திங்கள், 15 டிசம்பர், 2025

தவெக? திமுக? டெல்லி காங். மீட்டிங்கில் பரபர வியூகம்! - TVK? DMK? Congress

 மின்னம்பலம் -Mathi  :  டெல்லியில இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட முக்கியமான மீட்டிங் நடந்துச்சு.. கூட்டணி விவகாரங்களுக்கான ஐவர் குழுதான் இந்த மீட்டிங்கை நடத்துச்சு.. கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு..
ஏற்கனவே சென்னையில சிஎம் ஸ்டாலினை சந்திச்சு பேசி திமுகவுடனான கூட்டணியை உறுதி செஞ்சிருந்தது இந்த ஐவர் குழு.. அதே நேரத்துல காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்திச்சு பேச கூட்டணி பத்தி லேசா குழப்பம் ஏற்பட்டுருச்சு..
இப்படியான நிலையில்தான் ராகுல் காந்தி, கார்கே, ஐவர் குழு எல்லாம் சேர்ந்து தமிழக தலைவர்களுடன் ஆலோசிக்கிறதுன்னு முடிவெடுத்தாங்க..



முதல்ல இந்த கூட்டத்துக்கு சிட்டிங் எம்.பிக்கள், மாஜி காங்கிரஸ் தலைவர்களான தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி, கிருஷ்ணசாமியை அழைச்சிருந்தாங்க.. ஆனால் டெல்லியில நேற்று காங்கிரஸ் போராட்டம் முடிஞ்ச கையோடு ராகுல் காந்தி ஜெர்மன் போயிட்டாரு.. அதனால மாஜி தலைவர்களை இன்னைக்கு கூட்டத்துக்கு அழைக்கலையாம்.. கார்கேவும் இன்னைக்கு வரலையாம்..

ஓஹோ.. சிட்டிங் எம்.பிக்கள் எல்லோரும் போயிருந்தாங்களா?

டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில பிரேக் ஃபாஸ்ட் மீட்டிங்கா நடந்த இந்த சந்திப்பில சசிகாந்த் செந்தில், சுதா ரெண்டு பேரைத்தவிர 7 எம்.பிக்களும் கலந்துகிட்டாங்களாம்.. இந்த கூட்டத்துல என்ன பேசுனாங்கன்னு நாம சோர்ஸ்களிடம் விசாரிச்சப்ப, “ செல்வப்பெருந்தகையும் ராஜேஷ்குமாரும் பேசும்போது, ”திமுக கூட்டணியில நீடிக்கிறதுதான் நமக்கு நல்லது.. நிச்சயம் நாம ஜெயிக்கவும் முடியும்.. விஜய்யைப் பொறுத்தவரைக்கும் என்ன செல்வாக்கு? எவ்வளவு ஓட்டுன்னு எதுவுமே ப்ரூவ் ஆகலை.. அவங்களை நம்பி நாம எப்படி போக முடியும்? அதனால நாம திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறோம்.. இதுல எந்த மாற்றமுமே இல்லை”ன்னு அழுத்தம் திருத்தமா சொல்லி இருக்காங்க..

அப்ப ஒரு சில எம்.பிக்கள், “விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி போய் பார்த்திருக்கிறாரே”ன்னு கிசுகிசுக்க, “அவரை எல்லாம் அவ்வளவு சீரியசா எடுக்க வேண்டாம்னு கார்கேஜி ஏற்கனவே சொல்லிட்டாரு..”ன்னு ஐவர் குழுவில் இருந்து சட்டென பதில் வந்தது” என்றனர்.

திமுக கூட்டணியில நீடிக்கிறது ஓகே.. எத்தனை சீட்டுன்னு பேசுனாங்களாம்?

டெல்லி கூட்டத்துல கலந்துகிட்ட எம்.பிக்கள்கிட்ட பேசுனப்ப, “கார்த்தி சிதம்பரம் போன்றவங்க ஏற்கனவே திமுக கவர்மெண்ட்டில் ஒரு அறங்காவலர் போஸ்ட் கூட வாங்க முடியலை.. கட்சிக்காரனும் எதுவும் செய்ய முடியலை.. அதனால திமுக கிட்ட அதிக சீட் வாங்கனும்.. அவங்க தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம கூட்டணி ஆட்சி அமைக்கிற நிலைமையை ஏற்படுத்தனும்னு பார்லிமெண்ட் வளாகத்துல பேசியிருந்தாங்க.. இன்னைக்கு மீட்டிங்குலயும் அதே டோனில்தான் எம்.பிக்கள் பேசுனோம்..

திமுககிட்ட ஏற்கனவே 41 சீட்டும் வாங்கி இருக்கிறோம்.. அது 25 ஆகவும் குறைஞ்சு போச்சு.. இந்த முறை நிச்சயமா சீட்டை அதிகமாக வாங்கனும்.. ஒரு பார்லிமெண்ட் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ. சீட்டுன்னு கணக்கு வெச்சாலும் கூட குறைஞ்சது 39 சீட் கணக்கு வருது.. இதை திமுக கிட்ட கேட்டு வாங்கித்தான் ஆகனும்.. அப்பதான் திமுக நம்மோட சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைமை வரும்னு சொன்னோம்…. ஐவர் குழுவும் நிச்சயம் அதிகமான சீட் கேட்போம்னு உறுதியாக சொல்லி இருக்காங்க” என்றனர்.

அதோட, ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் நியூ இயர் முடிஞ்சு ரிட்டர்ன் ஆகிறாரு.. அப்ப மாஜி தலைவர்களையும் அழைச்சு டிஸ்கஷன் செய்வாங்களாம்..

மாஜி தலைவர்களான தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி, கிருஷ்ணசாமி எல்லோருமே இன்னைக்கு டெல்லி போகவும் ரெடியாகத்தான் இருந்தாங்க.. ராகுல் காந்தி இல்லைங்கிறதால போகலை..

அப்படியா.. சரி.. மாஜி தலைவர்கள் என்ன சொல்றாங்க?

மாஜி தலைவர்களில்ல திருநாவுக்கரசர், ”திமுகவுடனான கூட்டணிதான் சரியாக இருக்கும்; வெற்றி பெற முடியும்னு வெளிப்படையாகவே சொல்றாரு.. மற்ற மூணு பேருமே இதே மாதிரி நிலைப்பாடுதான் எடுத்திருக்காங்களாம்.. டெல்லியில கார்கேவை ஏற்கனவே சபரீசன் சந்திச்சு பேசி சில விஷயங்களை பைனல் பண்ணி இருந்தாங்க.. அப்ப, ஒரு ராஜ்யசபா சீட்டை தரனும்னு சபரீசன்கிட்ட கார்கே கேட்டிருந்தாரு.. இதை எல்லாம் அடுத்த மீட்டிங்குல விரிவா பேசுவாங்க”ன்னு காங்கிரஸ் சோர்ஸ் சொல்லுதுய்யா..

காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை அறிவிக்கிறாங்களாமே?

தமிழகத்துக்கு மட்டுமல்ல பல மாநிலங்களுக்குமான காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை அறிவிக்கிறாங்க.. ஒரு மாவட்டத்துக்கு 3 பேரை தேர்வு செஞ்சிருக்காங்க.. இதுல ஒருத்தரை பைனல் பண்ற கூட்டம் நாளைக்கு நடக்குது.. இதுக்கான குழுவுக்கு தலைவர் சசிகாந்த் செந்தில் எம்.பி. தமிழ்நாட்டுக்கு மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் போது மட்டும் நான் விலகி நிற்கிறேன்னு சொல்லி இருக்கிறாராம் சசிகாந்த் செந்தில் என்ற தகவலை பாஸ் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக