வெள்ளி, 22 செப்டம்பர், 2023

கனடா - இந்தியா பிரச்சனை! முதல் அடி மஹிந்திரா & மஹிந்திராவுக்கு? Resson Aerosace ஒப்பந்தத்தை விலக்கியது .

tamil.goodreturns.in - Prasanna Venkatesh : இந்தியா - கனடா மத்தியிலான பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்திருக்கும் வேளையில், இரு நாடுகளும் அடித்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மத்தியிலான உறவு, கனடாவில் இருக்கும் இந்தியர்களின் நிலைமை குறிப்பாக மாணவர்களின் நிலை என்ன, கனடாவில் குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என பல கேள்விகள் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பின்பு எழுந்தது.
கனடா - இந்தியா பிரச்சனை: முதல் விக்கெட் மஹிந்திரா & மஹிந்திரா.. கம்பி நீட்டிய ஐடி நிறுவனம்..!!
இந்த நிலையில் கனடா நிறுவனங்கள், கனடா அமைப்புகள் இந்தியாவில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகளும், வரப்போகும் முதலீடுகளின் நிலை பெரும் கேள்விக்குறியாகியிருக்கும் வேளையில் முதல் பாதிப்பை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எதிர்கொண்டு உள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கனடா நாட்டின் ஐடி சேவை நிறுவனமான Resson Aerosace-ல் 2018 ஆம் ஆண்டு 10 சதவீத பங்குகளை 6.63 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியது. இந்த நிலையில் கனடா - இந்தியா பிரச்சனைக்கு மத்தியில் Resson Aerosace நிறுவனம் மஹிந்திரா உடன் தனது கூட்டணியை முறித்துக்கொள்ளவும், முதலீட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளது.

Resson Aerosace தானாக முன்வந்து கூட்டணி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக வியாழக்கிழமை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் வைத்திருந்த கிளாஸ் சி Resson நிறுவனத்தின் 11.18 சதவீத பங்குகள் பெறப்பட்டு பணமாக செட்டில் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனடாவில் இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுரை.. இந்தியா - கனடா முதலீடுகள் என்னாகும்..?! கனடாவில் இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுரை.. இந்தியா - கனடா முதலீடுகள் என்னாகும்..?!

20 ஆம் தேதி காலையில் Resson Aerosace நிறுவனம் கனடா நாட்டின் நிறுவன பதிவு அமைப்பான Corporations Canada வில் கூட்டணியை முறிவுக்கான ஒப்புதல் சான்றிதழ்-ஐ சமர்ப்பித்த நிலையில், இரவு 8.19 மணிக்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்த அறிவிப்பை கொடுத்துள்ளது.

கூட்டணி முறிவின் மூலம் Resson Aerosace நிறுவனம் 11.18 சதவீத பங்குகளுக்கு 4.7 மில்லியன் கனடா டாலர்கள் பணத்தை அனுப்பியுள்ளது, இது கிட்டத்தட்ட 28.7 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.8 சதவீதத்திற்கும் மேல் சரிந்தது. இந்த நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர் சரிவில் மாடிக்கொண்டு 3.08 சதவீதம் சரிந்து 1583.80 ரூபாய் வரையில் குறைந்தது.

தமிழ் குட்ரிட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக