சனி, 23 செப்டம்பர், 2023
சீமானுக்கு வீரலட்சுமி சவால் : என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா?
நடிகை விஜயலட்சுமி விவாகரத்தைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பேசிய தமிழக முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமிக்கும், சீமானுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வருகிறது.
இந்தச்சூழலில் வீரலட்சுமியின் கணவர் பெயரில், சீமானை பாக்சிங்கிற்கு அழைத்து ஆடியோ ஒன்று வெளியானது.
இதுதொடர்பாக செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அவர் என் கையால்தான் சாகுறதுன்னு முடிவு எடுத்துட்டார்னா, நான் அதை சந்தோஷமா எதிர்கொள்கிறேன். ஊடகத்தினரே நேரம் மற்றும் இடத்தை கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.
அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு – அ.தி.மு.க. போர்க்கொடி
மாலைமலர் : தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக சலசலப்பான சூழல் நிலவி வருகிறது.
மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
மறைந்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து அண்ணாமலை பேசி வருவதால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்திருந்தது.
இது தொடர்பாக சமீபத்தில் விளக்கம் அளித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “அ.தி.மு.க.- பா.ஜ.க இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.
மோடியின் பிம்பம் உடைகிறது: முதல்வர் ஸ்டாலின் ஆடியோ!
மின்னம்பலம் - monisha : ஸ்பீங்கிங் ஃபார் இந்தியாவின் 2வது பாகம் இன்று (செப்டம்பர் 23) வெளியானது.
வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் “ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா” என்ற தலைப்பில் பேசி வருகிறார்.
இந்த ஆடியோ பிரச்சாரத்தின் 2வது எபிசோட் இன்று வெளியானது.
அதில் முதல்வர் ஸ்டாலின்,“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கிய உடன் சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
. ’முதல்வர் சொன்ன ரூ.1000 வந்தாச்சு. பிரதமர் சொன்ன ரூ.15 லட்சம் என்னாச்சு’. இது தமிழ்நாட்டில் வைரலாகிடுச்சு. 2014, 2019 ஆம் ஆண்டுகள் ஏமாந்த மாதிரி 2024 ஆம் ஆண்டும் ஏமாந்து விடக்
கூடாது. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை முன்னிறுத்தி
அங்கே தேனாறும் பாலாறும் ஓடுவது போல பொய் செய்திகளை பரப்பி தன்னை வளர்ச்சி
நாயகனாக காட்டிக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி.
வங்கி கணக்கில் செலுத்துவதில் குழப்பம்- பெண்களுக்கு வீடு தேடி வரும் ரூ.1000 உரிமைத்தொகை
Maalaimalar .: மதுரை கடந்த 2021-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உடனடியாக பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது அமலுக்கு வரும் என ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதற்காக சுமார் 1.5 கோடி பெண்கள் விண்ணப் பம் செய்திருந்தனர். இதில் 50 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
சுமார் 1 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1000 கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி முதலே பலருக்கும் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டது.
NEET_சனாதனம் அதிர்ச்சி வைத்தியப் பதிவு
Dhinakaran Chelliah : சனாதனம் அறிவோம்(பாகம் 13)
NEET_சனாதனம்
அதிர்ச்சி வைத்தியப் பதிவு
நீங்க நீட்டுக்கு (NEET) க்கு ஆதரவாளராக இருந்தாலும் எதிர்ப்பாளராக இருந்தாலும் தயவு செய்து இந்தப் பதிவைப் வாசிக்கவும்.
ஆயுர் வேதத்தின் தந்தை என்றும் உலகின் அறுவைச் சிகிச்சையின் தந்தை என்று ஸுசுருதர் போற்றப்படுகிறார். இவரது பெயரில் வழங்கி வரும் ஸுசுருத ஸம்ஹிதை எனும் நூலானது ஆயுர் வேத நூல்களில் தலை சிறந்தது.இந்த நூல் ஆயுர்வேத மருத்துவப் பட்டப் படிப்பிற்கு மத்திய அரசின் பாடத் திட்ட நூல்களில் முதன்மையானது.
ஆமா,NEET தேர்வுக்கும் ஸுசுருதருக்கும் என்ன சம்பந்தம்? முழுமையாக இந்தப் பதிவைப் வாசிக்கிறவர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.
வெள்ளி, 22 செப்டம்பர், 2023
ஹிஜாப் அணியாத ஈரானிய பெண்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
Rishvin Ismath : "ஹிஜாப் ஒரு தெரிவு, எங்க பெண்கள் அவங்களா விரும்பித்தான் அணிகின்றார்கள்" என்றெல்லாம் கதை விட்டார்களே, அதையும் உண்மை என்று நம்பிக்கொண்டு ஃபெமினிசம் பேசிக்கொண்டு இருந்தார்களே, அவர்கள் எல்லாம் எங்க போனார்களோ....
இதுவும் பெண்களே விரும்பி அவங்களா வச்சுகிட்ட சட்டம்தான்னு உருட்டுவாங்களோ?
டெய்லி நியூஸ் :ஈரான் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆடை தொடர்பான சட்டங்களை மீறும் ஈரானிய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராதம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜைனமம் புத்தமும் சமண மரபின் இரண்டு செல்ல குழந்தைகள்
Yahqappu Adaikkalam : யார் இந்த பார்ப்பான்-11
ஜைனமம் புத்தமும் சமண மரபின் இரண்டு செல்ல குழந்தைகள். கிமு 600 ஆண்டுக்கு முன்பே தோன்றிய இந்த இரண்டு சமயங்களும் இன்னும் நம்மிடம் இருக்கிறது.
இதுக்குள்ளே ஊடுருவ பார்த்த பார்ப்பனியம் பெரும் அளவில் மாற்றம் கொண்டுவர முடியவில்லை என்ற தோல்வியில் தான் சைவமும் வைணவம் தோற்றுவிக்கப்பட்டது.
தென்னாட்டு வடநாட்டு வேறுபாடில் இயங்குகிறது ஜையனமும் புத்தமும்(வடநாட்டில் பௌத்தம்).
இதன் ஆதி மூலம் தென்னாட்டில் இருக்கிற ஆதாரமே அதுக்குள் இருக்கும் தூய்மையான சமண(ஆசீவக) கருத்துக்கள் தான். தமிழ் மண்ணில் இருக்கும் சமண மரபு சமயங்கள் தாந்திரிக மூலம் கொண்டவை
இதில் திகம்பர (அமண)ஜைனமும் ஈனயான( சூன்யம்) புத்தமும் ஆரம்ப வடிவில் நம்மிடம் காணலாம்.
இந்த ஆதி வடிவங்கள் எப்படி வந்தது என்றால் தென்னகம் பெண்ணை முதன்மையாக வைத்து நகர்ந்த மெய்யியல்(தாந்திரீகம்) ஆனால் வடபகுதியில் கொஞ்சம் திரிந்து இந்த தாந்திரீக வாசம் இல்லாமல் போனது. பரத்தை வழியே இல்லறம் இல்லறம் வழியே துறவறம் என்ற அடிப்படை தத்துவம் தென்னாட்டில் மட்டுமே இருக்கிற அம்சமாகும்.
கனடாவில் சீக்கியர் கொலை விவகாரத்தை ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் எழுப்பினார்
tamilmurasu.com.sg : வாஷிங்டன்: கனடாவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கனடா கூறுவது பற்றி புதுடெல்லி ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பைடனும் இதர தலைவர்களும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கவலை தெரிவித்ததாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் வியாழக்கிழமை குறிப்பிட்டது.
வேவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ‘ஐந்து கண்கள்’ என்ற ஒரு கட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடம்பெற்று இருக்கின்றன.
அந்த நாடுகளின் பல நாட்டுத் தலைவர்களும் பிரதமர் மோடியிடம் அந்த விவகாரத்தை எழுப்பியதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் கூறியது.
கனடா - இந்தியா பிரச்சனை: இந்திய ஐடி நிறுவனங்களின் நிலைமை இதுதான்.. ஐடி ஊழியர்களே உஷார்..
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை கடந்த சிலமாதங்களாக இருந்து வந்தாலும், டெல்லியில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல வெடிக்க துவங்கி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரை இந்திய அரசு கொன்றதாக குற்றம் சாட்டியதில் இருந்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியா - கனடா அரசு பதிலுக்கு பதில் நடவடிக்கை எடுத்து வருவதால் இரு நாடுகள் மத்தியிலான உறவு என்பது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கனடாவில் இருக்கும் இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள், இந்திய மாணவர்களுக்கு கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை விட முக்கியமாக கனடாவில் இருக்கும் இந்தியாவில் பிரச்சனை நடக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சனாதனம் - உதயநிதி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கனடிய இந்திய அரசுகளோடு தொடர்பில் உள்ளோம்! அமெரிக்க அறிவிப்பு
தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜேக் சல்லிவான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சுவிஸ் நாட்டில் பெண்கள் புர்கா அணியத் தடை
மாலைமலர் : ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
இந்த சட்டம் சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் 151-29 என்ற அடிப்படையில் நிறைவேறியது, இது ஏற்கெனவே மேலவையால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், உணவகங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது போக்குவரத்து, சாலைகளில் நடந்து செல்லும்போது என, அனைத்து பொது இடங்களிலும் புர்கா அணிய தடை விதிக்கப்படும்.
எனினும், மத வழிபாட்டுத் தலங்களில், இதற்கு தடை விதிக்கப்படாது என கூறப்படுகிறது. தடையை மீறுபவர்களுக்கு சுவிட்சர்லாந்தின் 1,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா - இந்தியா பிரச்சனை! முதல் அடி மஹிந்திரா & மஹிந்திராவுக்கு? Resson Aerosace ஒப்பந்தத்தை விலக்கியது .
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்திருக்கும் வேளையில், இரு நாடுகளும் அடித்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மத்தியிலான உறவு, கனடாவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமை குறிப்பாக மாணவர்களின் நிலை என்ன, கனடாவில் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என பல கேள்விகள் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பின்பு எழுந்தது.
கனடா - இந்தியா பிரச்சனை: முதல் விக்கெட் மஹிந்திரா & மஹிந்திரா.. கம்பி நீட்டிய ஐடி நிறுவனம்..!!
இந்த நிலையில் கனடா நிறுவனங்கள், கனடா அமைப்புகள் இந்தியாவில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகளும், வரப்போகும் முதலீடுகளின் நிலை பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் வேளையில் முதல் பாதிப்பை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எதிர்கொண்டு உள்ளது.
வியாழன், 21 செப்டம்பர், 2023
தமிழ்நாடு 8 எம்.பி. தொகுதிகளை இழக்கும்- உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள் கிடைக்கும் ..தொகுதி மறுவரையறை மோசடி
மாலைமலர் : சென்னை மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு பாராளு மன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அப்போது தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசம் உள்பட வடமாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் மாநிலங்களை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும்.
NEET பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம் .. ஒன்றிய துக்ளக் அரசு அறிவிப்பு
மாலை மலர் : . பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கும் கீழ் எடுத்தாலும் கூட நீங்கள் பட்ட மேற்படிப்பில் சேரலாம்.
இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நாடு முழுக்க அமலில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை அதிக சலசலப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வு குறித்து ஏராளமான சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன.
எனினும், சர்ச்சைகளோடு, சேர்த்து நீட் தேர்வும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வில் பங்கேற்கும் தமிழக மாணவர்களில் பலர் சமீப காலங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகளும் முற்றுபெறாமல், தொடர் கதையாகவே இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் ஆளும்கட்சியாக இருக்கும் தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நிச்சயம் ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து இருந்தது.
இது தொடர்பான விவாதங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பங்கேற்போர் பூஜ்ஜியம் மதிப்பெண்களை பெற்றாலும் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது.
கனடா குடிமக்கள் இந்தியா நுழைய travel warning !... இரு நாட்டு உறவில் நீடிக்கும் சிக்கல்
மாலை மலர் : 1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது. இதனை அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் பல கடுமையான நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டு அழித்தன. இருப்பினும், ஆங்காங்கே உலகின் பல இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இக்கோரிக்கைகளுடன் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்னமும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குரல் கனடா நாட்டில் வலுப்பெற்றிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பிரிவினைவாதியும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கனடா நாட்டின் வேன்கூவர் நகரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவிற்கு பங்கிருப்பதாக சில தினங்களுக்கு முன் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தொடர் நடவடிக்கையாக இந்திய தூதரக அதிகாரியையும் கனடா அரசு வெளியேற்றியது.
இந்தியர்களை அதிர வைத்த இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய அரசு, பதில் நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர அதிகாரியையும் வெளியேறுமாறு உத்தரவிட்டது.
மகளிர் உரிமைத் தொகை: மீண்டும் விண்ணப்பம்... சிறப்பு முகாமில் குவிந்த பெண்கள்!
tamil.samayam.com - ரம்யா. S : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.பிரத்யேக இணையதளம்
இந்த நிலையில் விண்ணப்பித்து பணம் கிடைக்காதவர்கள் பிரத்யேக இணையதளம் மூலம் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம், மேல்முறையீடு செய்யலாம் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு முகாம்
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையம், தற்காலிக புகார் மையத்தில் பணம் கிடைக்காததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மீண்டும் விண்ணப்பிப்பதற்காகவும் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களில் இன்று ஏராளமான பெண்கள் கை குழந்தைகளுடன், மூதாட்டிகள் அதிகளவில் குவிந்தனர்.
கைக்குழந்தைகளுடன் வந்த தாய்மார்கள்
நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்!
மாலை மலர் : மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுக்க பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் முதுநிலை தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்து இருந்தாலும், முதிநிலை மருத்துவ படிப்பில் சேர முடியும்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதன், 20 செப்டம்பர், 2023
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு RSS பாஜகவின் சனாதன வடை
Maha Laxmi : மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு RSS பாஜகவின் சனாதன சூது!!
வரும் நாடாளுமன்ற தேர்தலையோட்டி மோடி சுட்ட 15 லட்சம் ரூபாய் வடைய விட பெரிய வடை இந்த
மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு.
இது வரும் தேர்தலில் நடைமுறைக்கு வருமா?
இல்லை!!
எப்ப வரும்?
நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சு 2026 க்கு அப்புறம்!!
ஏன்?
பாராளுமன்ற தொகுதி மறுவரையறை பண்ண பிறகு.
அதாவது 543 MP தொகுதிகள 888 MP தொகுதிகளா மாத்துன பிறகு!!
33 சதவிகித இடஒதுக்கீடுக்கும் பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கும் என்ன சம்பந்தம்?
தொகுதி மறுவரையறை செஞ்சா,
உபி + பீகார் : 222
மே.வங்கம் : 60
மஹாராஷ்டிரா : 76
குஜராத் : 43
தென் மாநிலங்கள் (ஐந்தும் சேர்ந்து) : 165
நாடு விட்டு வந்த இலங்கை மக்களுக்கு வீடு.. எல்லாரது ஏக்கங்களையும் போக்கும் அரசு!
கலைஞர் செய்திகள் - Lenin : போர்ச் சூழல் காரணமாக இலங்கை நாட்டை விட்டு வந்த ஈழத் தமிழர்க்கு வீடுகள் வழங்கி அவர்களுக்கு பேருதவி செய்திருக்கிறார் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு வாழ் மக்களுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு வாழ வந்த இலங்கைத் தமிழர்க்கும் ஏராளமான திட்டங்களை தீட்டித் தரத் தொடங்கினார் முதலமைச்சர் அவர்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
இலங்கையில் இருந்து வந்த தமிழர்களை மனதில் வைத்து அறிவிக்கப்பட்டவை அவை. ரூ.318 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முகாம்களில் தங்கி இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு நிறைவேற்றப்பட இருக்கிறது என்று அதில் குறிப்பிட்டார்.
தொகுதி மறுவரையறை... கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்
மின்னம்பலம் - christopher : ’தொகுதி மறுவரையறை… கிள்ளி எறிய வேண்டும்’: முதல்வர்
மகளிர் மசோதாவை வரவேற்கும் அதே வேளையில், மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைக்கு 75 ஆண்டு காலமாக பாடுபட்டு வரும் தி.மு.கழகம், மகளிர் ஒதுக்கீட்டை அன்றும் வரவேற்றது; இன்றும் வரவேற்கிறது.
பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்ற உத்தரவாதம் இல்லை;
11 ஆண்டுகளாக சீமான் மீதான வழக்கை நிலுவையில் வைத்தது ஏன்? போலீசார் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மாலைமலர் : சென்னை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது இந்த வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும். விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை போலீசார் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தியாவுக்கு போக வேண்டாம்!” கனடிய அரசு அறிவிப்பு! உச்சக்கட்ட மோதல்?
ஒட்டாவா: இந்தியா கனடா நாடுகளுக்கு இடையே மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ட்ரூடோ அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் தொடர்பாக இந்தியா கானடா நாடுகளுக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
ஏற்கனவே இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் சொன்னதே இது அத்தனைக்கும் காரணமாக இருந்தது.
இதற்கிடையே இந்த மோதலின் அடுத்த கட்டமாகக் கனடா அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..?
க.ம.மணிவண்ணன் : பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..?
பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.
1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம்.. 1952
யாழ்ப்பாண புகையிலை தோட்டம் |
ராதா மனோகர் : யாழ்ப்பாண மலையாள புகையிலை சங்கம் தொடர்பான இரு செய்திகளை இங்கே பதிவிட்டுள்ளேன்~
1952 இல் திரு டட்லி சேனநாயக்காவின் அரசில் அரசில் தபால் தகவல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் திரு நடேசபிள்ளை (சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகன்)
இவர் அமைச்சராக பணிபுரிந்த காலக்கட்டத்தில் உதவி அமைச்சர் குமாரசாமியோடு புது டெல்லிக்கு ஒரு முக்கிய வர்த்தக உடன்படிக்கைக்காக சென்றிருந்தார்
அதுவரை யாழ்ப்பாண புகையிலை வர்த்தகம் இந்தியாவுக்கும் அங்கிருந்து பல நாடுகளுக்குக்கும் தாராளமாக நடந்து கொண்டிருந்தது
இந்த நடைமுறைக்கு மாறாக புதிய இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது
இக்கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு யாழ்ப்பாணம் மலையாள புகையிலை சங்கம் இரு அரசுகளையும் வேண்டி கொண்டிருந்தது
இந்நிலையில் இது பற்றி நேரடியாக இந்திய அரசோடு பேசுவதற்கு டட்லி அரசின் சார்பாக இவர்கள் இந்தியாவுக்கு சென்றனர்
அங்கு இவர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது
எங்களை மகாராஜாக்கள் போல நடத்தினார்கள் ராஷ்ட்ரபதி பவனில் எங்களுக்கு விருந்துபசாரங்கள் செய்து எங்களை பிரபுக்கள் போல நடத்தினார்கள்
செவ்வாய், 19 செப்டம்பர், 2023
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்ன? - பி பி சியின் அலசல்
பெண்களுக்கு இடஒதுக்கீடு
நாடாளுமன்றத்தின் தற்போதைய சிறப்பு கூட்டத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து எழுந்த ஊகங்கள் உண்மையாகியுள்ளன. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் அந்த மசோதா கொண்டு வரப்படுவதை பிரதமர் மோதி உறுதிப்படுத்தியுள்ளார். வாஜ்பாய் அரசு பலமுறை முயன்றும் நிறைவேற்ற முடியாமல் போன ஒன்றை செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பழைய நாடாளுமன்றத்திற்கு பிரியாவிடை: மயங்கி விழுந்த பாஜக எம்.பி!
minnambalam.com - christopher : சிறப்புக்கூட்டத்தொடர் இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகிறது. மேலும் புதிய கட்டிடம் தான் இந்தியாவின் நாடாளுமன்றம் என மக்களவை செயலகம் இன்று (செப்டம்பர் 19) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து 75 ஆண்டுகால பெருமை வாய்ந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் சேர்ந்து இன்று காலை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை!
nakkheeran.in : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் மீரா (வயது 16) சென்னையில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டு, அது முடிந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கனடா இந்திய தூதரக அதிகாரிகள் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனர்! கனடா சீக்கியத்தலைவர் கொலையில் இந்தியா?
BBC : கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் ‘மிகவும் கவலைக்குரியவை’ என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
கனடாவின் “கடுமையான” குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது.
அதிமுக பாஜக உறவு முறிந்தது .. ஜெயக்குமார் அறிவிப்பு .. அண்ணாமலைதான் காரணம்?
பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.
எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன்.
ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார்.
திங்கள், 18 செப்டம்பர், 2023
மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்!
minnambalam.com - monisha : மகளிர் உரிமை தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் இன்று (செப்டம்பர் 18) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
இதனையடுத்து இந்த திட்டம் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளுக்கு செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இந்தியாவுக்கு முதலில் அறிமுகப்படுத்திய பார்ப்பனரும் பணக்காரரும்
Sundaram : கம்யூனிஸ்ட்களின் பார்ப்பன பாசம் எப்படிப்பட்டது என்பதை இந்திய அரசியலை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும்..
முதன் முதலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய அறிவுஜீவிகள் அன்று வெளிநாடுகளுக்கு சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த பணக்கார பிராமண, முற்படுத்தப்பட்ட வகுப்பினரே ஆவர்.
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியபோதும் கட்சியின் மேல் மட்டத் தலைவர்களாக பிராமணர்களும் உயர் சாதி புத்திஜீவிகளுமே அமைத்தனர். இன்றுவரை அது தொடர்கிறது..
தமிழ் நாட்டில் எளிமைக்கு உதாரணமாக கொண்டாடப்படும் தலைவர்களில் ஜீவா என்கிற ஜீவானந்தம் முக்கியமானவர்…
சிறிதுகாலம் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் பயணித்தவர்… பின்னர் பொதுவுடைமை கட்சியின் முக்கிய தலைவராக போற்றப் பட்டவர்….
அன்று தந்தை பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்பு போராட்டங்கள் குறித்த அவரது மேலான கருத்துக்களை இங்கு காணலாம்.
இன்று ரங்கராஜ் பாண்டே போன்ற வலதுசாரிகள் பேசுவது போலவே பேசியிருப்பதை உணரலாம்…
"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...
சீமான் வழக்கு போடட்டும்- ஆவணங்களுடன் நிரூபிக்கிறேன்: விஜயலட்சுமி வெளியிட்ட புதிய வீடியோவால் மீண்டும் பரபரப்பு
மாலை மலர் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்தார்.
சீமானை கைது செய்ய வைக்காமல் இங்கிருந்து செல்ல மாட்மேன் என்று சவால்கள் விட்டெறிந்தார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வந்தார்.
சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, செய்தியளர்களிடம் ஆவேசமாக பேட்டியளித்தார்.
நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், வளசரவாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் சீமான் நேரில் ஆஜராகவில்லை.
தமிழகத்தில் கொலையான RSS BJP இந்து முன்னணி ரவுடிகளின் கொலைகளுக்கு யார் காரணம்? பட்டியல்
Yashvhanth Yash : இதுவரை தமிழகத்தில் கொலைசெய்யப்பட்ட
RSS BJP இந்து_முண்ணனியில் இருக்கும் ரவுடிகளின் கொலைகளுக்கு முஸ்லிம்கள் காரணமா அல்லது அவர்கள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, கந்து வட்டி, வப்பாட்டி இன்னும் பலபல சமூகவிரோத செயல் காரணமா?
கொஞ்சம் சமீபத்திய வரலாற்றை புரட்டி பார்ப்போமா?
1) நாகப்பட்டிணம்_புகழேந்தி கொலை - 05.07.2012
கொலையாளி: முனீஸ்வரன்
காரணம்: நில அபகரிப்பு,கட்டப்பஞ்சாயத்து
2) பரமக்குடி_முருகன் கொலை - 19.03.2013
கொலையாளிகள்: ராஜபாண்டி & மனோகரன்
காரணம்: நில தகராறு
3) சங்கரன்கோவில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் கொலை - 05.07.2014
கொலையாளி: அவரின் முதல் மனைவி அய்யம்மாள்
காரணம்: இரட்டை திருமணம்
4) கோயம்பேடு_விட்டல்
கொலை 27.4.2012
கொலையாளிகள்: சுந்தரபாண்டியன், முருகன், கங்காதரன்
காரணம்: கந்து வட்டி கேட்டு தொல்லை, ஆபாச பேச்சு.
உதயநிதியை மேடையிலேயே எச்சரித்த டிஆர் பாலு.. அதுவும் ஸ்டாலின் முன்பே! வேலூரில் என்ன நடந்தது? பின்னணி
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: வேலூரில் இன்று திமுகவின் முப்பெரும் விழா நடந்த நிலையில் மேடையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டிஆர் பாலு எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக தோன்றியதன் 75வது ஆண்டு கொண்டாட்டம் உள்பட தந்தை பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா இன்று வேலூரில் நடந்தது. வேலூரை அடுத்த கந்தனேரியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே இதற்காகப் பிரம்மாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பியும் நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவருமான டிஆர் பாலு உள்பட ஏராளாமனவர்கள் பங்கேற்றனர்.
உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
மாலைமலர் : பிரசிலியா: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஞாயிறு, 17 செப்டம்பர், 2023
1591 வீடுகள் ! மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.
நடிகை விஜயலக்ஷ்மி : ஓவரா டார்ச்சர் பண்ணாதீங்க.. தற்கொலை பண்ணிப்பேன்.. வீடியோ
சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சீமானை நேரில் ஆஜராகும்படியும் போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.
இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்று பெங்களூருக்குத் திரும்பினார் நடிகை விஜயலட்சுமி.
விபத்தில் சிக்கிய யூ டியூபர் டிடிஎஃப் வாசன்- ஐசியூவில் திவிர சிகிச்சை
சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தி சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.
கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு!
ராதா மனோகர் : அடிமைகளாக பல தலைமுறைகள் வாழ்ந்த இன மக்களுக்கு தவறான மனிதர்களின் கிரிமினல் சாகசங்கள் கவர்ச்சி அளிப்பதாக இருக்கும்.
அப்படி பல தவறான கிரிமினல்களினால் நமது மக்கள் இப்போதும் கூட கவரப்படுகிறார்கள்.
வரலாற்றில் நடந்த பல நிகழ்வுகளின் சாயல்களில் மீண்டும் மீண்டும் பல விடயங்கள் நடப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
ஹிட்லரின் மிக நம்பிக்கைக்கு உரிய ஹிம்லர் போலவே பொட்டம்மான் என்ற ஒரு துன்பியல் கதாபாத்திரத்தையும் அண்மைக்கால வரலாறு காட்டியது..
வரலாற்றில் இருந்து படிக்க மறுக்கும் மக்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளை செய்வார்கள்
எனவே வரலாறு முக்கியம் மக்களே!
ஹிம்லரை வாசியுங்கள் .. அயோக்கியத்தனமும் உளவியல் கோளாறும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும் என்ற பாடம் இந்த கட்டுரையில் இருக்கிறது.
திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர் ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).
"ஓ" அந்த தொகுதியை நீயே எடுத்துகிட்டயா? கலைஞர் ஐ பெரியசாமியிடம்
Vijay Karthick : உனக்கு நான் அண்ணனாக இருப்பதில் என்று என்றைக்கும் பெருமைப்படுகிறேன்.
இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் எனக்கு என்ன மரியாதை இருக்கிறதோ அதைவிட அதிக மரியாதை தம்பி பெரியசாமிக்கு உண்டு.
- தலைவர் கலைஞர் -
எங்கள் மாவட்டத்தின் தி.மு.கழக அடையாளம்,முகவரி எல்லாமாகி போன ஐயா ஐ.பெரியசாமி அவர்களை பற்றி சொன்ன வார்த்தைகளை சொன்னவுடன் உடனே அவர் தன் தலைவனைப் பற்றி சொல்கிறார்.
அவரைப் போன்ற ஜனநாயகவாதியை இனி பார்க்கமுடியாது, என தொடங்கி அதற்கு உதாரணமாக ஒரு தேர்தல் கால நிகழ்வை எடுத்துச் சொல்கிறார்.
maalaimalar.com 29 முறை பயனடைந்த விவேக் ராமசாமி , ஹெச்-1பி விசாவை எதிர்ப்பதா?: புலம்பும் இந்தியர்கள்
மாலை மலர் : அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியாளராக முன்னிலையில் உள்ளார். அவர் மீதுள்ள வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி உறுதிப்படுத்தப்படும் என்பதால் அவர் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி (பாலக்காடு பார்ப்பான்) தீவிரமாக தன்னை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்ய லட்சக்கணக்கான இந்தியர்கள் அந்நாடு வழங்கும் ஹெச்-1பி விசா எனும் நடைமுறையை நம்பியுள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது: தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்
மாலைமலர் : தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகையை பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும், அதனை சில வங்கிகள் பின்பற்றாதது ஏற்கத்தக்கது அல்ல.
இதுகுறித்து முதலமைச்சரின் உதவி மைய தொலைபேசி எண் 1100-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இப்புகார்கள் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்
விஜயலட்சுமியே மனசு வச்சாலும் முடியாது... சீமானுக்கு போலீஸ் கொடுத்த அதிர்ச்சி முடிவு!
tamil.samayam.com - பஹன்யா ராமமூர்த்தி ; விஜயலட்சுமியே மனசு வச்சாலும் முடியாது... சீமானுக்கு வந்த புது சிக்கல்... போலீஸ் அதிரடி முடிவு!
சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற போதும், வரும் 18ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வளசரவாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நேற்று வாபஸ் பெற்றார்.
சீமானிடம் தொலைபேசியில் பேசிய பிறகு, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர்களுடன் வந்த விஜயலட்சுமி, தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சீமானை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறி வழக்கை வாபஸ் பெற்றார்.
நெறிதவறிய ஊடகங்களும் முறைதவறும் அரசியல்கட்சிகளும்
LR Jagadheesan : நெறிதவறிய ஊடகங்களும் முறைதவறும் அரசியல்கட்சிகளும்
என் புரிதலில் சுதந்திர இந்திய அரசியல் வரலாற்றில் ஒட்டுமொத்த இந்திய நிறுவன கட்டமைப்பும்,
(entire Indian Establishment — Indian legislature ,executive judiciary and the press) ஒன்று சேர்ந்து மூர்க்கமாக ஒரே குரலில் எதிர்த்த இரண்டுபேரில் ஒருவர் கலைஞர் மற்றது ஆ ராசா.
அதாவது நேரடித்தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்களில். கலைஞர் ஹிந்திய அரசியல் எதிர்ப்பை தமிழ்நாட்டில் இருந்தபடியே எதிர்கொண்டவர்.
ஆனால் ஆ ராசா தலைநகர் தில்லியில் இருந்தபடி அதை நேர் கொண்டவர்.
2ஜி அகைக்கற்றை விவகாரம் பெரும் பூதாகாரமாய் வெடித்தபோது,
ஆ ராசா சந்தித்த எதிர்ப்பில் பாதியளவு கூட வேண்டாம் பத்தில் ஒரு பங்கு எதிர்ப்பை வேறொருவர் எதிர்கொண்டிருந்தால் கூட நொறுங்கி தூள் தூளாகியிருப்பார்.
தனிப்பட்ட வாழ்விலும் அரசியலிலும்.
குறிப்பாக ஒட்டுமொத்த ஹிந்திய ஊடகங்களும் அவர் மீது நடத்திய நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் அதற்கு முன்பு இந்தியாவின் ஊடக சரித்திரத்திலேயே இல்லாத ஒன்று.
ஒருநாளல்ல; ஒரு வாரமல்ல; மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீடித்த தாக்குதல் அது.