந்த ஒரு வருடமாக செல்வராகவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனிமை மற்றும் வாழ்க்கை தத்துவங்கள் குறித்த மர்மமான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்..

"துரோகிகள்", "கடவுள் மீதான நம்பிக்கை" போன்றவை குறித்த அவரது போஸ்ட் எல்லாமே ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.. இதற்கு பிறகு செல்வராகவன் மற்றும் அவரது மனைவி கீதாஞ்சலி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்து செய்யும் சூழலில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
சோனியா அகர்வால்

கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து செல்வராகவனின் போட்டோக்களை டெலிட் செய்திருந்தார்.. உடனே செல்வராகவனுக்கும், கீதாஞ்சலிக்கும் டைவர்ஸ் ஆக போகிறதா? என்று சோஷியல்மீடியாவில் செய்திகள் வருகின்றன.. அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாக அமைந்துவிட்டது..

You May Also Like
kombuseevi review: கொம்பு சீவி எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்! சண்முக பாண்டியனுக்கு ஒரு வெற்றி பார்சல்!

முதல் மனைவி சோனியா அகர்வாலை உயிருக்கு உயிராக காதலித்தார்.. ஆனால் ராங்-காம்பினேஷனில் அமைந்தது.. தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக பிறகு கருத்து வேறுபாடுகள் இருவரும் பிரிந்துவிட்டனர்..
கீதாஞ்சலி - விவாகரத்து?

இதற்கு பிறகு தனிமையில் அவதிப்பட்டு வந்தபோது, கீதாஞ்சலி இவர் மீது பரிதாபப்பட்டு, திருமணம் செய்தார்.. 15 வருடம் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்த நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது..

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து நடந்து, தனுஷ் நிறைய படங்களில் நடித்து வருகிறார், படங்களை தயாரித்தும் வருகிறார். ஆனாலும் அவருக்கு நிம்மதியே இல்லை. பல கோடிகள் இருந்தாலும் குடும்பம் என்ற அமைப்பிலிருந்து வெளியே வந்த பிறகு, மகிழ்ச்சி, நிம்மதியில்லை..
அண்ணனுக்காக உதவிய தம்பி

அதேபோல செல்வராகவனுக்கு நிறைய பிரச்சனை உள்ளது.. சூர்யா 'என்.ஜி.கே' படம் மூலம் தந்த வாய்ப்பையும் செல்வராகவன் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார்.. தனுஷ் தனது அண்ணனுக்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டார். இனி செல்வராகவன், தான் ஒரு இயக்குனராக தன்னை நிரூபிக்க வேண்டும்..

தனுஷ் மற்றும் வெளி நிறுவனங்கள் செல்வராகவனுக்குப் படம் பண்ண வாய்ப்பு தருவது கடினம். ஏனெனில் அவர் ஏற்கனவே வாங்கிய படங்களை முடிக்காமல் வைத்திருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையும் உள்ளது.. .எனவே தனுஷ் அல்லது அவரது பெற்றோர் செல்வராகவனை மீட்டெடுக்க வேண்டும்.. காரணம், மிகச்சிறந்த டைரக்டர் செல்வராகவன்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக