வெள்ளி, 22 செப்டம்பர், 2023

ஜைனமம் புத்தமும் சமண மரபின் இரண்டு செல்ல குழந்தைகள்

 Yahqappu Adaikkalam  :  யார் இந்த பார்ப்பான்-11
ஜைனமம் புத்தமும் சமண மரபின் இரண்டு செல்ல குழந்தைகள். கிமு 600 ஆண்டுக்கு முன்பே தோன்றிய இந்த இரண்டு சமயங்களும் இன்னும் நம்மிடம் இருக்கிறது.
இதுக்குள்ளே ஊடுருவ பார்த்த பார்ப்பனியம் பெரும் அளவில் மாற்றம் கொண்டுவர முடியவில்லை என்ற தோல்வியில் தான் சைவமும் வைணவம் தோற்றுவிக்கப்பட்டது.
தென்னாட்டு வடநாட்டு வேறுபாடில் இயங்குகிறது ஜையனமும் புத்தமும்(வடநாட்டில் பௌத்தம்).
இதன் ஆதி மூலம் தென்னாட்டில் இருக்கிற ஆதாரமே அதுக்குள் இருக்கும் தூய்மையான சமண(ஆசீவக) கருத்துக்கள் தான். தமிழ் மண்ணில் இருக்கும் சமண மரபு சமயங்கள் தாந்திரிக மூலம் கொண்டவை
இதில் திகம்பர (அமண)ஜைனமும் ஈனயான( சூன்யம்) புத்தமும் ஆரம்ப வடிவில் நம்மிடம் காணலாம்.
இந்த ஆதி வடிவங்கள் எப்படி வந்தது என்றால் தென்னகம் பெண்ணை முதன்மையாக வைத்து நகர்ந்த மெய்யியல்(தாந்திரீகம்) ஆனால் வடபகுதியில் கொஞ்சம் திரிந்து இந்த தாந்திரீக வாசம் இல்லாமல் போனது. பரத்தை வழியே இல்லறம் இல்லறம் வழியே துறவறம் என்ற அடிப்படை தத்துவம் தென்னாட்டில் மட்டுமே இருக்கிற அம்சமாகும்.


இந்த தாந்திரீக வழியில் வந்த அருகன் தான் முருகன் ஆண்டி(அருகதா-அரோகரா). கந்தனை (ஆணுறுப்பு) வடநாட்டு ஜைனம் ஏற்கவில்லை
அதேபோல சப்த கன்னியர் இயலும் ஐயனார்களையும் புறக்கணித்து விட்டது.
இந்த தாந்திரீக மரபில் வருவது தற்காப்பு கலை அல்லது மரணம் இல்லா பெருவாழ்வை நோக்கிய ஓக(yoga) யாக்கை பயிற்சி.
 உடலை ஒரு நிலை படுத்தி உயிர்மெய் ஐக்கியத்தை கொண்டுவரும் பயிற்சியே இது.
போதி தருமர் தென்னாட்டு புத்த(புது மார்க்கம்) மரபு சார்ந்தவர் ஆகையால் அவரு தேக முதன்மை வைத்து அறத்தை போதிக்கும் வழிமுறை கற்றவர்.
முருகன் ஆசான் தென்னாட்டு சமணத்தில் நிர்வாணத்தை (அமண தேகம்) அடைந்த வேந்தர். குமாரன் உடல் தசை வலுவை நம்பி வந்தவர் அல்ல
உயிர் வலிமையை உயர்த்தி தமிழ் தேசத்தை உயர்தியவர்.
உங்களுக்கு இந்த வேறுபாடுகள் புரிகிறதா???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக