புதன், 20 செப்டம்பர், 2023

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு RSS பாஜகவின் சனாதன வடை

May be an image of 2 people and text that says 'SO WOMEN RESERVATION BILL IS A MOTHER OF ALL JUMLAS. शक्त INQUILAB INDIA Govt is going to pass Women reservation bill in Parliament but the twist is, bill will come into effect only after delimitation exercise based on Census data and nobody, not even govt knows when 'census & delimitation' are going to happen.'

Maha Laxmi  :  மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு RSS பாஜகவின் சனாதன சூது!!
வரும் நாடாளுமன்ற தேர்தலையோட்டி மோடி சுட்ட 15 லட்சம் ரூபாய் வடைய விட பெரிய வடை இந்த
மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு.
இது வரும் தேர்தலில் நடைமுறைக்கு வருமா?
இல்லை!!
எப்ப வரும்?
நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சு 2026 க்கு அப்புறம்!!
ஏன்?
பாராளுமன்ற தொகுதி மறுவரையறை பண்ண பிறகு.
அதாவது 543 MP தொகுதிகள 888 MP தொகுதிகளா மாத்துன பிறகு!!
33 சதவிகித இடஒதுக்கீடுக்கும் பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கும் என்ன சம்பந்தம்?
தொகுதி மறுவரையறை செஞ்சா,
உபி + பீகார் : 222
மே.வங்கம் : 60
மஹாராஷ்டிரா : 76
குஜராத் : 43
தென் மாநிலங்கள் (ஐந்தும் சேர்ந்து) : 165


மீதியிருக்கும் மாநிலங்கள் : 282 ன்னு
MP தொகுதிகள் உயரும்.
அப்ப நமக்கு நிறைய MP கள் கிடைப்பாங்களா?
கிடைப்பாங்க,
ஆனா எண்ணிக்கை அடிப்படையில தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ன்னு எல்லா தென் மாநிலங்களோட பிரதிநிதித்துவம் குறையும்.
குறைஞ்சா?
 

தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும், உரிமைகள் பறிக்கப்படும், வளர்ச்சி சீரழியும்.
சரி இதுக்கும் 33 சதவிகித இடஒதுக்கீடுக்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இல்லாதான்  
ஆனா அங்க தான் பாஜக தன்னோட சனாதன சூத கொண்டு வருது.
 மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் வேணும்னா,
தொகுதி மறுவரையறை பண்ணாதான்னு பாஜக சொல்லுது..
 

அதனால பாதிக்கப்படும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்...
ஒத்துக்காது...
உடனே பாஜக நீலிக்கண்ணிர் வடிக்கும்
பாத்திங்காளா மக்களே,
நாங்க இட ஒதுக்கீடு தர தயாரா இருக்கோம்,
ஆனா இந்த மாநிலங்கள்லாம் ஒத்துக்க மாட்றாங்கன்னு பழிய தூக்கி மாநிலங்கள் மேல போடும்...
இட ஒதுக்கீடும் வராது...
தொகுதி மறுவரையறை வந்தா தென் மாநிலங்கள் அழிஞ்சு நாசமா போகும்... 🚫
RSS பாஜக மனித குலத்திற்கே எதிரி.

1 கருத்து:

  1. செய்தாலும் தவறு. செய்யாவிட்டாலும் தவறு. எல்லாவற்றுக்கும் காரணம் கிடைக்கும். ……. மருமகள் உடைத்தால் பவன் குடம்.

    பதிலளிநீக்கு