ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

"ஓ" அந்த தொகுதியை நீயே எடுத்துகிட்டயா? கலைஞர் ஐ பெரியசாமியிடம்

 Vijay Karthick :  உனக்கு நான் அண்ணனாக இருப்பதில் என்று என்றைக்கும் பெருமைப்படுகிறேன்.
 இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் எனக்கு என்ன மரியாதை இருக்கிறதோ அதைவிட அதிக மரியாதை தம்பி பெரியசாமிக்கு உண்டு.
- தலைவர் கலைஞர் -
எங்கள் மாவட்டத்தின் தி.மு.கழக அடையாளம்,முகவரி எல்லாமாகி போன ஐயா ஐ.பெரியசாமி அவர்களை பற்றி சொன்ன வார்த்தைகளை சொன்னவுடன் உடனே அவர் தன் தலைவனைப் பற்றி சொல்கிறார்.
அவரைப் போன்ற ஜனநாயகவாதியை இனி பார்க்கமுடியாது, என தொடங்கி அதற்கு உதாரணமாக ஒரு தேர்தல் கால நிகழ்வை எடுத்துச் சொல்கிறார்.


யாரு யாரு எல்லாம் உன் மாவட்டத்தில் நிக்கறீங்கனு கேட்ட தலைவரிடம் ஏழு தொகுதிகளில் ஆறு  பேரின் பெயரை சொல்லிவிட்டு கடைசியாக ஆத்தூரில் நான் நிற்கிறேன் என சொன்னதற்கு "ஓ" அந்த தொகுதியை நீயே எடுத்துகிட்டயா என தலைவர் அமைச்சரை கிண்டலடித்தாராம்.
தலைவர் மீது அவருக்கு பேரண்பு உண்டு.நான் எதற்கும் பயப்படுபவன் இல்லை,தலைவருக்காக எதை வேண்டுமானால் செய்வேன் என்று முழங்கியவர் அமைச்சர் அவர்கள்.
அது உண்மைதான்.
அமைச்சர் அவர்கள் மிகச்சிறந்த செயல் வீரர். மிகுந்த கண்டிப்பு கொண்டவரல்லாம் அல்ல.போகிற போக்கில் கழகத்தினரை தட்டிக் கொடுத்து சிறப்பான வெளிப்பாடுகளை,முடிவுகளை அழகாக பெற்று விடுகின்றவர் அவர்.
அதையும் கூட அவரே சொல்கிறார்.
நான் அரசியலில் பெரிதாக திட்டமிடல் அரசியல் செய்தது கிடையாது.இயற்கையாகவே அது எனக்கு வரவில்லை.
இன்று எல்லோரும் சமூக வலைதளங்கள்,technology போன்றவற்றில் பங்கேற்று முன்னுக்கு வருகின்ற இப்போது கூட எனக்கு அதிலே ஈடுபாடு குறைவுதான்.
என் பாணி எதார்த்த அரசியல்தான்.அந்த எதார்த்த அரசியல் மூலமாக பல பிரமாண்ட வெற்றிகளை பெற்று இருக்கிறேன்.
நான் மாவட்ட செயலாளராகக் கூட அன்னபோஸ்டில் வந்தவன்.ஆனால் கட்சியினரை எப்போதும் கைவிட்டது கிடையாது.
அதைப்போலவே கட்சியினர்,கட்சி நிர்வாகிகளுக்கு எத்தனையோ காரியங்களை நான் செய்த போதிலும் அதை விளம்பர படுத்தி கொண்டவன் கிடையாது என்றார்கள்.
அமைச்சர் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்த போதும் ,இப்போதும் கூட பல சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.
1] சிறுகுறு தொழில்  ஆயிரம் கோடி கடனை 1996ல் தள்ளுபடி செய்தது.
2] 12 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கியது.அதில் சென்னையில் மட்டும் அன்றைய மதிப்பில் 2500கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இடங்களை மக்களுக்கு வழங்கியது.
3] அந்த காலகட்டத்திலே ஹவுசிங் போர்டு வீட்டுகளின் கடன் தொகையான 650 கோடியை தள்ளுபடி செய்தது,
4] வெளிமாநில பத்திரப் பதிவை தடை செய்து துறை வருவாயை நான்கு மடங்காக உயர்த்தியது.
5 ] ஆன்லைன் பத்திரப்பதிவை கொண்டு வந்தது,
6] தமிழ்நாடு முழுமையும் 20000 பேரை  பத்திர எழுத்தராக அமர்த்தியது.
  இப்படி அவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.தற்போது கூட்டுறவு துறை அமைச்சராக பல ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருவது.
மேலும் சட்டசபை விவாதங்களில் அவர் பேசும் அழகே தனி.
எந்தவித குறிப்புகளும் இன்றி துறைரீதியான துல்லிமான புள்ளிவிவரங்களை வழங்குவதில் அவர் கில்லாடி!
தம்பி ராஜீ இதை கேளுங்கனு முன்னாள் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜை அசால்டாக டீல் செய்தது எல்லாம் சம்பவம்.
மிகுந்த ஞாபக சக்தி,பொறுமை,ஆளுமைத்தன்மை கொண்டவர்.
வாழ்த்துக்கள் ஐயா!
வாழ்வாங்கு வாழ்க! வாழ்க! வாழ்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக